தினம் ஒரு தகவல் - கோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்

நன்றி சசி எங்கு இவைகளை பெற்றுக்கொள்வது? என்ன விலைதான் குறைவாக இருக்கும்
 
ஆக்டோபஸ் என்ற மீன் இனத்தைப் போன்று ராட்சச கைகளைக் கொண்ட கலாமர் என்ற கடல் மீன் வகை பிரான்ஸ் நாட்டு மர்சேய் என்ற ஆழ்கடல் பகுதியில் அதிகம் கிடைக்கிறது. ஐரோப்பிய மக்கள் விரும்பி உண்ணும் இந்தப் பெரிய மீன் அவ்வளவு எளிதில் வலைகளில் சிக்காது. சமீபத்தில் பிடிக்கப்பட்ட இந்த மீன் ஒன்றின் நீளம் மட்டும் மூன்று மீட்டர்.

சுறா மீன்களுக்கு காற்றுக் குழாய்கள் கிடையாது. இதனால் கண்டிப்பாக அவை நீந்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல், கடலுக்கு அடியில் மூழ்கிக் கொண்டே போகும்.

உலகில் வாழும் 10 உயிரினங்களுள், ஒன்பது உயிரினம் கடலுக்குள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடல் தேள் ஒரே நேரத்தில் 1 லட்சட்து 50 ஆயிரம் முட்டைகளைப் போடும்.

நட்சத்திர மீனுக்கு 8 கண்கள். ஒவ்வொரு கண்ணும், ஒவ்வொரு காலின் முடிவில் இருக்கும். உலகில் வாழும் உயிரினங்களில், வயிற்றை வெளியே கொண்டுவந்து மீண்டும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் இயல்பு நட்சத்திர மீனுக்கு மட்டும் உண்டு.

ஜெல்லி மீனின் உடலில் 95 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருக்கும்!

ஆக்டோபஸ் போன்ற கடல் வாழ் உயிரினத்தின் கண்களின் அளவு, 15 அங்குலங்கள். இது தான் உலகிலேயே மிகப் பெரிய கண்களைக் கொண்ட உயிரினம்.
 
கடலை இன்னொரு உலகம் என்று கூட கூறலாம்

நல்ல தகவல்கள்

நன்றி சசிதரன் :)
 
உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்

உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்

nerium_oleander.jpg

1231852302_Nerium-oleander2.jpg

அரளி என்னும் ஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக்கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது.தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக்கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப்பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு.

கொடுமையான நச்சுத்தன்மை இருந்தாலும்கூட அழகிற்காக இந்தத் தாவரம் வளர்க்கப்படுகிறது. தூரக்கிழக்கு நாடுகளில் இருந்தும் மத்தியதரைக்கடல் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் உலர்ந்த வெப்ப நிலைகளிலும் வளம்குறைந்த மண்ணிலும் வளரக்கூடியது. அடர்த்தியான புதர்வடிவில் ஆறுமுதல் பதினெட்டு அடி உயரத்திற்கு ஒலியாண்டர் தாவரம் வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்திலும் தடிமனாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும் பூக்கள் மஞ்சள் சிகப்பு இளஞ்சிவப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும்.

வறண்ட நிலத்தில் கூட ஒலியாண்டர் அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் ஒலியாண்டர் தாவரம் வளர்க்கப்படுகிறது.

ஒலியாண்டர் தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு வாந்தி கடுமையான வயிற்றுவலி நினைவிழப்பு மயக்கம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். ஒலியாண்டர் நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

ஒலியாண்டர் நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும் வயிற்றை காலிசெய்வதும் செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.
 
பார்ப்பதற்கு செவ்வரளி மாதிரியே தோற்றமளிக்கிறது.
நம் ஊர்களில் வேறுவிதமான அரளிவிதைகளை கோழைகள் பயன்படுத்துவார்கள்.
அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தந்தமைக்கு நன்றி சசி.
 
அரளிபோன்றுதான் தோற்றமளிக்கின்றது. இந்த பூஇதழ்கள் ஒற்றை அடுக்கில் இருக்கின்றது. அழக்கிற்குள் இத்தனை ஆபத்தா?

சசி நன்றிகள் பலவிடயங்களை தெரிய வைக்கின்றீர்கள்
 
அரளி என்னும் நச்சுத்தாவரம் பற்றிய செய்தி உண்மைதான். எனக்குத் தெரிந்து சிலவருடங்களுக்குமுன் ஒரு குழந்தை கதம்பத்தில் கோர்க்கப்பட்டிருந்த இவ்விதழ்களை ரோஜா என்று நினைத்து உண்டு காப்பாற்றமுடியாமல் இறந்துவிட்டது.

அரியபல செய்திகளை தொகுத்தளிக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்தும் பாராட்டும் சசிதரன் அவர்களே.
 
அரளிபோன்றுதான் தோற்றமளிக்கின்றது. இந்த பூஇதழ்கள் ஒற்றை அடுக்கில் இருக்கின்றது. அழக்கிற்குள் இத்தனை ஆபத்தா?

உங்க குசும்பு தாங்கல. அரளி அரளி போல தோன்றாம வாழைப்பூபோலவா தோன்றும். :D

இது தான் நம்மூரில இருக்கும் அலரி மரமோ??? இது போல தான் வெவ்வெறு நிறங்களில் உண்டு. வெள்ளை ஊதா சிகப்பு நிறங்களில் அலரிப்பூ இருக்கும். அலரிக்காய் சரியான நஞ்சு.. பலரும் தற்கொலை செய்ய பயன்படுத்துவார்கள். இதை அரைத்து சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். (கசப்புக்காக அல்ல. சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைவாக நஞ்சு பரவ ஏதுவாகுமாம். அந்தக்காலத்தில இப்படியெல்லாம் யோசித்திருப்பாங்களா???)

அமரா??? நீங்கள் AL இல் தாவரவியல் படிச்சீங்களோ??? அதுக்கு என்ன ஆங்கிலப்பெயர்???
 
பனிக்கரடிகள் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை விழுங்குமாம்

அண்ணா பனிக்கரடிகள் இருப்பது வடதுருவத்தில் , பெங்குவின் இருப்பது தென்துருவத்தில் ... இது தவறான தகவல். :confused:
 
பனிக்கரடிகள் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை விழுங்குமாம்

அண்ணா பனிக்கரடிகள் இருப்பது வடதுருவத்தில் , பெங்குவின் இருப்பது தென்துருவத்தில் ... இது தவறான தகவல். :confused:

மன்னிக்க வேண்டும் ரவி... அவை சீல் எனும் விலங்கினை உண்ணும். தவறான தகவல் தந்தமைக்கு மன்னிக்கவும். இனிவரும் தகவல்களில் கவனம் கொள்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி... :)
 
பார்ப்பதற்கு செவ்வரளி மாதிரியே தோற்றமளிக்கிறது.
நம் ஊர்களில் வேறுவிதமான அரளிவிதைகளை கோழைகள் பயன்படுத்துவார்கள்.
அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தந்தமைக்கு நன்றி சசி.

ஆம் பாரதி அண்ணா... இது அரளி தான்... அதன் அறிவியல் இனப்பெயர்தான் கூறியிருப்பது... :)
 
அரளிபோன்றுதான் தோற்றமளிக்கின்றது. இந்த பூஇதழ்கள் ஒற்றை அடுக்கில் இருக்கின்றது. அழக்கிற்குள் இத்தனை ஆபத்தா?

சசி நன்றிகள் பலவிடயங்களை தெரிய வைக்கின்றீர்கள்

அழகென்றாலே ஆபத்துதான் போல... யாருக்கு என்பதில்தான் குழப்பம்..:D

நன்றி வியாசன் :)
 
அரளி என்னும் நச்சுத்தாவரம் பற்றிய செய்தி உண்மைதான். எனக்குத் தெரிந்து சிலவருடங்களுக்குமுன் ஒரு குழந்தை கதம்பத்தில் கோர்க்கப்பட்டிருந்த இவ்விதழ்களை ரோஜா என்று நினைத்து உண்டு காப்பாற்றமுடியாமல் இறந்துவிட்டது.

அரியபல செய்திகளை தொகுத்தளிக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்தும் பாராட்டும் சசிதரன் அவர்களே.

நன்றி சுடர்விழி அவர்களே... :)
 
உங்க குசும்பு தாங்கல. அரளி அரளி போல தோன்றாம வாழைப்பூபோலவா தோன்றும். :D

இது தான் நம்மூரில இருக்கும் அலரி மரமோ??? இது போல தான் வெவ்வெறு நிறங்களில் உண்டு. வெள்ளை ஊதா சிகப்பு நிறங்களில் அலரிப்பூ இருக்கும். அலரிக்காய் சரியான நஞ்சு.. பலரும் தற்கொலை செய்ய பயன்படுத்துவார்கள். இதை அரைத்து சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். (கசப்புக்காக அல்ல. சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைவாக நஞ்சு பரவ ஏதுவாகுமாம். அந்தக்காலத்தில இப்படியெல்லாம் யோசித்திருப்பாங்களா???)

அமரா??? நீங்கள் AL இல் தாவரவியல் படிச்சீங்களோ??? அதுக்கு என்ன ஆங்கிலப்பெயர்???

இது அரளிதான் அன்புரசிகன்... :)
 
மனிதன் தூங்கும் போது சுறுசுறுப்பாக இயங்குமாம் மூளை

மனிதன் தூங்கும் போது சுறுசுறுப்பாக இயங்குமாம் மூளை

தூங்கும் போது உடலும் மனமும் செயலற்று இருக்கும் எனபது தான் பலரின் கருத்து ஆனால் தூங்கும் போது தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் தூங்கும் போது மின் தூண்டுதல் மூளையில் ஏற்படுகின்றதாம்.
அதிக அளவில் மின் தூண்டுதல் ஏற்படுபவர்கள் நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் எனவும் ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது. இந்த மின் தூண்டுதல்கள் ஸ்பின்ட்ல்ஸ் என கூறப்படுகிறது. இதன் செயல்கள் மூளையில் உள்ள தலாமஸ் என்ற பகுதியில் நடக்கிறதாம்.

தூங்கும் போது கேட்கும் சத்தங்களை வேறு பகுதிகளுக்கு திருப்பி விடும் வேலையை இந்த தலாமஸ் செய்கிறது. அதனால் தான் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது நமக்கு சத்தம் கேட்பதில்லை. தூங்கும் போது மூளையில் அடிப்பாகத்திலிருக்கும் வேறு நரம்பு மண்டலங்கள் இயங்கத் தொடங்குகின்றன.

தூங்கும் போது தான் நியூரான்கள் மிக சுறுசுறுப்பாக இயங்கி ஆரோக்கியத்திற்கு தேவையான கடினமான சில பணிகளை செய்கின்றன என்பதால் நன்றாக தூங்க வேண்டும் என்கிறார் தூக்கம் குறித்த மருத்துவ நிபுணரான Dr எல்லேன்போகேன்.

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தினசரி 16 மணிநேர தூக்கம் மிக அவசியமாகும். தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெரியவர்களுக்கு 7 மணி நேரத் தூக்கம் போதுமானது என கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில் தூக்கம் வந்தால் தூங்குவதில் எந்த தவறும் இல்லை எனவும் கூறுகின்றனர் மன நல மருத்துவர்கள்.
 
ஓ... அதனால்தான் பணியிலும் பலர் உறங்குகிறார்களோ..!:lachen001:
பயனுள்ள தகவலுக்கு நன்றி சசி.
 
டால்பின்

இந்தியாவின் தேசிய நீர் விலங்காக அறிவிக்கப்பட்ட டால்பின்களைப் பற்றிய அரிய தகவல்கள் உங்களுக்காக...

டால்பின்கள் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. தங்கள் பிள்ளைகளுக்கு பாலூட்டி கண்ணும் கருத்துமாக பராமரிக்கும்.

டால்பின்கள் தங்கள் பாதுக்காப்புக்காகவும், குட்டிகளைப் பராமரிப்பதற்காகவும் எப்போதும் கூட்டமாகவே வாழும்.

நாம் செய்வதை அப்படியே திரும்பச் செய்யும் திறன் மற்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை.

சராசரியாக ஒரு டால்பின் 2.5 மீட்டர் நீளமும் 74 கிலோ எடையும் கொண்டிருக்கும். அதன் துடுப்புகளில் உள்ள எலும்புகளின் கட்டமைப்பு, மனிதர்களின் கைகள் மற்றும் உள்ளங்கையின் எலும்புகளை ஒத்திருக்கும்.

நீருக்கடியில் 15 மைல் தொலைவிலிருந்து வரும் ஒலியைக் கூட டால்பின்கள் கண்டுபிடிக்கும். குறிப்பிட்ட ஒலியை நினைவில் வைத்துக் கொள்வதில் மனிதர்களைக் காட்டிலும் டால்பின்கள் சிறந்தவை.

டால்பின்கள் தங்கள் சக்தியைத் தக்கவைத்துக் கொள்ள, நீரிலிருந்து அவ்வப்போது தாவிக் குதிக்கின்றன. அவற்றின் உடலுக்கு மேலே காணப்படும் துளை வழியாக சுவாசிக்கின்றன். அந்தத் துளைகள் மூலம் காற்று நேராக அவற்றின் நுரயீரலைச் சென்றடைகிறது.
 
Back
Top