அவருக்கு விளம்பரம் எல்லாம் தேடல சுபி
ஆதன் நீ விளம்பரம் தேடவில்லை என்பதை நான் அறிவேன்.. மற்றவர்கள் அப்படி எண்ணிவிட கூடாதென்றுதான் உன் விளக்கத்தை நாடினேன்.. தவறெனில் மன்னிக்கவும்..!!
ஒரு படம் என்றால் பரவா இல்லை சுபி, தொடர்ந்து இது போன்ற படங்கள், மக்களை அவநம்பிக்கைக்கும், விரக்திக்கும், அச்சத்திற்கும், தனித்தியங்க முடியாது எனுன்ம் நிலைக்கும், முழுமுற்றாய் கெட்டுப் போன ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் எனும் தீர்மானதுக்கும் கொண்டு செல்வதாய் இருக்கிறது. இது போன்ற படங்கள் பாராட்டுக்கள் எவ்வளவு அவசியமோ, எதிர்ப்பு அவ்வளவும் அவசியம் என்று கருத வேண்டியிருக்கிறது.
ஏற்றுக்கொள்கிறேன் ஆதன்… இந்த உலகில் எந்த படைப்புமே முழுமைத்துவம் கொண்டதில்லை… நான் உட்பட..!! அதனால் ஒரு படைப்பை விமர்சிக்கும்போது அதில் நிறைகளை கொண்டாடி குறைகளை சுட்டுவதுதான் சரியான விமர்சனமாக இருக்கும்...!! நான் இந்த படத்தைபற்றி எந்த குறையும் சொல்லாததற்கு நீகூட எந்தலையில் குட்டலாம்..!! ஆனால் எந்த ஒருவிசயத்திலும் எது மிகுந்திருக்கோ அதுவே நம் பார்வையிலும் மனதிலும் நிறைந்துவிடுகிறது.. அந்த விதத்தில் இப்படத்தின் நிறைகள் முன்பு குறைகள் மறைந்துபோய் விட்டன… என்னை பொருத்தவரை இந்தபடம் சமூகத்தின் ஆத்மபலத்தை நாடி எடுக்கபட்டதாகவே எண்ணினேன்..!! நீ சுட்டிய பின்தான் இத்தகைய படங்கள் அப்படியொரு எதிர்மறை விளைவையும் சமூகத்தில் ஏற்படுத்த கூடுமோ என்று யோசிக்கவைக்கிறது..!! மாறுபட்ட சிந்தனை மாறுபட்ட கோணம்… வரவேற்கிறேன் நண்பனே..!!
அடுத்து நீ சொன்னதுபோல இன்றைக்கு சினிமா என்பது மண்சார்ந்த அத்தனை கலை வடிவங்களையும் தன்னகத்தே விழுங்கி ஒற்றை கலைவடிவமாய் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றபோதும் அதில் மண்சார்ந்த படைப்புகளை காணுதல் அரிதாக இருப்பது வருத்தமாகத்தான் உள்ளது…!! அதே சமயம் இன்னும் சினிமா என்பது வெறும்பொழுது போக்குசாதனம் என்ற ஒற்றை நிலையில் நின்றுகொண்டு படைப்புகளை விமர்சிப்பது குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை போன்றுதான் தோன்றுகிறது..!! ஒரே படைப்பில் எல்லா தரப்பு மனிதர்களையும் திருப்திபடுத்த முடியாதுதான்… எனவே தற்காலிக சந்தோசம் தரும் மசாலா படங்களும் நிரந்தர ஆத்மதிருப்தியை நாடும் நல்ல படங்களும் மண்சார்ந்த பதிவுகளும் படைப்புகளும் வரவேற்கபட வேண்டியதே… இதில் ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டு குறைகூறுவது நிச்சயம் ஏற்கதக்கதல்ல என்று எண்ணுகிறேன்..!!
சாரு பெரும்பாலும் தன்னுடைய எல்லா கட்டுரைகளிலும் தன்னை பற்றி பேசுவது வழக்கம், இது சாரு மட்டுமல்ல சுபி பல எழுத்தாளர்களும் செய்வதுதான்
சரியாகதான் சொல்லியிருக்கிறாய்… நான்கூட எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தாத எதைபற்றியும் எழுதுவது கிடையாது.. மன்றத்தில் என்கவி அறிமுகத்திலேயே அதை சொல்லியிருப்பேன்..!! பார்த்தாயா இப்ப நானே என்னைபற்றி பேச ஆரம்பிச்சிட்டேன்.?!
சரி விசயத்துக்கு வருவோம்… சாரு சார் தன்னைபற்றி பேசுவதில் தவறேதுமில்லை… ஆனால் அவரதுபேச்சு முன்னுக்குபின் முரணாக இருப்பதுதான் அவரது வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அசூயை ஏற்படுத்துவதாக இருக்கிறது…!! உதாரணத்துக்கு மனதில் பட்டதை ஒளிக்காமல் மறைக்காமல் வெளியே சொல்லி விடுகிறேன்.. மனதில் பட்டதை எழுதாமல் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தால் அது எனக்கு நானே செய்து கொள்ளும் துரோகம்(self abuse) என்று உண்மையாக நடந்துகொள்வதாக காட்டிக்கொள்ளும் அவர் எதற்காக பக்கத்தில் இருப்பவர்களையெல்லாம் சங்கடபடுத்தி வெளியேற வேண்டுமே என்ற தயக்கத்தில் பல்லை கடித்துக் கொண்டு இடைவேளை வரை பொய்யாக திரையரங்கில் அமர்ந்திருந்தாராம்… முடிந்தால் கேட்டு சொல்லுங்களேன்..?!
இந்த உண்மை யாரோ சொன்னதுதான்... மனிதன் என்பவன் கூடிவாழ கற்றுக்கொண்ட ஒரு சமூகவிலங்கு… அவனால் எப்போதும் தன்னைபற்றி மட்டுமே சிந்திக்க இயலாது… அதேபோல் சமூக அமைப்பில் இருந்துகொண்டு அவனால் தனித்தியங்கவும் முடியாது... அவனது ஒவ்வொரு செயலும் சமூகத்தில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது..!! எனவே சொல்லோ செயலோ எழுத்தோ விளைவுகளை எண்ணிபார்த்து மற்றவர்களையும் கருத்தில்கொண்டு காரியமாற்றுவதே விவேகமானதாய் இருக்குமென நினைக்கிறேன்…!!
ஆதன்… மனிதர்களாகிய நாம் இன்று சமூகம், கலாச்சாரம், பண்பாடு என்ற கட்டுக்குள் நாகரிகமடைந்துவிட்டதாக எண்ணி கொண்டாலும் இன்னும் நம் ஆழ்மனதில் ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை தேங்கிவிட்ட மனிதமனத்தின் அழுக்குகள்/விகாரங்கள் வீரியம் குன்றாமல் வண்டல்மண் போல அடிமனதில் அமிழ்ந்துபோய் கிடக்கின்றன…!! அதை அப்படியே படியவிட்டு காலப்போக்கில் மடியவிடுவதுதான் சமூகத்துக்கு நலம் பயக்கும்..!! அதைவிடுத்து உண்மையாக இருக்கிறேன் வெளிப்படையாக இருக்கிறேன் என்று நமக்குள் இருக்கும் மன அழுக்குகளை நாம் எல்லோரும் வெளிக்கொணர ஆரம்பித்தால் அது துர்நாற்றத்துடன் சர்ப்பமென வெளிபட்டு மற்றவர்களையும் தீண்டி அவர்களுக்குள்ளும் விசத்தை ஊன்றவே செய்யும்..!! அதன் பயன் சமூகத்தில் வன்மத்தை வளர்ப்பதாக மட்டுமே இருக்கும்.. விளைவு நாம் மீண்டும் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடுவோம்..!!
சாரு சார் தவறான புரிதலுடன், மனதை சுத்தபடுத்துவதாகவும் வெளிப்படையாக இருப்பதாகவும் கூறிக்கொண்டு அவரது கட்டுரைகளில் அவ்வப்போது அள்ளிக் கொட்டும் மனஅழுக்குகளை காட்டிலும் அதிகமான மனஅழுக்குகள்/விகாரங்கள் ஒவ்வொரு மனிதனிடத்தும் ஏன் உன்னிடத்திலும் என்னிடத்திலும்கூட இருக்கலாம்.. இருக்கிறது..!! ஆனால் ஏன் நாம் எல்லோரும் அதை பொதுவில் வெளிபடுத்திக் கொள்ள விரும்புவதில்லை அல்லது முடிவதில்லை என்று என்றாவது எண்ணியதுண்டா ஆதன்..?! ஒருவன் நேர்மறையான விசயங்களை மட்டும் எழுதுவதால் அவனை நேர்மையாளன் என்றோ எதிர்மறையான விசயங்களை எழுதுவதால் ஒருவனை சமூகத்துக்கு எதிரானவன் என்றோ நாம் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட கூடாதுதான்..!! ஏனெனில் நிறைகளும் குறைகளும் எல்லா மனிதமனங்களிலும் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன... அதில் எதை நாம் வெளிப்படுத்துகிறோம் என்பதில் மட்டுமே நாம் எல்லோரும் வேறுபடுகிறோம்.. மாறுபடுகிறோம்..!! அதேபோல் ஒரு எழுத்தாளான் இப்படிதான் எழுதவேண்டும் என்று யாரும் வரையறுக்கவோ யாரையும் வற்புறுத்தவோ யாருக்கும் உரிமையில்லை… எழுதுவது என்பது அவரவர் விருப்பத்தையும் தனிபட்ட சுதந்திரத்தையும் சார்ந்தது…!!
அதேசமயம் மனிதன் என்பவன் சுதந்திரமானவன் என்பதை ஒப்புக் கொண்டாலும் சமூகம் என்ற கட்டமைப்புக்குள் இயங்கும்போது அவன் மனிதனாக வாழ்வதற்கான குறைந்தபட்ச நியதியென்று ஒன்று இருக்கிறது.. அது யாருக்கும் தீங்கின்றி வாழவேண்டும் என்பதே…!! அப்படியானால் ஒரு எழுத்தாளனுக்கான நியதி என்னவென்று எண்ணிப் பாருங்களேன்..!! எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள்… எனவே நம் எழுத்தென்பது சமூகத்தை ஒருபடி உயர்த்தி பண்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை தவறியும் யார்மனதையும் புண்படுத்தாமல் இருந்தால் அதுவே நலம்தரும் செயல்தான்..!! அதை சாருசாரிடம் நாம் எதிர்பார்ப்பதில் என்ன பிழையிருக்க முடியும் ஆதன்..?! எதிர்பார்ப்பு என்பதே பிழைதான் எனில் என்பிழை களையப்பட வேண்டியதே நண்பா..!!