மாதச்சம்பளம் பெறாதவர்கள் வருமான வரி செலுத்துவது எப்படி?எந்த விண்ணப்பம்?யாரை அனுகுவது?என்ன ஆவணங்களை காட்டவேண்டும்?போன்றவற்றை பற்றி நண்பர்கள் பதிவிட்டால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்
எந்தவித வருமான வரி கட்டவேண்டும் என்றாலும் முதலில் PAN நம்பர்
பெறுவதற்கு விண்ணப்பம் பண்ண வேண்டும். அதற்க்கு வீட்டு முகவரி PROOF மற்றும் ID PROOF வேண்டும்.
தங்கள் கரத்தில் பான் நம்பர் வந்த பிறகு, தங்களின் வருமானம் எந்த வகையை சார்ந்தது என்று ஆராய வேண்டும். அதாவது எவ்வித வருமானமாக இருந்தாலும் அது கீழ்க்கண்ட ஐந்து பகுதிக்குள் அடங்கும்
1. ஊதிய வருமானம் (SALARY)
2. வீட்டின் மூலம் வருமானம் (HOUSE PROPERTY)
3. வியாபாரம் அல்லது சுயதொழில் வருமானம் (BUSINESS/PROFESSION)
4 முதலீட்டு வருமானகள் (CAPITAL GAIN)
5. இதர வருமானங்கள் (OTHER INCOMES)
இந்த ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொருவிதமான கணக்கீடுகள் மற்றும்
விதி விலக்குகள் இருக்கின்றன.
எனவே முதலில் தங்களுடைய வருமானம் எந்த வகையை சார்ந்தது என்று தெரிவித்தால் அதற்குரிய சட்டபிரிவுகளை தெரிவிக்க முடியும்