மதராஸப்பட்டினம்

மதி

New member
படம் பார்த்துட்டு வந்தவுடனே சுடச்சுட எழுதிடலாம்னு..

மதராஸப்பட்டினம்.. கொஞ்ச நாளாகவே இந்தப்படத்தை தொடர்ந்துக்கிட்டு இருக்கேன். படத்தில் வெள்ளைக்கார அம்மிணி நடிக்குதுன்னு கேள்விப்பட்டு இணையத்துல தேடி கண்டுபுடிச்சு, ப்ளாகெல்லாம் படிச்சு, ரொம்பவே புடிச்சுப் போச்சு. அழகுப் பதுமையா தான் இருக்குனு படம் வெளியானப்புறம் பாக்கலாம்னு முடிவுபண்ணியாச்சு. இன்னிக்கு போயாச்சு. நிற்க.

picture.php

படத்தின் கதையென்று பார்த்தால் டைட்டானிக் கொஞ்சம், லகான் கொஞ்சம், வெள்ளைக்கார பெண்-இந்திய பையன் காதல் கொஞ்சம் - எல்லாம் சேர்ந்த கலவையே படம். பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வேறெதுவும் இல்லாததால் அடுத்த விஷயத்திற்குப் போவோம்.

திரைக்கதை.. படம் 1945-ல் நடப்பதாய் வருகிறது. அதற்கேற்றாற் போல் திரைக்கதை. அந்த கால கட்டத்தில் நடந்த சுதந்திரப்போராட்டத்தை மேலோட்டமாக காண்பித்தது ஆறுதல். ஆயினும் ஆர்யாவிற்கும் ஏமிக்கும் வந்த காதல் அப்படியே போகுது பெரிதாய் ஏதும் சம்பவங்களில்லாமல். அதனால் ஆங்காங்கே தொய்வு ஏற்படுவது போல் தோன்றுகிறது. சற்று கவனித்திருக்கலாம். சரளமாக காமெடி தூவப்பட்டிருக்கிறது...நம்மை படத்தோடு ஒன்ற வைக்க. திரைக்கதையில் ஆங்காங்கே வரல்சறுக்கல்கள்..

இசை.. ஜி.வி.ப்ரகாஷ். பாடல்களில்..எம்ம துரையம்மா தவிர மற்றது ஒட்டவில்லை. பிண்ணனி இசைசேர்ப்பு நல்லா இருக்கு. ஆனால் ஒரு சின்ன புல்லாங்குழல் பிட் அடிக்கடி வந்து கவனத்தை சிதறடிக்குது.

படத்தின் முக்கிய பலமே கலை மற்றும் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவு தெளிவாய் இருந்தது. கலை மிக அற்புதம். அப்படியே அந்த கால சென்னை நம் கண்முன் தெரிகிறது. ஆங்காங்கே கோர்க்கப்பட்ட க்ராஃபிக்ஸ் எதுவும் உறுத்தலாய் தெரியவில்லை.ஒவ்வொரு விஷயத்துக்கும் நிறையயாஅராய்ச்சி செய்திருக்கிறார்கள். அந்த கால கட்டிட அமைப்பு, சென்னையின் தேம்ஸ் நதி, வண்ணான் பேட்டை - இப்படி பல இடங்களும் அழகாக இருக்கிறது. கதாநாயகி வந்திறங்கும் போது அந்தப் பெட்டியில் டாடா ஏர் சர்வீஸ் என்ற அட்டை தொங்குவதும், தியேட்டரில் கண்ணம்மா திரைப்படம் ஓடுவதும் என.. கவனித்து செய்திருக்கிறார்கள்.

ஆர்யா - உடல் ஏற்றி லகான் அமீர்கானை நினைவுபடுத்துகிறார். உடையும் அதே மாதிரி இருந்தது சற்றே அலுப்பு தட்டியது. இவ்வளவை தூக்கி சாப்பிட்டது ஏமி ஜாக்ஸனும், இன்றைய கால ஏமியாய் வரும் அந்த பாட்டியும். படம் முழுக்க இவர்களே வியாபித்திருக்கிறார்கள். ஏமி இன்னும் டீன் ஏஜ் தாண்டவில்லை. ஆயினும் அபார நடிப்பு. முழு திரைக்கதையையும் தன் தோளில் ஏற்றி பயணித்திருக்கிறார். அந்தப்பேசும் கண்களாகட்டும், சிரிப்பாகட்டும்..உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார். என் ஓட்டு இந்த அம்மிணிக்குங்கோ.. அழகு மட்டுமில்லை.. தமிழில் பாடவும் லிப் சிங்க் செய்தது அருமை. ஹிஹி.. ஜொள்ளு தானுங்கோ.. ஆனாலும் ஒர்த் இட். இதையெல்லாம் பார்க்கும் போது ஏன் நம்மூர் நடிகைகளுக்கெல்லாம் நடிக்க வரலேன்னு தோணுது. முதல்படத்திலேயே ஏகப்பட்ட க்ளோஸப் காட்சிகளில் அநாயசமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு உடையிலும் தேவதை வலம் வருவது மாதிரி... சோகக் காட்சியிலேயும் அருமை. அதே மாதிரி அந்த பாட்டி, நிலைக்குத்திய கண்கள், பரிதவிக்கும் கண்கள் என கண்களிலேயே நடித்திருக்கிறார். இவர்களிடம் கதை சொல்லி இத்தனை தேர்ந்த நடிப்பை வாங்கிய விஜயை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.

படத்தின் திரைக்கதையில் இருக்கும் சின்ன சின்ன குறைகளையும் இந்த இருவர் சரிகட்டி விடுகிறார்கள். மொத்தத்தில் ஏற்கனவே பழக்கப்பட்ட கதையை அந்தகால படமாக தந்திருக்கிறார்கள்.. ஏமிக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். :icon_b:

(பெங்களூரில் ஏமிக்கு ரசிகர் மன்ற அமைக்கலாம் என்றிருக்கிறேன். நான் தான் தலைவர். செயலாளர் பொறுப்பாளர் பதவி காலியாக இருக்கிறது. விண்ணப்பிப்போர் விண்ணப்பிக்கலாம்:icon_b::icon_b::icon_b::icon_b:).
 
அட பாவி மக்கா...பட விமர்சனம் எழுதச் சொன்னா ஏமி இதி....??? ஏமி புராணம் பாடிட்டு....அப்பப்ப...படத்தைப் பத்தி சொன்னதால...இந்த விமர்சனத்தை ஒத்துக்க முடியாது....நாட்டாமை...விமர்சனத்தை மாத்து....!!!

படத்தை பாக்கலாங்கறீங்களா....இல்ல....!!!

நாளைக்கு ஊருக்கு வந்து பாத்துக்கறேன்.
 
சிவா அண்ணாவை வழிமொழிகிறேன், இந்த எமி விமர்சனத்தை ஏத்துக்க முடியாது... :aetsch013:
 
சிவா அண்ணாவை வழிமொழிகிறேன், இந்த எமி விமர்சனத்தை ஏத்துக்க முடியாது... :aetsch013:
ஹாஹா... அட போங்கப்பா...!!! ஆனா நேத்து நல்ல டைம்பாஸ்... :D:icon_b:
 
பகிர்வுக்கு நன்றி!

படம் நகைச்சுவையாகத் தான் இருக்கும் போலிருக்கிறது...விளம்பரத்திற்காக காட்டப்படும் காட்சியே நல்லாத்தான இருக்குது ''.........தமிழ் மாதிரி தான் இங்கிலீஷ்னு............''எ'' க்கப்புறம் என்ன வரும் ''ஏ''.... ''பி'' க்கப்புறம் என்ன வரும் ''பீ''... (AAB B....) இப்படி சொல்லிக்கொடுக்கணும் இல்லைன்னா வீடு போய் சேரமுடியாது....நல்லா தான் இருக்குது...:D
 
ஆமாம் நம்பி... குண்டு போடறாங்க மேட்டரும்.. இந்த காமெடிக்கும் தியேட்டரே சிரிச்சது.. இப்படி தனியா இல்லாம படத்தோட சேர்ந்தே நகைச்சுவை இருக்கு...
 
படத்தை பற்றி விமர்சனம் செய்யாமல் ஏதோ ஏமி பாமி என்பதை மட்டுமே சொல்கிறார் மதி...

அற்புதமான படம் படத்தில் சொல்வதற்கு எவ்வளோ இருக்க அந்த பெண்ணை பற்றி மட்டுமே வர்ணித்திருக்கிறார்...
 
பாவம் மதி ஏமியைத் திரையில் பார்த்ததும் கொஞ்சம் மதி மயங்கிவிட்டார், அதற்காக அவரை இப்படியோ போட்டு வாங்குவது.

மதி கவலைவேண்டாம், நீங்களே தலைவராக இருங்கள். மற்ற பதவிகளுக்கு நம் மக்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் சேர்ந்துவிடுவார்கள். செயலாளர் பதவிக்கு ஆதவா இல்லை தக்ஸ் தயாராக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

படம் ஓடுமா, போட்ட பணம் வருமா என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.

பாரதி ராஜாவின் கருத்தம்மா மாதிரி இருக்கும் என்று நினைத்தேன்.
 
மதியைப் போலத்தான் எனக்கும், இணையத்தில் படத்தை பார்த்ததும் முதல் ஷோ பார்த்திடனும் என்று ஆசைப்பட்டேன். ஆசைல மண்ணைப் போட்டுட்டாங்கள். இங்க படமே வெளியிடல.

மதி எமியைப் பற்றி கொஞ்சூண்டு சொல்லி இருக்கார்.
 
படத்தைப் பத்தி சொல்லணும்னா கொஞ்சம் ஏமாற்றம் தான்.. பழைய கதையை பழைய பாணியில் சொல்லி இருக்காங்க. பல படங்களோட நினைவு வருவதை தவிர்க்க முடியல. அதான் படத்துல என்னைக் கவர்ந்த விஷயத்தை மட்டும் எழுதினேன். இதை ஒரு படத்தோட முழுமையான விமர்சனம்னு எடுத்துக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை..:D:D:D
 
படத்தை பற்றி விமர்சனம் செய்யாமல் ஏதோ ஏமி பாமி என்பதை மட்டுமே சொல்கிறார் மதி...

அற்புதமான படம் படத்தில் சொல்வதற்கு எவ்வளோ இருக்க அந்த பெண்ணை பற்றி மட்டுமே வர்ணித்திருக்கிறார்...
அற்புதமான படம் என்பதை ஒத்துக்க மாட்டேன்.. மத்தபடி நல்லபடம்.. நேரம் போவது தெரியாமல்.. இருந்தது..:eek::eek:. விரசமான வசனங்கள் ஒன்று கூட இல்லாததற்கு ஒரு தனி சபாஷ்.
பாவம் மதி ஏமியைத் திரையில் பார்த்ததும் கொஞ்சம் மதி மயங்கிவிட்டார், அதற்காக அவரை இப்படியோ போட்டு வாங்குவது.

மதி கவலைவேண்டாம், நீங்களே தலைவராக இருங்கள். மற்ற பதவிகளுக்கு நம் மக்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் சேர்ந்துவிடுவார்கள். செயலாளர் பதவிக்கு ஆதவா இல்லை தக்ஸ் தயாராக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

படம் ஓடுமா, போட்ட பணம் வருமா என்றும் சொன்னால் நன்றாக இருக்கும்.

பாரதி ராஜாவின் கருத்தம்மா மாதிரி இருக்கும் என்று நினைத்தேன்.
இந்த சனங்களே இப்படி தான் ஆரென்.. பாராட்டினா ஜொள்ளுனு முத்திரை குத்திடுவாங்க.. படம் ஓட நிறைய வாய்ப்பிருக்கு. விமர்சனங்களும் நல்லவிதமா தான் இருக்கு.. போட்ட பணம் கண்டிப்பாக வரும்..
மதியைப் போலத்தான் எனக்கும், இணையத்தில் படத்தை பார்த்ததும் முதல் ஷோ பார்த்திடனும் என்று ஆசைப்பட்டேன். ஆசைல மண்ணைப் போட்டுட்டாங்கள். இங்க படமே வெளியிடல.

மதி எமியைப் பற்றி கொஞ்சூண்டு சொல்லி இருக்கார்.
ஹிஹி.. கொஞ்சூண்டு தான்...அமரண்ணே.. இதுக்கே இப்படி.. இன்னும் எழுதினா... கவலைப்படாதீங்க. சீக்கிரமே ஏமியின் தரிசனம் உங்களுக்குக் கிடைக்க பிரார்த்திக்கிறேன்..:icon_b:
 
எமியின் தரிசனமா...அட ஏடு குண்டலவாடா...மதி....அமரனையும் உங்க சங்கத்துல சேக்க முடிவு பண்ணிட்டீங்களா?
 
படத்துல வர்ற சில வரலாறு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் உறுத்தல்..
3 ஆகஸ்ட்,1947.. இந்தியாவிற்கு சுதந்திரம் பற்றி பிரஸ்மீட் நடத்தறாங்க. ஆனா உண்மையில் 3 ஜூன் 1947, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பற்றி அறிவிச்சாச்சு. இதுக்கு நடுவில 1946-47ல் நேரு தலைமையில இடைக்கால அரசு வேற இருந்திருக்கு.

மேலும் ஆகஸ்ட் 14ம் தேதி இரவு, ராஜாஜி சென்னைக்கு ரயிலில் வருவதா இருக்கு. உண்மையானு தெரியல. அந்த காலக்கட்டத்துல நேருவின் இடைக்கால அரசவையில தொழில், கல்வி மற்றும் நிதியமைச்சரா இருந்திருக்கார்.
 
மதி கவலைவேண்டாம், நீங்களே தலைவராக இருங்கள். மற்ற பதவிகளுக்கு நம் மக்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் சேர்ந்துவிடுவார்கள். செயலாளர் பதவிக்கு ஆதவா இல்லை தக்ஸ் தயாராக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

ம்ஹூம்.... வாய்ப்பே இல்லை... நான் ஏற்கனவே இன்னொரு ரசிகை மன்றத்தின் தலைவரா இருக்கேனே!!!

மதி சார்.... அப்ப நீங்க படத்தை பார்க்கலையா??

கோவாவுல ஒரு பொண்ணு வருமே..... அதேமாதிரி இதிலயும் வெளிநாட்டு பொண்ணோட நடிப்பு நல்லா இருக்காம்... நம்மாளுங்க நடிகைகளை பக்கத்து ஸ்டேட்ல இருந்து இறக்கினாங்க... இப்ப ஃபாரின்ல இருந்தா? ம்ம்ம்ம்..... தமிழ் சினிமா எங்கேயோ போகுதப்போய்!!
 
என்னடா இந்த படத்துக்கு இன்னும் விமர்சனம் வரலயேனு பார்த்தேன்..
மதி இந்த தடவை கொஞ்சம் படம் பார்த்தது லேட் போல...

ஆர்யா, எமி இருவருமே திறம்பட நடித்துள்ளார்கள்..
கலை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்துமே அருமை...
 
நீங்க முன்னமே பார்த்திருந்தா எழுதியிருக்கலாமே... என்ன எமிய பத்தி கொஞ்சமா எழுதியிருப்பீங்க..:icon_ush::icon_b:
 
படத்தை ஞாயிற்றுக்கிழமை பார்த்தாச்சு...

நான் விமர்சனம் எழுதிருந்த எமிக்கு இப்படியொரு ரசிகன் இருப்பது எல்லாருக்கும் தெரியாமல் போயிருக்குமே...
 
படத்தை ஞாயிற்றுக்கிழமை பார்த்தாச்சு...

நான் விமர்சனம் எழுதிருந்த எமிக்கு இப்படியொரு ரசிகன் இருப்பது எல்லாருக்கும் தெரியாமல் போயிருக்குமே...
ஹாஹா... அப்பவும் வந்து எமிய பத்தி எழுதியிருப்போம்ல.. அசரமாட்டோம்ல..!!:icon_rollout::icon_rollout::icon_rollout:
 
Back
Top