கணிணியை இணைய வசதிக்காகவும் பாடல்கள் கேட்க தகவல்கள் சேகரிக்க கோப்புகள் தயாரிக்க என்ற அடிப்படையில் உபயோகப் படுத்துகிறவர்கள் தாராளமாக உபுண்டு அல்லது லினக்ஸ் மின்ட் க்கு மாறலாம். எந்தப் பிரச்சனையும் இல்லை.
சி, சி++, ஜாவா, பி.எச்.பி, பைதான், பேர்ள்ஸ், ஆரக்கிள் போன்ற மென்பொருட்களில் பணிபுரிபவர்களும் தாராளமாக உபுண்டுக்கு மாறலாம்.
மைக்ரோசாப்ட்டின் தாயரிப்புகளான வி.பி, டாட் நெட் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் அடோபின் தயாரிப்புகளில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் எனது ஆலோசனை என்னவென்றால் அவர்கள் விண்டோஸிலேயேத் தொடர்ந்து கொண்டு உபுண்டுவையும் நிறுவிக் கொண்டு உங்கள் வேலைகளை உபுண்டுவில் திறம்படச் செய்ய முடியுமா என்பதை சோதித்துக் கொண்டு பின் மாறுவது நலம்.
விண்டோஸில் இயங்கும் மென்பொருட்களை உபுண்டுவில் இரண்டுவிதமாக இயக்கலாம்
வைன் (WINE) என்ற மென்பொருளைப் பயன்படுத்தலாம்
விர்ட்யூவல் பாக்ஸ் என்ற மென்பொருளைப் பயன்படுத்தியும் இயக்கலாம்.
இரண்டு மென் பொருட்களையும் நான் பயன்படுத்திப் பார்த்திருந்தாலும் விர்ச்யுவல் பாக்ஸை நான் சிறந்தது என்பேன். இந்த முறையில் நீங்கள் விண்டோஸ் இயங்கு தளத்தை உங்கள் கணிணிக்குள் இன்னொரு கணிணியாக நிறுவிக் கொள்ளலாம். இரண்டு கணிணிகள் (ஒன்று உபுண்டு ஒன்று விண்டோஸ்) ஒரே நேரத்தில் நாம் இயக்குவது போல் இருக்கும் இந்த முறை.
எல்லாவற்றிற்கும் மேலாக உபுண்டுக்கு மாறும் ஒருவருக்கு முக்கியமாக இருக்க வேண்டியது. பொறுமை,குறைந்தபட்சம் தகவல்களை தேடும் அறிவு,விடா முயற்சி மற்றும் கற்றுக் கொள்ளும் ஆர்வம்.