தாலாட்டு பாடல்கள் தெரியுமா...

மன்ற அன்பர்களுக்கு வணக்கங்கள்...
என்னுடைய அக்கா 2 1/2 மாதக் ஆண் குழந்தைக்காக பழைய தாலாட்டு பாடல்கள் கேட்கிறாங்க..தரவிறக்கம் செய்ய சுட்டி தந்து உதவுவீர்களா...
ஊருக்கு செல்கிறார்கள்...நாளைக்குள் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...
நன்றிகள்...
 
இதெல்லாம் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் பாடல் அல்லவே... தாய் தன் சேயை நித்திரைக்கு இட்டுச்செல்லும் வகையில் தமக்கேற்ற ராகத்தில் படிப்பது தான். எனக்கு படித்தது ஞாபகமில்லை. :D ஆனால் என் சித்தியின் மகன் மகளுக்கு அம்மம்மா படித்தது ஞாபகம். ஒவ்வொரு உறவு முறைகளை சொல்லி அவர் அடித்தோ நீ அழுகிறாய் என்று சொல்லி சொல்லி தாலாட்டும் போது உறவுகள் நிலைக்கும் என்பது ஐதீகம். அடிச்சவர் எல்லாருக்கும் கிளுவை மரக்கொப்பு பூவரசமரக்கம்பு வேப்பமரக்கம்பு என்று எல்லாமரக்கம்பாலையும் அடிக்கலாம்...

விக்கி மாமா தந்த பாடல் இது...
ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ

அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

கண்ணே யடிச்சரார்
கற்பகத்தைத் தொட்டாரார்
தொட்டாரைச் சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
அடிச்சாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்

மாமன் அடித்தானோ
மாதளங் கம்பாலே
அண்ணன் அடித்தானோ
ஆவாரங் கொப்பாலே
பாட்டி அடித்தாளோ
பால் வடியும் கம்பாலே

ஆராரோ அரிரரோ
அரிரரோ அராரோ

அரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு

இந்த பாடலையே அரை மணிநேரத்துக்கும் இழுக்கலாம். ஒரு மணிநேரத்துக்கும் இழுக்கலாம். ஊரிலுள்ள அத்தனை பேரின் பெயரையும் இழுத்து வைச்சு படிச்சா பிள்ளை தூங்கிவிடும்...
 
தமிழ்மன்றத்தில் தாலாட்டு பற்றி - அத்தை, மாமன் பற்றி - படித்த நினைவு இருக்கிறது.
 
நன்றிகள் அன்பு ரசிகன் அவர்களே...ஒலிவடிவ கோப்பு வேண்டுமாம்...
அதனால் தான் தரவிறக்கம் செய்வது போன்று என்று கேட்டேன்...
நன்றிகள்..
 
மன்ற அன்பர்கள்...
யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்....
நன்றி..
 
please send your email iam unable to upload my mp3
my email is dupagunta@gmail.com
please tell how can i upload my mp3 to tamilmandram.com
with regards from dupagunta
கோப்புக்களை பகிரும் சில இணையத்தளங்கள் மூலம்.
உதாரணமாக:


Code:
[LIST=1]
[*]www.mediafire.com
[*]www.megashare.com
[/LIST]
அங்கு பதிவேற்றி அதன் சுட்டிகைளை இங்கே பகிரலாம்.
 
நானே..பாடி ரெகார்ட் பண்ணிய mp3 இருக்கு வேணுமா..
(ஆனா..கேட்டவுடனே குழந்தை..கதறி தொட்டிலை விட்டு இறங்கி ஓடிடும்..ஓகேவா..):eek:
 
Back
Top