தினம் ஒரு தகவல் - கோபத்தை குறைக்கும் இனிப்பு பானங்கள்

தினமும் நாளிதழில் நீங்கள் படிக்கும் செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
உங்களை பாதித்த செய்திகள்,உங்களை கவர்ந்த செய்திகள் எதுவாக இருந்தாலும் இங்கே மற்ற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


நல்ல பயனுள்ள தகவல் எதுவாக இருந்தாலும் பகிர்வோம்.. :)
 
Last edited:
உலகத்தினை சற்று பார்ப்போம்

* பூமியின் மொத்தம் பரப்பளவு = 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீற்றர்.

* நிலப்பரப்பு = 14 கோடியே 84 இலட்டத்தி 29 ஆயிரம் சதுர கிலோ மீற்றர்.

* சுற்றளவு = 40 இசட்டத்தி 7 ஆயிரத்தி 502 கிலோ மீற்றர்.

* குறுக்களவு = 12756 கோடி கிலோ மீற்றர்.

* நீர்பரப்பு = 40 இலட்டத்தி 7 ஆயிரத்தி 502 கிலோ மீற்றர்.

* நிலப்பகுதி = 29.2 வீதம்.

* நீர்ப்பகுதி = 70.8 வீதம்.

* கடலின் பரப்பளவு = 361 மில்லியன் சதுர கிலோ மீற்றர்

* துருவப் பகுதியின் விட்டம் = 12714 கிலோ மீற்றர்.

* சூரியனில் இருந்து பெறும் ஒளியின் அளவு = 1 சதுர கிலோ மீற்றருக்கு 1 கிலோ வோட்ஸ்.

* சுழலும் வேகம் = 1 மணிக்கு 107000 கிலோ மீற்றர்

* தன்னைத் தானே சுற்றும் வேகம் = 23 மணித்தியாலங்கள், 56 நிமிடங்கள், 04 வினாடிகள்.
 
மனித மூளை

மனித மூளை 1.5 கிலோ எடை கொண்டது. உடலின் அனைத்து இயக்கங்களும் மூளையின் உத்தரவுப்படியே நடக்கின்றன. நாம் சிந்திப்பது, பேசுவது, ஓடுவது, உண்பது, மகிழ்ச்சி, வருத்தம் என அனைத்தும் மூளையின் உத்தரப்படி தான் நடக்கிறது.

கரு உற்பத்தியான 2வது வாரத்தில் மூளை தோன்றிவிடுகிறது. 3 மாத கருவின் மொத்த எடையில் பாதி, மூளையின் எடையாக இருக்கும்.

உடலின் எந்தவொரு உறுப்பும் பாதிக்கப்பட்டால், மருத்துவம் மூலம் அதை குணப்படுத்துகிறோம். மூளையின் திறன் பாதிக்கப்பட்டால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும். மூளை செயலிழந்துவிட்டால் இறப்பைத் தான் சந்திக்க வேண்டும்.

உடலின் மொத்த எடையில் 40-ல் ஒரு பங்குள்ள மூளைக்கு, உடலில் ஓடும் ரத்தத்தில் 5-ல் ஒரு பங்கு தேவைப்படுகிறது.
 
வயது ஏறஏற மூளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம். மூளையின் கன அளவு சிறியதாகிப் போவதால் மூளையின் வெண்ணிற பகுதியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.வயது அதிகரிப்பால் மட்டுமல்லாது, மதுகுடிப்பதாலும் கூட மூளை சிறியதாகிப் போகிறது என்கிறார்கள் அறிவியலார்கள்.
 
கெட்டுப்போகாத உணவுப்பொருள் தேன்

நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் தூங்கலாம்

பட்டாம்பூச்சிகள் தங்கள் பாதங்களினால் சுவைக்கின்றன.

கிளியும் முயலும் தங்கள் பின்னால் இருப்பதை தலை திருப்பாமல் காணமுடியும்.

நீர் யானை மனிதனை விட மிகப்பெரியது, ஆனால் அது மனிதனை விட வேகமாக ஓடும்.

கண் இமைகளில் மனிதனுக்கு 550 முடி இருக்கின்றது.

அண்டார்டிகா கண்டத்தில் மட்டும் நிலங்கள் கடல் மட்டத்திற்கு கீழே எங்கும் இல்லை.எல்லா இடமும் கடல் மட்டத்திற்கு மேல் தான் உள்ளது.

வாத்தின் குவாக் குவாக் சத்தத்தை கேட்டிருக்கின்றீர்கள் அல்லவா? அதன் ஒலி மட்டும் எதிரொலிப்பதே இல்லை. இதுவரை ஏன் என்று தெரியவில்லை.

டைப் ரைட்டரில் முதன் முதலாக தட்டச்சப்பட்ட நாவல் டாம் சாயர்

தங்க மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மையாக மாறிவிடுமாம்.

பனிக்கரடிகள் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை விழுங்குமாம்.

டான்பின்கள் ஒரு கண்னை திறந்து வைத்தபடியே உறங்குகின்றன.

மாடுகளை மாடிப்படிகள் ஏறவைக்கலாம், இறங்க வைக்க முடியாது.

மனிதனின் மூக்கும் காதும் வளர்ந்துகொண்டே போகும், ஆனால் கண்கள் வளராது.

வயிறு நிறைய உண்ட பிறகு, சற்று நேரம் கேட்கும திறன் குறையும்.
 
Last edited by a moderator:
உலகம் முழுவதும் ஆண்டுதோறும், 1 கோடியே 70 லட்சம் பேர் இதய நோயால்
இறக்கின்றனர். இவர்களில் 20 லட்சம் பேர் இந்தியர்கள். இந்தியாவில் 6 கோடி
பேருக்கு இதய நோய் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நகர்புறங்களை
சேர்ந்தவர்கள். சென்னையில் 4 சதவீதம் பேரும், டெல்லியில் 7.8 சதவீதம் பேரும்
இதய நோயாளிகளாக உள்ளனர்
 
பெர்முடா முக்கோணம் ( Bermuda Triangle )

தன் எல்லைக்குள் புகும் கப்பல்களையும், விமானங்களையும், மனிதர்களையும் கபளீகரம் செய்யும் மாரணக்குழி பெர்முடா முக்கோணம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அட்லாண்டிக் மகா சமுத்திரத்தின் மெற்கு பகுதியில், புளோரிடா, பெர்முடா, ப்யூட்ரோ ரிக்கோ மாநிலங்களுக்கு இடையே அமைந்திருக்கும் பகுதி தான் பெர்முடா முக்கோணம். இயற்கையாகவே உருவாகியிருக்கும் இந்த மரணக்குழி, இதுவரை நூற்றுக்கணக்கான கப்பல், விமானங்களையும், ஆயிரக்கணக்கான மனிதர்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுள்ளது. இன்னும் இதன் பசி அடங்கவில்லை.

இந்தப் பகுதியை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் மீன்கள் வசிக்க பயந்து, தூரவே விலகிவாழ்ந்து வருகின்றன.


இந்த மரணக்குழியின் பரப்பளவு, ஆழம் எவ்வளவு? அப்பகுதியின் தன்மை என்ன? மூழ்கிய கப்பல், விமானங்கள் என்ன ஆயின? அவற்றின் சிறு பகுதிகளோ மனிதர்களின் ஒரு துண்டு எலும்போ கூட கிடைக்காததின் மர்மம் என்ன? -இது போன்ற பல கேள்விகள் விஞ்ஞானிகளை விழிக்க வைத்துக் கொண்டுள்ளன. இதுவரை சின்ன ஆதாரம் கூட கிடைக்கவில்லை.

பூமியின் புவியீர்ப்பு தன்மை இந்த பகுதியில் அளவுக் கதிகமாக இருக்கிறது என்கின்றனர் ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினரோ, பல நூற்றண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் இருந்த தீவுப்பகுதி ஒன்று மூழ்கி இருக்க வேண்டும். அளவுக்கதிகமாக நீர் சுழற்சியின் காரணமாக இப்படி எல்லாம் நடைபெறுகிறது என்கின்றனர்.

மூன்றாவது அணியினரோ, மனிதனை விட அறிவிலும், தொழில்நுட்பத்திலும் மேலோங்கி இருக்கும் வேற்று கிரகத்து மனிதர்களின் ஆராய்ச்சி பகுதியாக அது இருக்கக் கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த பெர்முடா முக்கோணம் பற்றி 1964ல் தான் வெளி உலகுக்கு தெரிய வந்தது. வின்சன்ட் எச். காட்டிஸ் என்ற எழுத்தாளர், தான் எழுதிய கட்டுரை ஒன்றில் மேலோட்டமாக இதைப்பற்றி கூறியிருந்தார். அவரை தொடர்ந்து, இவான் டி சாண்டர்சன் என்பவர், மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடங்கிய கட்டுரை ஒன்றை எழுதினார்.

அதன்பின், பெர்முடா முக்கோணம் பற்றி அறிய நிறைய பேர் கிளம்பினர். 'என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா' பெர்முடா முக்கோணம் பற்றி பல பக்கங்களுக்கு தகவல்களை சேகரித்து வெளியிட்டது.

பெர்முடா முக்கோணம் பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்டன. ஆனால், எந்தவொரு எழுத்தாளரும் பெர்முடா முக்கோணத்தின் ரகசியத்தை எழுதவே இல்லை.

இந்த நேரத்தில் தான் அதாவது, 1974ல் லாரன்ஸ் டி குஷே என்பவர் 'பெர்முடா முக்கோண ரகசியம் அம்பலம்' என்று ஒரு புத்தகம் வெளியிட்டார்.

அதில், அதிகமான நீர்சுழற்சியின் காரணமாகவே கப்பல்கள் மூழ்குகின்றன என்றும், அந்த சுழற்சியாய் ஏற்படும் மின்காந்த அலையால், உலோகத்தால் செய்யப்பட்ட விமானங்கள் ஈர்க்கப்பட்டு மூழ்குகின்றன என்று பல ஆதாரங்களுடன் கூறியிருந்தார். இது ஒருவிதத்தில் சரியாக இருந்தாலும், பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் மேலும் சர்ச்சையை தான் கிளப்பின.

அமெரிக்க - ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாக இதைப் பற்றி ஆராய, நவீன கருவிகளுடன் சென்றனர். இந்த ஆரய்ச்சி குழுவில் இருந்த 16 பேர் ஏதோ ஒரு விசையால் செலுத்தப்பட்டவர்கள் போல் திடீரென்று மூழ்கி போயினர். எப்படி மூழ்கினர் என்று மற்றவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

உண்மை சில நேரங்களில் கற்பனையை விட அதிசயமாக இருக்கும் என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணம் இருக்க முடியும்.

விரைவில் விடை கிடைக்குமா பார்க்கலாம்.
 
இந்த பெர்முடா முக்கோணத்தின் நேர் எதிராக பூமிக்கோளத்தின் மறுபக்கத்தில் தென்கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள கடல் ''பிசாசுக் கடல்''..ஜப்பான் கடல் பகுதியாகும் இங்கேயும்...... போகும் கப்பல்கள், விமானங்கள் எல்லாம் மாயம்....இதற்கும், அதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதோ? அது டிராகன் முக்கோணம் எனப்படுகிறது....

கட்டம் கட்டி விளையாடற மாதிரி முக்கோணம் கட்டி விளையாடறாங்க:confused:
 
படித்த செய்தியானாலும் விடை தெரியா விந்தையாக இருப்பதால் படிக்கப்படிக்க ஈர்ப்பான செய்தியாக உள்ளது.
 
இரத்தத்தின் உண்மை தகவல்கள்

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே "ஹீமோகுளோபின்' என்ற வேதிப்
பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும்.

ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம்
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள்
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை
ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள "பிளேட்லட்' அணுக்களின் வேலை
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி "பிளேட்லட்' அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி "கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்தத்தில் உள்ள பொருள்கள
ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் "பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.

ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால்
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் "பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவுமூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

ரத்தம் உறைவதற்கு அவசியம்
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

ரத்தத்தில் குரூப்புகள்
ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. "‘O' பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு "யுனிவர்சல் டோனர்' என்று பெயர்.

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது.ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது
நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் ரத்த தானம் செய்யக்கூடாது
உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant - recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமாநன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா
ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்
 
பலருக்கும் பயனளிக்கும் வகையில், இரத்தத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் தொகுத்து தந்தமைக்கு நன்றி திரு.சசிதரன். உங்களின் முயற்சியை பாராட்டுகிறேன்.
 
பழங்கால அதிசயங்கள்

இப்போதைய உலக அதிசயங்கள் என்னென்ன என்று நமக்குத் தெரியும். பழங்கால அதிசயங்கள்?

இப்போது போலவே அப்போதும் ஏழு தான்.


கிசா பிரமிடு

7pyramids.png


மர்மங்களின் தேசம் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் எகிப்து நாட்டில், கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளாக, பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருக்கும் பேரதிசயம். புராதான, இடைக்கால, நவீன என்று எத்தனை பட்டியல்கள் தயாரித்தாலும் பிரமிடுகளுக்குக் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். துல்லியமான அதே சமயம் நுணுக்கமான கட்டட அமைப்பு இதனைத் தனித்து நிற்கச் செய்கிறது. இதனைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு கல்லும் இரண்டு டன் எடை கொண்டதாம். வழக்கமான* பிரமிடுகளைப் போல் அல்லாமல் இதன் உச்சியில் சிறிய சமதளம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம் கேப்ஸ்டோன் எனப்படும் ஒரு பிரமிட் துண்டு. இந்த கேப்ஸ்டோனும் ஒரு பிரமிடு தான். இந்த துண்டு இல்லாமல் ஒரு பிரமிடு முழுமையடைவதில்லை. சில பிரமிடுகளுக்கு இந்த கேப்ஸ்டோன் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். கிசா பிரமிடில் கேப்ஸ்டோன் என்ற பகுதி இல்லை.இதற்கு காரணம்,

(1)கிசா பிரமிடின் கேப்ஸ்டோனின் உயரம் எட்டு மீட்டராக இருந்திருக்கும்!!!

(2) பிரமிடு முழுமைப்படுத்தப்படாமலேயே இருந்திருக்கக் கூடும்.


அலெக்சாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம்:-

lighthouse.png


மறுபடியும் எகிப்து. அலெக்சாண்ட்ரியா மத்தியத்தரைக் கடலின் ஒரு துறைமுக நகரம். இதன் தாழ்வான நீர்ப்பரப்பு அடிக்கடி கப்பல் விபத்துக்களை ஏற்படுத்தியது. அதனைத் தவிர்க்க கி.மு 299ல் ஃபாரோஸ் தீவில் கட்டப்பட்டது. பகலில் சூரிய ஒளியையும், இரவில் தீ வெளிச்சத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மாபெரும் கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்டது. கி.பி ஆயிரத்து முன்னூறுகளில் அடுத்தடுத்த
நில நடுக்கங்களால் சிதிலமடைந்த இந்த கலங்கரைவிளக்கம், இருந்த வரை
மூன்றாவது உயரமான கட்டிடமாக இருந்தது(135 மீ). கட்டப்பட்ட கலங்க்கரை விளக்கங்களிலேயே உயரமானதும் கூட.


பாபிலோன் தொங்கும் தோட்டம்

hanging-gardens-of-babylon.jpeg


கி.மு அறுநூறுகளில் பாபிலோன் மன்னன் நெபுகாட்நேசரால் கட்டப்பட்டது இந்தத் தோட்டம் நோயாளி மனைவியின் சுகவாசத்திற்காகக் கட்டப்பட்டதாம் இந்தத் தோட்டம். நீரூற்று எல்லாம் இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனாலும், இப்படியொரு இடமே இல்லை, இது கவிதைகளில் புனையப்பட்ட இடம் என்றும் சிலர் சொல்வார்கள். இந்த இடத்தைப் பற்றி பலமான ஆதாரங்கள் ஏதும் இல்லாததே காரணம்.


சீயஸ் சிலை ஒலிம்பியா:

7zeus.png


கிரீஸ் நாட்டில் கி.மு 466 456ல் கட்டப்பட்ட இந்த சிலை 13 மீ உயரம் கொண்டது தந்தம் மற்றும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது இந்த சிலை. ஹோமரின் இலியட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த சிலையை வடிவமைத்ததாக இதன் சிற்பி சொன்னாராம். கண்ணால் காண்பதே பெரும் புண்ணியமாகக் கருதப்பட்ட இந்த சிலை கி.பி நான்காம் நூற்றாண்டில் தீக்கிரையாக்கப்பட்டது


ஆர்ட்டிமிஸ் கோவில்

7temple.png


ஆர்ட்டிமிஸ் ஒரு கிரேக்கப் பெண் தெய்வம். இயற்கைக்கான தெய்வம். இந்த தெய்வத்திற்காக துருக்கியில் கட்டப்பட்டது தான் இந்த கோவில். கி.மு 550 ல் முடிந்த இந்த கோவில் கி.மு 356 லியே அழிக்கப்பட்டது. 115 மீ நீளம், 55 மீ அகலம் 18 மீ உயரம் கொண்டிருந்த இந்தக் கோவில் அந்நாளைய கிரேக்கக் கட்டடங்களில் மிகப்பெரியதாகும்.


மாசோலஸ் கல்லறை


7mausoleum.png


கி.மு 353 ல் அப்போதைய துருக்கியில் பெர்சிய பேரரசன் மாசோலசுக்காகக் கட்டப்பட்ட மாபெரும் கல்லறை. 105 மீ நீளம், 242 மீ அகலம், 43 மீ உயரம் கொண்டிருந்தது. கி.பி 14 ஆம் நூற்றாண்டின் தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் அழிந்து போனது. (Mausoleum - Great Tomb)


கொலோசஸ் சிலை


7colossus.png


கிரேக்க சூரியக் கடவுள் ஹீலியஸுக்காக கி.மு 305 இல் ரோட்ஸ் தீவில் கட்டப்பட்டது இந்த சிலை. 33 மீ உயரம் கொண்டது. கிமு 226 லேயே நிலநடுக்கத்தால் அழிந்து போனது. மிகக் குறைந்த நாட்கள் இருந்த அதிசயம் இதுதான்
 
படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது.. இயற்கைக்கு மிஞ்சிய சக்தி வேறொன்றும் இல்லை என்பதற்கு முக்கோண அதியசம் ஒரு சான்று..
 
Back
Top