அறிஞர்
New member
பணம் தான் முக்கியம்; பதக்கம் அல்ல... ஆசிய விளையாட்டுகளைப் புறக்கணிக்கும் இந்திய கிரிக்கெட்!
புனே, ஜூன் 2,2010
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப இயலாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திடீரென அறிவித்திருப்பது, இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
16-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் நவம்பர் 12 முதல் 27 வரை சீனாவின் குவாங்ஷூ நகரில் நடக்கிறது. ஆசிய விளையாட்டில் முதல்முறையாக கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. குவைத்தில் சமீபத்தில் நடந்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் பொதுக்குழுவில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, ஆசிய விளையாட்டில் 20 ஓவர் கிரிக்கெட் இடம்பெறுகிறது. இதனால் கிரிக்கெட் மூலம் இந்தியாவுக்கு நிச்சயம் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ரசிகர் வட்டமும் விரிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆசிய போட்டியில் இருந்து விலகுவது என்று திடீரென முடிவெடுத்திருக்கிறது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை நிர்வாக அலுவலர் ரத்னாகர் ஷெட்டி மும்பையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், "சர்வதேச போட்டிகள் இருப்பதால் ஆசிய விளையாட்டுக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை எங்களால் அனுப்ப இயலாது. இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கும் தெரியப்படுத்தி இருக்கிறோம்," என்றார்.
"பணம் தான் முக்கியம்... பதக்கம் அல்ல"
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்காதது, பரவலாக கடும் எதிர்ப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 'பணம் கொழிக்கும் இடத்தில் மட்டுமே இந்திய கிரிக்கெட் இருக்கும்; நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்கள் வெல்வதில் அக்கறை இருக்காது' என நடுநிலையாளர்கள் பலரும் சாடி வருகின்றனர்.
அத்துடன், விளையாட்டுத் துறை அமைச்சகமும், இந்திய ஒலிம்பிக் சங்கமுமே பிசிசிஐ மீது கடும் கோபத்தில் இருக்கிறது.
பிசிசிஐ முடிவு தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக கூறியுள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரன்திர் சிங், "ஆசிய விளையாட்டில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்காக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உண்மையிலேயே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், தற்போது அதில் கிரிக்கெட்டை சேர்த்தும், அணியை அனுப்ப இயலாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பது ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இன்று கடிதம் எழுத இருக்கிறோம்," என்றார் அவர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைக் கடுமையாக சாடியுள்ள இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி, வர்த்தக ரீதியிலான லாபத்தைத்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது," என்று கூறியிருக்கிறார்.
"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றால் பணப் பரிசு கிடைக்காதே என்பதால் தான் பிசிசிஐ இந்த முடிவு எடுத்திருக்கிறது. கிரிக்கெட் வர்த்தகமாகிவிட்டது. பணப் பரிசு இல்லையென்றால் அவர்கள் விளையாட மாட்டார்கள்," என்று கடுமையாக சாடியிருக்கிறார், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி.
இதற்கெல்லாம் உச்சமாக, இந்திய கிரிக்கெட்டை தனிப்பட்ட முறையில் மறைமுகமாக கடுமையாகச் சாடியிருக்கும் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் சொல்கிறார்...
"ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் பங்கேற்கக் கூடாது. சில விளையாட்டுப் போட்டிகள் பதக்கங்களையும் பெருமைகளையும் ஈட்டுவதற்காக விளையாடப்படுகின்றன."
நன்றி - விகடன்