உங்கள் டிவியின் மூலம்(source) கேபிள் டிவியா அல்லது DTH இனைப்பா என்று சொல்லுங்கள் நண்பரே. நான் டிஸ் டிவி என்ற DTH இனைப்பில் பார்க்கிறேன். அதில் அநேக மாற்று மொழி(தமிழ் தான்) தேர்வை என்னுடைய சர்வீஸ் புரவைடரான (வீனாப்போன) டிஸ் டிவிக்காரார்கள் கொடுப்பதில்லை.
நிகழ்சி நிரல் கூட ஒழுங்காக தருவதில்லை. அவர்களிடம் இமெயில் தொடர்பு கொண்டால், வேறு வேறு தகவல் கொடுக்கிறார்கள். மிகவும் கடுமையாக (இத்தோடு சர்வீஸ் பிரேக் செய்து விடுவேன் என்று) கேட்டு இமெயில் அனுப்பினால்., ஹிந்தியில் தொலை பேசிக் கொள்(ல்)கிறார்கள். ஆங்கிலத்தில் கேட்டாலும் பதிலுக்கு ஹிந்தியில் பேசி கடுப்பேற்றுகிறார்கள்.
உபயோகமற்றவர்கள் சர்வீஸில் இருப்பதால் இந்த செய்தி எனக்கு வயிற்றெரிச்சலை
கிளப்புகிறது. மற்றபடி நல்ல தகவல் தான்.
மற்ற சர்வீஸில் இருக்கும் அன்பர்கள், வேறு எந்தெந்த சானல்கள் தமிழ் ஒலி வசதியுடன் உள்ளது என்று சொல்லுங்களேன். தெரிந்து கொள்கிறேன்.