நன்றி மதி..
சும்மா சொல்லக் கூடாது. பொண்ணு பின்னிட்டாள்.
பாடல் தேர்வு முதல் படி..
தேர்ந்த சாதகம் இரண்டாம் படி..
இசைகளுடன் இசைந்து பாடியது மூன்றாம் படி..
சஞ்சாரங்கள், சங்கதிகள் சரி இடத்தில் இருந்தது நான்காம்படி..
அப்பப்போ தாளக் கட்டிழந்தது திருஷ்டி..
பழச விடுங்க.. வெற்றிக்கனி சரியான இடத்தில்..
ஆனாலும் ஓவரா மக்களிடத்தில் பொண்ணைச் சேர்த்திருக்க வேண்டாம் சபையினர்..
ஸ்ரீனிவாசே எழுந்து நின்னு கைதட்டுறார்... மாணிக்க விநாயகம் வைகை சங்கமத்தில் சங்கமிச்ச மாதிரி தலையாட்டுறார்.. பிறகென்ன என் ஓட்டு பொண்ணுக்குத்தான் என நினைச்சு ஓட்டுப் போட்டுட்டாங்கன்னும் கறை பூசப்படலாம்..