விண்டோஸ் மென்பொருட்களுக்கு இணையான இலவச லினக்ஸ் மென்பொருட்கள்

அன்பு நண்பர்களே,

பலருக்கும் லினக்ஸைக் குறித்த மேலும் ஒரு ஐயம் என்னவென்றால், விண்டோஸில் இயங்கும் மென்பொருட்கள் லினக்ஸில் இயங்குமா என்பது. விண்டோஸ் மென்பொருட்களை லினக்ஸில் இயங்க வைக்க வழி இருக்கிறது என்றாலும் கூட, மைக்ரோசாஃப்ட், அடோப் போன்ற விண்டோஸில் பயன்படுத்தும் மென்பொருட்களைத் தவிர்த்து, முழுக்க இலவச மென்பொருட்களை லினக்ஸில் பயன்படுத்த முடியும். காப்புரிமை, காலாவதி போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் அவற்றை பயன்படுத்தலாம்.

ஆங்கிலத்திற்கு பொருத்தருள்க. சில மாதங்களுக்கு முன்னதாக நான் கணினியில் சேமித்த தகவலைத் தருகிறேன். இப்போது இதை விட நல்ல மேம்பட்ட மென்பொருட்கள் இருக்கக்கூடும். இப்போது தகவலுக்காகவும் மன்ற உறுப்பினர்களின் கவனத்திற்காகவும் இந்தப்பதிவு.

விண்டோஸ் மென்பொருட்கள் - இலவச லினக்ஸ் மென்பொருட்கள்.
1. Microsoft Visual Studio – KDevelop, MonoDevelop
2. Web Development IDEs – Eclipse, Aptana
3. Microsoft .NET Framework – Mono
4. Microsoft SQL Server – MySQL, PostgreSQL, FireBird
5. Microsoft Project – OpenProj, Open Workbench
6. Microsoft Visio – Dia, StarUML
7. Microsoft Publisher – Scribus
8. Microsoft Office – OpenOffice
9. Microsoft Office Outlook/Outlook Express – Evolution / Mozilla Thunderbird
10. Microsoft Exchange Server – Zimbra, OpenXchange
11. Microsoft SharePoint – Alfresco, Deki Wiki, DotNetNuke, PHPNuke
12. Mercury LoadRunner – OpenSTA
13. Adobe Flash – OpenLaszlo
14. Adobe Acrobat – PDFCreator
15. Adobe Photoshop – Paint.NET, CinePaint, GIMP, GIMPShop
16. Adobe Illustrator – Inkspace
17. Adobe Premier/After Effects – Avidemux / Jahshaka
18. BusinessObjects Crystal Reports – JasperReports, DataVision, OpenRPT
19. Microsoft Dynamics – SugarCRM
20. Microsoft Money / Quicken – GNUCash, Grisbi
21. MindManager – FreeMind
22. WinZip – 7zip
23. Beyond Compare (File/Directory) Comparison – WinMerge
24. CodeSmith (Easy Code Generator) – MyGeneration
25. Icon Editor – IcoFX
26. FTP Client – FileZilla

இது பழைய இணையதளத்திற்கு இட்டுச்செல்லும் சுட்டி. இருப்பினும் லினக்ஸின் வளர்ச்சியைக் காட்ட இது உதவும் என்பதால் இணைக்கிறேன்.
Code:
http://www.linuxrsp.ru/win-lin-soft/table-eng.html
லினக்ஸ் உலகை ஆளும் காலம் வரத்தான் போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
 
Last edited:
பகிர்தலுக்கு நன்றி அண்ணா....!

இவை இலவசம் மட்டுமா அல்லது லினக்ஸுக்கான மென்பொருட்களுமா?

நான் பார்த்தவரை Sharp develop விண்டோஸிற்கான நிறுவுத் தொகுப்பு மட்டுமே கொண்டுள்ளது.
பிறவற்றையும் ஒரு முறைச் சரிபார்த்து விடுவது நல்லது என நினைக்கிறேன்.
 
தகவலுக்கு நன்றி, பாரதி சார். லினக்ஸுக்கு மாற்றம் செய்யுமுன் எனக்கிருந்த அச்சமும் மென்பொருட்கள் குறித்துத்தான். ஆனால் மாறிய பின் வின்டோஸை உபயோகிக்க தேவையே இல்லாது போய் விட்டது. இருந்தாலும் நான் பார்த்த வரை AutoCADக்கு மாத்திரம் லினக்ஸில் இணையான மென்பொருள் இருப்பதாய் தெரியவில்லையே.

எனது அனுபவத்தில் கண்ட ஓரிரு மென்பொருட்களையும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:
ORCAD etc (electronic circuit designer) - gEDA
Moonlight (for watching web television) - Silverlilght

மற்றும் சில சுறுக்கு வழிகள்:
PDF பதிவேடு தயாரிக்க எளிய முறை, openofficeஇல் உள்ள 'export to pdf'.
Panorama creation (by stitching several pictures covering a wide angle of view): Hugins. (GIMPஐ விட எளிய முறை)

அன்புடன்
catwalk
 
திறமூல மென் பொருட்கள்

வணக்கம்...
தங்கள் பட்டியலில் மேலும் சிலவற்ரை இணைக்க விரும்புகிறேன்...
(இது தமிழ் சார்ந்த மன்றம் ஆகையால், தங்கள் பட்டியலில் உள்ள தமிழ் பதிப்பு உடைய சிலவற்றை மீண்டும் எழுதி உள்ளேன்)


பயன்பாடு -- காப்புரிமை மென்பொருள் -- திறமூல மென்பொருள் -- தமிழ் பதிப்பு -- விண்டோஸ் பதிப்பு

1. இணையம் -- Internet Explorer -- அ. Mozilla Firefox -- உண்டு -- உண்டு
ஆ. Google Chrome -- உண்டு -- இல்லை
2. மின்னஞ்சல் & தொடர்புகள் --Microsoft Outlook -- Evolution -- உண்டு -- இல்லை
3. அரட்டை -- Instant Messenger -- அ. Pidgin -- உண்டு -- உண்டு
ஆ. Empathy -- உண்டு -- இல்லை
4. சமூகம் -- Windows Live -- Gwibber -- உண்டு -- இல்லை
5. நச்சுநிரல் நீக்கி (Anti Virus)* -- AVG, Avast, Norton, etc. -- Klam AV -- இல்லை -- இல்லை

6. படம் -- Windows Picture Viewer -- F Spot -- -- உண்டு -- இல்லை
7. பட மேலாண்மை -- Windows Picture Manager -- F Spot -- -- உண்டு -- இல்லை
8. படம் உருவாக்கல் (Illustration) -- Adobe Illustrator -- Inkscape -- இல்லை -- உண்டு
9. பட திருத்தம் (Picture Editor) -- Adobe Photo Shop -- GIMP -- உண்டு -- உண்டு

10. இசை -- Windows Media Player -- அ. Rhythm Box (GNOME) -- உண்டு -- உண்டு
ஆ. Amarok (KDE) -- இல்லை -- உண்டு
11. காணொளி -- Windows Media Player -- அ. VLC -- உண்டு -- உண்டு
ஆ. TOTEM -- உண்டு -- உண்டு
12. குறிமாற்றல் (Transcoder) -- Adobe Encore -- அ. Transmageddon -- இல்லை -- இல்லை
ஆ. VLC -- உண்டு -- உண்டு
13. காணொளி உருவாக்கல் -- Windows Movie Maker -- Pitvi -- இல்லை -- இல்லை
14. ஒலி திருத்தம் (Audio Editing) -- Adobe Audition -- Audacity -- இல்லை -- உண்டு
15. காணொளி திருத்தம் (Video Editing) -- Adobe Premier -- Avidemux -- இல்லை -- உண்டு

16. அலுவலகம் -- Microsoft Office -- Open Office -- உண்டு -- உண்டு

17. கையடக்க ஆவண வடிமைப்பு காட்டி (PDF Reader) -- Adobe Reader (Free) -- அ. Evince (GNOME)-- உண்டு -- இல்லை
ஆ. Okular (KDE/ Web Embed viewing) -- இல்லை -- இல்லை
18. வடிமைப்பு காட்டி (Reader - DJVu, Dvi, etc. ) -- No Specific Application - Evince, Okular
19. PDF Editor -- Adobe Acrobat -- PDF Shuffler -- இல்லை -- இல்லை

20. குறிப்பான் -- Note Pad -- TomBoy Notes -- உண்டு -- உண்டு
21. குறிப்பு திருத்தி (Note Edit - For Command Files) -- Note Pad -- gedit/kedit -- உண்டு -- உண்டு

22. வட்டு எழுதுதல் (CD/DVD Burning) -- Nero -- Brasero -- உண்டு -- இல்லை

23. கணிப்பான் -- Calculator (எளிய) -- அ. gcalc (எளிய) -- இல்லை -- இல்லை
ஆ. Qalculate (மேம்பட்ட - 991 MS) -- இல்லை -- இல்லை
இ. ExtCalc (Graphical/ Programmable) -- இல்லை -- இல்லை

24. Flash -- Adobe Flash -- Gnash -- இல்லை -- இல்லை
25. அகராதி (Dictionary) -- Oxford, etc -- அகராதி (Dictionary) -- உண்டு -- இல்லை


மிக முக்கியம்.....

26. கணிதம் -- MATLAB - GNU OCTAVE (C) -- இல்லை -- உண்டு
27. வரைபடம் (Graph) -- EPlot/ Rt Plot -- GNU PLOT (C) -- இல்லை -- உண்டு
28. தரவு ஆராய்ச்சி (Data Analysis) -- அ. GNU PLOT (C) -- இல்லை -- உண்டு
ஆ. SciDavis -- இல்லை -- இல்லை
இ. LabPlot -- இல்லை -- இல்லை

29. அசைவூட்டம் (Animation) -- Maya, 3DMax, etc. -- Blender -- இல்லை -- உண்டு
30. CAD -- AutoCAD -- Pycad -- இல்லை -- இல்லை

பொறியியல் ஆய்வுக்கான FEA (Ansys) போன்ற மென்பொருட்களும் உண்டு.

மேலும், தனியாக கீழ்கண்டவற்றை நிறுவத் தேவையில்லை... கூறுகள் உள்பொதிந்து உள்ளன.

1. PDF Maker -- Adobe Acrobat / PDF Creator -- உள்பொதிந்தது
2. Compress -- WinZip/WinRar -- ஆவண காப்பாளர் உள்பொதிந்தது
3. தமிழ் தட்டச்சு (Tamil typing) - Azhagi/ Tamil 99 -- iBus உள்பொதிந்தது

லினக்ஸ் பயன்படுத்துவதன் மேன்மை போதுமா?

குறிப்பு:
^ (C) - கட்டளை நிலை மென்பொருள் [Command Line Mode Software]- எனினும், வரைபட பயனர் இடைமுகப்பு (GUI) உண்டு.
^ CAD - 2D படங்களுக்கு இது போதும்

* லினக்ஸ் பயன்படுத்த துவங்கிய பிறகு, நான் எனது ஊடகங்களை நான் நுட்பமாய் நோக்குவது இல்லை. எனினும், இரு வேறு கணிணிகளில் உபயோகப்படுத்தும் முன், அவற்றிற்கிடையே நச்சுநிரல் பரவாமல் இருக்க எனக்கு நச்சுநிரல் நீக்கி தேவைப்படுகிறது!!

பி.கு: மேற்கூறிய அனைத்து திறமூல மென் பொருட்களும் நான் பயன்படுத்துபவை. எனவே, அவையின் நல்ல செயல்பாட்டிற்கு நானே ஒரு சான்று.
 
Last edited:
Back
Top