தாமரை
Facebook User
ஆன்மீகவாதி தாமரைஅண்ணாத்த அவர்களுக்கு நமஸ்காரம்,ஸ்வீட்காரத்துடன் ஒரு கேள்வி,
என் மிக நெருங்கிய கல்லூரி காலத்தியதோழி. அவளுக்கு தியானம்,மூச்சுப்பயிற்சி முதலியவற்றில் ஈடுபாடு அதிகம்.அவள்முறைப்படி யோகா எதுவும் பயின்றது இல்லை.தியானத்தில் அடிக்கடி அமர்வாள்.திடீரென மிகவும் செய்வதற்கு அரிதான யோகா போஸ்சர்களையும் முத்திரைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டாள்.எப்படிடி என்று கேட்டால் தானாக வருகிறது என்று கூறுகிறாள், எங்களுக்கு அவள் செய்வது யோகா தானா என்றே சந்தேகம்.ஒரு யோகா பயிற்சியாளரிடம் கேட்ட போது இவை ஹடயோகம் அட்வான்ஸ் போஸ்ட்சர்ஸ் என்று கூறினார்.என்னால் நம்ப இயலவில்லை.யாரும் முறையாக கற்றுத்தராமலே யோகா நம் உள்ளே இருந்து வருவதற்கான சாத்தியம் உண்டா?இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
சில சமயம் அரிதாக இது மாதிரி நிகழ்வதுண்டு. உதாரணமா இதுவரை தண்ணியில நான் முழுகினதில்லை.. நீச்சல் தெரியாத காலத்தில் இருந்தே. (அதுக்காக நான் முழுகாம இருக்கேன் அப்படின்னு சொல்லிடாதீங்க)..
நம்ம ஊரில பாட்டிங்க குழந்தைங்களை குளிப்பாட்டறதை பாத்திருக்கீங்களா? பார்ட்டியைப் பார்க்காம பாட்டியை உன்னிப்பா கவனிச்சா சில பாட்டிகள் குழந்தைகளின் கை கால்களை நல்லா இழுத்து விட்டு நீவி குளிப்பாட்டுவாங்க. இதனால் எலும்புகள் தசை நார்கள் இளகி வளரும். இதனால் கைகாலை வித விதமா வளைக்கர மாதிரி உடம்பு ரொம்ப வளைந்து தரும்..
சிறுவயதில் இப்படி அவங்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் உடல் இப்படிப் பக்குவப் படுத்தப் பட்டு இருந்து, அவங்க உடலை வளைச்சி நெளிச்சி வேலை செய்யற டைப்பாவும் இருந்தா இது மிகவும் சாத்தியமே...
முரளிதரனுக்கு இரப்பர் மாதிரியான மணிக்கட்டுகள் இருக்குது இல்லையா? அது மாதிரி எங்க காலேஜ்ல படிச்ச ஆமை தியாகராஜனுக்கும் இருந்தது. அவன் நடு விரலை பின்பக்கம் வளைச்சு, மணிக்கட்டுக்குப் பக்கத்தில தொடுவான்னா பார்த்துக்கங்களேன்.
அடம் பண்ணாம உடம்பு ஹடயோகம் பண்ணுதுன்னா, அட அது ஒரு யோகந்தான்..
அந்தக் குளிப்பாட்டறக் கலை இப்ப பார்க்கவே முடியறதில்ல...
குழந்தையை தொடவே பயப்படறாங்களே!!!