இதற்கடுத்து வரும் காட்சி படத்தின் அடுத்த திருப்பம். நிராகரிப்பால் நொந்து வரும் எந்திரன் தீப்பிடித்து எரியும் கட்டிடத்தில் இருந்து சிலரைக் காப்பாற்றுகிறான். அதில் கடைசியாகக் காப்பாற்ற வேண்டியது ஒரு பெண்ணை.
அந்தக் கட்டிடம் என்னவோ அரசின் அடுக்குமாடிக் குடியிருப்பு மாதிரி இருக்கு. அதில் குளியல் தொட்டியில்(??) குளித்துக் கொண்டிருக்கும் பெண்ணைக் காப்பாற்றுகிறான் எந்திரன்.
அந்தப் பெண்ணை கூடியிருக்கும் கூட்டத்தினர் புகைப்படம் எடுக்க அவமானத்தில் குறுகிப் போகும் பெண் சாலையில் ஓடும் வாகனத்தில் பாய்ந்து இறந்து விடுகிறாள்.
ஆமாங்க அதேதான். பழி சுமத்த ஒருத்தர் கிடைச்சுட்டா சாதாரணமா நம்ம மனுசங்க என்ன செய்வாங்களோ அதையேத்தான் செய்யறாங்க, உணர்வுகள் இல்லாததால்தான் மானம் என்பது எந்திரனுக்குத் தெரியலை என்று சொல்றாங்களாம். அந்தச் சாவுக்குக் காரணம் எந்திரனாம்.
உணர்வுகள் புரிந்த மனிதர்கள்தான் ஃபோட்டோ எடுத்தாங்க என்பதை வசதியா எல்லோரும் மறந்து போயிடறாங்க. உண்மையில் உலகத்தில் இன்று நடந்து கொண்டிருப்பது இதுதான், ஒரு அப்பாவி தவறிப் போய் செய்கின்ற சிறிய தப்பு கிடைச்சா போதும் தங்களோட தப்பு எல்லாத்தையும் அவன்மேல் சுமத்தி அவனை ஒரு மாபெரும் குற்றவாளியா நடத்தறதுதான் இன்று உலகத்தில் நடந்துகிட்டிருக்கு. எந்திரன் என்ன செய்திருக்கணும் என்று பேசறவங்க யாருமே தான் என்ன செய்திருக்கணும் என்று சொல்ல மாட்டாங்க. அதாங்க உலகம்.
இங்கும் அதிபுத்திசாலியான வசீகரனுக்கு அது எந்திரன் தவறில்லை என்றுச் சொல்லத் தெரியலை, விமர்சனம் படிச்சி கவிதையை மாத்திக்கிற ஆதன் மாதிரி தன் படைப்பை யாரும் குறைசொல்லாத ஒண்ணா மாத்தணும்னு நினைக்கிறாரே தவிர அதில எந்திரனோட தப்பு ஒண்ணுமே இல்லையேன்னு யொசிக்கறதே இல்லை. கொடூரமா எரிஞ்சிகிட்டிருக்கிற தீயின் வெப்பநிலை 700 டிகிரி. இதில துணியை எடுத்துப் போர்த்தணும்னு சொல்லி பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டறாரு. துணி எடுத்து போர்த்த வேண்டிய பெண்கள் ஐயய்யோன்னு அலற, தலையைத் திருப்பிக்க வேண்டிய ஆண்கள் கேமிராக்களைத் திருப்பறாங்க. ஆனால் எந்திரன் செய்தது மாத்திரம்தான் தப்பாம்.
ஆக தன் படைப்பு சரியா இருந்தாலும் விமர்சனத்தில் சொன்னது தப்புன்னு எதிர்த்துச் சொல்ல வாதத் திறமை இல்லா வசீகரன், எந்திரனுக்கு உள்ள உணர்வுகளை ஊட்ட முடிவு எடுக்கிறார்.
ஆக கதையின் முடிச்சு எந்திரனுக்கு உள்ள உணர்வுகள் இல்லாத குறை என்பதை விட தன் படைப்பை வியாபாரப் படுத்தத் தெரியாத, அறிவிருந்தும் வாதத் திறமையற்ற ஒரு விஞ்ஞானி என்பதுதான் உண்மை.
அதனால் கடைசியில் அவர் தன் புத்திசாலித்தனத்தால் எந்திரனை மடக்கினாலும் அவர் ஹீரோ இல்லை. வெறும் துணைக் கதாபாத்திரம்தான்.
ஒரு இயல்பான காட்சியை இங்கு வடிவமைத்த சங்கர் ஊடகங்களுக்கு குட்டு கொடுக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. ஏன் என்பதற்கு காரணங்கள் இருக்கலாம்.

D



)
உணர்வுகள் கிடைக்கும் பொழுது இன்னொரு ஆக்ஸிடெண்டும் நடக்குது. மின்னல் தாக்குது எந்திரனை. அறிவியல் வல்லுனர் இல்லாமல் ஒரு விஞ்ஞானக் கதையை நகர்த்துவது இதில் கஷ்டம்தான்.
எந்திரன் உண்மைக் குறை அதுதான். மின்னல்தாக்கினால் எந்திரன் சேதமடைந்தால் அது எப்படி யுத்த களத்தில் போராட முடியும்? இயந்திர மனிதனுக்கு அது மாபெரும் பலவீனம். அதுவும் பருவ மழை பொழியும் இந்தியாவில் மின்னல் என்பது சகஜமான ஒன்று. எந்திரனை கோடாலியால் கொத்த முடிந்தால் லேசர் பீமை எதிர்த்து என்ன செய்வான் எந்திரன்? இதெல்லாம் எந்திரன் வடிவமைப்பில் உள்ள குறைகள். ஆக அதியற்புத புத்திசாலி என்று காட்டப்படும் வசீகரன் பாத்திரம் அவ்வளவு ஒன்றும் புத்திசாலித்தனமாகச் செதுக்கப்படவில்லை என்பதே உண்மை. ஒருவேளை சுஜாதா இருந்திருந்தால் இந்தக் காட்சியை அனுமதித்து இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். மின்னல் தாக்குதல் சொதப்பல்.
எந்திரனுக்கு மன உணர்வுகள் உண்டான பின் ஏற்படும் வாக்குவாதம் ரசிக்கத் தக்கதாய் இருக்கிறது.
ஏண்டா, ஏண்டா இப்படித் தப்புத் தப்பா செய்கிற..
நீங்க சொல்ற எல்லாத்தையும் நான் சரியாத்தான் செய்யறேன், அப்படியும் அது தப்பாகுதுன்னா, தப்பு என்னிடத்தில் இல்ல, உங்களிடத்தில்தான் இருக்கு.
இதான் என்னைப் பொறுத்த வரை .. சரியான அணுகுமுறை.. இப்படித்தான் அணுகணும் பிரச்சனைகளை. தெளிவான அணுகுமுறை. நம்மைக் குற்றம் சொல்றாங்களே என்று பார்க்காமல் எது தவறு எது சரி என நிதானமா பார்க்கணும். இதே அணுகுமுறையில்தான் காட்சிகளையும் நான் பார்த்தேன்.
ஆக உணர்வு வந்த எந்திரன் எப்படி வித்தியாசமா செயல்பட்டு மக்களின் பேராதரவைப் பேறுகிறான் என்பது அடுத்த சீன்.
தொடரும்