தினம் ஒரு தகவல் - கோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்

மனுசன் பாம்பு எலி அரசியல்ல இதெல்லாம் சகஜம்... :D :D
ஆனா இதுல இருந்து ஒன்று தெரியுது. விசம் எடுத்தவர் விசத்தாலேயே சாகப்போறார். :D
 
இதுக்கு பதிலா.....சைனாக்காரங்களக் கொண்டுபோய் இறக்கினா.....போதாதா?
அதுக்கப்புறம் அங்க இருக்கிற மக்கள்....பாம்பா...அப்படீன்னா....அப்படிக் கேப்பாங்க....
 
செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம் : விஞ்ஞானிகள்

நிலவில் மனிதர்கள் வாழக்கூடிய வகையில் சாத்தியமான நிலமைகள் இல்லை எனவும், அங்கு ஒரு துணிக்கைக்கான தப்புவேகம் மிக மிக குறைவாக இருப்பதால் வேகம் கூடிய துணிக்கைகள் (வாயு) இருப்பதற்கும் சந்தர்ப்பம் இல்லை எனவும் விஞ்ஞானிகளின் ஆராச்சியின்படி பௌதீகவியலிக் கற்றது இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றது. இந்தவகையில் யாருமே இல்லாத இடத்தில் யாருக்காக விவசாயம்? ஒருவேளை அங்கு பயிரிட்டு விளைச்சலை இங்கு எடுக்கப்போகிறார்களோ???

அதற்காக செலவழிக்கும் செலவை பூமியிலேயே செலவழித்தால் பல மடங்கு விளை நிலங்களை அதுவும் கடல்ப்பரப்பிலேயே செயற்கையாக உருவாக்கி அதீத விளைச்சலைக் காணலாமே?

அதை விடுத்து நிலவில் வேளான்மை செய்து புவிக்கு எடுத்துவர செலவழிக்கும் செலவு ”சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்” என்ற பழமொழிக்கு மிகச்சரியான செயலைக் காண்பதாகத்தான் முடியும்.
 
இதுக்கு பதிலா.....சைனாக்காரங்களக் கொண்டுபோய் இறக்கினா.....போதாதா?
அதுக்கப்புறம் அங்க இருக்கிற மக்கள்....பாம்பா...அப்படீன்னா....அப்படிக் கேப்பாங்க....

அந்த ஊரில் நாயர் ஒருவர் கடை வைத்தால் அங்குள்ள ஐட்டங்கள்

ஸ்னேக் 65
பாம்புக்கட்டு பிரியாணி
பாம்பு பொளிச்சது
பட்டர் ஸ்னேக்
......................

நாளைய தலைப்புச்செய்தி இது தானாம்.

தாமரைச்செல்வன் இந்த பாம்புகளின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுப்பாரா..? அமெரிக்க வெளியுறவுத்துறை ஏ...........க்கம்...:lachen001:
 
ஓவியனையும் அழைச்சிகிட்டுப் போகிறேன்.. எதோ நம்மாலானது..:D:D:D
 
உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
நானும் இதில் சில விஷியங்களை தெரிந்து கொண்டேன்
அருமையான பகிர்வு
பாராட்டுக்கள் ........
 
மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்

1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம்.
எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.

4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.

5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.

6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.

7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.

8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.

10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.

12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.

13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.

14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.

15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.

16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.
 
உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Greyhound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்த்தில் உருவானதாக கருதப்படுகின்றது.

மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்துமாம்.

லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி

கடல் ஆமை ஒரே சமயத்தில் 200 முட்டைகளிடுமாம்.

தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்குமாம்.

நிலவின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்த முதல் விண்கலம் ரேஞ்சர் 7 என்பதாகுமாம் .

புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
 
இதுவரை அறிந்திராத பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி சசிதரன்.
 
கற்க நிறைய உண்டு இத்திரியில்..

உற்சாகமாய் தொடர்க சசி.. பாராட்டுகள்!
 
வயிறு நிறைய உண்ட பிறகு, சற்று நேரம் கேட்கும திறன் குறையும்.

அதனால்தான் செவியுணவு இல்லாதபோது உண்ணச் சொன்னார் வள்ளுவர்....:icon_b:
 
கோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்

கோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்

இனிப்பான பானங்களை குடிப்பதால் கோபம் கட்டுப்படும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உளவியல் ஆய்வு இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இனிப்பு பதார்த்தங்களை விட, இனிப்பு சுவை உடைய பழச்சாறுகள், பானங்கள் குடிப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களோ அல்லது கோபத்தை வெளிக்காட்டும் சம்பவங்களோ ஏற்பட்டால், அவர்களுடைய கோபத்தை மனத்தளவில் கட்டுப்படுத்தி சாந்தப்படுத்துவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக குளுகோஸ் பானங்கள் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு, இயல்பாகவே மனதை அடக்கி ஆளும் ஆற்றல் அதிகரிப்பதாக நி சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டாம் டென்சன் தெரிவித்துள்ளார்.
 
மிக நல்ல தகவல்கள்.
நன்றி திரு.சசிதரன் & திருமதி.உமாமீனா அவர்களே

மேலும் பல தகவல்களுக்காக காத்திருக்கிறோம்
 
ஒன்றிற்காக இன்னொன்றை உருவாக்கி பின்னர் பாடுபடுவது தானே அமெரிக்காவின் வரலாறு. (அல்கெய்தா ஈராக்.... ) அதுகள் போல் இதுகள் வந்திடாதே... :D :D :D
மிக சரியாக சொல்லியுள்ளிர்கள்.
இப்பொழுது கடாபிக்கு என்று சொல்லி எண்ணெய் வளத்துக்காக அவர்கள் நாட்டு விஷயத்தில் தலையை நுழைத்து கொண்டிருக்கும் இவர்கள் அங்கும் அல்கொய்தாவின் ஆதரவாளர்களை அங்கும் பலம்கொள்ள செய்யபோகிறார்கள்.
 
அறிந்த மற்றும் அறிந்திராத தகவல்களின் தொகுப்பு ...அதிலும் எத்தனை முறை படித்தாலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தினை தூண்டும் பெர்முடா முக்கோணம் மற்றும் ட்ராகன் முக்கோணம் பற்றிய உண்மை தகவல்கள் ...இதன் மூலம் இயற்கையின் நிகர் இயற்கை தான் என்பது நிரூபணம் ஆகிறது ...தகவல்களின் தொகுப்பினை தொடருங்கள் சசிதரன் அவர்களே...
 
குறிப்பாக குளுகோஸ் பானங்கள் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு, இயல்பாகவே மனதை அடக்கி ஆளும் ஆற்றல் அதிகரிப்பதாக நி சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டாம் டென்சன் தெரிவித்துள்ளார்.
அவரே ஒரு டென்சன் பார்ட்டி போல.... :D :D

------

ஒருவர் பிஸியாக இருந்தால் கோபம் வராதாம். குளுக்கோஸ் உடலில் கலந்தால் ஏதாவது செய்துகொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுமாம். மூளைக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்கும். வடிவேலு சொல்றது போல மைன்ட் ப்ரஷ் ஆக இருக்கும். ஏதாவது புதுசா சாதிக்கணும் அல்லது யோசிக்கணும் என்று தோன்றுமாம்.:lachen001:

---

தொலைக்காட்சியில் அல்லது வானொலியில் ஒருவரை பேட்டி காண முன் அல்லது மேடைப்பேச்சுக்கு முன் வாழைப்பழம் சாப்பிடச்சொல்வது இதற்கும் சேர்த்து தானாம். சிலர் கற்கண்டு சாப்பிடுவார்கள்.
 
1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம்.
எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.

4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.

5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.

6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.

7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.

8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.

10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.

12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.

13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.

14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.

15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.

16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.
அப்பாடி எவ்ளோ.......தகவல்கள். தந்தமைக்கு நன்றிறிறிறிறிறிறிறி.......
 
Back
Top