மடிக்கணணி விழுந்த பிறகு வேகம் குறைவாக இருக்கிறது

shibly591

New member
வணக்கம் நண்பர்களே..

தவறிவிழுந்த எனது மடிக்கணணி,விழுந்த பிறகு மெதுவாகவே வேலை செய்கிறது.என்ன காரணம்?எப்படி சீர் செய்யலாம்??

நன்றிகள் நண்பர்களே
 
நீங்கள் தந்திருக்கும் குறிப்பில் இருந்து நான் கூற விரும்புவது....

உங்கள் மடிக்கணினியை எனக்கு அனுப்பி வையுங்கள். என்ன பிரச்சினையாக இருக்கும் என நான் சோதித்து அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.:lachen001:
 
கீழே விழுந்ததற்கும் வேகக்குறைவுக்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இடையிடையே கணினி மீள ஆரம்பிக்கிறது என்றால் பரவாயில்லை. ஒருவேளை பயத்தில் அப்படியான பிரமை ஏற்படலாம்.:lachen001:

உங்களது கணினியின் நினைவகம் எவ்வளவு என்று தெரியும் தானே.. Run இல் dxdiag என்று எழுதி ஓகே ஐ தட்டுங்கள். அதில் memory என்பதில் சரியாக காட்டுகிறதா என்று பாருங்கள். இரண்டு நினைவகம் இருந்தால் ஒன்று க்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம். முயன்று பாருங்கள். பார்த்து பதிலிடுங்கள்.
 
இப்படிக் கூட ஒரு காரணம் இருக்கலாம். கணிணியின் பிராஸஸர் மேல் ஒரு ஹீட் சிங் இருக்கும். இந்த ஹீட் சிங்கிற்கும், பிராஸஸைற்கும் மத்தியில் தெர்மல் பாண்ட் மெட்டீரியல் என வெள்ளையாக ஒரு களிம்பைப் பூசி இருப்பார்கள். இது பிராஸஸரின் வெப்பத்தை வேகமாக ஹீட் சிங்கிற்கு அனுப்பி விடும்.

கீழே விழுந்த போது ஹீட்சிங்கிற்கும், இந்தச் சிமெண்டிற்கும் பிராஸஸருக்கும் இடையேயான தொடர்பு குறைந்து போயிருக்கலாம்.

இதனால் பிராஸஸரின் வெப்பம் வேகமாக உயர, பிராஸஸர் தன்னுடைய வேகத்தைப் பாதியாக குறைத்துக் கொள்ளும். இதை பயாஸ் செட்டப்பிற்குள் சென்று, சிபியூ டெம்பரேச்சரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

அல்லது சில சமயம் சில தூசிகள் சிபியூ ஃபேனுக்குள் நுழைந்து விடுவதால், ஃபேன் சுற்றும் வேகம் குறைந்து இதே நிலைமை ஏற்படலாம்.

அல்லது எதவது லூஸ் கனெக்ஷன் (உங்களுடனான கனெக்ஷனைச் சொல்லல) ஏற்பட்டதால் சில பெரிபெரல்கள் வெயிட் ஸ்டேட் அதிகமாகி இருக்கக் கூடும்.

அல்லது சி.மாஸ் பேட்டரி தற்காலிகமாக தொடர்பு விட்டுப் போனதால் உங்கள் பயாஸ் செட்டப் அளவுகள் டி.ஃபால்ட் வேல்யூவிற்கு மாறி இருக்கலாம். ஆப்டிமல் வேல்யூவை லோட் செய்வதால் சரி செய்யலாம்.

எதாவது ஸ்பீட் டயாக்னஸிஸ் டூல் இருந்தால் அதைக் கொண்டு உங்கள் கணினியில் எந்தப் பகுதியில் பிரச்சனை என்று அறிந்து அதைச் சரி செய்யலாம்..

ஹார்ட் டிஸ்கில் கூட எதாவது பிரச்சனை இருக்கலாம். அதற்கும் டூல் இருக்கிறது,

மெமரி, பிராஸஸர், ஹார்ட்டிஸ்க் இப்படிப் பிரச்சனை எதுவும் இல்லைன்னா அப்புறம் சொல்லுங்க, பார்ப்போம்
 
external hard disk

அன்புடையீர்
எனக்கு ஒரு உதவி வேண்டும், நான் ஒரு external hard disk வைத்துள்ளேன் அதில் 4 partition இட்டு உள்ளேன் அதாவது Ext (O ), Ext (P ),Ext (Q ), Ext (R ) என்று உள்ளது ஒருநாள் நான் Ext (P ) இல் உள்ள file துறந்து பார்த்து கொண்டிருந்தேன் அப்போது external hard disk கீழே விழுந்துவிட்டது அது முதல் Ext (P ) யும் Ext (Q ) துறக்கவே முடியல ஆனால் local disk (H ) என்று காண்பிக்கிறது, அதை எப்படி சரிபன்னுவது அதில் முக்கியமான file உள்ளது எனக்கு எப்படியாவது அதை துறக்கவேண்டும் தயவுபண்ணி எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். என்னுடைய external hard disk name imation , ஐயா தயவுபண்ணி தயவுபண்ணி தயவுபண்ணி எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் நான் உங்களை தான் நம்பயுள்ளேன். இப்படிக்கு
உங்கள் அன்பு
friend
 
என் தமிழுக்கு: Desk top இல் my computer ஐ right click செய்து manage க்கு சென்றால் வருவதில் இடதுபுறத்தில் storage> disk management இல் உங்களது external drive சரியாக அளவுகளை காட்டுகிறதா என்று பாருங்கள். முடிந்தால் அதன் screen ஐ படம் பிடித்து இங்கு பகிர்ந்தால் பதிலளிப்பது இலகுவாக இருக்கும்.

disk management இன் மாதிரி:
DiskManagement01.jpg
 
வணக்கம் நண்பர்களே..

தவறிவிழுந்த எனது மடிக்கணணி,விழுந்த பிறகு மெதுவாகவே வேலை செய்கிறது.என்ன காரணம்?எப்படி சீர் செய்யலாம்??

நன்றிகள் நண்பர்களே

ஹார்ட் டிஸ்கில் கூட எதாவது பிரச்சனை இருக்கலாம்.

தாமரை அவர்கள் சொன்னது போல ஹார்ட் டிஸ்க்-ல் தான் பழுது ஏற்பட்டிருக்கும், முன் போல பைல் காப்பி (அதே வேகத்துடன்) செய்ய முடிகிறதா என்று பாருங்கள். ஹார்ட் டிஸ்கில் bad sector ஏற்பட்டிருக்கும்.

அதற்கு
Code:
http://support.microsoft.com/kb/315265

சென்று பாருங்கள்


அன்புடையீர்
எனக்கு ஒரு உதவி வேண்டும், நான் ஒரு external hard disk வைத்துள்ளேன் அதில் 4 partition இட்டு உள்ளேன் அதாவது Ext (O ), Ext (P ),Ext (Q ), Ext (R ) என்று உள்ளது ஒருநாள் நான் Ext (P ) இல் உள்ள file துறந்து பார்த்து கொண்டிருந்தேன் அப்போது external hard disk கீழே விழுந்துவிட்டது அது முதல் Ext (P ) யும் Ext (Q ) துறக்கவே முடியல ஆனால் local disk (H ) என்று காண்பிக்கிறது, அதை எப்படி சரிபன்னுவது அதில் முக்கியமான file உள்ளது எனக்கு எப்படியாவது அதை துறக்கவேண்டும் தயவுபண்ணி எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். என்னுடைய external hard disk name imation , ஐயா தயவுபண்ணி தயவுபண்ணி தயவுபண்ணி எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் நான் உங்களை தான் நம்பயுள்ளேன். இப்படிக்கு
உங்கள் அன்பு
friend

ஒரு கேள்வியை பல இடத்தில் பதிந்து எல்லோரையும் இரட்டை வேலை செய்ய வைக்கிறார்.
 
external hard disk வைத்துள்ளேன் அதில் 4 partition இட்டு உள்ளேன் அதாவது Ext (O ), Ext (P ),Ext (Q ), Ext (R )
ஐயா,
ஹார்ட் டிஸ்க் கண்ணாடி இருதயம் போன்றது.
கீழே விழுந்தால் சங்கு தான்
கவலையை மறக்க எப்போதும் !! ஒரு சிடி இல் முக்கியமான பைல்களை காபி செய்து வைக்கவும்.
அன்புடன்
குழந்தை வேல் .மு
 
நண்பா,
ஹார்ட் டிஸ்கை குளிர் சாதன பெட்டியின் மேல் பெட்டியில் 8 மணி நேரம் வைத்து முயற்சிக்கவும்.

அன்புடன்
குழந்தைவேல். மு
 
Last edited by a moderator:
னன்பா
,கர்ட் டிச்க் ஐ குலிர் சதன பெட்டி மஏல் பெட்டியில்ல் 8 மனி நஎரம் வைட்து முய்ரசிக்கவும்

அன்புடன்
குலன்டை வெல் . மு

ஹா...ஹா...ஹா...சூப்பர் ஐடியா...!!!
 
Back
Top