அடுத்த காட்சி எந்திரனை ஆர்மி அதிகாரிகள் பரிசோதனை செய்வது. A.I.R.D (ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்)நிறுவனம் முதல்ல ரிஜெக்ட் செய்ததை ஆர்மி ஏன் மறுபடி எவால்யூவேட் செய்யுது.
ஏன்னா சங்கர் சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லலை. அதாவது நம்ம போரா எந்திரன் பிரசவம் பார்த்த உடனே நான் அப்ரூவ் பண்ணிருவேன் என்று சொல்றார் இல்லையா, அதை வச்சு அவங்க அப்ரூவ் செய்திட்டாங்க என நாம எடுத்துக்கணும்.
எனக்கென்னவொ வசீகரன் 10,15 விஜய்காந்த் அப்புறம் அர்ஜூன் படமெல்லாம் போட்டுக் காட்டி டார்ச்சர் பண்ணிட்டு எவால்யுவேஷனுக்கு கூட்டிகிட்டுப் போயிருந்தா அந்த மாதிரி ரோஜாவை வெடிகுண்டில் சொருகி கவிதை பாடியிருக்காது எந்திரன் என்று தோணுது.
எந்திரன் வேண்டுமென்றே சொதப்பியதால் கோபமாகிற அப்பா (நிஜமாவே விஞ்ஞானி கேரக்டர் எந்திரனோட அப்பா மாதிரிதான் காட்டி இருக்காங்க) நிஜமாவே வெட்ட்டிப் போடறார். கொண்டு போய் குப்பையில் கொட்டச் சொல்றார்.
இந்த இடத்தில் கொஞ்சம் நிற்க...
படத்தில் பேட்டரி லோ ஆகி ட்ரெய்ன்ல இருந்து தூக்கி வீசப்பட்ட எந்திரன் கொஞ்சம் கழிச்சு ரீபூட் ஆகி எழுந்து சார்ஜ் செய்துக்கிறார்.
இங்கேயும் அப்படித்தான். ரொம்ப நேரம் கழிச்சி மயக்கத்தில் இருந்து விழிச்சு வெட்டப்பட்ட கை கால் எல்லாம் தூக்கி தாறுமாறா மாட்டிகிட்டு கிடைச்ச கார்ல ஏறிக்கிறார். இதைக் கொஞ்சம் தெளிவாக காட்டி இருக்கலாம்.
எந்திரனை வெட்டிப் போடற வசீகரன் உணர்ச்சி வசத்தில் செய்யற இன்னொரு தப்பு அதனுடைய சாஃப்ட்வேரை அழிக்காம விடுவது. அதாவது வெறும் மூர்க்கத்தனமான கோபத்தில் வெட்டிப் போட்டு கொண்டு போய் குப்பையில் போடுங்கன்னு சொல்றாரே தவிர எப்படி இறுதியில் மற்ற எந்திரங்களை அழிக்கிறாரோ, எந்திரன் பிடிபட்ட எந்திரத்தை அழிக்குதோ அப்படி அழிப்பதில்லை.
அதாவது வசீகரனுக்கும் எந்திரனுக்கும் இடையில் உள்ள உணர்ச்சிப் பூர்வமான பிணைப்பை இந்தக் காட்சி கலைக்காம காட்டுது.
குப்பையில் எந்திரனைக் கொட்டி விட்டு மறக்க முடியாமல் கவலையோடு இருக்கும் வசீகரனை சனா பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தேத்தறாங்க என்பதையும் ஒரே காட்சியில் சட்டுன்னு முடிச்சி, கிளிமஞ்சாரோ பாட்டைப் போட்டு ரிலாக்ஸ் பண்ணி ரெடியாகுங்க இனி மசாலா ஆரம்பம் என்று சொல்றார் சங்கர்.
கிளிமஞ்சாரோ என்பது ஒரு அணைந்த எரிமலை ஆப்ரிக்காவில் இருக்க.
http://en.wikipedia.org/wiki/Mount_Kilimanjaro
மொகஞ்சதாரோ என்பது இறந்தவர்கள் மேடு..
http://en.wikipedia.org/wiki/Mohenjadaro
இப்படி சம்பந்தமே இல்லாத பெயர்களை எல்லாம் இணைத்து ஒரு காதல் பாட்டு எழுதி அதை சூப்பர்னு சொல்ல தமிழனை விட்டா ஆள் கிடையாது.
ஆப்பிரிக்காவில் உள்ள மலையின்
பேரு, இந்தியாவில் உள்ள் ஒரு புதையுண்ட நகரத்துப்
பேரு எல்லாம் சேர்த்து
அச்சுபிச்சு ன்னு ஒரு பாட்டு எழுதி
பெரு நாட்டின்
மச்சுபிச்சு மலையில் சுட்டிருக்காங்க.
காதல் பாட்டு.. மன்னிச்சுடலாம்.
குப்பையில் கொட்டப்பட்ட எந்திரனோட நியூரா ஸ்கீமை ஹேக் செய்வதற்காக அவனைத் தேடிப் போற போராவுக்கு எந்திரன் இன்னும் நினைவோட இருக்கறதைப் பார்த்து மகிழ்ச்சி. தான் வாழணும், சனா தனக்கு வேண்டும் அப்படின்னு அழும் எந்திரனோட டீல் பேசறார். நியூரா ஸ்கீமை டௌன் செய்து எந்திரனுக்கு வாழ்வு கொடுக்கிறார்.
எந்திரன் எழுந்த உடனே கேள்விப்படுவது சனா / வசீகரன் கல்யாணம் செய்து கொள்ளப் போவதைப் பற்றிதான். சனாவை கடத்த கிளம்பறார்.
தொடரும்