களவாணி.

அமரன்

Moderator
Staff member
சாமிச்சிலை யாருக்கு என்பதில் முறுகிப் பிளவுபட்டு நிற்கும் இரண்டு ஊர்கள்.

ஒரு ஊரில் வீடு கட்டிக் குடும்பத்தைக் காப்பாத்த துபாய்க்குப் போய் உழைக்கும் அப்பா.

அவருழைத்த காசை வீட்டுக்குக் கொஞ்சம் தனக்கு நிறைய எனச் செலவு செய்து கரைக்கும் மைனர் மகன்.

இந்த ஆடி போய், ஆவணி வந்தால் அவன் டாப்புக்கு வருவான் என மகனின் தப்பாட்டத்துக்கு தாளம் போடும் தாய்..

மற்ற ஊரில் தலைப்பாக் கட்டாக உருவேத்தி விடும் சாணக்கியப் பெரியப்பா.

மதுக்கடை, குட்டி ரவுடி என நெஞ்சு நிமித்தி உலா வரும் மகன்.

பள்ளியில் படிக்கும் பட்டாம்பூச்சித் தங்கை.

பிரதான பாத்திரங்கள் இவ்வளவும் கதையை சுமகின்றன. இந்தப் பாத்திரங்கள் கிராமத்துப் பிண்ணனியில் நகர்த்து திரைக்கதை அமக்கின்றன.

கள்வானித்தனம் செய்யும் மைனர், தாவணித் தக்காளியின் மனசையும் களவாடி விடுகிறார்.

இனியும் சொல்ல வேண்டுமா மீதி..

படத்தில் கத்தி இருக்கு, யுத்தம் இருக்கு. இரத்தம் இல்லை.

ஐட்டம் பாட்டு இருக்கு. ’ஐட்டம்’ இல்லை.

என்னைக் கவர்ந்தவைகளில் இந்த இரண்டும் உண்டு.
 
அமரன்,
கஞ்சா கருப்பை விட்டுட்டீங்களே...!
நாயகனின் நடிப்பு இயல்பு.
நாயகி, நாயகியின் அண்ணனின் நடிப்பு அவ்வளவு தூரம் இரசிக்கத்தக்கதாக இல்லை.
பொழுது போகும்.
 
செம டைம்பாஸ்..:D:D
படம் முழுக்க சிரிச்சுக்கிட்டே இருக்கற மாதிரி பல காட்சிகள்..அதுவும் இதுவரை திரையில் வந்திராத தஞ்சை ஏரியா..

நல்லா இருக்கு படம்...
 
அமரன்,
கஞ்சா கருப்பை விட்டுட்டீங்களே...!
நாயகனின் நடிப்பு இயல்பு.
நாயகி, நாயகியின் அண்ணனின் நடிப்பு அவ்வளவு தூரம் இரசிக்கத்தக்கதாக இல்லை.
பொழுது போகும்.

மறக்க முடியும கஞ்சாவை!

தன் மரண அறிவிப்பைத் தானே கேட்டா பாக்கியசாலியெல்லோ.
 
தஞ்சை மண்ணின் வயல் மணம் மனம் நிறைக்கிறது.

பசங்க பட விமல் நம் பக்கத்து வீட்டு பையன் போல் வலம் வருகிறார். யார் யாரையோ நினைவு படுத்தும் எதார்த்தம் நடிப்பில் உடல் மொழியில்.. கலக்கல்ஸ்.

கதை எதார்த்தம் சுற்றிய பின்னல்.. சரண்யா எங்கள் அத்தை ஒருவரை நினைவுபடுத்துகிறார்.. அப்பட்டமான கிராமிய தாயின் நடிப்பு பின்னி எடுத்திருக்கிறார். என்றும் போல் என் மனதைக் கவர்ந்தார்.

கஞ்சா கருப்பு வரும் இடங்களில் தூள்.நகைச்சுவை வயிறு வலிக்க வைக்கிறது...

டடம்ட டம் டம்.. பாடல் நெஞ்சை அள்ளுகிறது..

அருமையான படம்.. விமல் ஒரு சுற்று வருவார் என்று நினைக்கிறேன்.

ரொம்ப நாளுக்கப்புறம் எங்க கிராமத்தைப் பார்த்தாப்ல ஒரு எண்ணம்.. ஏனெனில் ஊரில் இருக்கும் பலரை விமலின் ஒரு கதாப்பாத்திரமே நினைவுபடுத்திவிட்டது..

ஓவியா மனதில் ஓவியமானாலும், படத்தில் நடிப்பில் அதிக வாய்ப்பில்லை.. புதிதாக ஏதுமில்லை..

அருமைமான களவாணி தான் இவுங்க..
 
படம் சீரியஸா இல்லை சிரிப்பான்னே தெரியலை... அப்படி போகுது! சொல்லப்போனா, இந்த வருஷம் வந்த சிறந்த படங்கள்ல இதுவும் ஒண்ணு!!

படத்துக்கு என்னாங்க பட்ஜெட்டு???
 
தாப்பான பசங்களையும் ரசிக்க வைக்குமளவுக்கு படம் எடுத்து தந்த களவாணி டீமுக்கு நன்றி... வாய்ப்பு கொடுத்த அமரனுக்கும் நன்றி..
களவாணி போலவே.. வம்சம் படத்திலும் கிராமிய மணம்.. திருவிழாக்கள்.. அதை போலவே இரத்தம் இல்லாமல் சுமூக முடிவு...
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
Back
Top