இந்திய ரூபாய் குறியீட்டுடன் எழுத்துரு..!

அன்பு நண்பர்களே,

உலகில் ஐந்தாவது நாணய குறியீடாக இந்திய ரூபாய் குறியீட்டை மத்திய அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

இப்போதே இந்திய நாணயக்குறியீட்டைப் பயன்படுத்த விழைபவர்கள் கீழ்க்கண்ட தளத்தில் இருந்து எழுத்துருவை பதிவிறக்கி, தங்கள் கணினியில் நிறுவிப் பயன்படுத்தலாம்.

சாதாரணமான எழுத்துருக்களில் ~ அல்லது ` விசை இருப்பதில் `க்கு பதிலாக இக்குறியீடு அந்த எழுத்துவில் இடம் பெற்றிருக்கிறது.

(இந்தக்குறியீடு கணினி விசைப்பலகையில் எந்த விசையில் இடம்பெறும் என்பது இந்திய அரசால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க.)

Code:
 [URL]http://blog.foradian.com/[/URL]
 
சரியான நேரத்தில் அதற்கான தீர்வை தந்தீர்கள். இந்த அச்செழுத்து தேவைப்படுவோர்க்கு நிச்சயம் உதவும்.

பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா.
 
(இந்தக்குறியீடு கணினி விசைப்பலகையில் எந்த விசையில் இடம்பெறும் என்பது இந்திய அரசால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க.)

மக்கள் பலர் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்...
 
இந்தக் குறியீட்டை உருவாக்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமையே. பகிர்வுக்கு நன்றி, பாரதி அவர்களே.
 
தமிழர் என்பதில் பெருமைதான்.

ஆனால், இன்றைய (20-07-2010) தினமணி ஆசிரியருரை (Editorial), இப்படி அடையாளம் ஏற்படுத்துவன் மூலம் இந்திய 'ரூபாய்'க்குப் பெருமை அதிகமாகும் என்று நம் ஆட்சியாளர்கள் நினைப்பார்களானால் அதைவிடப் போலித்தனமான சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறுகிறது.

(பாரதிக்குப் பணிந்த வேண்டுகோள் : 'குறியீட்டுடன்' - என்று எழுதுவதே சரி என்று எண்ணுகிறேன். அன்புகூர்ந்து திருத்துக)
 
கருத்துக்களுக்கு நன்றிகள் நண்பர்களே.

இப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இந்திய ரூபாய் குறியீட்டை ஒருங்குறியில் உள்ளீடு செய்யும் வழிமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
தேவையான மென்பொருளையும், வழிகாட்டுதலையும் அறிய கீழ்க்கண்ட சுட்டியைத்தட்டுங்கள்.

http://support.microsoft.com/kb/2496898
 
எனக்கு தமிழில் ரூ. என எழுதுவது தான் பிடித்திருக்கிறது. முதலில் அன்னிய நாட்டில் (ஸ்விஸில்) இருக்கும் நமது கரன்சிகளை இந்தியாவுக்குக் கொண்டுவரட்டும். பிறகு இந்த ரூபாய் குறியீட்டைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
 
Back
Top