என் பேரன் பிறந்து எத்தனை நாட்கள் ஆகிறதோ, அத்தனை வாரங்கள் என் மகனின் வயது. என் பேரன் பிறந்து எத்தனை மாதங்கள் ஆகிறதோ அத்தனை வருடங்கள் என்னுடைய வயது. மூவருடைய வயதையும் கூட்டினால் 140 ஆண்டுகள் எனில் என் வயது என்ன?
பேரனின் வயதை நாட்களில் கொண்டால் சற்று குழப்பும். உதாரணமாக
பேரனின் வயது 30 நாட்கள் என்றால்
மகனின் வயது 30 வாரங்கள் (210 நாட்கள்....)
தாத்தாவின் வயது 1 வருடம்.(365 நாட்கள்???)
ஆனால் முரளி அவர்கள் செய்ததைப் போல வருடங்களை அடிப்படையாகக் கொண்டால் குழப்பம் வராது.
உதாரணமாக பேரனின் வயது 1 வருடம் எனக் கொண்டால்
அப்பாவின் வயது 7 வருடம் என வருகிறது. (இதை நாட்களில் மாற்றிக் குழப்பிக் கொண்டால் விடை கிடைக்கும். ஆனால் 365.25 x 7 எனக் கொண்டால் மீண்டும் 365.27 ஆல் வகுக்கப் போகிறோம். அந்த சுற்று வழி எதற்கு? . ஒரு வாரத்துக்கு 7 நாட்கள் எனவே 7 ஆல் பெருக்கிக் கொள்வது உத்தமம்)
தாத்தாவின் வயது 12 வருடம் என வருகிறது. (இதை நாட்களில் மாற்றிக் குழப்பிக் கொண்டால் விடை கிடைப்பது கஷ்டம். ஏனென்றால் மாதங்களின் நாட்களின் எண்ணிக்கை வித்தியாசப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள். எனவே வருடத்தைப் 12 ஆல் பெருக்கிக் கொள்வது உத்தமம். )
1:7:12 என்ற விகிதப்படி வயதுகள் இருக்கும் என்பதை எளிதில் அனுமானிக்கலாம். (இதை நாட்கணக்கில் எடுத்தால் கொஞ்சம் சுற்றி வளைத்து மூக்கைத் தொட வேண்டும். ஏனென்றால் வருடம் என்பது 365.25 நாட்களுக்கும் கொஞ்சம் கீழே உள்ளது. பின்னக் கணக்கு குழப்பி விடும்.)
இதன் பிறகு முரளி அவர்கள் சொன்னபடி
20X = 140
X = 140/20 = 7
எனவே
7, 49, 84 என்ற விடையே சரியானது