எந்திரன் - விபரீதத்தின் விளைவுகள்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படமே தேவலாம்.. ஆனால்.. ஆகா ஓகோ என்று சொல்லும் அளவுக்கு எந்திரன் இல்லை.. அது மட்டும் உண்மை.
சன் டீவில வர்ற தங்கம் சீரியல் கூட நல்லா இருக்கு. எந்திரன் அந்தளவுக்கு இல்லைனும் சொல்வீங்க தானே...
 
எந்திரனுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட திரிகள் (தியேட்டர்கள்) என்ற முணுமுணுப்பு வலுத்து குமுறல்களாக மாறிக் கொண்டிருக்கிறது.

ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின்
பழைய சாதம்

என்று கவிதையெழுத யாருக்கும் தோணாததால் பலர் கைகள் எதையெதையோ கிறுக்கிக் கிறுக்கிக் கசக்கிப் போட்டுக் கொண்டிருக்கின்றன,

இந்த நேரத்தில் எந்திரனை கதையமசம், உள்ளே இருக்கும் தத்துவங்கள், தொழில்நுட்பம், நடிப்பு, என்னதான் சொல்ல வர்ராங்க இப்படிப் பலகோணங்களில் அலசணும் என்ற ஆசையில் புதிய திரி ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன்.

அப்புறம் யோசித்தேன். புதிய திரியாக மாற்றும் முடிவை மன்றம் எடுக்கட்டும். எழுதுவதில் சத்திருந்தால் தானே மாற்றி விடப் போகிறார்கள்.

எந்தத் திரியை திறந்து எழுதலாம் என்று யோசிச்சப்ப ஆதவா முகமும் நண்பேண்டா வசனமும் எதிரொலி(ளி)க்க (எதிரில் இளிக்க?) அதையே திறந்தாச்சு,

சரி முதல்ல ஒரு அணுகுண்டை போட்டு கதையை ஆரம்பிக்கிறேன்.

புத்த மதத் தத்துவங்களை இந்தப் படத்தை மாதிரி எந்தப் படமும் விளக்கவில்லை.

"ஆசையே அழிவிற்குக் காரணம்"

அதாங்க கதையோட ஒருவரிக் கதை. அடிப்படைச் சாரம். உணர்ச்சியே இல்லாத எந்திரனுக்குள் உணர்ச்சிகள் வருது. அந்த உணர்வுகளின் அரசன் ஆசை. அந்த ஆசைக்கு ஒரு துணைவியும் உண்டு. விலா எலும்புகளில் சொறுகப்படும் அவள் பெயர் கோபம்.

ஆசை கோபம் இருவரும் சேர்ந்து வஞ்சகம், வன்மம் போன்ற குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். உணர்ச்சிகளின் தாறுமாறான இந்த இனப்பெருக்கத்தில் உண்டாகும் இயந்திர உலகம் படைத்தவனின் மதிநுட்பத்தால் பெரும் போராட்டத்திற்கு உள்ளாக்கப்படுகிறது,,

கெடுதல் உணர்ச்சிகளை, படைத்தவன் உதவியால் களைந்து நிர்வாணம் அடைகிறான் கதாநாயகன். அவன் வாழ்வு தெளிகிறது. அமைதியாகிறது..

இது புத்தமதத்தின் சாரமில்லாம வேற என்னவாம். இப்படி ஒரு தத்துவத்தை உள்ளுக்குள் அடக்கிய எந்திரனின் சாரம் கூடப் புரியாமல்தான் பல எழுத்தாளர்கள் இதைத் திட்ட வார்த்தை எச்சில் இலைகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமான இரஜினி படங்களுக்கே உரிய பாட்டு ஃபைட்டே இல்லை என்று சொல்லுறவங்களுக்கும் சொல்றேன். இதில அதுவும் உண்டு. எந்திரன் தாங்க ஹீரோ.. அவரோட இண்ட்ரொடக்ஷன் ஷாங் டைட்டில் ஷாங் மட்டுமில்ல, பூம் பூம் ரோபாடாவும் தான். ட்ரெய்ன் ஃபைட் தான் இண்ட்ரொடக்சன் ஃபைட். இதைத்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் செய்யறாங்க. அங்க யாரும் குறை சொல்றதில்லை, ஆனால் இங்க சொல்வாங்க, அங்க எழுதினா அந்த பேப்பரை எதுக்கு பயன்படுத்துவாங்க என்று இவர்களுக்குத் தெரியும்.

ரோபோதான் ஹீரோ என்னும் பொழுது எண்ட்ரி ஷாங், எண்ட்ரி ஃபைட் இரண்டும் அதுக்குத்தான். என்ன, எண்ட்ரி கொஞ்சம் லாங்க் எண்ட்ரி அவ்வளவுதான்.

புத்தமதம் மட்டுமல்ல மேற்கத்திய மதங்களான கிறிஸ்துவம், இஸ்லாம், யூத மதங்களில் மனிதனின் ஆரம்பக் காலக் கதையையும் இதில் கொஞ்சம் பிசைஞ்சு எடுத்திருக்காங்க.

கடவுளின் தலைமைப் படைப்பான சாத்தான் வழி தவறியதும், இறைவனையே எதிர்த்து நிற்பதும், இறைவனுக்கும் அவனுக்குமான போரில் பல தந்திரங்களை இருவ்ரும் மாறி மாறிச் செய்வதையும் இறுதியில் ஆர்மகடான் வருவதையும் அழகாக் கதையில் கொண்டு வந்து இருக்கிறார்கள்.

வரம் கொடுத்தவன் தலையில் கை வைத்த கதைகள் இந்து புராணத்திலும் உண்டு. வைணவத்திலும் உண்டு சைவத்திலும் உண்டு.

ஆக எல்லா மதங்களின் அடிப்படைச் சாறுதான் இந்த படத்தின் கதை. ஆகவே கதையின் அடிப்படை எல்லா மதங்களிலும் இனங்களிலும் மொழிகளிலும் இருக்கும் அதே அடிப்படைக் கதைதான்.

கதையில் பல இடங்களில் உள்குத்துகள் உண்டு. அதை ஆற அமர உட்கார்ந்து யோசிச்சாதான் புரிந்து கொள்ள முடியும்.

10 வருட ஆராய்ட்சியில் டாக்டர் வசீகரன் ஒரு எந்திரனை உருவாக்குகிறார். அவர் மட்டுமல்ல, இன்னும் சிலரும் எந்திரன்களை உருவாக்கும் ஆராய்ட்சியில்தான் ஈடுபட்டு இருக்காங்க.

ரஜினியின் வயசு என்னன்னு ஒரு கணக்கு போட்டு பார்ப்போம்.

அவர் முனைவர் பட்டம் பெற்றவர். அப்படின்னா 18+4+2+3 = 27 வயது குறைந்த பட்சம்.

அதன் பிறகு 10 வருஷம் எந்திரனை படைக்க ஆரய்ட்சி செய்யறார். ஆக சராசரியா 37.

இத்ற்கு மேலும் இருக்கலாம்.

ஐஸ்வர்யாராய் மெடிகல் காலேஜ் இறுதியாண்டு மாணவி. அதாவது 18+5 = 23 வயது.

இப்படிப்பட்ட வயது வித்தியாசங்களுடன் எப்படிக் காதல் உண்டானது போன்ற குழப்பங்களில் கதை நுழையலை. அதை எப்படிச் சொல்வது என்று ஒரு வினாடி கூட யோசிக்கலை. கதைக்கு சானா என்ற இளம்பெண் தேவை. அவ்வளவுதான். போராட்டத்திற்கு உணர்வு வெறிகளை ஏற்ற அவள் வசீகரனின் காதலி அவ்வளவுதான். மற்றபடி சமுதாய நிர்பந்தங்களை உதறித்தள்ளி விட்டு என்ன தேவையோ அதை மட்டுமே குறிபார்க்கும் அர்ச்சுன இலக்காக கதை ஆரம்பிக்கிறது.

உணர்ச்சிகள் இல்லையே தவிர பகுத்தறிவு உள்ளவந்தான் ஆரம்ப இயந்திரன். உதாரணக் காட்சி

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்?

நம்மைப் படைத்தவர்...

என்னைப் படைத்தவர் வசீகரன். கடவுள் இருக்கிறார்.

இந்த வசனக் கோர்வையைக் கண்டவுடன் தேர்ந்த எழுத்தாளர் சுஜாதாவின் சிந்தனையில் உருவான வரிகள் இவை எனச் சொல்லி விடலாம்.

இப்படி பகுத்தறிவு நிறைந்த, எதையும் எளிதில் படித்துவிடும் ரோபோவுக்கு என்ன குறை?

அதை விளக்க அமைத்த காட்சிகளில் சங்கர் சற்று சறுக்கி இருக்கிறார் என்றே சொல்லணும்.

முதல் காட்சி டி.வி.

தொடரும்.
 
அட, அட, அட....!!!!! :)

ஆச்சரியத்துடன்...!!!!!! :)

___________________________________________________________________________________________________

ரஜினியின் வயசு என்னன்னு ஒரு கணக்கு போட்டு பார்ப்போம்.

:D :D :D :D :D
 
ஆக மொத்தத்தில ரஜினிக்கு படத்தில 37 வயசுன்னு ஒத்துக்கிறீங்கள்ல???
படத்தில் குறைன்னு சொல்லனும்னா நிறையா சொல்லலாம்... நீங்க ஆரம்பிங்க, மீதி இருந்தா நான் தொடர்ந்து வரேன்.

அப்பறம், நீங்க என்கிட்ட சொன்னமாதிரி, பத்து வருஷமா தலிவர் சனாவை பார்க்காம இருக்கிறதில்ல.... சும்மா, கொஞ்ச மாசமாத்தான்....
(போன் அடிச்சா எடுக்காதவருக்கு எதுக்குங்க போனை கொடுத்திருக்காங்க???? அவ்.....)
 
அதைப் பற்றி நான் சொல்லாம இருக்கறதிலேயே படத்தை இரண்டாவது முறை நான் பார்த்தாச்சு என்பதை புரிஞ்சுக்கணும் ஆதவா. காமன் சென்ஸ் வேணும் காமன் சென்ஸ்.
 
என் பசங்களுக்கு இன்னும் படம் பார்த்த திருப்தியே வரலை.இன்னுமின்னும் பாக்கணுமாம்.இறுதிக்காட்சியில் சிறிய அலுப்பு,தவிர படம் நல்லாவே இருக்கு.சுஜாதாவையும்,ரோபோவை அழிக்கும் போது ஜீனோ நினைவையும் தடுக்கமுடியவில்லை.இன்னொருமுறை பார்க்கவேண்டும்,பலமுறை பார்த்தாகவேண்டிய கட்டாயம்....ரஜினி படங்களையும்.விஜய் படங்களையும்..அது பிள்ளை பெற்றவர்களின் கண்ணீர் கதை.

எந்திரன் - இருவரிக்கதைக்கு இருநூறு கோடி
இருந்தாலும் பார்க்கலாம்
இரண்டுமணிநேரம் போகுதே ஓடி.
 
Last edited:
(போன் அடிச்சா எடுக்காதவருக்கு எதுக்குங்க போனை கொடுத்திருக்காங்க???? அவ்.....)

யாராவது அந்த செல்போனப் புடுங்கி ஆதவா கையில குடுங்கப்பா...அழுவராரு பாவம்...அது அடிக்காமலே எடுத்துப் பேசுவாரு.
 
வசீகரனின் காதல் தேவை என்பதால் சில காட்சிகள் சொறுகப்பட்டுள்ளன. சானாவின் ஊடல் காட்சி நல்ல கவித்துவத்துடன் படமாக்கப்பட்டுள்ளது. 2:45 மணி நேரப்படத்தில் காதலின் ஆழத்தைக் காட்டக் கிடைத்த நேரம் மிகக் குறைவுதான். அதனாலேயே கவித்துவமான "காதல் இரத்து" காட்சியை கவித்துவ மனதுடன் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். ஊடலும் கூடலும் காதலின் பரிமாணங்கள். அவர்களின் காதலின் ஆழத்தைக் காட்டும் காட்சி அது.

எந்திரனை வசீகரன் தன் வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியும் அப்படித்தான்.

என்னடா வசீ, லீவில வந்த ரிஷி மாதிரி இருக்க
என்ற அன்னையின் வார்த்தைகள் ஒரு விஞ்ஞானியின் தாய் எப்படிப் பட்ட மனநிலையுடன் இருக்கணும் என்பதை அச்சரம் பிசகாமல் பதிவு செய்கிறது.

"அதுக்கு சாப்பாடு டெய்லி இரண்டு யூனிட் கரண்டுதான் அம்மா"

படைத்தவனே அது என அஃறிணையாய் குறிக்கையில் "என்னடா அது இதுன்னுகிட்டு, அவனுக்குப் பேரில்லையா?"

அன்னை உணர்வு என்பது இதுதான். மகனின் சாயலில் இருக்கும் பொம்மையைக் கூட மகனாகப் பார்க்கும் தாயுள்ளம். கைதேர்ந்த எழுத்தாளனின் வல்லமை. அவள் சிட்டியை இன்னொரு மகனாகப் பார்க்கிறாள். அதே வசீகரனின் காதலி எப்படிப் பார்க்கிறாள் பாருங்கள். "டாய் ஃபிரண்ட்" காதலன் கொடுத்த பொம்மைப் பரிசு.

இந்த உணர்வுகளை ஆழமா ஊடுருவிப் பார்த்து அமைத்த காட்சி அது.

அங்கிருந்து முடிதிருத்திக் கொள்ளப் போகிறார் வசீகரன். ஓட்டுனர் எந்திரனாகிய சிட்டி.

பகுத்தறிவை வளர்த்துக் கொள்ளவேண்டிய சிட்டி, எஜமானரின் கட்டளைக்கும், ஒரு சூழ்நிலையின் தேவைகளுக்கும் இருக்கும் இடைவெளிகளை நிரப்ப வேண்டியது தான்தான் என்பதை உணரவேண்டிய கட்டாயம். மனிதன் மனிதனுக்கு ஆணையிடும் பொது சொல்லாத பல கட்டளைகள் அதில் மறைந்து கிடக்கின்றன. காமன் சென்ஸ் எனப்படும் சூழ்நிலையை அறிந்து சொல்லாமல் செய்யவேண்டிய காரியங்களை புரிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு. பொது அறிவை சிட்டி வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவேத்தான் உடனடியாக எந்திரனை இராணுவ ஆய்வுக்கு கொடுக்காமல் தன்னுடன் அழைத்து வருகிறார் விஞ்ஞானி.

இந்தக் காட்சியில் எல்லா அறிவையும் ஏட்டிலிருந்து மட்டுமே கற்றுக் கொள்ள முடியாது. அனுபவமும் வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு அமைக்கப்பட்டிருப்பது விஷேசம்.

கருணா சந்தானம் முட்டாள்களாக இருக்கிறார்களே, எல்லா, குறைசொல்லிகளின் முதல் கூச்சல் இதுதான். அதையும் அழகாகக் காட்டுகிறார் இயகுனர். அவர்கள் உதவியாளர்கள் மட்டுமே. அவர்கள் வழியே இரகசியம் கசிந்து விடக் கூடாது என்பதில் விஞ்ஞானி முனைப்புடன் இருக்கிறார். சொல்வதைச் செய்யும் அல்லக்கைகளை மட்டுமே வைத்துக் கொள்வதால் தன் இரகசியங்கள் களவுபோகாமல் கவனமாக இருக்கிறார்.

சானாவைச் சந்திக்கும் காட்சியில் போலீஸ் கையில் வெட்டுவதும் அப்படித்தான். ஒரு விஞ்ஞானியால் இப்படிப்பட்ட சங்கேத வார்த்தைகளை எல்லாம் யாருக்கும் முன்கூட்டியே கற்றுத்தர முடியாது. இதெல்லாம் மனிதனுடன் மனிதனாக எந்திரன் உலவுகையில் ஏட்டுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசங்கள். இந்த வசனங்களைத்தான் ஓவியன் என் வசனங்கள் போல இருக்கு என்று சொல்லி இருக்கிறார் ஒரு பதிவில்.

எந்திரனின் இந்தக் காலகட்ட பதில்கள், மனித மூளை வள்ர்ச்சியைக் காட்டுகிறது. குறீயீடுகள், சங்கேதங்கள், சொல்லாதவைகள் இப்படி பல படிமங்களில் மனித பொதுஅறிவு வளர்ச்சி வளர்ந்திருப்பதையும், சூழ்நிலை, சொல்பவர், தொணி இப்படி எத்தனை விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டி இருக்கின்றன என்பதையும் காட்டி, மனித வளர்ச்சியின் பரிமாணத்தை மிக எளிதாகக் காட்டி இருக்கின்றன. நமக்கு இது தினசரி பழக்கமாகி விட்டதால் வெறும் நகைச்சுவையாகத் தெரிகிறது. பொது அறிவு என்பது எப்பேர்பட்ட விஷயம் என்ற பிரமிப்பை நம்ம பொதுஅறிவைக் கழற்றி வைத்து விட்டுப் பார்த்தால் புரியும்.

எந்திரன் பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்ட பின் சானாவின் கரடிப் பொம்மையாக சானாவுடன் செல்கிறான்.

தான் எந்திரம் எனக் காட்ட தலையைக் கையில் எடுத்துக் காட்டுவது.. குழந்தையைக் கொஞ்ச உயரமாய் தூக்கிப் போட்டுப் பிடிப்பது என சில காட்சிகள் "மனம்" என்ற ஒன்று இல்லாத, கற்பனைகள் இல்லாத இயந்திரத்தை கண்முன் நிறுத்துகின்றன. இதுவரை சரிதான்.

இனிமேல்தான் இருக்கு..

தொடரும்
 
அதைப் பற்றி நான் சொல்லாம இருக்கறதிலேயே படத்தை இரண்டாவது முறை நான் பார்த்தாச்சு என்பதை புரிஞ்சுக்கணும் ஆதவா. காமன் சென்ஸ் வேணும் காமன் சென்ஸ்.

நீங்க இனிமே சொல்லுவீங்களோன்னு நினைச்சேன்!!

.ரஜினி படங்களையும்.விஜய் படங்களையும்..அது பிள்ளை பெற்றவர்களின் கண்ணீர் கதை.
.

Enjoy !!!!

யாராவது அந்த செல்போனப் புடுங்கி ஆதவா கையில குடுங்கப்பா...அழுவராரு பாவம்...அது அடிக்காமலே எடுத்துப் பேசுவாரு.

பின்ன??? கூப்பிடறது யார்!!! முன்ன்ன்ன்ன்ன்னாள் ஒலக அழகியாச்சே!!! பேசாம இருப்போமா??
 
எந்திரன் - எனது பார்வை

நீண்ட நாட்களின் பின் ஒரு பதிவு அதுவும் என் வலைப்பூவில் ஏற்கனவே போட்டு விட்டேன், இருந்தாலும் நண்பர்கள் பொறுத்தருள்க...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகளாவிய எதிர்பார்ப்பில் வெளியான எந்திரனை சிநேசிட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்தது என்பதை விட போராடிப் பெற்றுக்கொண்டோம். அள்ளிக்கொண்டு வந்த சன வெள்ளத்தைப் பார்த்தே நண்பன் ஒருவன் கழன்றுவிட்டான் மீதி ஏழு பேர் எஞ்சி இருந்தோம். நெரிபட்டு நசிபட்டு திரையரங்கிற்குள்ளே சென்றபின் அவர்களிலும் ஒருவனைக் காணவில்லை. கூட்டம் தள்ளியதால் விழுந்து அறைக்கு திரும்பி விட்டதாக தொலைபேசியில் செய்தி வந்தது. ஒருவாறு கதிரைகளைப் பிடித்து அமர்ந்து கொண்டால் புகைபோக்கிகளினதும் விசிலடிச்சான் குஞ்சுகளினதும் தொல்லை தலைவலியை வரவழைத்து விட இரவு 10.30இலிருந்து அதிகாலை 2 மணி வரை அமர்ந்து பார்த்து விட்டு வந்தேன் . தூக்கம் கண்ணைக் கசக்குவதால் ஒரு சுருக்கமான முதல் பார்வை இங்கே..

நடிகர் நடிகையர்
ரஜினி ஐஸ்வர்யா மற்றும் வில்லனாக வந்த டான்னி டென்சொன்க்பா(Danny Denzongpa) இவர்கள் மட்டும்தான் கதாபாத்திரம் என்று கூறலாம். மற்றவர்களுக்கு வேலை மிகசொற்பம். அதிலும் கருணாஸ் மற்றும் சந்தானம் ஆகியோர் சும்மா வந்து போகிறார்கள்.
ரஜினி - சொல்லித்தான் தெரிய வேண்டுமா. வழக்கமான ஸ்டைலில் விஞ்ஞானி வசீகரனாகவும் அதை விட எந்திரன் சிட்டியாகவும்(அதிலும் இருவேறுபட்ட தோற்றங்கள்) வந்து கலக்கியுள்ளார். இந்தக் கதாபாத்திரம் எத்தனை கை மாறி அவரிடம் வந்தாலும் இதற்குப் பொருத்தமான நபர தான் என்று கட்டியுள்ளார். அதிலும் நிறைவுக்காட்சியில் ஏராளமான ரோபோக்கள் ரஜினியுருவில் காட்சியளிப்பதும் சண்டை இடுவதும் அற்புதமாக உள்ளது.

ஐஸ்வர்யா - வழக்கம் போல அழகாக இருக்கிறார், கதாபாத்திரத்துக்கு அழகாக நடித்துள்ளார். அற்புதமாக நடனம் ஆடியுள்ளார். இதை விட வேற என்ன சொல்ல. எந்திரன் காதலிக்கும் அழகுப் பதுமையாக வருகிறார்.

டான்னி டென்சொன்க்பா - விஞ்ஞானி வில்லன் சீன மூஞ்சயுடன் வேண்டும் என்று தேடிப்பிடிதார்களோ தெரியவில்லை. தேடிப்பார்த்ததில் அந்த நடிகர் இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தில் பிறந்தவர் என்பது. ஹிந்தி மற்றும் உருதுப் படங்களில் நடித்துள்ளவர் என்பதும் தெரிகிறது. ஆனால் இறுதிக் காட்சிக்கு முன்னர் அவரையும் போட்டுதள்ளிவிட்டு எந்திரன் ரஜினி வில்லன் பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்கிறார்.

இசை - ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அந்த அளவிற்கு ஈர்ப்பதாய் இல்லை. அரிமா அரிமா பாடல் மற்றும் காதல் அணுக்கள் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் அதனை பாடல்களும் காட்சியமைப்பு அற்புதமாக இருக்கின்றது. சங்கர் சங்கர்தான் சாபு சிரில் மற்றும் ரத்னவேலு ஆகியோரும் புகுந்து விளையாடி இருக்கின்றனர்.

கதை, திரைக்கதை
திரைக்கதை ஒரு இடமும் சோர்வடைய விடாமல் அற்புதமாக இருக்கின்றது. வழக்கமான சங்கர் படத்தினுடைய முடிவு போலவே முற்றுப்புள்ளி இன்றி காற்புள்ளியுடன் படம் முடிகின்றது...
நிறைவுக்காட்சியில் வரும் மிக நீண்ட சண்டை சற்றே சலிப்படைய வைத்தாலும் Graphics அற்புதமாக கையாளப்பட்டுள்ளது.

வசனம் - மறைந்த என் மனம் கவர்ந்த சுஜாதா என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்வதற்கு இந்தத் திரைப்படமும் ஒரு கருவியாக அமையும். அத்துடன் இந்த திரைப்படத்தின் வெற்றி(இப்போதே கூறி விட்டேன் பார்ப்போம்) நிச்சயம் சுஜாதாவிற்கு சமர்ப்பணம் செய்யப்படவேண்டும்.

தொழிநுட்பம் - இதுவரை எந்த இந்திய மொழிப் படங்களிலும் இந்த அளவு நுட்பங்கள் பயன்படுத்தி நான் அறியவில்லை. (எனக்கு தமிழ் ஹிந்தி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமே படம் பார்த்த அனுபவம் உண்டு மற்றைய இந்திய மொழிகளைப் பற்றி தெரியாது.)
எந்திரன் வரும் காட்சிகள் குறிப்பாக சண்டைக் காட்சிகள் பாராட்ட வைக்கின்றன.

பாதிப்புக்கள் - சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" "மீண்டும் ஜூனோ" ஆகிய நாவல்களின் பாதிப்பு இருக்கின்றது, வசனகர்த்தாவே அவர் என்பதால் பரவாயில்லை.
சில இடங்களில் I- robot படத்தின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அந்த I- robot உருவத்தைப் பயன்படுத்தும் உரிமத்தை வாங்கியிருப்பினும் காட்சிகள் அதை நினைவு படுத்துவதை தவிர்த்து இருக்கலாம்.

கதைச்சுருக்கம் - வசீகரன் என்ற விஞ்ஞானி தனது பத்து வருட உழைப்பின் பின் தன்னைப் போல உருவம் கொண்ட மனிதனைப் போல செயற்படக்கூடிய ஆனால் மனிதனிலும் நூறு மடங்கு ஆற்றல் வாய்ந்த எந்திரனை உருவாக்குகிறார். அதனை நாட்டின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு பயன்படுத்த நினைக்கிறார். பலத்த சிரமத்தின் பின் எந்திரனை மனித உணர்வுகளை புரிந்து கொள்ளவும் வெளிப்படுத்தவும் கூடியதாக மாற்றுகிறார். உணர்வு பெற்ற எந்திரன் வசீகரனின் காதலியான ஐஸ்வர்யாராயை காதலிக்கின்றது. அதனால் கட்டளைகளையும் மீறுகின்றது. அதை நெறிப்படுத்த முயன்று அது வழிக்கு வராததால் அதனை துண்டு துண்டாகி குப்பையில் வீசுகிறார் வசீகரன். ஆனால் சமுதாய விரோதிகளுக்கு துணை போக நினைக்கும் வசீகரனின் குருநாதரான இன்னொரு விஞ்ஞானி போஹ்ரா எந்திரனை உயிர்ப்பித்து அதனது ஆக்க வலுவை அழிக்கும் வலுவாக மாற்றி விடுகிறார். எந்திரனோ போஹ்ராவையும் கொன்றுவிட்டு ஐஸ்வர்யவையும் கடத்தி வைத்துக்கொண்டு இன்னும் எண்ணற்ற எந்திரங்களை உருவாக்கி ஒரு எந்திர சாம்ராஜ்யத்தை உருவாக்க முயல்கின்றது. பலத்த உயிரிழப்பு மற்றும் போராட்டத்திற்கு பின்னர் வசீகரன் எந்திரனை பழைய படி அழிவு எண்ணங்கள் அற்றதாக மாற்றுகிறார். ஆனால் அதனது குற்றசெயல்களுக்காக அது செயலிழக்க செய்யப்பட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க. நிறைவில் எந்திரன் தன்னைத்தானே செயலிழக்கச் செய்துகொண்டு அருங்காட்சியகப் பொருளாக இருக்கின்றது,

நிறைவில் மனதிலிருந்து - எவ்வளவு இருந்தும் என் மனதில் ஏதோ குறை. சிறந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் தேர்வு சிறந்த காட்சியமைப்பு சிறந்த கதை வசனம் எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைகின்றது. தொழிநுட்ப விடயங்களைத் தவிர கதை என்ற அடிப்படையில் புதுமை இல்லை....
அத்துடன் ரஜினி என்ற நல்ல நடிகரை ரஜினி என்ற நல்ல கதாநாயகனாக மாற்றி விட்டோம்....

முடிந்தால் மற்றுமொரு தெளிவான பார்வை ஓரிரு நாட்களில்...

அன்புடன்
மதுரகன்
http://saaralhal.blogspot.com
 
அந்த ஒரு இரவு.. பரீட்சைக்கு ஒரு அழகான பெண் படிப்பதற்குத் தான் எத்தனை தொல்லைகள்.. அடுத்த வீட்டு மாடர்ன் மைனரோட அலறும் பாட்டு... எந்திரன் அந்த ஹோம் தியேட்டரையே வெடிக்க வைக்கிறார்.

லோக்கல் மாரியம்மன் பண்டிகை கூழுத்தும் திருவிழா. ஆடி மாசம் என்றால் ஜூலை ஆகஸ்ட். அப்ப எப்படி ஃபைனல் எக்ஸாம் வரும்னு லாஜிக்கை எல்லாம் யோசிக்கக் கூடாது. எந்திரன் திறமையைக் காட்ட ஒரு சீன் அவ்வளவுதான். ஆம்ப்ளிஃபயரை உடைச்சி கத்தி கபடாக்களைக் கவர்ந்து அம்மனா ஆய்தங்கள் புடை சூழ காட்சி குடுப்பதில் படத்தில் சிலபேருக்கு சாமியே வந்துருது.

இரவு படிக்காததால சானாவுக்கு ஹைடெக் பிட்டடிக்க உதவும் எந்திரன்.. திரும்ப வரும்போது நடக்கும் ஃபைட்டுதான் அடுத்த ஹைலைட்.

கையில் கட்டைகள் கற்களுடன் மேல்தட்டு / கீழ்தட்டு ரௌடிகள் கைகோர்த்துகிட்டு கலாட்டா செய்ய எந்திரனுடன் செம ஃபைட்.

இந்த ஃபைட்டை வடிவமைப்பதில் ஸ்டண்ட் மாஸ்டர் கிரியேட்டிவிடி என்ற பெயரில் கூத்தடிச்சிருக்கார். சுஜாதா இருந்திருந்தா அதைப் பார்த்து இரத்தக் கண்ணீர் வடிச்சிருப்பார்.

எந்திரன் செய்யப்பட்டது ஸ்டீல் ராடுகளால். ஒரே அடியில் கபாலத்தை உடைத்து வில்லனைக் குளோஸ் செய்யும் எந்திரன் நார்மல் இரஜினி மாதிரி கம்பு சுத்தறதெல்லாம் தேவையா? ஒவ்வொரு ரௌடிக்கு ஒவ்வொரு அடி போதுமே. தனுஷ் எல்லாம் ஒரு அடியில் தூணை உடைச்சிகிட்டு இருக்கறப்ப, இரும்புக் கரம் உள்ள எந்திரன் அடி எப்படி இருக்கணும்?

பீட்டர் ஹெய்ன் கற்பனைகளில் இந்த உண்மையை மறந்திட்டார் போல.. ரோபோவுக்கு மட்டுமல்ல இதைப் பார்த்த எனக்கும் பேட்டரி டௌன் ஆயிடுச்சி,

அடி வாங்கிய ஃபீலீங்க்ஸே இல்லாம வில்லன்கள் ஐஸை சிதைக்க நினைக்க, சார்ஜ் ஏத்திகிட்டு ஓடி வரும் எந்திரன் அவர்கள் எல்லோரையும் அடித்து துவைப்பதும்தான் பின் இணைப்புகள்.

இந்தச் சண்டை சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக என வச்சுக்கலாம்.

தொடரும்
 
நல்லா அலசிப் பிழிஞ்சிக் காயப்போடுங்க தாமரை. தசாவாதாரத்துக்கு அப்புறம் விளக்கமான விமர்சனம். பட்டையக் கெளப்புங்க....
 
நல்லா அலசிப் பிழிஞ்சிக் காயப்போடுங்க தாமரை. தசாவாதாரத்துக்கு அப்புறம் விளக்கமான விமர்சனம். பட்டையக் கெளப்புங்க....

அதெப்படி, நாங்க விடுவோமா?
அந்த குறைகளுக்கு எப்படியாவது சப்பைக் கட்டு கட்டுவோம்ல..
 
இப்படியே விடாம ஆராய்ச்சி பண்ணுங்க.. ஆதவா போன் பண்ணினாலும் எடுக்ககூடாது. [ஆனா ட்ரிம்மா எப்படியோ ஷேவ் பண்ணிடுங்க]
சீக்கிரமே டாக்டர் [அதாம்பா விஞ்ஞானி] ஆகி மன்றத்துக்கு பெருமை தேடி தர வேணுமாய் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
 
வில்லன் எந்திரனைச் சோதனை செய்யும் காட்சி பாமரனுக்குத் திருப்தி. ஆஹா என்ன வில்லத்தனமான சிந்தனை.

ஆரம்ப கேள்வி பதில்கள் அர்த்தம் பொதிந்தவை. இதை மனிதர்களைக் துன்புறுத்தக் கூடாது என்று ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளதா எனக் கேட்க.. இல்லை எதிரிகளைக் கொல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் இந்தக் கட்டளை அதற்குத் தரப்படவில்லை என்கிறார் வசீகரன்.

நடக்க வைத்து ஓடவைத்து தாண்ட வைத்து வேகமாக இன்னும் வேகமாக என ஓடவைத்து கத்தியை எறிந்து பிடிக்கச் சொல்லி வசீகரனைக் குத்து எனச் சொல்லி, பின்னர் நிறுத்தச் சொல்லி..

இந்த எந்திரத்துக்கு நல்லது கெட்டது தெரியாது இது ஆபத்தானவர்கள் கையில் கிடைச்சா பெருத்த நாசம் ஆகும். அதனால இதை ரிஜெக்ட் செய்யறேன் என்று சொல்லறார்.

நிஜமாவே இந்தக் காட்சியில் பலரும் அந்த வில்லத்தனத்தை கண்டு மிரண்டு போயிட்டாங்கன்னு சொல்லலாம். புத்திசாலித்தனமான காட்சி அமைப்பு என்று எல்லோரும் பாராட்ட..

இதே வசீகரன் இடத்தில் கொண்டு போய் தாமரையை நிறுத்திப் பார்த்தேன். இந்த சிச்சுவேஷனில் நான் என்ன செய்வேன் என்ன பதில் சொல்வேன் என்று.

இன்று இராணுவத்தில் இருக்கும் அத்தனை ஆயுதங்களிலும் இப்படி நல்லது கெட்டது தெரிந்த ஆயுதம் எது என்று கேட்டிருப்பேன்.

போரா --- போடா என்று குரலை உயர்த்த ஆரம்பிக்கும் பொழுது, ஒரு இலட்சம் மக்களை நொடியில் அழிக்கக் கூடிய அணு ஆயுதங்களுக்குக் கூட அந்த திறமை கிடையாது என்று அடுத்த ஏவுகணையை வீசுவேன்..

அவர் சுதாரிக்கறதுக்கு முன்பே, கண்ட்ரோல் யாரிடம் இருக்கிறதோ அவர் சொல்லும்படி செய்தால்தான் இயந்திரங்கள் நம்ம கட்டுப் பாட்டில் இருக்கும். அவை உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தங்கள் முடிவுகளை எடுத்துக் கொள்ளுமானால் அவற்றின் வலிமை காரணமாக அவை முழு மனித குலத்தையே அடிமையாக்கிக் கொள்ளக் கூடிய அபாயம் இருக்கு என்று எச்சரிப்பேன்.

வேண்டுமானால் இதில் உள்ள மென்பொருளை உடைத்து, அதில் வைரஸை நுழைத்து இதை வசப்படுத்திக் காட்டினால் இவன் உபயோகமற்றவன் என ஒத்துக் கொள்கிறேன் எனச் சவால் விட்டிருப்பேன். பிரீச் இன் கோட் தான் செக்யூரிட்டி வயலேஷனே தவிர தன் கமாண்டர் சொன்னதைச் செய்ததற்காக எந்திரனை எப்படி நிராகரிக்க முடியும் என்று கேட்டிருப்பேன். அவர் கொடுத்த உத்தரவுகள் எந்திரனைக் குழப்பவில்லை என்று சொல்லுவேன். அதாவது எதிர்காலத்தில் கமாண்டராய் இராணுவ அதிகாரி இருக்கும் பொழுது தேவை ஏற்பட்டால் என்னை தீவிர வாதக் கும்பல் துருப்புச் சீட்டாய் உப்யோகித்தாலும் வெற்றி பெற முடியாது என்று அடுத்த பக்கத்தைக் காட்டி இருப்பேன்.

ஆனால் கத்தி முனைச் சற்று உரசிய திகிலில் இருந்ததாலோ என்னவோ வசீகரன் இதையெல்லாம் யோசிச்சுப் பார்க்கவே இல்லை. தன் படைப்பை குறி கூறி விட்டார்களே என்ற பொழுதில் அப்படியே சுரத்திறங்கி போய் விடுகிறார்.

உண்மையிலேயே நான் சொன்னதைத் தான் பின்னால் அதே எந்திரன் நிரூபிக்குது. உள்ள உணர்ச்சிகள் உண்டாக்கப்பட்டதும் அது தான் செய்ய நினைப்பதைத் தான் செய்யுது. :lachen001::lachen001::lachen001:

கதைப் போக்குக்காக
வசீகரன் அந்த நிராகரிப்பை ஏற்றுக் கொண்டு ஒரு மாத அவகாசம் கேட்பதை ஒத்துக்க வேண்டியதாக இருக்கிறது. உள்ளுணர்ச்சிகளைத் தூண்டும் ஹார்மோன் உற்பத்திச் சாஃப்ட்வேர், மனநலம் பற்றிய புத்தகங்கள் மூலம் உணர்வுகளை ஊட்ட விஞ்ஞானி வசீகரன் மிகப்பெரிய அறை முழுக்க அல்காரிதம் போட்டு தயார் செய்யறார்.

புரியாதவங்களுக்கு சொல்றேன், உணர்வுகள் இல்லாத ஜடம் இல்லை எந்திரன். அவனுக்கு தொடு உணர்வு, பார்வை உணர்வு, ஒலியுணர்வு, வாசனை உணர்வு இவை எல்லாம் உண்டு. ஆனால் உள்ளுணர்ச்சிகளான கோபம், மகிழ்ச்சி, சோகம், காதல் இப்படிப்பட்ட உணர்வுகள்தான் இல்லை. ஆனால் அதை வித்தியாசப்படுத்திக் காட்டணும் என்ற உணர்வேயில்லாம எந்திர(ன்)த்தனமா உணர்வுகளைச் சொல்கிறார்கள்.

ஆக திருப்பு முனையான காட்சியில் என்னை மட்டும் அவர்களால் திருப்தி செய்ய முடியலையே!!!
 
தசாவதாரமா?

அது கண்மணியாச்சே!!!

யாரு இல்லன்னு சொன்னது. கண்மணியோட....அப்படீன்னு இருக்க வேண்டியது மிஸ்ஸாயிடிச்சு....
 
லோக்கல் மாரியம்மன் பண்டிகை கூழுத்தும் திருவிழா. ஆடி மாசம் என்றால் ஜூலை ஆகஸ்ட். அப்ப எப்படி ஃபைனல் எக்ஸாம் வரும்னு லாஜிக்கை எல்லாம் யோசிக்கக் கூடாது. எந்திரன் திறமையைக் காட்ட ஒரு சீன் அவ்வளவுதான். ஆம்ப்ளிஃபயரை உடைச்சி கத்தி கபடாக்களைக் கவர்ந்து அம்மனா ஆய்தங்கள் புடை சூழ காட்சி குடுப்பதில் படத்தில் சிலபேருக்கு சாமியே வந்துருது.

இரவு படிக்காததால சானாவுக்கு ஹைடெக் பிட்டடிக்க உதவும் எந்திரன்.. திரும்ப வரும்போது நடக்கும் ஃபைட்டுதான் அடுத்த ஹைலைட்.

கையில் கட்டைகள் கற்களுடன் மேல்தட்டு / கீழ்தட்டு ரௌடிகள் கைகோர்த்துகிட்டு கலாட்டா செய்ய எந்திரனுடன் செம ஃபைட்.

இந்த ஃபைட்டை வடிவமைப்பதில் ஸ்டண்ட் மாஸ்டர் கிரியேட்டிவிடி என்ற பெயரில் கூத்தடிச்சிருக்கார். சுஜாதா இருந்திருந்தா அதைப் பார்த்து இரத்தக் கண்ணீர் வடிச்சிருப்பார்.

எந்திரன் செய்யப்பட்டது ஸ்டீல் ராடுகளால். ஒரே அடியில் கபாலத்தை உடைத்து வில்லனைக் குளோஸ் செய்யும் எந்திரன் நார்மல் இரஜினி மாதிரி கம்பு சுத்தறதெல்லாம் தேவையா? ஒவ்வொரு ரௌடிக்கு ஒவ்வொரு அடி போதுமே. தனுஷ் எல்லாம் ஒரு அடியில் தூணை உடைச்சிகிட்டு இருக்கறப்ப, இரும்புக் கரம் உள்ள எந்திரன் அடி எப்படி இருக்கணும்?

பீட்டர் ஹெய்ன் கற்பனைகளில் இந்த உண்மையை மறந்திட்டார் போல.. ரோபோவுக்கு மட்டுமல்ல இதைப் பார்த்த எனக்கும் பேட்டரி டௌன் ஆயிடுச்சி,

அடி வாங்கிய ஃபீலீங்க்ஸே இல்லாம வில்லன்கள் ஐஸை சிதைக்க நினைக்க, சார்ஜ் ஏத்திகிட்டு ஓடி வரும் எந்திரன் அவர்கள் எல்லோரையும் அடித்து துவைப்பதும்தான் பின் இணைப்புகள்.

இந்தச் சண்டை சிறுவர்களின் மகிழ்ச்சிக்காக என வச்சுக்கலாம்.

தொடரும்

ஆடிமாசம் பைனல் எக்ஸாம் வராது ஆனா ஃபைனல் எக்ஸாம் வர்ற அன்னிக்கு மாரியம்மாவுக்கு கூழ் ஊத்துவோம்ல....

அந்த ஃபைட்ல பார்த்தீங்கன்னா, இரும்பு ராடுல அடிவிழுகிறமாதிரி சவுண்டு எஃபெக்ட் கொடுத்திருப்பாங்க.. அப்படி அடிச்சா, மாரியம்மாவுக்கு கூழ் ஊத்தின கை, இப்ப கூழாகியிருக்கும், பார்க்க வரும் ஆடியன்ஸ் முகம் சுளிக்கிறமாதிரி ஆயிடும். சிலபேர் வாந்தி எடுப்பாங்க.. அதனால நாம U சர்டிஃபிகேட்டுக்கு ஏத்தமாதிரிதான் எடுக்கணும். அதெஇயே நல்லா கவனிச்சீங்கன்னா, கிட்டத்தட்ட முப்பது நாப்பது பேரு, குறுகலான இடம், சுமார் பதினஞ்சு நிமிசத்தில அடிச்சு முடிக்கிறார் எந்திரன். தனுஷா இருந்தா, மைதானத்தை தேடி ஓடவேண்டியிருக்கும்.
 
நடக்க வைத்து ஓடவைத்து தாண்ட வைத்து வேகமாக இன்னும் வேகமாக என ஓடவைத்து கத்தியை எறிந்து பிடிக்கச் சொல்லி வசீகரனைக் குத்து எனச் சொல்லி, பின்னர் நிறுத்தச் சொல்லி..

இந்த எந்திரத்துக்கு நல்லது கெட்டது தெரியாது இது ஆபத்தானவர்கள் கையில் கிடைச்சா பெருத்த நாசம் ஆகும். அதனால இதை ரிஜெக்ட் செய்யறேன் என்று சொல்லறார்.

நிஜமாவே இந்தக் காட்சியில் பலரும் அந்த வில்லத்தனத்தை கண்டு மிரண்டு போயிட்டாங்கன்னு சொல்லலாம். புத்திசாலித்தனமான காட்சி அமைப்பு என்று எல்லோரும் பாராட்ட..

இதே வசீகரன் இடத்தில் கொண்டு போய் தாமரையை நிறுத்திப் பார்த்தேன். இந்த சிச்சுவேஷனில் நான் என்ன செய்வேன் என்ன பதில் சொல்வேன் என்று.

இன்று இராணுவத்தில் இருக்கும் அத்தனை ஆயுதங்களிலும் இப்படி நல்லது கெட்டது தெரிந்த ஆயுதம் எது என்று கேட்டிருப்பேன்.

போரா --- போடா என்று குரலை உயர்த்த ஆரம்பிக்கும் பொழுது, ஒரு இலட்சம் மக்களை நொடியில் அழிக்கக் கூடிய அணு ஆயுதங்களுக்குக் கூட அந்த திறமை கிடையாது என்று அடுத்த ஏவுகணையை வீசுவேன்..

அவர் சுதாரிக்கறதுக்கு முன்பே, கண்ட்ரோல் யாரிடம் இருக்கிறதோ அவர் சொல்லும்படி செய்தால்தான் இயந்திரங்கள் நம்ம கட்டுப் பாட்டில் இருக்கும். அவை உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தங்கள் முடிவுகளை எடுத்துக் கொள்ளுமானால் அவற்றின் வலிமை காரணமாக அவை முழு மனித குலத்தையே அடிமையாக்கிக் கொள்ளக் கூடிய அபாயம் இருக்கு என்று எச்சரிப்பேன்.

வேண்டுமானால் இதில் உள்ள மென்பொருளை உடைத்து, அதில் வைரஸை நுழைத்து இதை வசப்படுத்திக் காட்டினால் இவன் உபயோகமற்றவன் என ஒத்துக் கொள்கிறேன் எனச் சவால் விட்டிருப்பேன். பிரீச் இன் கோட் தான் செக்யூரிட்டி வயலேஷனே தவிர தன் கமாண்டர் சொன்னதைச் செய்ததற்காக எந்திரனை எப்படி நிராகரிக்க முடியும் என்று கேட்டிருப்பேன். அவர் கொடுத்த உத்தரவுகள் எந்திரனைக் குழப்பவில்லை என்று சொல்லுவேன். அதாவது எதிர்காலத்தில் கமாண்டராய் இராணுவ அதிகாரி இருக்கும் பொழுது தேவை ஏற்பட்டால் என்னை தீவிர வாதக் கும்பல் துருப்புச் சீட்டாய் உப்யோகித்தாலும் வெற்றி பெற முடியாது என்று அடுத்த பக்கத்தைக் காட்டி இருப்பேன்.
!!

நீங்களே சொல்லிட்டீங்க... கமேண்ட் சொன்னா செய்யும் எந்திரன், கெட்டவங்க கையில கெடச்சா அதுவும் கமேண்டர் சொல்றதத்தானே செய்யும்? அதாவது எந்திரன் சிட்டி, ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர்னு வெயுங்க, நீங்க பாஸ்வர்ட் போட்டு என்ன செஞ்சாலும் அந்த கம்ப்யூட்டர் ஒத்துக்கும், உங்க கம்ப்யூட்டரை பாஸ்வர்ட உடன் நான் திருடி என்ன செஞ்சாலும் அது செய்யும்.. சனா சொல்றமாதிரி, இட்ஸ் ஜஸ்ட் அ மெஷின்.... :)

அதாவது, எந்திரன் கிடைச்சதும் நியூரல் ஸ்கீமாவை டவுன்லோட் செய்யும் போரா மாதிரி யாராச்சும் போரிடும் பொழுது பேட்டரி டவுன் ஆன எந்திரனை தூக்கிட்டு போய் உள்ள கைய வெச்சு, கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துட்டா என்ன செய்யறதாம்???
 
Back
Top