மேற்படி பதிவு அலைபேசியினூடாகவே ‘அக்னி’ என்ற பயனர் பெயர்மூலம் உள்நுழைந்துப் பதிவுசெய்யப்பட்டது.
அத்தோடு மட்டுமல்லாமல், எழுத்துப்பிழை களைந்து மீளத் திருத்தியும் அமைக்கப்பட்டது.
எனது அலைபேசி: N79
உலாவி: Opera mini
மன்ற ஒருங்குறிமாற்றியே பயன்படுத்தப்பட்டது.
தமிங்கிலத்திற் தட்டச்சி, Romanised மூலமாக தமிழில் ஒருங்குறியாக்கிப் பிரதி செய்துப் பதிந்திருந்தேன்.
பதிவு செய்து மன்றப்பக்கம் புதுப்பிக்கப்படும்வரையில்,
எழுத்துக்கள் யாவும் கட்டம்கட்டமாகவே தெரிகின்றன.
தணிக்கை செய்யும்போதும் அவ்வாறே...
தணிக்கை செய்யும்போது, ஒருங்குறிமாற்றியில் தமிங்கலம் மீண்டும் வந்தாற் தணிக்கை செய்வது சுலபமாகும்.
பரிசோதித்து குறைநிறைகளை இங்கேயே தொகுப்பதன் மூலம்,
முன்னேற்றம் காணலாம் என எண்ணுகின்றேன்.