அர்த்தமுள்ள அரட்டை!

தாமரை

Facebook User
பொதுவா நாம அரட்டை அடிக்கிறது இரண்டு வகையாப் பிரிக்கலாம்.

உதாரணமா இப்போ இருக்கிற அரட்டைப் பகுதி. ச்சும்மா ஜாலியா கலாய்க்கிற பகுதி.

இன்னொன்னு ஒரு திரியைப் படிக்கும்பொழுது அதன் தாக்கத்தால் உண்டாகும் விவரமுள்ள அரட்டைகள். இதில் பல கேள்விகள், சந்தேகங்கள் விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அதை அங்க விவாதிக்க ஆரம்பிச்சா திரி திரிஞ்சு போயிடுது,

அந்த மாதிரி விஷயமுள்ள அரட்டைகளை தடுக்கவும் கூடாது. ஏன்னா அதில் பல பலன் இருக்கும்.

உதாரணத்துக்கு தக்ஸோட திரியில அறுபதாம் கல்யாணம் பற்றி சில தகவல்கள்..

அந்த மாதிரியான அரட்டைகளை இங்க வச்சுக்கலாம் என இந்தப் பகுதியை ஆரம்பிக்கிறேன்.

வாங்க. விஷயத்தோட பேசலாம்.
 
எனக்கு ஒரு டவுட்டு.. அறுபதாம் கல்யாணம், கல்யாணமாகி அறுபது வருஷம் கழிச்சு நடக்கிறதுதானே??? இதென்ன 30-35??

தலைக்கு அறுபதாம் கல்யாணம் நான் மன்றத்தில் இணைந்த புதிதில் நடந்தது... :D :D :D

அறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு 60 வயது ஆகும் போது நடத்தப்படுவது.

60 வயசுக்கு என்ன விஷேசம்?

சாதாரணமா கல்யாணம் ஆகி, குழந்தைகள் ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கும்.

நம்மளை போல வேலை செய்பவர்களும் ரிடையர்டு ஆகி ரிலாக்ஸ் ஆகிற நேரம்.

அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம் கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது...

கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது..

20 வயது வரை ஒரு நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை
20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை
40-60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை

60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம். 60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம் என்ன சொல்லுது?

மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம்" என்கிற இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் , 78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகிறது.


இது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன வாழ்க்கையில் நடந்த தவறுகளுக்கு வருந்தி... குடும்ப பாரம் இறக்கி வைத்து, ஒரு நல்ல ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக் கொள்ளுதல் இதில் முக்கியம்..

எதுக்கும் தலைக்கு ஒரு தனி மடல் போட்டு வைப்போம்..
 
அரட்டை அடிக்கலாமுன்னு சொல்லிப்புட்டு விசயத்தோடு பேசலாம் என்று சொன்னால் எப்படி...
 
உங்களால தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்னு நினைக்கிறேன்...
கிளப்புங்க...
 
அரட்டை அடிக்கலாமுன்னு சொல்லிப்புட்டு விசயத்தோடு பேசலாம் என்று சொன்னால் எப்படி...

மற்றவர்களோடு பேசும்போது அரட்டை. அந்தப் பேச்சில் மனமும் சேர்ந்தால் விஷயமுள்ள அரட்டை..

அதாவது இப்படி எதையாவது யாருக்காவது விளக்க முயற்சி செய்யும்பொழுது ஆழமா யோசிப்போம் இல்லையா. அதான் விஷயமுள்ள அரட்டை.

நான் போட்ட முதல் பின்னூட்டம் பார்த்தீங்க் இல்லையா? இதை ஒரு நாலுமாசம் கழிச்சு யாராவது கேட்டா எந்தத் திரியில் இருக்குன்னு நானேதான் தேடி எடுத்துத் தரணும், அதுக்கு பதிலா

எல்லோரும் எப்போதும் இங்கேயே தேடலாம்.

ஆதவா, அமரன் போன்றவர்களைக் கேட்டால் இதோட அவசியம் இன்னும் புரியும்.
 
மிகச் சரியான திரிதான்... சந்தேகங்களை, விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.. பொழுதுபோக்கான அரட்டையாக அல்லாமல், விஷயம் தெரிந்து கொள்ளவேண்டிய அரட்டையாக இருக்கும்.

அறுபதாம் கல்யாணம்கூட நான் ஏதோ, கல்யாணமாகி அறுபது வயதில் நடத்தப்படுவதாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது நீங்கள் சொன்னதன்பிறகு புரிந்து விட்டது.. ஆனால் இது ஆணுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது இல்லையா?.. பொதுவாக, (சுமாராக) இரண்டிலிருந்து ஐந்து வருடங்கள் வரை வயதில் மனைவி பின் தங்கியிருக்கிறாள். ஆணுக்கு அறுபது வயது எனும் போது பெண்ணுக்கு 58 லிருந்து 55 வரை இருக்கலாம்.. (சிலருக்கு கூட, குறைய..) எனில் இது மனைவிக்கு,/பெண்ணுக்கு பொருத்தமான முறையாகத் தெரியவில்லையே... இதைக்கூட ஆணாதிக்கம் என்று சொல்லலாம் இல்லையா?
 
ஆண் குடும்பத் தலைவன் என்ற அடிப்படையில் அமைந்ததாலே 60-ம் கல்யாணம் ஆணின் வயதை ஒட்டி வந்தது..

மற்றடி சஷ்டியப்த பூர்த்தி(60 ஆம் ஆண்டு), 80 வருட நிறைவு, சதாப்தி (நூறாவது ஆண்டு) ஆகியவை தனித்தனியே நடத்தப்படுகிறது.

60-ஆம் கல்யாணம் என்பதை ஒரு நிறைவான இல்லறவாழ்க்கையின் அடையாளமாக கொள்ளுதல்தான் சரி.
 
அது ஏன் அறுபது வருடங்கள் ஆன பின்னே அறுபதாம் கல்யாணம் நடக்கிறது....

நாற்பது வயதில் ஒரு நாப்பதாம் கல்யாணம், ஐம்பதாம் வயதில் ஒரு ஐம்பதாம் கல்யாணம் நடத்தலாமே...? நீங்கள் முதலிலேயே சொன்ன கருது சிலருக்கு ஒத்துக்காது....

60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம். 60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

சிலர் எண்பது வயதில் கூட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்... சிலருக்கு ஐம்பத்து வயதிலேயே அந்த நிம்மதி கிடைத்துவிடுகிறது....

மனிதனின் சராசரி ஆயுட்காலம் அறுபது என்பதுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

அறுபதாம் கல்யாணம் பெரும்பான்மையோர் செய்வதே இல்லையே...?

செய்வதால் என்ன?

செய்யாமல் விடுவதால் என்ன?

இன்னும்....... அப்புறம் கேட்கிறேன்... மூச்சு வாங்குது....
 
அது ஏன் அறுபது வருடங்கள் ஆன பின்னே அறுபதாம் கல்யாணம் நடக்கிறது....

நாற்பது வயதில் ஒரு நாப்பதாம் கல்யாணம், ஐம்பதாம் வயதில் ஒரு ஐம்பதாம் கல்யாணம் நடத்தலாமே...? நீங்கள் முதலிலேயே சொன்ன கருது சிலருக்கு ஒத்துக்காது....


சிலர் எண்பது வயதில் கூட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்... சிலருக்கு ஐம்பத்து வயதிலேயே அந்த நிம்மதி கிடைத்துவிடுகிறது....

மனிதனின் சராசரி ஆயுட்காலம் அறுபது என்பதுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

அறுபதாம் கல்யாணம் பெரும்பான்மையோர் செய்வதே இல்லையே...?

செய்வதால் என்ன?

செய்யாமல் விடுவதால் என்ன?

இன்னும்....... அப்புறம் கேட்கிறேன்... மூச்சு வாங்குது....

விட்டால், நீங்கள், இரண்டு வருடங்களில் இரண்டாம் கல்யாணம், ஐந்து வருடங்களில் ஐந்தாம் கல்யாணமெல்லாம் கேட்பீர்கள் போல...

தாமரை அண்ணா சொன்னதில் நான் கவனித்தவரை, அறுபது என்பது கிட்டத்தட்ட ரிடயர்ட் வயது.. பேரன்கள் பிறந்து வளரும் வயது. மகன்/மகளை ஒரு செட்டில் ஆக்கிவிட்டபிறகு வரும் வயது... அதைத்தான், 20, 20-40, 40-60 என்று பிரித்து எழுதியிருக்கிறார்.

எனக்குத் தெரிந்து நான் அறுபதாம் கல்யாணத்தை திரைப்படங்களில் கேள்விப்பட்டதோடு சரி. எங்கேயும் அழைப்பு வந்ததில்லை, சென்றதுமில்லை.. அதற்கு என்ன காரணமென்றும் தெரியவில்லை. செய்வதாலும் ஒன்றுமில்லை, செய்யாமல்போனாலும் ஒன்றுமில்லை... யாரோ சொன்னதுபோல.... சந்தோஷமாக இருந்தால் தினம் தினம் திருமணம்தான்!!!

அன்புடன்
ஆதவா
 
அது ஏன் அறுபது வருடங்கள் ஆன பின்னே அறுபதாம் கல்யாணம் நடக்கிறது....

நாற்பது வயதில் ஒரு நாப்பதாம் கல்யாணம், ஐம்பதாம் வயதில் ஒரு ஐம்பதாம் கல்யாணம் நடத்தலாமே...? நீங்கள் முதலிலேயே சொன்ன கருது சிலருக்கு ஒத்துக்காது....



சிலர் எண்பது வயதில் கூட வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள்... சிலருக்கு ஐம்பத்து வயதிலேயே அந்த நிம்மதி கிடைத்துவிடுகிறது....

மனிதனின் சராசரி ஆயுட்காலம் அறுபது என்பதுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

அறுபதாம் கல்யாணம் பெரும்பான்மையோர் செய்வதே இல்லையே...?

செய்வதால் என்ன?

செய்யாமல் விடுவதால் என்ன?

இன்னும்....... அப்புறம் கேட்கிறேன்... மூச்சு வாங்குது....

பெயரிடப்பட்ட தமிழ் ஆண்டுகள் அறுபது. பிரபவ, விபவ என்று

சாஸ்திரங்களின் படி மனிதனுக்கு என்று வழங்கப்பட்ட நிறைந்த ஆயுள் என்பது 120. கிருஷ்ணர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்கிறது புராணங்கள்.

பகல் இரவு என்பது போல 60 ஆண்டுகள் முதல் சுற்று முடிந்து இரண்டாம் அறுபது ஆண்டுகள் ஆரம்பமாகிறது.


முதல் அறுபது ஆண்டுகளில் லௌகீக(கர்ம) வாழ்க்கை வாழ்கிறோம். இரண்டாம் அறுபது ஆண்டுகள் கடமைகள் முடித்து தர்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்.

அறுபதாம் கல்யாணம் செய்வதால்

1. நாம் நம் நிறைவான கர்ம வாழ்க்கை வாழ்ந்ததை அறிவிக்கிறோம்.
2. கர்மத்தின் காரணமாக நாம் செய்த பாவங்களுக்கு வருந்தி, பரிகாரம் என்ற பெயரில் மனதை சுத்தமாக்கிக் கொள்கிறோம்
3. இனி தர்ம வழியிலான பொதுவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உறுதிகொண்டு இவ்வளவு காலம் கூட வந்த மனைவியை மீண்டும் மணந்து இவ்வளவு காலம் கடமைகளினால் தரமுடியாத நல்லற வாழ்வை தருகிறோம்.

இதைச் செய்யா விட்டால் ஒன்றும் பெரிய தவறு இல்லை, நாம் செய்த பாவங்களை எண்ணி வருந்தி புதுவாழ்வை தொடங்கா விட்டாலும்

ஆனால் உடன் வாழ்ந்து நம்மைத் தாங்கிய மனைவியின் தியாகங்களை எண்ணிப் பார்க்கவாவது அறுபதாம் கல்யாணம் செய்யலாம்.

என் தாய் தந்தையர். மாமனார் மாமியார் அனைவரும் இதைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

புரிந்து கொண்டாடினால் எவ்வளவு சந்தோஷம்.
 
Last edited:
நீங்கள் சொல்வது உண்மைதான்... இப்படியொரு திருமணம் ஒரு மகனாக இருந்து செய்வதால் தந்தைக்கும் பெருமை.. மகனுக்கும் தந்தை தாய் திருமணத்தைப் பார்க்கும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.
 
அரட்டையாக ஆரம்பித்து அர்தங்களை அளித்தமைக்கு தமரை அவர்களுக்கு நன்றி
மற்றடி சஷ்டியப்த பூர்த்தி(60 ஆம் ஆண்டு), 80 வருட நிறைவு, சதாப்தி (நூறாவது ஆண்டு) ஆகியவை தனித்தனியே நடத்தப்படுகிறது.
இதை பற்றியும் சிரிது விளக்கம் கொடுங்களேன்.
 
இத்தை நாஞ் சொல்லவா?

80 வருஷம் அப்படீன்னு சொல்ல ஒரு விஷேசம் இருக்கு தெரியுமா?

ஒரு வருஷத்துக்கு 365.25 நாட்கள். அப்படின்னா 80 வருஷங்களுக்கு

29220 நாட்கள். இதை 29 ஆல வகுப்போம். 1007.58

இன்னாடா தாமரை கணக்கு பண்ணுறாரே அப்படின்னு யோசிக்காதீங்க..

80 வயசில் 1008 பௌர்ணமி பார்த்திருப்போம் அப்படீங்கறதை தான் இந்த சின்னக் கணக்கு சொல்லுது..

இது ஒரு முக்கியமான மேட்டர் இல்லியா?

அப்பால அண்ணாத்தே இன்னா சொன்னாரு

பகல் - இரவு கணக்கு...

அக்காங்..

எப்படி
20, 40, 60 அப்புடிக்கா பகலில் எப்படி பொறுப்பு மாறுதோ

அதாவது

0 வயசில பொறந்தோம்
20 வயசுல கண்ணாலம்...
40 வயசுல குழந்தைக்கு கண்ணாலம் பண்ணி வச்சோம்
இது பகல்

60 வயசில முதுமை வாழ்க்கை ஆரம்பம்
அப்படி 60-80 ல முதியவரா வாழ கத்துக்கறோம்..
80 - 100 முதியவர்களா வாழறோம்
100-120 முதியவர்களுக்கும் வழிகாட்டுகிறோம்.

இப்டீக்கா

எப்படி காலை மதியம் மாலை அப்படின்னு பகலில் மூணு இருக்கோ அதே மாதிரி
முன்னிரவு நள்ளிரவு பின்னிரவுன்னு மூணு இருக்கோ அப்படி

20, 20 வருஷமா வாழ்க்கையை பிச்சி பிசைஞ்சு வாழச் சொல்லி அண்ணாத்தேங்க சொல்லிக் கொடுத்திருக்காங்கோ..

அதான் நூறு வயசு வாழ்ந்திட்டா கனகாபிஷேகம் செஞ்சு முழுமை அடைந்த ஆத்மா அப்டீன்னு கொண்டாடறோம்.

நம்மகிட்ட தான் இந்த பிளானும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது

என்ன பிரச்சனை என்றால் இதையெல்லாம் விளக்கம் சொல்லாம நம்ம பெரியவர்கள் சொல்லிக் கொடுத்து வருவதுதான்.

சாத்திரங்கள் மறந்து சடங்குகள் மட்டும் வாழ்வதால் சாதிகளும் சடங்களும் மட்டுமே நடந்து கொண்டிருக்கின்றன.
 
Last edited:
கல்யாணத்துல பலர் அரட்டையடிச்சு பார்த்திருக்கிறோம்..
இங்கு கல்யாணத்தை பற்றி அரட்டை..
அருமை தாமரை...
 
பொதுவாகவே பக்குவத்தன்மை அதிகமாகி மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும் வயது அறுபது தானே.. வாழ்க்கையின் உச்சநிலையில் குடிகொண்டிருப்பதும் அறுபதில் என்று படித்திருக்கிறேன். (யாருடையதோ ஒரு முக்கோண உச்சியிலிருப்பவர்கள் என்று படித்திருக்கிறேன். அவசரத்திற்கு அந்த பெயர் வாயில் வரவில்லை)

அதனாலும் அந்த நிலையை சிறப்பிக்க இப்படி அறுபதாம் திருமணம் நிகழ்த்தப்படுகிறது என்று கொள்ளலாமா????
 
இப்ப ஆரம்பத்திலிருந்து வர்ரேன்..

(மறுபடியும் ஆரம்பமா என அழாதீங்க)

1 நிமிடத்திற்கு அறுபது வினாடிகள்.
1 நாளுக்கு அறுபது நாழிகைகள்
மொத்தன் 60 ஆண்டுகள் என அறுபது காலக் கணக்கில் மிக முக்கிய இடம் பெற்ற ஒன்று.

ஒரு நாளை 12 ஆகப் பிரிப்போம்..

2 மணி நேரம் ஒரு இலக்கினம் அதாவது ஒரு இராசிமண்டலம் அதாவது வானப்பகுதியின் 30 பாகைகள்.

இரண்டு இலக்கினங்கள் சேர்ந்தால் ஒரு பொழுது.

அதாவது ஒரு பொழுதுக்கு 4 மணி நேரம்..

பகலில் மூன்று பொழுது, இரவில் மூன்று பொழுது ஆக ஆறு பொழுதுகள்

காலை, மதியம், மாலை, முன்னிரவு நள்ளிரவு பின்னிரவு என ஆறு பொழுதுகள்..

பகல் இரவு என இரண்டு வகை.

சரி ஒரு வருடத்தை எடுத்துக் கொள்வோம்

அதிலும் 12 மாதங்கள் (12 லக்கினங்கள்)

ஆறு பொழுதுகள் போல ஆறு பருவங்கள்

கார்காலம், குளிர்காலம், வசந்தகாலம், இளவேனில், முதிர்வேனில், இலையுதிர்காலம்

இரண்டு அயனங்கள், இரவு பகல் போல..

உத்தராயணம், தட்சிணாயினம்..

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இவை உத்தராயணம்

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி இவை தஷிணாயனம்


இளவேனில் = சித்திரை, வைகாசி
முதுவேனில் = ஆனி, ஆடி
கார் = ஆவணி, புரட்டாசி
கூதிர் = ஐப்பசி, கார்த்திகை
முன்பனி = மார்கழி, தை
பின்பனி = மாசி, பங்குனி


நன்கு கவனியுங்கள் பின்பனிக் காலத்தில் ஆரம்பிக்கிறது உத்தராயணம். நமது விடியலும் அப்படித்தான் குளிராகவே இருக்கிறது...

அதன் பின் வருவது கோடை,, அதாவது மதியம்...இள்வேனில் எனலாம்

அதன் பின்வருவது முதுவேனில் அதாவது மாலை.. முதுவேனிலின் இறுதியில் மழை பெய்யும். அதே போல் பகல் முழுதும் வெயிலடித்து மழை மாலையின் இறுதியில் வரும்..

இதன்பின் தஷிணாயனம் ஆரம்பமாகிறது. அதாவது இரவு ஆரம்பமாகிறது..

முன்னிரவு என்பது மழைக்காலத்திற்கு சரியாகிறது

நள்ளிரவு என்பது முன்பனிக் காலமாகவும்

விடியல் என்பது பின்பனிக் காலமாகவும் இருக்கிறது.

அதாவது ஒரு நாளைப் பிரித்த விதத்திலும் ஒரு ஆண்டைப் பிரித்த விதத்திலும் ஒற்றுமை இருக்கிறது..

இப்பொழுது இதையே மனித் ஆயுளுக்குப் பார்ப்போம்.

முதலில் படத்தை நன்கு பார்த்து விடவும்

turtle.jpg


மனிதன் பிறக்கும் பொழுது அவனுக்கு மிகுந்த பாதுகாப்பு தேவைப்படுகிறது. போர்வைக்குள் பதுங்கும் விடியற்காலம் போல.

முதல் 2 மணிநேரம் போல அதாவது தை மாதக் குளிருக்கு போர்த்துதல் போல முதல் 10 வருடங்கள் குழந்தையாக பொத்திப் பொத்தி வளர்க்கப்படுகிறான். காலை 6 லிருந்து 8

அடுத்த இரண்டு மணிநேரம் போல அதாவது காலையில் பணிகள் ஆரம்பம் செய்வதைப் போல, அடுத்த 10 வருடம் மாசி மாதம் வசந்தத்தை அனுபவிக்கிறான். மலர்கிறான்..8 லிருந்து 10 வயது 20 வரை

அடுத்து பங்குனி வெயில் ஆரம்பிக்கும் காலம். அதாவது 10 மணி முதல் 12 மணிவரை... இந்தப் பத்துவருடங்கள் கல்யாணம் ஆகி சூடு ஏற ஆரம்பித்து விட்டது. 20 லிருந்து 30 வரை

அடுத்து சித்திரை மாதம், அதாவது 12 மணி முதல் 2 மணி வரை அதாவது 30 லிருந்து 40 வயது வரை.. கடுமையாக உழைக்க வேண்டிய காலம். வெயில் ஏறுவதைப் போல பொறுப்புகளும் கூடி வியர்த்து விடுகிறது.. கத்திரி வெய்யில் மண்டையைப் பிளக்கும் காலம்.

அடுத்து வைகாசி கத்திரி வெய்யில் உக்கிரம் தாண்டி மழை ஆரம்பிக்கும் காலம். அதாவது மகன் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலம்... 40 லிருந்து 50 வரஒ அதாவது 2 லிருந்து 4 மணி வரை.. வெயில் குறைய ஆரம்பிக்கிறது..

அடுத்து ஆனி மாதம்.. மழைக்காலம் 4 லிருந்து 6 மணிவரை நமக்கு. நமது மகன் சம்பாதிக்கிறான். பணம் மழையாய் கொட்டுகிறது...வயது 50லிருந்து 60 வரை.. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறோம்

இது முடிந்து இரவு ஆரம்பமாகிறது. தட்சிணாயனம் ஆரம்பமாகிறது.. அதாவது நமது இரண்டாம் அறுபது வருட சுழற்சி ஆரம்பம்..

60 லிருந்து 70 வரை ஆடிமாதம் போல.. ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். அது மாதிரி நல்லவைகளை மனதில் விதைத்துக் கொள்ள வேண்டிய காலம். இரவு என்பது நான் உறங்க வேண்டிய நேரம். அதாவது இவ்வளவு காலம் இருந்த நான் என்ற அகந்தை உறங்க வேண்டிய காலம்.

70 லிருந்து 80 வரை ஆவணி மாதம் போல.. ஆடியும் ஆவணியும் தென்மேற்கு பருவக்காற்று காலம், விதைத்து பயிர்வளர்ப்பது போல ஆன்மீகம் நம்மில் விதைக்கப்பட்டு வளரவேண்டிய காலம். மாலை 6 லிருந்து 10 வரை தூங்கத் தயாராகி விடுகிறோம் அல்லவா

80ல் இருந்து தொண்ணூறு வரை, தொண்ணூறிலிருந்து 100 வரை இவை இரண்டும் அடை மழைக்காலம். நள்ளிரவு 10 லிருந்து 12, 12 ல் இருந்து 2 வரையிலான காலம். அகந்தை அழிந்து நம்மை மறந்து அடை மழையாய் உலகிற்கும் அன்பும் நல்வழியும் அளவான அறிவுரைகளாய் தரும் காலம்.

100 லிருந்து 110, 110 ல் இருந்து 120 இரண்டும் விடியற்காலம். கார்த்திகையும் மார்கழியும் இறைவனின் மாதங்களாக கருதப்படுகின்றன்..

மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன். விடியற் காலம் 4-6 ப்ரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. இது ஞான ஒளி பிரகாசிக்க பரம ஞானம் பெறும் காலமாகும்

அதாவது நாள், வருடம், மனித ஆயுள் மூன்றிற்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பது நமக்கு இன்றுதான் புரிகிறது..

ஒரு முழு நாள், ஒரு முழு வருடம் ஒரு முழு வாழ்க்கை என்ன என்பதும் விளங்குகிறது..

இத்தனையும் இங்கேதான் இருந்தது நமக்குத் தெரியாமல்..

இதை சரியாக வடிவமைத்து, ஒரு கட்டுரையாக்கி தர முடியுமா ஆதவா?









பருவ காலங்கள் ஆறு
 
Last edited:
இதைச் செய்யா விட்டால் ஒன்றும் பெரிய தவறு இல்லை, நாம் செய்த பாவங்களை எண்ணி வருந்தி புதுவாழ்வை தொடங்கா விட்டாலும்

ஆனால் உடன் வாழ்ந்து நம்மைத் தாங்கிய மனைவியின் தியாகங்களை எண்ணிப் பார்க்கவாவது அறுபதாம் கல்யாணம் செய்யலாம்.


நூத்துக்கு நூறு உண்மை. அறுபது வயசுக்கப்புறம்தான்....நிதானமா ஒவ்வொண்ணா அசைபோட்டு பாக்கத்தோணும். அப்பதான் நாம மத்தவங்களுக்காக என்ன செஞ்சிருக்கோம்....மத்தவங்க நமக்காக என்ன செஞ்சிருக்காங்க....இதெல்லாம் தெரியும்.

எல்லாருக்கும் இருக்குற ஒரு வருத்தம் என்னன்னா.....என்னடா இது வாழ்க்கையில கல்யாணத்தன்னைக்கு மட்டும்தான் ஒரு வி.ஐ.பியா இருக்கோம்....அதுக்கப்புறம் யாரும் கண்டுக்கவே மாட்டங்கறாங்களேன்னு. அந்த வருத்தத்தைப் போக்கறதுக்காகவாவது அறுபதாம் கல்யாணம் உதவியா இருக்கும்.

இப்ப இருக்கிற சமூக மற்றும் பெற்றோர் பிள்ளைகளுக்கான உறவு இருக்கும் நிலையை வைத்து பார்த்தா.....அறுபதாம் கல்யாணத்தைக் கூட ஏதாவது ஏஜென்ஸிக்கிட்ட பணம் கொடுத்துதான் செஞ்சிக்கனும்.

அரைட்டைன்னாலும் இதான் அர்த்தமுள்ள அரட்டை. தாமரை பட்டையைக் கெளப்புங்க....
 
அதுக்கும் ஒரு சேவிங்க்ஸ் இன்சூரன்ஸ் பிளான் போட்டு வங்கிகள் காசு பண்ணும் சிவா.ஜி
 
ஆமா...இப்பவே...சஷ்டியப்தா ப்ளான் என்று எல்.ஐ.சி ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவாங்க....
 
அன்பு தாமரை.

வித்தியாசமான சிந்தனை உங்களுடைய தாயாதிச் சொத்து. மிக மிக வினயமான உங்கள் அரட்டைப் பகுதி அனைவருக்கும் பயனுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உங்களுடைய தொகுப்புக்கள் அகமுக ஆழ்நோக்குச் சிந்தனையை உள்ளடக்கியுள்ளதால் அதன் தொடர்புடைய என் கருத்துக்களை முன்வைத்து ஒரு நெடிய பதிலை உருவாக்கி வருகிறேன். அதைத் தங்களைப் போலவே சிறு சிறு பகுதிகளாக தருவதற்கு தங்கள் அனுமதியைக் கோருகிறேன். என் சிற்றவிற்கு இதுகாலம் நான் கேட்ட, படித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இதன் நோக்கமே அன்றி என் அறிவைப் பறை சாற்றிக் கொள்வதற்கான களமாக இதை மாற்றிக் கொள்ளமாட்டேன் என்ற உறுதியோடு தொடர்கிறேன்.

சத்திய வாழ்வுக்கான மனித எல்லைகளை வரையறுக்கும் பல விஷயங்களுக்கும் அடிப்படை இந்த அறுபது ஆண்டு என்ற காலக் கணக்குதான் . ஆறு என்ற எண்ணிற்கு உள்ள மகத்துவங்கள் எண்ணிலடங்கா. நமது பிண்ட ரகசியங்கள் அனைத்திற்கும் இந்த ஆறு படைத்தத்துவம்தான் மூலம். இதை அமைத்தது யார்? கண்டுபிடித்தது யார்- இதன் தேவைதான் என்ன

இன்று அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடி நமது தமிழ் மொழியின் இறையிலார்கள் உருவாக்கித்தந்த இந்த ஆறு படைத்தத்துவத்தால் என்றால் மிகையில்ல. மிக மிக நுண்ணிய பேரறிவாளர்களால் ஆராயப்பட்டதுதான் நமது பிண்டத் தத்துவம். ஜலத்தினில் அக்னி உருவாய்த் தோன்றிய இப்பிண்டமனைத்திற்கும் ஆறுதான் மூலம். இதை முதலில் விவரிக்க உள்ளேன்.

கான்வாதாக்கள் என்ற ஒரு சித்தாந்தம் தமிழ் மொழிக்கே உண்டானது. அதாவது மனிதனுடைய மறைந்து நிற்கும் ஆறாம் அறிவின் ஆழத்தை உணர்ந்து அதை அனைவரும் உணரும் ஒரு பெருநோக்கோடு சித்தர் பெருமக்கள் கண்டுபிடித்த ஒரு நெறி வழிமுறை. அன்பின் மகத்துவத்தை அனைவரும் உணர நமது தமிழ்ப் பெரியோர்கள் கண்டு பிடித்த ஒரு செயல் முறை விளக்க நெறிகளை உள்ளடக்கியது இந்த கான்வாதாக்கள். இதை இன்னும் விரிவாக அடுத்தடுத்து விவரிக்க உள்ளேன்.

அதாவது ஒருவரை கட்டி போட உபயோகிக்கும் யோக தந்திரங்களை பதினெட்டு வகையாகப் பிரித்து ஒவ்வொன்றினும் மந்திர வசியம் தந்திரம் போன்ற நுணுக்க மான மூன்று அறு பிரி தத்துவங்களாக மேலும் பகுத்து உலகம் உள்ளளவும் அழியாது cosmic energy அதாவது வெப்ப நிலையும் குளிர் நிலையும் மாறாத கண்ணிற்குத் தெரியாத ஒரு மெகா குளிர்சாதனப் பெட்டியாக இப் பூமண்டலத்தில் உலாவ விட்டுள்ளார்கள் என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு அழியாப் பெரு நிலை என்ற ஒரு புதிய செய்தி.

முதலில் காலக் கணக்காக இன்று கையாளப்படும் வினாடி, நிமிடம், மணித்துளி போன்ற அளவுகோல் கணக்கிற்கு எது அடிப்படை?

வினாடி நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம் இவையனைத்தும் அடிப்படையற்றவை. மாறுதலுக்கு உட்பட்டவை. 365 நாட்கள் ஒரு வருடம் என்பதே அபத்தத்தின் உச்சம். இதை மேலும் விரிவாகக் காண்போம்.

நாழிகை என்ற ஒன்று மெய்யுடன் தொடர்புடையது. அதன் காலக் கணக்கேஎன்றும் மாறாதது, அழியாதது. நாழிகையின் அமைப்பை விவரிக்க உள்ளேன்.

மேலும்

அறுபது என்றால் என்ன ?

அனைவரின் சிந்தனைக்குகந்த வினாவோடு மீண்டும் தொடர்வேன்.
 
Back
Top