சின்னத்திரை வில்லிகளும் சீரழியும் தமிழ் கலாச்சாரமும்

அன்பு நண்பர்களே! வணக்கம் ! சின்னத்திரை வில்லிகளைப்பற்றி ரொம்ப நாளாகவே எனக்கு எழுத ஆசை...இதோ இப்போது எழுதியே விட்டேன்...பெரிய திரையில் ஆண் வில்லன் செய்யமுடியாத செய்ய நினைக்காத பல கேவலமான சதிகளை சின்னத்திரையில் வில்லிகள் சர்வசாதாரணமாக செய்வதை பார்க்கும் போது நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறோமா என்று சந்தேகமாக இருக்கிறது.
 
சின்னதிரை வில்லிகளை போல இப்பம் ஒவ்வொரு வீட்டிலும் உருவாகி வருகிரார்கல் மாமியார்,மருமகள் இப்படி எல்லாருடய வீட்டிலும் சண்டைகள் வளர்ந்து வருகிறது இந்த தலைமுறைய்ல்.......:icon_ush: :icon_ush: :icon_ush:
 
தமிழ் கலாச்சாரம் என்று சொல்லும் போது எதை சொல்ல வருகிறீர்கள் என்று சொன்னால் வசதியாக இருக்கும்... அது என்ன என்று தெரியாமலே தமிழ் கலாச்சார சீரளிவை பற்றி முதலில் ரொம்ப அலட்டி கொள்கிறோம்....
பல விடயங்களீல் நமது கலாச்சாரம் நன்றாகதான் ஆகியிருக்கிரது....

அது இருக்கட்டும்....


சின்னதிரையின் பாதிப்பு மட்டுமல்ல வீடியோ விளையாட்டுகளினாலும் அடுத்து வரும் சந்ததியின் பிகேவியர் மாறுவதை ஆராய்ச்சி உறுதிபடுத்துகிறது...
 
:080402cool_prv: இப்போது உள்ள சின்னதிரைகளிள் ஆராய்சி கான்பிக்க வில்லை மாமியார்,மருமகள் சண்டைதான் கடைஎல்லைவரை காண்பிக்கிரர்கள்
 
அடப் போங்கப்பா......நம்மக் க்லாச்சாரத்தை நாமக் கடைப்பிடிச்சாப் போதும். அடுத்தவங்களைக் குறை கூறி என்ன லாபம்....?
 
நாம தொடர்ச்சியாக பார்ப்பதால் மற்றும் விரும்புவதால் தானே அவர்களும் தொடர்ச்சியாக அது போன்ற கதாபாத்திரங்களைப் படைக்கிறார்கள். :D
 
இந்த சீரியல்களை ஒரு நிமிடத்திற்கு மேல் என்னால் உட்கார்ந்து பார்க்கமுடிவதில்லை (அப்போ நின்றுகொண்டு பாருங்கள் என்றெல்லாம் சொல்லக்கூடாது). எப்படித்தான் மக்கள் இந்த மாதிரியான சீரியல்களுக்கு அடிமையானோர்களோ என்றும் பல சமயங்களில் நினைக்க வைக்கிறது.
 
எல்லா சின்னத்திரை வில்லிகளும் ஒரு கணவனுடன் வாழ்வதில்லை,சின்னத்திரை வில்லிகள் பெரும்பாலும் கல்யாணமான ஆண்களுக்கே அலைகிறார்கள்.தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக புருசனைக் கூட ஆள் வைத்து அடிக்கிறார்கள்.மருமகளை அடக்க மகனுக்கு கூட விசம் வைக்கிறார்கள்....இதெல்லாம் கலாச்சார சீரழிவா இல்லையா....?
 
கலாச்சார சீரழிவு என்பது சின்னத்திரை செய்வதாக நீங்க சொல்றதில் இல்லை. வில்லியை கதாநாயகியாகப் பார்க்கும் உங்க மனசில் இருக்கு..

அவங்கதான் நல்லவங்க இல்லைன்னு சொல்றாங்க இல்லை. அப்புறம் உங்களுக்கு இந்தக் குழப்பம் ஏன்?
 
சின்னத்திரை சீரியல்கள் விவாதத்திற்கு கூட எடுத்துக்கொள்ள தகுதியில்லாதது.

அரை நிமிடம் கூட அதற்காக செலவிடுவது வேஸ்டு ...

சின்னத்திரை யை பொறுத்தவரை , கற்பனைக்கு பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.

ஒரே நிகழ்சியை பல பெயர்களில் நடத்துகிறார்கள்.

உதாரணம் ,

விவாத நிகழ்ச்சி :- அரட்டை அரங்கம் , நீயா நானா , மக்கள் அரங்கம் , கருத்து யுத்தம்.

ரியாலிடி ஷோ :- மானாட மயிலாட , ஜோடி நம்பர் 1 , ....

பாட்டு போட்டி :- சூப்பர் சிங்கர் , சங்கீத யுத்தம் , ....

காமெடி ஷோ :- கலக்கப்போவது யாரு , அசத்த போவது யாரு ?...

இதில் உருப்படியாக இருப்பது மக்கள் தொலைக்காட்சி மட்டுமே.

அரசியலில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான திரு ராமதாஸ் அவர்கள் செய்துள்ள உருப்படியான காரியம் மக்கள் தொலைகாட்சி ஒன்றுதான்.
சினிமா இல்லாததால் அதை மக்கள் பார்ப்பதில்லை என்பது வேறு விஷயம், ஆனால் அதன் நிகழ்சிகளையும் தமிழையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை,

கலாச்சாரம் சீரழிகிறது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் அவ்வளவுதான்.

டிவி பார்ப்பதை விட்டு / அல்லது குறைத்து பாருங்கள் . எவ்வளவு நேரம் கிடைக்கிறது என்பதை பாருங்கள். ...
 
சின்னத்திரைக்கான சட்டம் ஒன்றை இயற்றி , இத்தகைய கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தடுக்க கூடாதா ? நம் ஆட்சியாளர்கள்
 
கலாச்சார சீரழிவு என்பது சின்னத்திரை செய்வதாக நீங்க சொல்றதில் இல்லை. வில்லியை கதாநாயகியாகப் பார்க்கும் உங்க மனசில் இருக்கு..

அவங்கதான் நல்லவங்க இல்லைன்னு சொல்றாங்க இல்லை. அப்புறம் உங்களுக்கு இந்தக் குழப்பம் ஏன்?

ஆத்மா, இந்த பதிவை பார்த்துவிட்டு உங்க பெயரை மறந்து பேசலாமா :D

தப்பு சரியும் நம்ம கண்ணில் இருக்கு, எதை பற்றி பேசுகிறோமோ ? அதையே செய்கிறோம், எதை பற்றி அதிகம் நினைக்கிறோமோ அதுவாக ஆகிவிடுகிறோம்..
 
எல்லா சின்னத்திரை வில்லிகளும் ஒரு கணவனுடன் வாழ்வதில்லை,சின்னத்திரை வில்லிகள் பெரும்பாலும் கல்யாணமான ஆண்களுக்கே அலைகிறார்கள்.தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக புருசனைக் கூட ஆள் வைத்து அடிக்கிறார்கள்.மருமகளை அடக்க மகனுக்கு கூட விசம் வைக்கிறார்கள்....இதெல்லாம் கலாச்சார சீரழிவா இல்லையா....?

அவர் (ஆண்) கல்யாணமானவர் என்பதை மறந்துவிட்டதாலோ என்னவோ? அல்லது திருமணமானதை எளிதில் மறந்துவிடக்கூடியவர் என்பதாலோ? என்னவோ? அவர்களையே குறிவைக்கிறார்......:D (நாட்டில் நடைபெறுகின்ற செய்திகள் அப்படித்தானே தெரிவிக்கின்றன....)

நண்பர் ஸ்ரீதர் கூறியது போல....இவைகள் எல்லாம் இல்லாத ஒரு தொலைக்காட்சி (மக்கள் தொலைக்காட்சி) உருவாக்கினால் யாரும் பார்க்கமாட்டேன் என்கிறார்களே! பிறகு எப்படி? விளம்பரங்கள் வரும்? அதன் மூலம் எப்படி? வருமானம் ஈட்டுவது? அங்கு பணிபுரிபவர்களுக்கு எப்படி ஊதியம் அளிப்பது....?

பல சானல்கள் தொடங்கப்பட்டு மூடுவிழாவும் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.....

அதில் ஒன்று சன்டிவி புகழ் ரெபிபெர்னாட் துவங்கிய நிலா தொலைக்காட்சியும் ஒன்று...(எங்கேயோ? கேள்விப்பட்டது மாதிரி இருக்கிறதா?)

நல்ல தமிழ் தொலைக்காட்சிகளுக்கு மக்கள் ஆதரவளித்தால்....இந்த தொலைக்காட்சிகள் எல்லாம் வளரும்.... எல்லாம் மக்களின் புறக்கணிப்பில் தான் உள்ளது....தணிக்கைகள் ஏற்படுத்துவது எனபது வரவேற்கப்படவேண்டியது தான்...ஏற்கனவே இந்த தணிக்கைகள் உள்ளது...வணிக ரீதியாகத்தான் உள்ளது... இதை இன்னும் சிறப்பாக சீர்மை படுத்த அரசு மூனையாலாம்....
பகிர்வுக்கு நன்றி!
 
நாம் இன்னும் கலாச்சாரத்தை மதிக்கிறோம்..

சின்னத்திரைக்கான சட்டம் ஒன்றை இயற்றி , இத்தகைய கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தடுக்க கூடாதா ? நம் ஆட்சியாளர்கள்
நம் ஆட்சியாளர்கள் தானே சின்னத்திரை நிறுவனங்களையே வைத்துள்ளனர்.. பிறகு எங்கு அவ்வாறான நல்ல சட்டங்களை அவர்கள் கொண்டு வரப் போகின்றனர்..

சின்னத் திரையால் கலாச்சார சீரழிவே மேலோங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.. மெகாத் தொடர் வில்லிகள் மட்டுமல்ல.. பெரும் பான்மையான நிகழ்ச்சிகளிலும் அவைகள் தான் உள்ளன.. உதாரணத்திற்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை சொல்லலாம்..

இவற்றை எல்லாம் பார்த்த பிறகும் ஓரளவேனும் நம் கலாச்சாரம் சீரழியாமல் இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் நாம் இன்னும் கலாச்சாரத்தை மதிக்கிறோம் என்பதே..
பல சானல்கள் தொடங்கப்பட்டு மூடுவிழாவும் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.....

அதில் ஒன்று சன்டிவி புகழ் ரெபிபெர்னாட் துவங்கிய நிலா தொலைக்காட்சியும் ஒன்று...(எங்கேயோ? கேள்விப்பட்டது மாதிரி இருக்கிறதா?)
அந்த தொலைகாட்சி தான் ஜெயா டிவி என புது அவதாரம் எடுத்ததாக நான் அறிந்ததை உங்களுக்கு அறியத் தருகின்றேன் நண்பரே..
 
....அது சிறிது காலம் இயங்கியது..அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்....ஆனால் வணிக ரீதியில் வெற்றியடையவில்லை. ஜெயா டிவிக்கும் ரபி பெர்னாடுக்கும் சம்பந்தமில்லை...இந்த தொலைக்காட்சி இவருடைய நிர்வாகம்...அது செல்வி ஜெயலாலிதாவிற்காக...கட்சி சார்பில் துவங்கப்பட்டது. இது நொடிந்து போனதால் அங்கு தாவிவிட்டார்....

இந்த நிலாத் தொலைக்காட்சி இயங்கியது சென்னை திநகர்..அங்கு அதற்கு பிறகு ஒரு கடனட்டை நிறுவனம் குடியேறியது....ஜெயா தொலைக்காட்சி துவங்கப்பட்டது வேறு இடம்...
 
சூடாகவும் சுவையாகவும்................

விவாதம் சூடாகவும் சுவையாகவும் தான் இருக்கிறது.
நான் புதிய உறுப்பினர். கொஞ்ச காலம் கவனித்து வருவேன். பிறகு பார்க்கலாம்.

பிரியங்களுடன்,
முதிர்கன்னி
 
Last edited:
வாங்க முதிர்கன்னி, அறிமுகப்பகுதியில் உங்களை அறிமுகம் செய்து கொள்ளலாமே..
 
இளம்புயல் ஸ்ரீதர் அவர்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன்-அரசியலில் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் ராமதாஸ் அவர்கள் தமிழ் தொலைகாட்சிகளில் மாறுபட்ட ஒரு கோணத்தில் மக்கள் தொலைகாட்சியை நடத்தி வருவது பாராட்டுக்குறியது
 
தாமரை அண்ணா பக்குவப்பட்டவர்கள் பார்க்க வேண்டாம் என்று ஒதுக்கலாம் ... ஆனால் டயம் பாஸ் என்று உக்கார்ந்து இருக்கும் இளசுகள் முதல் பெருசுகள் வரை இதை பார்த்து அதிகமான மூளை செல்களை வீணாக்கி கொண்டுதானே இருக்கிறார்கள். எனவே சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு ஒரு சென்சார் போர்ட் அவசியம் என்பது என் கருத்து.
 
பெரியதிரையில் ஆண்கள் கதாநாயகர்கள்,அதனால் வில்லன்,சின்னத்திரையிலோ
அனைத்தும் சீரியல் பார்க்கும் பெண்களை குறி வைத்து செய்யப்படுவதால் வில்லிகள்
 
Back
Top