திரை விமர்சனம்

E X A M -2009
"நான் சொல்லப்போற ஒவ்வொரு வார்த்தையையும் கவனமா கேளுங்க.
ஏன்னா எதையும் நான் திருப்பி சொல்லப்போறதில்ல.

இங்க நீங்க வர்றதுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிக்கணும்.
இந்தப் பரீட்சையில தாக்குப்புடிச்சு, ஜெயிக்காம, வேலையில நீங்க சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்.

இதுவரைக்கும் வர்றதுக்கே நிறைய திறமைசாலிகளால முடியல.
ஆனா நீங்க வந்திருக்கீங்க.

இப்ப நீங்க நினச்சதை சாதிக்க கடைசியா இருக்குற முட்டுக்கட்டை இந்தப்பரீட்சை.

இத முடிச்சு வேலையில சேருறதுக்கான ஆர்டரோட வீட்டுக்குப் போகப்போறது யாரு..? பஸ் டிக்கட் காசோட வீட்டுக்குப்போகப்போறது யாரு..?

இந்த ரூமுக்குள்ள எங்க சட்டத்தைத் தவிர வேற எந்த சட்டமும் கிடையாது;
எங்க விதிகளைத் தவிர வேற எந்த விதியும் கிடையாது.

உங்க முன்னாடி கேள்வி ஒண்ணு இருக்கு.
ஒரே ஒரு விடை எங்களுக்கு வேணும்.

ரூல்ஸ் என்னன்னா...

என்னோடவோ, பாதுகாப்புக்காக இருக்கிறவரோடவோ நேரடியா பேச முயற்சி செஞ்சீங்கன்னா பரீட்சையில ஜெயிக்கிறதுக்கான உங்க தகுதி போயிடும்.

உங்க பரீட்சைத்தாளு தெரிஞ்சோ.... இல்லாட்டி எதிர்பாராத விதமாவோ சேதமாச்சின்னா பரீட்சையில ஜெயிக்கிறதுக்கான உங்க தகுதி போயிடும்.

எந்தக்காரணத்துக்காகவும் இந்த ரூமை விட்டு நீங்க வெளிய போனா பரீட்சையில ஜெயிக்கிறதுக்கான உங்க தகுதி போயிடும்.

கேள்வி ஏதாவது இருக்கா...?

........

உங்க எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.

இந்தப்பரீட்சைக்கு உங்களுக்கு 80 நிமிசம் நேரம் ஒதுக்கப்படுது.

எங்க கம்பெனியில நீங்க ஏன் சேரணும் அப்படீங்கிறத காரணத்தோட சம்மதிக்க வைக்கத்தான் இந்த 80 நிமிசம்.

இந்த 80 நிமிசம்தான் வாழ்க்கையில அடுத்து வரப்போற எம்பது வருசங்களை நிர்ணயிக்கப் போகுது.

உங்க நேரம் இப்ப ஆரம்பிக்குது...."


கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட ஒரு பெரிய அறை;
எட்டு மேசைகள்- எட்டு நாற்காலிகள்;
அவற்றில்
நான்கு ஆண்கள்;
நான்கு பெண்கள்;
துப்பாக்கியுடன் ஒரு காவலர்.

ஒரு மின்னணுக்கடிகாரம் அனைவரும் காணும் இடத்தில் -

ஒவ்வொரு மேசையின் மேலும் தேர்வாளர் எண்ணைக் கொண்ட ஒரு காகிதம் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்தத்தேர்வு அறையில் தேர்வை நடத்துபவர் உரைப்பவைதான் ஆரம்பத்தில் கூறப்பட்டிருப்பவை!

கூறி முடித்ததும் கடிகாரத்தை இயங்கச்செய்து விட்டு, அறைக்கதவை மூடிவிட்டு அவர் செல்கிறார்.

எண்பது நிமிடங்களில் இயக்கப்பட்ட கடிகாரம் சுழியத்தை நோக்கி ஒவ்வொரு விநாடித்துளியாக இழக்க ஆரம்பிக்கிறது.

அடுத்த எண்பது நிமிடங்களில் என்ன நடக்கிறது?
என்ன வினா கேட்கப்பட்டிருந்தது?
அதற்கான விடை என்ன?
அதைக் கண்டுபிடித்தார்களா..?
யார் கண்டு பிடித்தார்கள்?
எப்படி?
என்பதை பரபரப்பாக படமாக்கி இருக்கிறார்கள்.

இவ்வளவு நம்பிக்கையுடன்,
இவ்வளவு குறைந்த செலவில்,
ஒரே அறைக்குள்,
திரைக்கதையையும் வசனத்தையும் மட்டுமே நம்பி,
சற்றும் சலிப்பூட்டாத வகையில் படமாக்கி இருப்பது வியப்பைத் தருகிறது.

சிற்சில குறைகள் தென்பட்டாலும் கூட....
வழக்கம் போல.... கடைசியாக மனதில் கேள்வி - தமிழில் ஏன் இப்படிப்பட்ட படங்களுக்கான முயற்சி நடப்பதில்லை..?
 
நீங்க எந்த படத்தைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லையே!
 
பாரதி இனிமேல் இயக்கவிடுவார்கள். உடனடியாக காப்பி அடிக்கப்படும்
 
அதான் எழுதியிருக்காரே... ஆரம்பத்திலேயே..
படத்தின் பேர்... EXAM
 
EXAm 2009 என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளார் பாருங்கள்.

பகிர்வுக்கு நன்றி பாரதி அவர்களே. வாய்ப்பு கிடைத்தால் படத்தைப் பார்க்கிறேன்.
 
அது தான் பேசப்படாது என்றுவிட்டார்களே... அப்புறம் எப்படி தமிழ்படம் தயாரிப்பது...
படம் பார்க்கும் ஆவல் எழுந்துள்ளது. நன்றி அண்ணா.
 
அதுசரி, அதை ஏன், மறைத்த வர்ணத்தில் பூசியிருக்கிறார்??
இது குறும்படமா?
திரைப்படமா?
இயக்கியது யார்?
மொழி?
நாடு?
வருடம்?

எந்த தக்வலும் இல்லையே?
 
பின்னூட்டங்களுக்கு நன்றி ஆதவா, ஸ்ரீதர்,வியாசன், மதி, கீதம், அன்பு.
ஆதவனின் கேள்விகளுக்கு மதியின் சுட்டி விடைதரும் என்று நம்புகிறேன்.
 
EXAM-2009
படம் பார்க்க ஆவல் கூடி விட்டது.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.
 
தமிழில் ஏன் இப்படிப்பட்ட படங்களுக்கான முயற்சி நடப்பதில்லை..?
புதுமுக டைரக்டர்களின் முயற்சியால் இதே போன்று Exam 2010 - என்ற தமிழ்படம் விரைவில் வரலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்...... 4 ஃபைட், 5 பாட்டு(அதில் கண்டிப்பாக ரெண்டு குத்து) நிச்சயம் இருக்க வேண்டும் என தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் சொல்வார்கள். அதனை டைரக்டரால் மறுக்கவே இயலாது. படம் ஊத்திக்கிட்டு தியேட்டரை விட்டு ஓடும்.....!:lachen001:
 
இன்னிக்கு பாத்துடுவேன்.. பாத்துட்டு சொல்றேன்..!
 
ஊக்கங்களுக்கு நன்றி கோவிந்த், அமரன், மச்சான்.

மதி.... பாத்துட்டு நீங்க அலசறதை படிக்க காத்திருப்பேன்.
 
உங்கள் பதிவைப் படிக்கும் போதே ஆவல் கூடுகிறது. இதைப் போன்ற படஙகள் தமிழில் வர நீண்ட காலமாகலாம்.
வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் பார்ப்பேன். தகவலுக்கு நன்றி.
 
Back
Top