தினம் ஒரு தகவல் - கோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்

சந்திரன் சுருங்குவதாக விஞ்ஞானிகள் தகவல்

சந்திரன் சுருங்குவதாக விஞ்ஞானிகள் தகவல் ..!

சந்திரன் படிப்படியாக சுருங்கி வருகிறது. குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது.
இந்த நிகழ்வு கடந்த 100 கோடி ஆண்டுகளாகவோ, அதற்கு மேலும் ஏற்பட்டிருக்கலாம். இந்த தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு மேற்கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அங்குள்ள சிறிய எரிமலைகள், மற்றும் செங்குத்தான குன்றுகள் மற்றும் பாறைகளாலும் இது போன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சந்திரன் பூமியை விட குறுக்களவில் நான்கில் ஒரு பகுதி அளவுடையது. தற்போது அது சுருங்கி வருவதால் முற்றிலும் அழியும் நிலை ஏற்படாது. எனவே காதலர்களும், கவிஞர்களும் அச்சப்பட தேவையில்லை.
 
ஐயோ சசி அப்படியானால் ஒரு காலத்தில் சந்திரன் இல்லாமல் போய்விடுமா?

அரிய தகவலுக்கு நன்றி
 
சந்திரன் அழிஞ்சா கவலைப்படுறது இலங்கை மக்கள் தான். (அங்க தானே ஒவ்வொரு பௌர்ணமிக்கும் போயா லீவு விடுறாங்க...) :D :D :D
ஆனா அழியாதுன்னு சொல்றாறே சசி...
 
சந்திரன் மட்டுமில்ல, சனி, குரு, பூமி எல்லாமேத்தான் சுருங்கிகிட்டு இருக்கு..

மனுஷன் ரூம் முழுக்க இருந்த கம்ப்யூட்டரை கைக்கடக்கமா சுருக்கினப்ப சந்தோசப்பட்டீங்க..

ஆண்டவன் அப்படிச் சுருக்கினா மட்டும் ஏன் கவலைப்படறீங்க?:eek::eek::eek:
 
சந்திரன் மட்டுமில்ல, சனி, குரு, பூமி எல்லாமேத்தான் சுருங்கிகிட்டு இருக்கு..

மனுஷன் ரூம் முழுக்க இருந்த கம்ப்யூட்டரை கைக்கடக்கமா சுருக்கினப்ப சந்தோசப்பட்டீங்க..

ஆண்டவன் அப்படிச் சுருக்கினா மட்டும் ஏன் கவலைப்படறீங்க?:eek::eek::eek:

:icon_rollout::icon_rollout::icon_rollout:
 
தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி

பல்லி தனது வாலை எங்காவது மாட்டி அறுத்துக் கொள்வது போலத் தோன்றினாலும், அது உண்மையில் தன்னுடைய வாலை உடல் வலியுடன் அறுத்துக் கொள்வதில்லை.
வால் இல்லாத பல்லியைக் காணும்போதும், "வாலறுந்த பல்லி' என்று சொல்கின்றனர். மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு அதிசய சக்தி பல்லிக்கு இருப்பதாகக் கேள்விப்படும் போது, நம்புவதே அரிதாக உள்ளது.

பல்லிக்கு, தான் விரும்பும் நேரத்தில் தனது வாலைக் கழற்றிப்போடும் திறன் உண்டு. தனக்கு ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன், உடனே தனது வாலைத் துண்டித்துக் கொள்கிறது. வால் தனியாகக் கழன்று விழுந்து துடிப்பதைப் பார்த்த எதிரி குழம்பிப் போய் இருக்கும்போது, எளிதில் தப்பித்துக்கொள்ள அதற்கு வசதியாக உள்ளது.

சிறிது நாட்களிலேயே அதற்கு வேறு ஒரு வால் முளைத்துவிடும் என்பதால், பல்லிக்கு அதன் வாலைத் துண்டித்து விடுவதால் எந்த இழப்பும் இல்லை.
 
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை தான், இந்தியாவின் மிகப் பெரிய குகை. குகையின் உயரம் 75 அடி. மலைக்குள் 80 அடி ஆழத்தில் பள்ளம் உள்ளது. ஹிந்துக்களின் புனிதத் தளமாக கருதப்படும் அமர்நாத் குகை பனி லிங்கம் புகழ் பெற்றது.

இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான தேவாலயம், பழைய கோவாவில் உள்ள புனித கதீட்ரல் தேவாலயம். 1510ம் ஆண்டு களிமண், பாறைகள் மற்றும் வைக்கோலைக் கொண்டு இந்த தேவாலயம் கட்டப்பட்டது. மீண்டும் 1562ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய வைஸ்ராய் டோம் பிரான்சிஸ்கோ என்பவர் தலைமையில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதற்கு 90 ஆண்டுகள் ஆயின.

புதுடில்லியில் உள்ள ஜும்மா மசூதி தான், இந்தியாவின் மிகப் பெரிய மசூதியாகும். 1656ம் ஆண்டு முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட இந்த மசூதியில், ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தொழுகை நடத்த முடியும். 15 ஆண்டுகள் நடந்த இந்த மசூதியின் கட்டுமானப் பணியில் 5 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்

நாட்டிலேயே மிகப் பெரிய நடைக் கூடத்தைக் கொண்ட கோயில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதஸ்வாமி கோயில். 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் வளாகத்தில் உள்ள நடைக் கூடத்தில், மொத்தம் 1200 பிரம்மாண்டமான கிராணைட் பாளங்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடலுக்கு அருகில் அமைந்திருக்கும் இக்கோயிலின் கோபுரம் 54 மீட்டர் உயரம் கொண்டது.


கர்நாடகாவின் சரவணபெலகோலாவில் உள்ள கோமதீஸ்வரர் சிலை தான், இந்தியாவின் மிகப் பெரிய கடவுள் சிலை. 17 மீட்டர் உயரம் கொண்ட இச்சிலையை 30 கிமீ தூரத்திலிருந்தும் காண முடியும். மலை உச்சியில் ஒரே கிராணைட் பாளத்தில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை கிபி 983ம் ஆண்டு நிறுவப்பட்டது.
 
ரோபோடிக் துறையில் புதிய புரட்சி: இலத்திரனியல் தோல்

ரோபோடிக் துறையில் புதிய புரட்சி: இலத்திரனியல் தோல்

தொடுகையை உணரக்கூடிய இலத்திரனியல் தோலினை கலிபோர்னிய பேர்கலி பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானிகள் குழுவொன்று உருவாக்கியுள்ளது.
மேற்படி இலத்திரனியல் தோலானது எந்திரனியல் (ரோபோடிக்) மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஆய்வுகூட பரிசோதனை அளவிலேயே இருக்கும் மேற்படி தோலானது, மனித தோலைப் போன்று மிக வேகமாக தொடுகைகளை உணர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமுக்கத்தை உணரக் கூடிய உயர் உணர்திறனை கொண்டமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இலத்திரனியல் தோலானது சிலிக்கோன், நெனோ வயர்கள் மற்றும் ஜேர்மானியம் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும் நெனோ ஸ்கேல் ட்ரான்ஸ்சிஸ்டர் மற்றும் இலகுவான இறப்பர் என்பனவும் இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை மிகவும் மலிவாக உருவாக்க முடியுமெனவும், இதன் இயக்கத்திற்கு மிகக் குறைந்த அளவிலான மின்சக்தியே ( வோல்டேஜ்) தேவையெனவும் கருதப்படுகின்றது.

எதிர்காலத்தில் இரசாயனப் பொருட்கள் மற்றும், வெப்பம், ரேடியோக் கதிர்கள் என்பனவற்றுக்குத் துலங்களைக் காட்டக்கூடிய சென்ஸர்களை மேற்படி தோலில் உள்ளடக்க தாம் எதிர்ப்பார்ப்பதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் மனிதர்கள் உள் நுழைய முடியாத இடங்களில் கூட இலத்திரனியல் தோல் கொண்ட ரோபோக்களைக் கொண்டு தாம் நுழைய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மிகவும் நல்ல செய்திகள்,மேலும் தொடர்ந்து நல்ல தகவல்களை தாருங்கள்.
 
செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம் : விஞ்ஞானிகள்

செவ்வாய் மற்றும் நிலவில் விவசாயம் செய்யலாம் : விஞ்ஞானிகள்

செவ்வாய் மற்றும் நிலவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட முடியுமா என்ற ஆராய்ச்சியில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
பல்கலை வளாகத்தில் நிலவின் தட்ப வெப்பத்தை ஒத்த சூழலில் ஒரு பரிசோதனைக் கூடம் உருவாக்கப்பட்டு செடிகள் பராமரிக்கப்பட்டதில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சியில் தெரியவந்துள்ள தகவல்களின் விவரம்: பூமியில் இருந்து செடிகளை இரு கிரகங்களுக்கும் எடுத்துச் சென்று வளர்க்க முடியும். இதன் முதல் கட்டமாக உருளை, பட்டாணி, தக்காளி, மிளகு உள்ளிட்ட சில காய்கறிகளை உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலவில் இவற்றை புதைத்து வைத்தால் போதும் செடிகள் துளிர்க்கத் துவங்கிவிடும்.

அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. விதை மற்றும் குழல் வடிவ தாவரங்களின் கிளைகளில் உள்ள ஈரப்பதமே அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். 30 நாட்களில் காய்த்து குலுங்கத் துவங்கும். ஒரு ரோபோவை பூமியில் இருந்து ரிமோட் மூலம் இயக்கி, நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களில் தோட்டத்தைப் பராமரிக்க முடியும். இவ்வாறு ஆராய்ச்சி முடிவுகளை அடுக்குகிறார்கள் விஞ்ஞானிகள்
 
அமெரிக்காவில் பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு

அமெரிக்காவில் பாம்புகளை கொல்ல விஷ எலிகள் வீச்சு : விஞ்ஞானிகள் நூதன திட்டம்

அமெரிக்காவில் பசிபிக் கடலில் உள்ள குவாம் தீவில் விஷ பாம்புகள் அதிக அளவில் உள்ளன. இவை அங்குள்ள வனப்பகுதியில் மரங்களில் சர்வ சாதாரண மாக உலா வருகின்றன. மக்களின் உயிருக்கு அச்சுறுத் தலாக அவை திகழ்கின்றன. அவை ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட சரக்கு வாகனங்களில் ஊடுருவி வந்துள்ளன. இதனால் கடந்த 1980-ம் ஆண்டு முதல் பாம்புகளின் தீராத தொல்லை இங்கு அதிகரித்துள்ளது.

எனவே அங்குள்ள விஷ பாம்புகளை கொல்ல அமெரிக்க வேளாண் விஞ்ஞானிகள் நூதன திட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். எலி என்றால் பாம்புகளுக்கு கொள்ளை பிரியம். அவற்றை விழுங்கி உணவாக்கி கொள்ளும். எனவே எலிகளின் உடலில் “அசிடோமினாபென்” என்ற விஷ மருந்தை செலுத்தி காட்டுக்குள் உலவ விட்டால் அவற்றை சாப்பிடும் பாம்பு களை செத்து மடியும் என்று கருதினர். அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். கடந்த மாதம் குவாம் தீவில் உள்ள 20 ஏக்கர் வனப்பகுதியில் 200 எலிகளை ஹெலிகாப்டர் மூலம் வீசினர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளது.

எனவே இதே திட்டத்தை பெருமளவில் செயல்படுத்த உள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட விஷ எலிகள் வீசப்பட உள்ளன. இதன் மூலம் அங்குள்ள விஷ பாம்புகளின் எண் ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
பாம்பு இறந்துவிடும். போட்ட எலிகளில் ஒன்றிரண்டு எஞ்சி அவற்றால் பிரச்சனை வராதா??? ஒன்றிற்காக இன்னொன்றை உருவாக்கி பின்னர் பாடுபடுவது தானே அமெரிக்காவின் வரலாறு. (அல்கெய்தா ஈராக்.... ) அதுகள் போல் இதுகள் வந்திடாதே... :D :D :D
 
விஷத்துக்கே விஷம் வைக்கிறாங்களாம்..

அதுசரி இப்படி சந்து பொந்திலெல்லாம் பாம்புகள் செத்துக் கிடந்தா அதனால் உண்டாகும் தொத்துவியாதிகளுக்கு என்ன பேர் வைக்கப் போறாங்களாம்?:confused::sprachlos020::eek:
 
அதுசரி இப்படி சந்து பொந்திலெல்லாம் பாம்புகள் செத்துக் கிடந்தா அதனால் உண்டாகும் தொத்துவியாதிகளுக்கு என்ன பேர் வைக்கப் போறாங்களாம்?:confused::sprachlos020::eek:

SNAKE - RAT Influenza (A1P1R200) :D
 
Back
Top