கர்நாடக இசை

நாகரா

New member
கர்நாடக இசையில் வாத்தியம் மற்றும் வாய்ப்பாட்டு கேட்கவும் தரவிறக்கவும், இச்சுட்டியைச் சொடுக்கவும்

ஸ்ப்த ஸ்வரங்களும் நவ சக்கரங்களும்

ஸ = மூலாதாரம்(முதுகடி)
ரி = சுவாதிட்டானம்(நாபியடி)
க = மணிபூரகம்(நாபி)

ஸ, ரி, க நம் அடித்தளம்

ம = சூர்ய சக்கரம்(உதரவிதானம்), அனாகதம்(நடு மார்பு), அமுத கலசம்(தைமஸ், தொண்டையடி)

ம = அருட்தாயின் உணர்வு

ப = விசுத்தி(தொண்டை)

ப = அருட்தந்தையின் உணர்வு

த = ஆக்கினை(நெற்றி நடு), சஹஸ்ராரம்(தலையுச்சி), நிராதாரம்(தலையுச்சி மேற் சக்கரங்கள்)

த = சற்குருவின் உணர்வு

நி = நிராதார இற(ர)க்கம் (செங்குத்தாக உச்சி பிளந்து மெய்வழி திறந்துப் பாதங்கள் தாண்டி பூமி நடு வரை, சிலுவையின் செங்குத்துப் பாகம்)

ஸ = நிராதார ஆறாதார ஒருமை, இருதயத்தில் நிலை கொள்ளும் இருமை தீர்ந்த கோள ஒருமை உணர்வு, இருதய வாய் திறக்கும் மூவரின் "ஹ்ருதய ஷக்திபத்", சிலுவையின் பக்கவாட்டுப் பாகம்)

ஸ்வர ஜதியின் போது ஸ்வரங்களைக் கூர்ந்து கவனிக்க, ஸ்வர அதிர்வுகளை அவ்வச் சக்கரங்களில் உணரலாம், இது என் அனுபவம்.

 
[media]http://www.youtube.com/watch?v=weyRdtfvpI4[/media]
இயற்றியவர் : யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி ஐயர்
பாடியவர் : டி. எம். சௌந்தரராஜன்
ராகம் : ஆனந்த பைரவி கல்யாணி பாகேஸ்ரீ ரஞ்சனி

(ஆனந்த பைரவி)
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

(கல்யாணி)
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி வைதிடும் நாயகியே
நல்லாட்சி வைதிடும் நாயகியே நித்ய
கல்யாணியே...
கல்யாணியே கபாலி காதல் புரியும்
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

(பாகேஸ்ரீ)
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே
பாகேஸ்ரீ தாயே பார்வதியே
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா

(ரஞ்சனி)
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன்...
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா
 
நாகரா அவர்களுக்கு நன்றி. ஆனால் நிறைய பாடல்கள் தளத்தில் இல்லை. இருப்பதை இறக்குமதி செய்துகொள்கிறேன்.

வேறு தளங்கள் இருந்தாலும் கொடுங்கள்.
 
அவ்வப்போது தளத்திற்கு வருகை தந்துப் புது வரவுகளைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் ஆரென், தினந்தோறுஞ் சில பாடல்களைத் தளத்தில் ஏற்றுவேன், நன்றி
 
தகவலுக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி நாகரா. ஃபோர் ஷேர்ட் தளத்தில் இருந்து பதிவிறக்குவதில் சில சமயங்களில் இடையூறு ஏற்படுகிறது. உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இல்லையென்றால் மீடியாஃபயர் தளத்திலும் பதிவேற்றி விடுங்களேன். நன்றி.
 
அருமை..அருமை..

இருதயத்தை வருடிச்சென்று இதத்தை உருகவைக்கும் இசையருவி.

வித்துவான் வீரமணி அய்யரின் கற்பகவல்லி அலங்கரிக்காத ஆலயங்கள் அதிலும் நவராத்திரிக் கால ஆலயங்கள் ஈழத்தில் இல்லை எனலாம்.

மோர்சிங்கும் மிருதங்கமும் முதன்மை இசையாக மெல்லிழை வயலின் பக்கபலமாக இருக்க சுவையோ சுவை. மீண்டும் பருக வாய்ப்பளித்து விட்டீர்கள்.
நன்றி அய்யா.
 
தகவலுக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி நாகரா. ஃபோர் ஷேர்ட் தளத்தில் இருந்து பதிவிறக்குவதில் சில சமயங்களில் இடையூறு ஏற்படுகிறது. உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இல்லையென்றால் மீடியாஃபயர் தளத்திலும் பதிவேற்றி விடுங்களேன். நன்றி.
நேரங்கிடைக்கும் போது நிச்சயம் மீடியா ஃபயர் தளத்திலும் பதிக்கிறேன், நன்றி பாரதி
 
அருமை..அருமை..

இருதயத்தை வருடிச்சென்று இதத்தை உருகவைக்கும் இசையருவி.

வித்துவான் வீரமணி அய்யரின் கற்பகவல்லி அலங்கரிக்காத ஆலயங்கள் அதிலும் நவராத்திரிக் கால ஆலயங்கள் ஈழத்தில் இல்லை எனலாம்.

மோர்சிங்கும் மிருதங்கமும் முதன்மை இசையாக மெல்லிழை வயலின் பக்கபலமாக இருக்க சுவையோ சுவை. மீண்டும் பருக வாய்ப்பளித்து விட்டீர்கள்.
நன்றி அய்யா.
உம் ஊக்க வரிகளுக்கு நன்றி அமரன்
 
[media]http://www.youtube.com/watch?v=WWr7GZCjxTI[/media]
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்: சுதா ரகுநாதன்
இராகம்: வராளி
தாளம்: ஆதி

கந்தனே! கடம்பனே!
கருத்தினில் உறைந்திடும்
கருணை வடிவான குஹனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடினும்
ஏழையைக் காக்க ஒரு கண்ணும் இல்லையோ?

சரண் என்று கொண்டு உனை
சந்ததமும் பாடினேன்
செவிகளில் விழவில்லையோ?
நற்கதியை அருட்பதம் அண்டினேன்
அடியனை ஆண்டருள் செய்தருள்!

பழனி மலை உறையும் முருகா வா வா!
முருகா வா வா!
கந்தா வா வா!
எனை கா வா வேலவா!
சண்முகா வா வா!
கந்தா வா வா!
எனைக் கா வா வேலவா! (பழனி)

தேவாதி தேவன் மகனே வா!
பரதேவி மடியில் அமரும் குஹனே வா!
வள்ளி தெய்வயானை மணவாளா வா!
சரவண பவ! பரம தயாளா! (முருகா வா வா)

ஆபத்து இருள் அற அருள் ஒளி தரும்
அப்பனே அண்ணலே ஐயா வா வா!
பாபத் திரள் தரும் தாபம் அகல வரும்
பழனி வளர் கருணை மழையே வா!
தாபம் தரு வெயில் அற நிழல் தரும் வான் தருவே
குல குருவே வா!
ஸ்ரீ பத்மனாபன் மருகா! ராம தாசன் வணங்கும்
முத்தைய்யா வா வா!
 
பகிர்ந்ததை ரசித்தமைக்கு உமக்கு நன்றி ராஜேஷ் தம்பி.
 
[media]http://www.youtube.com/watch?v=nSB6nbzHKUk[/media]
பாடல்: மாணிக்க வீணை ஏந்தும்
பாடியவர்: P.சுசிலா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
 
[media]http://www.youtube.com/watch?v=wrG9tSqD4Fg[/media]
ராகம்: செஞ்சுருட்டி

ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகே புவனேஸ்வரி

அனுபல்லவி:ஆகம வேத கலாமய ரூபிணி

அகில சராசர ஜனனி நாராயணி

நாக கங்கண நடராஜ மனோஹரி

ஞான வித்யேஸ்வரி ராஜ ராஜேஸ்வரி (ஸ்ரீ….)



சரணம்:

1. ராகம்: புன்னாகவராளி

பலவிதமாய் உன்னை ஆடவும் பாடவும்

பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்

உலக முழுதும் உன்னை அகமுரக் காணவும் \

ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி (ஸ்ரீ….)

2. ராகம்: நாதனாமக்க்ரியா

உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்

உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டிவைத்தாய்

நிழலெனத் தொடர்ந்த முன் ஊழ்க் கொடுமையை நீங்கச் செய்தாய்

நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (ஸ்ரீ….)

3. ராகம்: சிந்து பைரவி

துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்

தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்

அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்

அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி (ஸ்ரீ…)
 
[media]http://www.youtube.com/watch?v=X3DJ9e3Vlo0[/media]
பாடல்: அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்

வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: பந்துவராளி
தாளம்: ஆதி

அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்
திருவடி இணை துணையென் (அம்பா)

வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்
கதம்ப வனக்குயிலே ஷங்கரி ஜகதம்பா (மனம்)

பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீ*ஸ்வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)
 
Back
Top