இரட்டைச்சுழி

அமரன்

Moderator
Staff member
அலங்காரம் அற்ற, ஆர்ப்பாட்டமில்லாத, எளிமையான என்பதை விட எதார்த்தமான, அடிக்கும் அழகற்ற பெண்ணொருத்தி மனசைக் கவர்ந்து விட்டு, களவெடுத்த வீட்டில் தெனாவெட்டாய், விரட்ட முடியாதளவுக்கு விடாப்பிடியாக அமர்ந்திருப்பாளே.. அப்படி ஒரு படம்.

மன்றத்தில் எவரும் பார்க்கவில்லையா.
 
உங்க விமர்சனத்தை நான் இப்போது பார்த்து விட்டேன் அமரன்..:)
 
இனிப் படத்தைப் பாத்திடுவீங்கன்னு சொல்லுங்க.

பாலச்சந்தர், பாரதிராஜா, ஒரு இளைஞி, ஒரு இளைஞன், பத்துப் பதினைஞ்சு பசங்க என பிரதானமான பாத்திரங்களைக் கொண்டு ஒரு ஊருக்குள் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

சங்கரின் தயாரிப்பில் வரும் படங்களில் உண்மை, வாழ்க்கை ஒட்டிக்கொண்டிருக்கும் என்றால் அதில் கலப்படம் இல்லை என்று எல்லாருக்கும் தெரியும். தானியக்கும் படங்களில் ஃபாண்டசியை தொடும் சங்கர் தயாரிக்கும் படங்களில் உணர்வுகளைத் தொட்டு விடுகிறார்.

அண்மையில் வந்த படங்களில் எனக்குப் பிடித்த படம்.
 
நன்றி அமரன். ஒருவேளை தலைப்பை சூட்டி விடுவீர்களோ என்று நினைத்து விட்டேன்.:)
நல்ல , உங்களுக்குப் பிடித்த படம் என்று கூறி இருக்கிறீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது உறுதியாய் பார்ப்பேன். பார்த்த பின்னர் மீண்டும் எழுதுவேன்.
 
இப்போது வரும் படங்களில் குழந்தைகள் எல்லாம் என்னமாய் நடிக்கிறார்கள்? அற்புத நடிப்பாற்றலை அநாயாசமாக வெளிப்படுத்துவதைக் கண்டு மலைப்புதான் உண்டாகிறது. இரட்டைச்சுழியில் பாரதிராஜா அவர்களை 'தோழரே' என்று அழைத்துக்கொண்டு அவர் பின்னாலேயே ஒரு குட்டிப்பையன் செல்வானே, கவனித்தீர்களா, அமரன்? அவன் நடிப்பை அப்படி ஒன்றி ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி அமரன்.
 
படம் ஆரம்பிக்கும் போதெல்லாம் நல்லாதான் ஆரம்பிக்குது.. போகப் போகத்தான் போயிருது...

படத்தில் பாரதி ராஜாவின் காதல் புதுசு..

ஆனால் பெரிசுகளின் முறுக்கல்தான் போகப் போக போரடிக்க ஆரம்பிச்சிருது,,,

பொடிசுங்க படத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்..

பாலச்சந்தர் மனம் மாற வைத்திருக்கும் கிளைமேக்ஸ் பல பேருக்கு பிடிக்காம போயிருது, அதான் படம் தோற்கக் காரணம்னு நினைக்கிறேன்..

வஷிஸ்டர் - விஸ்வாமித்ரர் போல இருந்திருக்க வேண்டிய இரட்டைச் சுழி முன்னால் ஒரு ஒண்ணு (அழுத்தமான கிளைமேக்ஸ்) வேணும் என்பதை மறந்தததால் ...
 
உண்மைதான்..
பெரிசுகளின் முறுக்கல் சலிக்கும் போதெல்லாம் சிறுசுகள்,,யப்பா... அதிலும் கீதம் சொன்ன அந்தக் காட்சி, அதன் நீட்சி...

கிளைமாஸ் அழுத்தம் குறைவு என்றாலும் அர்த்தம் உள்ளதுதானே அண்ணா.
 
இந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன்..
என்னுடைய பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலிலும் இடம் பிடித்த படம் இது..
குடும்பத்துடன் பார்க்கும் படி எடுத்த படம் இது.. பாரதிராஜா நடிப்பில் கலக்கி விட்டார்..

காலம் தாழ்ந்து திரி கொடுத்து இப்படத்தை பற்றி சொல்ல வாய்ப்பு கொடுத்த அமரனுக்கு நன்றி...
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
அப்பாடா... படத்தைப் பார்த்தாச்சு!
பாரதிராஜாவின் நடிப்பு... நன்றாக இருக்கிறது.
பாலசந்தர் ... இயக்குநராக மட்டுமே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒப்பனையும் பொருந்தவில்லை.
வசனம் நன்றாக இருந்தது.
மனம் மாறுவதற்கான முடிவு எதிர்பார்த்திருந்த திருப்பத்தைத் தரவில்லை.
தாமிரா இன்னும் சிறப்பான படங்களைத் தர முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். ....பார்க்கலாம்.
 
Back
Top