நான் மாக்கான் அல்ல.

தீபா

New member
காதலை சேர்த்து வைக்கும் கஞ்சா நண்பர்கள். திடீரென்று பெண் மோகம் வர, காதலனைக் கொன்றுவிட்டு, காதலியை அனுபவித்து, துண்டு துண்டாக அறுத்து குப்பைகளில் எறிகின்றனர். இதற்கு ஒரே சாட்சி கார்த்தியின் அப்பா ஜெயப்ரகாஷ். அவரையும் போட்டுத் தள்ளிவிட, நாயகன் துடித்தெழுந்து பழி வாங்கினாரா இல்லையா என்பதுதான் கதை!!

1. முதல்பாதி முழுக்க சினிமாத் தனமான காமெடியாலும் மறுபாதி அமைதியும் ஆக்ரோஷமும் நிறைந்த சண்டையாலும் படம் நகர்கிறது.
2. காஜல் அஹர்வால் தெலுகு மஹதீராவில் இருந்த அழகு இதில் இல்லை என்றாலும் கிடைத்த இடத்தில் நன்றாக விளையாடியுள்ளார்
3. மத்தியதர குடும்பத் தலைவராக வரும் ஜெயப்ரகாஷ் மனதில் நிற்கிறார். ஏனெனில் என்னைப் பொறுத்தவரையிலும் இந்த படத்தின் சிறந்த பாத்திரமே இவருடையதுதான்.
4. படத்தின் நீளம் குறைவென்றாலும் படம் பார்க்கும் பொழுது ஏற்படும் சலிப்பை உண்ரமுடிகிறது! சோபை!
5. கார்த்தி = 25 ^% பருத்திவீரன் + 75 % பையா. வசன காமெடிகள் நன்றாக செய்கிறார்.

திரையில் முந்திக் கொண்டு பார்க்காதீர்கள்.. அப்படியொன்று விஷேஷமில்லை. பொறுமையாகப் பார்த்தால் போதுமானது!

அன்புடன்
தீபா
 
திரையில் முந்திக் கொண்டு பார்க்காதீர்கள்.. அப்படியொன்று விஷேஷமில்லை. பொறுமையாகப் பார்த்தால் போதுமானது!

அன்புடன்
தீபா

காஜல் அகர்வாலைக் குறைத்துச் சொல்லி கார்த்தியை கொஞ்சம் உயர்த்திச் சொல்லும் போதே உங்க திட்டம் புரிஞ்சிருச்சி..

கார்த்திக்கை நீங்க நிதானமா சைடடிக்க, நாங்க படத்தை பொறுமையா பார்க்கணுமாக்கும்!!!:p:p:p
 
அதுசரி அவரு மகானா இல்ல மாக்கானா?

:confused: :)

நன்றி
 
அவசரப்பட்டு படம் பார்க்கிறவங்க எல்லாம் மாக்கான் போல இருக்கு , அதை தானே சொல்ல வரீங்க தீபா .......:lachen001: :lachen001: :lachen001:
 
:icon_ush: அது சரி சிவா அண்ணா இப்ப இந்தியாவில்தான் இருக்கீங்களா ?
ஹிஹி... நீங்க ரொம்ப நாள் கழிச்சு மன்றம் வந்திருக்கீங்கன்னு தெரியுது...:icon_b:
 
தீபா அக்கா

கதையில் டைட்டில் கார்டு மட்டும் தான் சொல்லாமல் விட்டு விட்டீர்கள் போல, ஹா ஹா, எல்லாத்தையும் சொல்லி விட்டு ஹீரோ கடைசியில் வில்லனை பழிவாங்குறாரா இல்லையா என்பது என்று சொன்னீர்கள் பாருங்கள் எனக்கு ஆச்சர்யத்தில் தொண்டைக் குழி இறங்கி விட்டது........:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

பின்ன என்னங்க பழிவாங்காமல் விட்டால் அவன் ஹீரோ இல்லைங்க.......

இதை வேற பொறுமையாய் பார்க்க சொல்றீங்க.......

சும்மா கலாய்த்தேன் விமர்சனத்திற்கு நன்றி......


அப்புறம் கண்மணி அக்கா வாங்க வாங்க ரொம்ப நாளாய் ஆளைக்காணும்.
 
எவ்வளவு சொல்லியும் கேளாமல், கடத்திக் கொண்டு போய் படம் காட்டினாங்க. எதிர்பார்ப்புகளோட போறவங்களுக்கு ஏமாற்றம். சும்மா பாப்போம் என்று போறவங்களுக்குக் கொண்டாட்டம்.
 
இந்த படத்த நேத்துதான் பாத்து தொலச்சேன்,
என்ன செய்ய "தல" படத்தோட டிரைலர் பக்க போய்தானே ஆகனும்.
 
அப்போ நான் மகான் அல்லவும் அம்புட்டுத்தானா?

ஆயிரத்தில் ஒருவன்
பையா
இப்போ இது அப்போ கார்த்தியின் கதி????

நாராயணா!!!!
 
இந்த ஞாயிற்றுகிழமையன்று நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்த படத்தின் இயக்குனர் சொன்னார் "இது புது மாதிரியான கதைங்கறதாலத்தான் இந்த படம் வெற்றிகரமா ஓடிக் கொண்டிருக்கு" னு..

எம்.ஜி.யார், சிவாஜி, ரஜினி, கமல், இன்ன பிற நடிகர்கள் அப்பாவை கொன்னவங்களை பழி வாங்கிருக்காங்க அப்படி இருக்க இது என்ன புது மாதிரியான கதை னு புரியவில்லை..

சென்னையில் "ஸ்கெச்" போடுறவங்க நாலு பேருதான் இருக்காங்க னு சொல்லும் இடம் சுத்த அபத்தம், பெரும்பாலும் எல்லா ரௌடி கும்பலும் அவங்களேத்தான் "ஸ்கெச்" போடுவாங்க யாரையும் தேடி போக மாட்டாங்க, "ஸ்கெச்" போடுறவன் டபுள் கேம் ஆடமாட்டான் என்பது என்ன நிச்சம்.

நாயகன் சென்னையில் பெரிய ரௌடியுடைய துனையுடன் அப்பாவை கொன்னவங்களை பழிவாங்க முயற்சிக்கிறான், ஆனா அந்த பசங்ககிட்ட நேராவும் மோதுறான், "ஸ்கெச்" போட்ட நண்பனோட மாமவயே அஞ்சு நிமிசத்தில் "ஸ்கெச்" போட்டு தூக்கும் பசங்க ஹீரோவோட அப்பாவை தூக்க ஏன் கஸ்டபடுறாங்க ?

"ஸ்கெச்" போடுறவனுக்கே "ஸ்கெச்" போட்டுடாங்க னு தெரிஞ்சும் சென்னையின் பெரிய ரௌடி சுதாரிக்காம இருப்பது முதிர்ச்சியற்ற கதைப்பாணி..

வழக்கம் போல நாயகன் அப்பாவை கொன்னவங்களை கொல்றான், ஆனா நாயகனுக்காக அநியாயமா சாகும் துணைநடிகர்கள் எப்பத்தான் சாகாமல் கடைசி வரை உயிரோடு இருக்கும் காலம் தமிழ் சினிமாவில் வருமோ னு தெரியலை..

இது எப்ப மாறும் னா இது போன்ற கதைகளை நடிகர்கள் நடிபதில்லை என்று திண்ணமான முடிவெடுக்கும் போதே..
 
Last edited:
நான் மகான் அல்ல.. ரொம்ப ஆசையாக "பையா" பையன் கார்த்திக்காக பார்க்க விரும்பி சென்ற வாரம் பார்த்தேன்..

பார்த்த அன்றிரவுத் தூக்கமும் படத்தோடு காணாமல் போனது. :(

வன்முறை, குரூர அகம் கொண்ட கதை.. பார்த்து குமைந்தது தான் மிச்சம்.

கார்த்திக் நன்றாக நடித்திருந்தாலும்.. கதை அதீத கொடுமை. இப்படம் இளகிய மனம் படைத்தோருக்கானது அல்ல. முக்கியமாக பெண்கள் பார்த்தால் தாங்கிக் கொள்வார்களா தெரியாது.. பேசாம இந்த விமர்சனத்தை முன்னரே பார்த்திருக்கலாம்.. :frown:
 
நான் மாக்கான் அல்ல-
தலைப்பே எல்லாவற்றையும் சொல்லி விட்டது...

நன்றி தீபா.
 
Back
Top