மன்னிக்கவும். கணக்கில் சிறு பிழை ஏற்பட்டுவிட்டது. காவிரி என்ற பெண்ணைச் சேர்க்க மறந்துவிட்டேன். புதிய கணக்கு கீழே.
கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி ஆகியோர், இடமிருந்து வலமாக இதே வரிசையில் அமர்ந்துள்ளனர். அவர்களின் வரிசையானது மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பொழுது எந்த ஒரு பெண்ணுக்கு இருபுறமும், முன்பு இருந்தவர்கள் இல்லை. நர்மதா மூன்றாம் இடத்திற்கும், யமுனா ஐந்தாம் இடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.
1) யமுனாவின் இருபுறமும் யார் அமர்ந்துள்ளனர்?
2) இடது கோடியிலும், வலது கோடியிலும் யார் அமர்ந்துள்ளனர்?
ஆரம்ப வரிசை
கங்கா, யமுனா, கிருஷ்ணா, சரஸ்வதி,நர்மதா, கோதாவரி, காவிரி
X Y நர்மதா Z யமுனா A B
சரஸ்வதி, நர்மதாவின் இடது பக்க திசையில் அமர்ந்துள்ளார்.
எனவே
சரஸ்வதி, Y நர்மதா Z யமுனா A B
நர்மதாவுக்கும் யமுனாவுக்கும் சம்பந்தப்படாத காவேரி இடையில் வருவார்
சரஸ்வதி, Y, நர்மதா, காவேரி, யமுனா, A, B
சரஸ்வதிக்கும் நர்மதாவுக்கும் சம்பந்தப்படாத கங்கா அவர்களுக்கு மத்தியில் வருவார்
சரஸ்வதி, கங்கா, நர்மதா, காவேரி, யமுனா, A, B
யமுனாவுக்குச் சம்பந்தப்படாத மிச்சமுள்ள நதி கோதாவிரி எனவே
சரஸ்வதி, கங்கா, நர்மதா, காவேரி,யமுனா, கோதாவரி, கிருஷ்ணா..
யமுனாவின் இருபுறமும் கோதாவரி-காவேரி
கோடிகளில் புரள்பவர்கள் : சரஸ்வதி, கிருஷ்ணா