சின்னத்திரை வில்லிகளும் சீரழியும் தமிழ் கலாச்சாரமும்

ஆனாலும் இந்த சின்னத்திரை நெடுந்தொடர்களின் அட்டூழியம் சொல்லி மாளாது.

காலையில் வரும் முதல் தொடரே அனைத்து வித கெட்ட வார்த்தையும், சண்டையும் கொண்டு நம் நாளையே பெரும் டென்சனான நாளாகவும் எரிச்சல் மிக்க நாளாகவும் ஆக்கிவிடுகிறது. இதுல வீட்டு பெரியவர்கள் அந்தக் கால தூர்தர்சன் நாடகம் போல் நினைத்து காலையிலிருந்து வரும் அத்தனை சீரியல்களையும் பத்தரை மணி வரை பார்த்து விட்டுத் தான் மறுவேலை என்கிறார்கள்... அதைத் தவிர்க்க முடியாமல் வேறு புறம் கவனம் செலுத்தினாலும், காதில் வந்து விழும் வார்த்தைகளும் உரையாடல்களும் படு மோசம்... தொலைக்காட்சியையே உடைத்து விட மனம் துடித்ததுண்டு..

நம்ம வீட்டில் எப்போதும் மக்கள் தொலைக்காட்சி தான் அம்மா, குழந்தை ஃபேவரட். மதியத்துக்கு பின் வரும், மகளிர் உலகம், பட்டாம்பூச்சி, மற்றும் சிறுவர்களுக்காக கதை சொல்லும் நிகழ்ச்சி என அசத்துகிறது.. சின்ன சின்ன ஆசை நிகழ்ச்சி நடத்தும் ஆர்த்தி, வெகுவான ரசிகர்களைப் பெற்று நல்ல செய்திகளை குழந்தைகளுக்கு கற்றுத் தருவதைப் பார்ப்பதே ஒரு தனி இன்பம் தான். தமிழும், சிந்தனை வளமும் மிக்க மகளிர் உலகம் பெண்களின் மனதில் நல்லதை நன்றாகவே விதைக்கிறது. சீரியல் பார்த்து இரத்த அழுத்தம் அதிகமாக்குவதை விட சிறந்தது இவ்வகை நிகழ்ச்சி பார்த்து நம் அறிவை அதிகமாக்குவது.

இயலும் மட்டும் இவ்வகை நிகழ்ச்சிகளைப் பார்க்க உங்கள் வீட்டாரை ஊக்கப்படுத்தலாமே. அல்லவை பற்றி பேசிக் கொண்டே இருப்பதை விட நல்லவை பற்றி பேசி நேரத்தைப் பொன்னாக்குவோமே. :)
 
யாரையும் குறை சொல்லி பயன் இல்லை, மக்கள் மாற வேண்டும்.

சின்ன திரை வியாபரமயமாகி விட்டது.

ஆனால் மக்கள் தொலை காட்சியை பாரட்ட வேண்டும்.
 
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எல்லாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு தன்னந்தனியே இருக்கும் என் தாத்தாப் பாட்டிக்கு தொலைக்காட்சியே துணை.

அந்தக்காலத்து ஆட்களாக இருந்தாலும் இந்தக் காலத்துப் படங்களையும் ரசித்துப் பார்க்கும் இவர்கள், வாசிக்கும் ஆசை இருந்தாலும் வயது ஒத்துழைக்காத காரணத்தால் தொலைக்காட்சியே தஞ்சம் என்கிறார்கள்.

தொடர்களில் ஆழமாகப் போய், நாடகம் என்பதை மறந்து, கருத்துகள் சொன்ன போதும், பிரச்சினைகளுக்குத் தீர்வு சொன்ன போதும், கவலைப்பட்ட போதும், சந்தோசப்பட்ட போதும் என்னடா இவர்கள் தொடர்களில் குடும்பம் நடத்துகிறார்கள் என்று சினந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்..

இப்போதெல்லாம் இதற்காக அவர்களைச் சினக்க முடிவதில்லை..

ஆனால், இப்போ தங்கி இருக்கும் வீட்டில் சதா தொடர்களில் மூழ்கி இருப்பவர்களை கண்டால் பிடிக்குதே இல்லை. போட்டது போட்டபடி எல்லாம் வீட்டில் கிடப்பதைப் பார்த்தால் தொலைக்காட்சீஈஈஈஈ எனச் சொல்ல வைக்குது!
 
இந்த சின்னத்திரை வந்த பிறகு கிராமத்து விளையாட்டுகளான கபடி,கல்லா மண்ணா,கிட்டிப்புல்,சில்லு,பளிங்கி,பேந்தா,திருடன் போலீஸ்,ஓடிப்பிடித்தல்,ஆடுபுலி ஆட்டம்,தாயக்கட்டை,இன்னும் ஆயிரக்கணக்கான சுவர்ராசியமான விளையாட்டுகளை மறந்து பாவம் இந்த தலைமுறை பிள்ளைகள் வெறும் மெசின் களாகி போனது தான் மிச்சம்
 
வேலைக்குப்போய் அலுத்து களைத்து வீட்டுக்கு வந்தால்,இந்த சின்னத்திரை பாடாய் படுத்துது.
வேறு வழியில்லை.அதுதான் கதிஎன இருக்க வேண்டியதுதான்.
 
முன்பெல்லாம் சீரியல் பார்க்கும் பெண்களைப் பார்த்தால் மிகவும் கோபமாய் இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் தென்றல் மற்றும் செல்லம்மா பார்ர்க்காமல் நகருவதேயில்லை.

குறிப்பிட்ட நேரத்தில் செய்ய எந்த வேலையுமில்லை. ஒரு டைம் பாஸ்க்காகத் தான் பார்க்கிறேன். அதே நேரம், நம் நாட்டில் / ஊரில் இருக்கும் போது, டீ.வி முன் தலைகாட்டுவதே இல்லை.

பெரும்பாலும், டீ.வியில் மூழ்குபவர்கள் ஜஸ்ட் டைம் பாஸ்க்காகத் தான். சீரியல்களை காவியங்களாய் நினைப்பதுமில்லை என்றே நினைக்கிறேன்.
 
எனக்கு ஒரு யோசனை வருகிறது, சீரியல்களை எடுக்கும் உரிமையை அரசுடமையாக்கிக்கொண்டால் சிறிது காலத்தில் மக்கள் சீரியல்கள் பார்க்கும் பழக்கத்தை விட்டுவிடுவார்கள், சீரியல் இனி மெல்ல சாகும்.
ஏன் என்றால் எந்த அரசு இயந்திரம் தரமாகவும் லாபாகரமாகவும் இயங்கிறது.(டாஸ்மார்கை தவிர)
 
....அது சிறிது காலம் இயங்கியது..அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்....ஆனால் வணிக ரீதியில் வெற்றியடையவில்லை.

சன் டிவியில் கிடைத்த புகழை வைத்து தப்புக்கணக்கு போட்டவர்களில் ரபி பெர்ணார்டும் ஒருவர்.. எம்.ஜே.ரெகோ உள்ளிட்ட ஒரு கூட்டமே அவர்போல செல்லாக்காசாகி நின்றது.

ஆனால் ரபி பெர்ணார்டுக்குப்பிறகு, சன் டிவியின் 'நேருக்கு நேர்" நிகழ்ச்சியும் மவுசு இழந்துவிட்டது..

சரியான நபர்களின் கூட்டு பங்களிப்பே எந்த ஒரு வெற்றிக்கும் அடிப்படை..
 
சீரியல் அடிமைகளை முட்டாள்கள் என்றும் சொல்ல முடியவில்லை..

குறிப்பிட்ட நடிகர்களே மாறி மாறி நடிக்கும் அத்தனை சீரியல்களையும் குழப்பமின்றி உள்வாங்கிக்கொள்வதிலும், திடீரென ஒரு கதாபாத்திரத்துக்கான நடிகரோ, நடிகையோ மாறும்போது, அந்த மாற்றத்தை உடனடியாக ஏற்று, அடையாளத்தைத் தொடர்வதிலும் அவர்களுக்கு நிகர் யாருமில்லை..
 
வீட்டில் வெட்டியாக இருக்கும் குடும்பத் தலைவிகள்தான் இம்மாதிரியான நெடும் தொடர்களுக்கு மெயின் ஆடியன்ஸ். அவர்களை இந்தமாதிரியான சீரியல்கள் ஒருவித அடிக்ஷன் .. போதை(?)யில் வலை விரித்து சாய்த்து விடுகிறது.

இதை எல்லாவற்றையும் விட கொடுமை, 30 நிமிட எபிசோடில், 15 நிமிடம்கூட கதை இருக்காது. விளம்பரங்கள், பழைய பகுதியின் தொடர்ச்சி என்று காண்பித்த்தே ஒப்பேத்தி விடுகிறார்கள்.
 
நாடகத்திலிருந்து சினிமா வந்தது,சினிமாவிலிருந்து வந்த சீரியல்களோ மறுபடியும் நாடக பாணியிலேயே உள்ளன ,இசை,ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு,எடிட்டிங்,என காட்சிப்படுத்தும் கலை உச்சத்தை நோக்கி பயணிக்கையில் சீரியல்கள் மீண்டும் அதை நாடக அரங்கை நோக்கி நகர வைத்து விட்டன.
 
முதலில் சீரியல் நடிக்க வருகிறார்கள் சீரியலில் நடித்து அனைத்து குடும்பங்களிலும் மாமியாருக்கும்,மருமகளுக்கும் சண்டையை உண்டாக்குர மாதிரி நடித்து விட்டு ,அதன் பிறகு திரை உலகத்தில் சென்று ஒரு நடிகனாக ஆகிவிடுகிறார்கள் ......என்ன கொடுமை சரவணா
 
சீரியல் வில்லிகளை நாம் சின்னத்திரையில் பார்க்காமல் கல்தா கொடுக்கலாம்.
மனது வைத்தால் நடக்கும்.
 
இந்த மாதிரியான சிரீயலை மக்கள்தான் பார்க்காமல் தவிர்த்து, நல்ல வேறு விஷயங்களில் கவனத்தை செலவழிக்க பழகிகொள்ளவேண்டும், முன்னேறலாம்.. வணிகரீதியிலே இந்த மாதிரியான சீரியல்கள் தோல்வி கண்டாலொழிய ..

இல்லையேல், வேறு வழியின்றி..
 
ஒவ்வொரு குடும்பங்களிலும் சீரியல் என்றாலே அதன் கவனங்கள்
வேரொன்றிலும் செல்லாது அந்த சீரியலில் மாமியாருக்கும்,மருமகளுக்கும்
சண்டைகள் ஆரம்பிக்கும் போது..... தொடரும் ...என்று முடித்து விட்டால்
ச்ச,ச்ச நல்ல கட்டத்துல பார்த்துலா முடிச்சிட்டான என்று மனதுக்குள்ளே
வேதனை படுகிற ஆட்கலும் இருக்கிறார்கள் திரும்ப அந்த சீரியலை அடுத்த நாள்
பார்க்காமல் அவர்கள் உறங்குவது இல்லை

இப்படி தான் ஒவ்வொருவரும் சின்னத்திரகளின் மூலம் சீர்குலைந்து போகிறார்கள்
 
சின்னத்திரையில் சீரியல் ஆரம்பித்தாலே ஏதோ ஒரு அலாரம் மூளையில் நங்கென்று குட்டியது போல் ஓடி அதை நிறுத்துவேன் அல்லது சேனலை மாற்றுவேன். யார் வீட்டுக்காவது சென்று மாட்டிக்கொள்ளும் தருணங்களில் காதில் விழும் சில வசனங்களை கூட சகிக்க முடிவதில்லை! அப்போதெல்லாம் மனதில் தோன்றும் ஒரே எண்ணம் மனித குலத்துக்கு சீரியல் சிறையிலிருந்து விடுதலையே கிடையாதா? எனும் கேள்வி தான். இதில் மூழ்கி பலர் தங்கள் திறன் களை இழந்து வருவதாகவே நினைக்கிறேன். உங்கள் கருத்து சரி. வாழ்த்துக்கள்.
 
சீரியல்களுக்கும் சினிமாவில் இருப்பது போல அல்லாமல் :lachen001: உண்மையான நாட்டுக்கு நன்மைசேர்க்கும் தனிக்கை குழு அவசியம்.
 
ஏப்ரல் மாதம் நான் சீரியல் பற்றி எழுதிய் கவிதையை இங்கு திரும்பவும் நினைவு கூர்கிறேன். (ஏற்கனவே படித்தவர்கள் மன்னிக்க)
--------------------------------------------------------------------------------
தொடரும் ஆசை...

விஜய சினிமா போக மகனுக்கு ஆசை

சூர்யா சினிமா போக மகளுக்கு ஆசை

சுட்டி யில் படம் பார்க்க குட்டிக்கு ஆசை

சூரிய செய்தி மட்டும் பார்க்க அப்பனுக்கு ஆசை

ஆனால்...............

விளக்கு வைத்த பின் பிழியப் பிழிய அழுதாலும்,

மூக்குச்சளி வழிந்தாலும்,

திருடன் வந்து இடித்தாலும்,

பிள்ளை படிக்காமல் போனாலும்,

கணவனே திசை மாறி போனாலும்,

அக்கம் பக்கம், உற்றார், உறவினர் இல்லாமல் போனாலும்,

தொத்து வியாதியாய் குடும்பத்தை ஆட்டிப் படைத்தாலும்,

தலை சுற்றி பயித்தியமே முற்றினாலும்,

தன் குடும்ப குதூகலம் குறைந்தாலும்,

தினம், தினம், வித விதமாய்,

திங்கள் முதல் வெள்ளி வரை வரும்...

மெகாத் தொடர்கள் மட்டுமே பார்க்க ஆசை

பார்த்து....பார்த்து .. கண்கள் பூத்து

மெகா ஜோதியில் (மகரஜோதி இல்லை) கலக்க ஆசை....

கொள்ளை ஆசை....

75 வயசு பாட்டிக்கும், 40 வயசு அம்மாவுக்கும்
 
Back
Top