சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய்யின் அபத்த அவஸ்தையும் !

எல்லோரும் விரும்பும் ஒரு நிகழ்ச்சி சிறுவர்களின் திறமையை பாட்டு பாடுவதின் மூலமாக ஆராயும் ஒரு திரை பதிவு. யாரும் குறை சொல்ல முடியாதபடி நன்றாக பாடுகிறார்கள். சமீப காலமாக திறமையை சோதிக்கும் நீதிபதிகள் ஒரு தலை பட்சமாக இருக்கிறார்களோ என்று எண்ண தோன்றுகிறது. இதனால் நல்ல சிறுவர்களின் தன்னம்பிக்கை குறைய வாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இதை பார்த்தவர்கள் உணருவார்கள்.

வேறு ஒரு புதிய திரியில் பதிக்கப் பட்ட கருத்து..
ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம்.. நீதிபதிகள் வேலை சற்று சிரமமானது.. ஒரு சிலரை நீக்க வேண்டிய அவசியம் உள்ளது..
பாரபட்சம் ... ஒவ்வொருவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது..
எங்குதான் இல்லை...!!!
 
நன்றிகள் பல , சரியான திரியை சுட்டி காட்டியதற்கு
விளம்பர யுக்த்திக்காக அவர்கள் சில சிறுவர்கள் தவறாக பாடினாலும்
அவர்கள் கண்டு கொள்வதில்லை. மேலும் அவர்கள் வெளியேற்ற நினைப்பதற்காக சில குழந்தைகளை
தவறுக்காக காத்திருப்பதாக போல் தோன்றுகிறது. இசைக்கு மொழி கிடையாது என்ற இலக்கணம் இருந்த்தாலும்
மொழி வாரியாக பிரிக்கப்படுகிறார்கள் என்பது என்னுடைய பார்வை.
 
மொழி வாரியாகப் பிரிக்கப் படுகிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்றாகத் தோன்றவில்லை..

விஜய் மட்டுமல்ல.. பல சானல்களிலும் பல நிகழ்சிகளையும் பார்ப்பதால் தோன்றும் ஒரு எண்ணம்..

பின்னணியில் பல "செட் அப்" கள் நடக்கின்றன.. ஸ்பான்ஸர்ஸ்.. நீதிபதிகள் என்று தோன்றும் கோமாளிகள்.. எல்லோருமே .. ரிமோட் கண்ட்ரோல்-களுக்கு அடிமைகள்..

சென்ற வாரம் அந்த 'குட்டி'ப்பையன் ஸ்ரீகாந்த்.. 1 லட்சம் கிடைத்த காட்சிகளைவிட வேறு ப்ரூஃப் வேண்டுமா என்ன... அதில் எத்தனை பாகம் கிக் பாக் என்பதே கேள்வி??
 
கிக் பாக் இருக்குமா என்பது சந்தேகமே. யாராவது இதை வெளியே சொல்லிவிட்டால் பிரச்சனையாகிவிடும், அதனாலே கிக் பாக் இருக்காது என்பதே என் கணிப்பு.

ஆனால் நடுவர்கள் ஒரு சிலரை தூக்கியும் ஒரு சிலரை மட்டும் தட்டவும் செய்கிறார்கள். ஒரு சிலர் நன்றாகப் பாடினாலும் அவர்களை அவ்வளவாக புகழ்வதில்லை, அதில் குறைகளையே கண்டுபிடிக்கிறார்கள்.

ரோஷன், அல்கா, பிரியங்கா, ஸ்ரவன், சஹானா ஆகியோர் மிகவும் திறமையாக பாடுகிறார்கள். இவர்களில் ஒருவருக்குத்தான் பரிசு கிடைக்கும் என்று நினைக்கிறேன். வேறு யாருக்காவது வந்தால், அது நீங்கள் சொல்வது போல் இருந்தால்தான் நடக்கும்.
 
எனக்கென்னவோ அந்த சிறுசுகளில் பெரிசு.. உயரமான பையன்.. அவனை ஃபிக்ஸ் பண்ணி விட்டார்கள் என்று உள்ளுணர்வு கூறுகிறது...

அல்கா .. ப்யூர் மெரிட் என்று சொன்னால் வெற்றி பெறவேண்டிய சிறுமி...!

ஆனால் ரியால்டி ஷோக்களீல்.. நடப்பது பலதும் போலி.. ஐபிஎல் போன்றதே...!
 
அல்காவிற்கு சித்ராவின் சிபாரிசு இருக்கிறது. ஸ்ரீனிஷா, நித்யஸ்ரீ இருவரும் திறமைசாலிகள்
 
அல்கா அல்லது ஸ்ரவன் ஒருவருக்கு பரிசு கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.

கர்நாடக சங்கீதம் மட்டுமே பாடத் தெரிந்தவனாக இருந்த ஸ்ரவன் இப்பொழுது அனைத்து விதமான பாடல்களிலும் வெளுத்து வாங்குகிறான். நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

இப்பொழுது போட்டியில் இருக்கும் அனைவருமே திறமையாக பாடுகிறார்கள். அதனால் இறுதிப் போட்டியில் சிறப்பாக பாடும் ஒருவரே வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறேன்.

இங்கே யாரையும் ஃபிக்ஸ் செய்வது இல்லை என்றே நினைக்கிறேன்.
 
இந்த போட்டியில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன.

போட்டியாளர்களின் திறமை பன் மடங்கு உயர்ந்திருக்கிறது.

மனோ அவர்களின் பேச்சு உற்சாகம் அளிப்பதாகவும், பல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பதாகவும் இருக்கிறது.

சிறு குழந்தைகளுக்கிடையே உண்டாகி இருக்கும் நட்பு பார்க்கவே பெருமையாய் இருக்கிறது.

மிச்சம் இருக்கும் அத்தனை பேருமே மிக்ச் சிறந்த பாடகர்கள். எனவே முடிவு எப்படி வேண்டுமானால் இருக்கலாம்.

P.B.ஸ்ரீநிவாஸ் போன்ற மேதைகளின் பேச்சு அர்த்தம் பொதிந்ததாகவும் மிகச் சிறந்த டானிக்காகவும் இருக்கிறது. எம்.எஸ் விஸ்வநாதனின் இசை நுணுக்கங்களை சின்னதாய் அவர் காட்டினாலும் பிரமிப்பு ஊட்டக் கூடியது.

சொல்லப் போனால் இந்தப் போட்டியைப் பார்ப்பதாலேயே பாடுவதில் பல நுணுக்கங்களை நாம் கற்றுக் கொள்ளலாம்.
 
இந்த நிகழ்ச்சி தினமும் இந்த நிகழ்ச்சி என்னை ஒரு மணி நேரம் தொலைக்காட்சியின் முன் உட்கார வைத்து விடுகிறது...

சின்ன சின்ன தவறுகளையும் நடுவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்...

சென்ற வாரம் ப்ரியங்கா வெளியேறியது மிகவும் வருத்தமாக இருந்தது...

இப்போது இருக்கும் ஐவரில் யார் ஜெயிப்பார்கள்?...

காத்திருப்போம்...
 
குழந்தைகள் என்று மட்டுமல்ல, பெரியவர்களையும் அழைத்து கருது விவாதம் என்கின்ற பெயரில் அவர்லுக்குள் அந்தரங்கமாக நடக்கும் சம்பவங்களை அவர்களின் வாயை கிண்டி பகிரங்கபடுத்தி அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கிறேன் என்கிற பெயரில் காசு பார்ப்பதும் தவறுதான்..
 
நான் தவறாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. ஆனால் கடந்த ஒரு மாதமாக பார்க்கவில்லை. இவ்வளவு மட்டமாக நீதிபதிகள் இருப்பார்கள் என்று என்னவில்லை. பிஞ்சு குழந்தைகள் மனது என்னவாகும். ஏற்கனவே எடுத்த முடிவுக்கு நம்மை யெல்லாம் முட்டாளாக ஆக்கிவிட்டார்கள். எவ்வளவு அருமையான குழந்தை குரல்கள் கேட்டோம். எல்லாவற்றையும் மறந்து .......... ச........ச.........
 
ஃபிக்ஸிங்க் இல்லை என்பதை நமது நாட்டில் நடக்கும் எந்த ரியாட்டி ஷோவுக்குமே சொல்ல முடியாது...

ஸ்ரவான் ..என்பது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு என்பது அவ்வப்போது தெரிகிறது..

பின்னால் பார்ப்போம்.....!!!
 
சமீபத்தில் சில பாடல்கள் ஒலிபதிவிற்க்காக சென்னை சென்றிருந்தபோது நடுவர்களாக இருந்து அனுபவப்பட்ட பாடகர்கள் பகிர்ந்து கொண்ட விசயங்கள்,இம்மாதிரி நடக்கும் நிகழ்சிகளின் கறுப்பு பக்கங்கள் பற்றியதுதான்.ஒரு நிகழ்சியில் திறமை மிக்க ஒரு பாடகரை டைரக்டரின் உறவினருக்காக 'எலிமினெட்'செய்ய் வெண்டியிருந்ததைப் பற்றி ஒருவர் கவலை கொண்டிருந்தார்.இன்னொரு பாடகர் சொன்னார்: காலை பத்து மணிக்கு ஒளிப்பதிவு என்று அழைத்துவரப்பட்ட சிறுவன் இரவு பத்து மணியானபோதும் பதிவு நடைபெறவில்லை.தூங்கி விட்டான்.அவன் பெற்றோர் மெதுவாக தட்டி எழுப்ப,அவன் எழும்பாமல் போக், வ்ந்தது கோபம் ஓங்கி விட்டார் ஒரு அறை.துடித்து போய் அலறிக்கொண்டிந்தானாம் அந்த சிறுவன்.குழந்தை தொழிலளர் ஒழிப்பு சட்டத்தை நினைவு கூர்ந்தார் அந்த பாடகர்.பெற்றோரின் மீடியா வெறியை என்னென்பது. இன்னும் சில சானல்களில் முன்பே பாடி ஒலிப்பதிவு செஇத பாடலுக்கு வாயசைப்பு மட்டுமே நடக்கிறது என்ற தகவலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.உண்மையா என்பதை தக்ஸ் தான் சொல்லவேண்டும்
 
தொடர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி! ஸ்ரீகாந்த் திறமைசாலிதான்.. ஆனால் அதற்காக இப்படி இறுதிபோட்டி வரை வரவழைத்திருப்பது கொடுமை... காரணம் அவனைவிடவும், ஸ்ரீஹரி, பிரியங்க, ஸ்ரீநிசா மிக திறமைசாலிகள்... நான் வீட்டில் என் மனைவியிடம் சொல்லிகொண்டேயிருந்தேன்.... இவன் வைல்ட் கார்ட் ரவுண்டில் தேர்ந்துடுக்கபட்டால் நிச்சயம் இவனை இறுதிபோட்டிக்கும் கொண்டு வந்துவிடுவார்கள் என்று.. அது நடந்தே விட்டது... இறுதியில் சூப்பர் சிங்கர் ஜீனியர் ஸ்ரீகாந்த் என்றாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.....

விஜய் டிவி கொஞ்சம் நியாயமாக தேர்ந்தெடுக்கவேண்டும்!
 
ஷீயின் கருத்தினை ஏகமனதாக வழி மொழிகிறேன், ஸ்ரீகாந் திறமைசாலிதான் ஆனால் சின்னப்பையன் என்ற காரணத்தால் கிடைக்கும் ஓட்டுக்களால் வெற்றி பெறலாமென்ற நிலை வந்து விடக்கூடாது....
 
ஸ்ரீகாந்த் மற்றும் நித்யஸ்ரீ இருவரும் இறுதிப்போட்டிக்கு தேர்வு என்றவுடனேயே நான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை நிறுத்தி விட்டேன். இறுதியில் யார் வென்றாலும் எனக்கு அவர்கள் மேல் மதிப்பு வரப்போவதில்லை. இப்படி கொச்சையாக குறிப்பாக பிரியங்காவை ஓரங்கட்டியது எனக்குப் பிடிக்கவில்லை.
 
ஆம்...ஆரேன் அவர்களே....
ஆரம்பத்திலிருந்தே பிரியங்காவை உற்சாகப்படுத்தாமல் குறை சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்....
ஓரவஞ்சனை செய்து விட்டார்கள்...
 
எல்லாம் சரி.. இறுதிப்போட்டி நடந்து கொண்டிருக்கிறது.. ஐவரில் யார் அந்த ஒருவர்???
 
Back
Top