உயிருக்குப் போராடும் காவலர் வேடிக்கைப் பார்க்கும் மக்கள்.

நெல்லையில் நடைபெற்ற கொடூரக் கொலை பற்றிய செய்தி அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இன்று NDTV தொலைக்காட்சியில்.

அமைச்சர்களின் பொறுப்பற்ற தன்மையே

காவலரின் இறப்புக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

ஆனால் இதை வீடியோப் படம் பிடித்த தொலைக்காட்சிக் குழுவினரையும் அது சாருமே

மற்றும் அங்கே சூழ இருந்த மக்களையும் அது சாருமே

இது தொடர்பான செய்திக் குறிப்பு இங்கே.

http://www.ndtv.com/news/india/callous_ministers_show_no_remorse_stay_away_from_cops_last_rites.php

இது தொடர்பாக மன்ற உறுப்பினர்களின் கருத்துகளை ஆரோக்கியமான முறையில் இங்கேப் பதிவோமா?
 
Last edited:
அமைச்சர்களும் அவர்களின் உதவியாளர்களும் கூட விலைமதிப்பற்ற இருபது நிமிடங்களைத் தவறவிட்டது குறித்து இன்றைய செய்தித்தாளில் வந்துள்ளது.

மனிதத்தன்மையுள்ள யாரேனும் உடனே உதவியிருக்க வேண்டும். ஆனால் மாண்புமிகு அமைச்சர்களும் அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகார்களும் பார்த்துக்கொண்டு இருக்கையில்... பொதுமக்களையும் தொலைக்காட்சியையும் குறை கூற இயலாது.

விலைமதிப்பற்ற உயிர்கள் இனிமேலாவது பறிபோகாமல் இருக்கட்டும்.
 
உண்மை தான் அண்ணா..

அமைச்சர் மற்றும் பாதுகாப்புக் குழுவினர் இருந்தபின்னும்
அநியாயமாக ஒரு உயிரைப் பறிகொடுத்தது
அதிர்ச்சியடைய வைக்கிறது.

பணியிலிருக்கும் ஒரு காவலதிகாரிக்கே இந்த நிலை என்றால்

சாதாரணர்களான நம் நிலை?
 
அமைச்சர்களே வேடிக்கை பார்க்கும் போது பொது மக்கள் என்ன செய்ய முடியும் . சாதாரண மனிதன் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக காப்பாற்றி இருப்பார் . அமைச்சர்கள் இருந்ததால் தான் யாரும் முயலவில்லை . அத்தனை வாகனங்கள் இருந்தும் காவலர்கள் இருந்தும் காப்பாற்றவில்லை எனில் இது முழுக்க முழுக்க அமைச்சர்கள் தவறே .
 
நம் மக்கள் சுத்தமாக மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளுகிறார்கள்,

அவகள் குடும்ப்தில் ஒருத்தருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருந்தால் இப்படி நிற்பார்களா!!
 
அன்றைய நிகழ்வில் போலீஸார் மீதும் அமைச்சர்கள் மீதும் தவறு இருக்கிறது. அன்று நடந்தது பிற்காலத்தில் எப்படிப் பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

வன்முறையாளர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும், தமிழ்நாடு அரசின் மீதும் போலீஸ் மீது, பயம் குறைந்து விட்டிருக்கும். போலீஸ் எதிரிலேயே கொலை செய்துவிட்டு தப்பிக்கலாம் என்றா நம்பிக்கையை அவர்களின் மனதில் துளிர் விட வைத்திருக்கும்.

நேர்மையான அதிகாரிகள் துணிந்து முடிவெடிப்பது சற்று குறையும். ஏனென்றால் நாம் துடிக்கும் பொழுது நம்மைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்களே என்ற அவநம்பிக்கை அவர்களின் மனதில் வேர்விட ஆரம்பிக்கும்.

இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கே நல்லதல்ல...
 
முற்றிலும் உண்மையே. இது நிச்சயம் அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்க்கும் நிச்சயம் ஒரு நாள் உலை வைக்கும்.
 
இன்றைய ஸ்வாதி கொலையில் மக்கள் காட்டிய அலட்சியத்தை இந்த மரத்தின் விதையாகத்தானே கொள்ள வேண்டும்?
 
Back
Top