samuthraselvam
New member
சின்னத்திரை சீரியல்கள் விவாதத்திற்கு கூட எடுத்துக்கொள்ள தகுதியில்லாதது.
அரை நிமிடம் கூட அதற்காக செலவிடுவது வேஸ்டு ...
சின்னத்திரை யை பொறுத்தவரை , கற்பனைக்கு பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.
ஒரே நிகழ்சியை பல பெயர்களில் நடத்துகிறார்கள்.
உதாரணம் ,
விவாத நிகழ்ச்சி :- அரட்டை அரங்கம் , நீயா நானா , மக்கள் அரங்கம் , கருத்து யுத்தம்.
ரியாலிடி ஷோ :- மானாட மயிலாட , ஜோடி நம்பர் 1 , ....
பாட்டு போட்டி :- சூப்பர் சிங்கர் , சங்கீத யுத்தம் , ....
காமெடி ஷோ :- கலக்கப்போவது யாரு , அசத்த போவது யாரு ?...
இதில் உருப்படியாக இருப்பது மக்கள் தொலைக்காட்சி மட்டுமே.
அரசியலில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான திரு ராமதாஸ் அவர்கள் செய்துள்ள உருப்படியான காரியம் மக்கள் தொலைகாட்சி ஒன்றுதான்.
சினிமா இல்லாததால் அதை மக்கள் பார்ப்பதில்லை என்பது வேறு விஷயம், ஆனால் அதன் நிகழ்சிகளையும் தமிழையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை,
கலாச்சாரம் சீரழிகிறது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் அவ்வளவுதான்.
டிவி பார்ப்பதை விட்டு / அல்லது குறைத்து பாருங்கள் . எவ்வளவு நேரம் கிடைக்கிறது என்பதை பாருங்கள். ...
:icon_b::icon_b::icon_b: