நாகா நேரம் நம்ம நேரம்

rajeshkrv

New member
நாகா நேரம் நம்ம நேரம்

தொலைக்காட்சியின் வளர்ச்சியிலும் அதன் பரிணாமத்திலும் இருவருக்கு நிச்சயம் பங்குண்டு ஆம் திரு பாலச்சந்தர் மற்றும் நாகா

பாலச்சந்தர் கை அளவு மனசு , காதல் பகடை என கொடி நாட்ட*

நாகா நம்மை மர்மதேசத்தால் கட்டிப்போட்டார் என்றால் அது மிகையில்லை

அதுவும் விடாது கருப்புவில் அவர் தொலைக்காட்சியில் உயர்ந்து நின்றார் என்பது 100% உண்மை.

திரையில் வில்லியாகவும் நகைச்சுவையிலும் கொடி நாட்டிய சி.டி.ராஜகாந்தத்தை மீண்டும் திரையில் கொண்டு வந்த பெருமையும் அவரையே சாரும்

அந்த பேச்சி வேடத்தில் சி.டி.ராஜகாந்தம் ஜொலித்தார் என்பது பார்த்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள்

அதே போல் ஒரு 30 நிமிடத்தில் 3 மணி நேர சினிமாவைப்போல எவ்வளவு அழகாக கதை சொல்லியிருப்பார்.

முதல் பாதி அன்று பிற்பகுதி இன்று என மாறி மாறி காண்பிக்கும் விதம் அழகு அருமை

அதுவும் கடைசியில் சேத்தன் (ராசு) கருப்புவாக மாறும் காட்சி அருமை..

எத்தனையோ சினிமா இயக்குனர்கள் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்

விடாது கருப்பு பார்க்காதவர்கள் இங்கே பார்க்கவும்

[media]http://www.youtube.com/watch?v=N-svzoOgDkM[/media]
 
நீங்கள் சொன்ன அனைத்தும் என்னைச் சூழ்ந்தவர்களால் பேசப்பட்டவை. ஆனாலும் இன்றுவரை ஏனோ பார்க்க வேண்டும் என்ற தூண்டலில்லை.
 
இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த இந்தத்தொடர் ஏனோ திடீர் என இடை நிறுத்தப்பட்டது என்று நினைக்கிறேன்....

ஆனால் அது பிறகு மீண்டும் ஒளிபரப்பானதா என்பது பற்றி தெரியவில்லை
 
நாகா வந்தபொழுது எங்க வீட்டில் கேபிள் தொடர்பு இல்லை. அதனாலேயே உருப்படியா படிச்சிட்டோம்னு நல்ல பேரு வீட்டில் இருக்கு.. தூர்தர்சனால் ஹிந்தி பாஷை அறிந்து கொண்ட கூடுதல் நன்மையும் இருக்கு...

ஒருவேளை கேபிள் இருந்திருந்தாலும், நாகா தொடர் பார்க்கும் ஆசை ஏனோ வந்திருக்காது.
. பச்ச புள்ளையப் போயி.. :icon_ush: இப்படி திகில் தொடர் பார்க்கச் சொன்னா.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....... :eek::eek:
 
Back
Top