அன்பு நண்பர்களே,
நம்மில் சிலர் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்த தயங்குவதில் தமிழ் தட்டச்சு வசதி எப்படி இருக்குமோ என்ற கவலையும் முக்கியமானது. அந்த கவலை நமக்கு தேவையில்லை.
உபுண்டு லினக்ஸில் தமிழில் தட்டச்ச தேவையான வசதிகள் உள்ளமைந்திருக்கிறது!
ஐபஸ் (IBUS) - Intelligent Input Bus என்பதுதான் ஐபஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
இதை இயக்க System - Preferences - Ibus Preferences என்பதை சுட்டவும்.

பின்னர் Input method என்பதை திறந்து, Select an input method என்பதை சுட்டினால், வரும் அட்டவணையில் தமிழ் மொழியை தேர்ந்தெடுக்கலாம்.
அப்போது ஆறு வாய்ப்புகள் நமக்குத் தென்படும். தமிழ்99, ஃபோனடிக், இன்ஸ்கிரிப்ட்,ஐட்ரான்ஸ், டைப்ரைட்டர், ரங்கநாதன் (Tamil 99, phonetic, Inscript, Itrans, typewriter, lk renganathan) ஆகிய ஆறு வாய்ப்புகளில் நமக்குத் தேவையானதை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்து Add என்பதை சுட்டினால், நாம் தெரிவு செய்தது அட்டவணையில் சேர்ந்திருப்பது தெரியும். தேவைக்கு தகுந்தபடி நாம் வரிசையை மாற்றவும் வசதி இருக்கிறது.
ஜெனரல் என்ற தேர்வில் தேவையான விதத்தில் விசைப்பலகையின் விசைகளை அமைத்துக்கொள்ளலாம். இதில் நமக்கு தேவையான தமிழ் எழுத்துருவையும் நாம் தேர்ந்தெடுத்து அமைத்துக்கொள்ளலாம். பின்னர் நாம் கொடுத்திருக்கும் விசைகளின் அடிப்படையில் தமிழில் எளிதாக தட்டச்சலாம். நான் லினக்ஸின் உள்ளிருந்து தமிழில் ஃபோனடிக் முறையில் தட்டச்சி பதிவுகள் இட்டேன். மிகவும் எளிதாகவே இருக்கிறது.
விண்டோஸில் தெரியும் தமிழ் எழுத்துகளை காட்டிலும் லினக்ஸில் தமிழ் எழுத்துகள் வெகு அழகாக தெரிகின்றன என்பது மேலும் ஒரு சிறப்பு!
உபுண்டு 9.10 வெளிவருவதற்கு முன்னர் ஸ்கிம் (Smart Common Input Method) என்ற முறையில் தமிழில் தட்டச்ச வசதி இருந்தது என சில வலைத்தளங்களில் தெரிவித்திருக்கிறார்கள். எனினும் நம் மன்றத்தைப் பொறுத்த மட்டில் இனிமேல் லினக்ஸை நிறுவி பயன்படுத்துபவர்களுக்கு ஐபஸ் போதுமானது.
ஐபஸ் முறையில் தட்டச்சுவதில் சிரமம் இருப்பவர்கள் தங்கள் ஐயங்களை கூறினால் விடை காண முற்படுவோம்.