ஜனகன்
New member
திருவாளர் செல்வம் பொங்கலுக்கு காய்கறி வாங்கச் சந்தைக்கு சென்றார். அவர் மனைவி ரூபா.100கொடுத்தனிப்பினார்.கத்தரிக்காய், முருங்கக்காய், பூசணிக்காய் மூன்றும் வாங்கி வந்தார். ரூபா.100 சரியாகி விட்டது. காய்கறிகளும் மொத்தம்100 இருந்தன. வீட்டிற்கு வந்தும் அவர் மனைவி விலை விபரத்தை கேட்டார். முருங்கக்காய் ரூபாய்க்கு ஒன்று, கத்தரிக்காய் ரூபாய்க்கு இருபது, பூசணிக்காய் ஐந்து ரூபாய்க்கு ஒன்று.ரூபா.100 க்கும் காய் கறிகள் வாங்கியிருக்கின்றேன்,.ஒவ்வொன்றிலும் எத்தனை, எத்தனை வாங்கி இருக்கின்றேன்.கணக்கு போட்டு சொல்என்றார்.செல்வத்தின் மனைவியோ மூளைக்கு வேலை கொடுக்க விரும்பவில்லை. காய் கறிகளை எண்ணத் தொடங்கினார். "ஆமா! ரூபா.100 -க்கும் காய்கள்தான் இருக்க்கு"ஆச்சரியாப்பட்டார், அவர் மனைவி.
நீங்கள் கணக்குப்போட்டு கண்டு பிடியுங்கள், ஒவ்வொரு காயிலும் எத்தனை வாங்கினாரென்று?
நீங்கள் கணக்குப்போட்டு கண்டு பிடியுங்கள், ஒவ்வொரு காயிலும் எத்தனை வாங்கினாரென்று?