உபுண்டு கிராபிக்ஸ் கார்டு உதவி தேவை

kalaiselvan2

New member
நண்பர்களே நான் உபுண்டு 9,10 எனது கணிணியில் நிறுவியுள்ளேன். அதில் இன்டெல் 82845ஜி கிராபிக்ஸ் கார்டு வேலை செய்ய மாட்டேன் என்கிறது. அதை எவ்வாறு சரி செய்வது. தயவு செய்து உதவுங்களேன்.
 
அன்பு நண்பரே,
இணையத்தில் சற்று நேரம் தேடியதில் நேரடியான தீர்வு கிடைக்கவில்லை.

(ஒரு வேளை காம்பிஜ் தேர்வு செய்திருந்தீர்கள் எனில் அதை நீக்க டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையைத் தந்து பாருங்கள்.

mkdir -p ~/.config/compiz/ && echo SKIP_CHECKS=yes >> ~/.config/compiz/compiz-manager

சரியாகவில்லை எனில் கீழ்கண்ட தொடுப்புகளைப்படித்துப்பாருங்கள்.)

https://wiki.ubuntu.com/X/Troubleshooting/IntelPerformance

உங்களுக்கு விருப்பம் எனில் உபுண்டு 9.04ஐ நிறுவிப்பாருங்கள். அதில் 9.10 போன்று கணினித்திரை பிரச்சினை எதுவும் இல்லை என பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

9.04 ஐ பதிவிறக்கம் செய்ய :
http://releases.ubuntu.com/9.04/
 
தோழர்கள் ஆதன் மற்றும் பாரதி இருவருக்கும் நன்றி உபயோகித்து பார்த்து விட்டு கூறுறேன்.

மிக்க நன்றி தோழர்களே.
 
Back
Top