என் வானிலே இரண்டு வெண்ணிலா!!! - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க

சிவாஜி அண்ணா, அடுத்த டிரிப் வரும்போது இம்மமலைக்கு அனிருத்துட போலாமா?

அது என்ன அழைப்பு அவருக்கு மட்டும் ....நாங்களும் வருவோம் .... பலிக்கு ஆடுகள் தயார் அண்ணா .... :D :D :D
 
நள்ளிரவுச் சூரிய கிரகணம்..

ஏண்ணா, இவ்வளவு லேட்டாச் சொல்றீங்க என்று கேட்காமல் படிங்க.

இதெப்படி? சூரிய கிரகணம் பகலில் அல்லவா வரும் என்று கேட்பவர்களுக்கு..

வடதுருவத்தில் நம்ம கோடைக் காலத்தில் சூரியன் மறையவே மறையாது அல்லவா? நார்வே நாட்டைக் கூட "நள்ளிரவுச் சூரியன் நாடு" என்போமே ஞாபகம் இருக்கா?

அங்கதான் இந்த நள்ளிரவுச் சூரிய கிரகணம் இன்னும் சில மணி நேரங்களில் தெரியப் போகுது.

வடக்குச் சீனா, மற்றும் சைபீரியா பகுதிகளில் ஜூன் 2 ஆம் தேதி காலையில் ஆரம்பிக்கும் இந்தக் கிரஹணம், மேற்காக நகர்ந்து சர்வதேசத் தேதிக் கோட்டைத் தாண்டி மேற்காக நகர்ந்து அலாஸ்கா, கனடா பகுதிகளைக் க்டந்து ஸ்காண்டிநேவியா, இரஷ்யா பகுதிகளில் நள்ளிரவில் சூரிய கிரஹணம் தெரியும்.

அடுத்து என்னான்னா

ஜூன் 15 ஆம் தேதி.

ஆமாம் ஜூன் 15 ஆம் தேதி இந்தியாவில் முழுச் சந்திர கிரஹணம், மேகராஜன் மோகராஜனாக வான்மகள் மீது பரவிப் பராமல் இருந்தால் காணக் கிடைக்கும்.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=425883&postcount=24
 
இன்று இரவு இந்தியாவில் பூர்ண சந்திர கிரஹணம் தெரியும்.

TLE2004-139w.JPG

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=425883&postcount=24

பதினைந்தாம் தேதி 11:45 க்கு கிரஹணம் தொடங்கி, 1:40 மணிக்கு பூரண கிரஹணம் தெரியும். அதிகாலை 3:40 க்கு கிரஹணம் முடியும்.

இந்த சந்திரகிரஹணத்தைப் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

[media]http://eclipse.gsfc.nasa.gov/LEplot/LEplot2001/LE2011Jun15T.pdf[/media]
 
Last edited:
அண்ணே... இன்றா, 15 அன்று இரவா? சரியா சொல்லுங்க.. ஏன்னா, அலாரம் வைக்கணும்!! :)
 
இன்னிக்கு இன்றிரவு என்று சொன்னால் சரியாக இருக்கும். ஹி ஹி ஹி 15 ஆம் தேதி இரவு என்று சொன்னாலும் சரியா இருக்கும்.

இன்னொரு இரகசியம் சொல்றேன் கேளுங்க. நாளைக்கு அண்ணியைப் பொண்ணு பார்த்த நாளு.. :redface::redface::redface: ஒரு வேளை அந்த நிலாவில் வெட்கத்தில் சிவந்த முகம் தெரியுதான்னு பார்க்கோணும்.

அப்புறம் இன்னொரு விஷேசம். செவ்வாய் கிரகத்தை மார்ஸ் ஆர்பிடர் என்ற செயற்கை கோள் எடுத்த படங்கள் தற்போது உலவுகின்றன. அதில் புகழ்பெற்ற ஒரு படம் இது...

காந்தி உருவம் போல செவ்வாய் கிரகம்

gandhisface_244x183.jpg

ரோம் : செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சிக்காக ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கடந்த 2003&ம் ஆண்டு அனுப்பியது. 2 நிலைகளாக இது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ‘மார்ஸ் ஆர்பிட்டர்’ என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றிவருகிறது. ‘பீகிள்2’ என்ற தானியங்கி வாகனம், செவ்வாய் கிரகத்தில் இறங்கி ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக அது தரையிறங்காததால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது ஆர்பிட்டர் 2012 ம் ஆண்டு டிசம்பர் வரை சிறப்பாக இயங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாயை பல்வேறு கோணங்களில் அது படமெடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த போட்டோக்களை இத்தாலியை சேர்ந்த வானியல் ஆர்வலர் மாட்யூ லேனியோ என்பவர் ஆய்வு செய்தார். செவ்வாய் கிரகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி, மகாத்மா காந்தியின் உருவம் போலவே இருக்கிறது. மொட்டை தலை, பெரிய காது, அடர்ந்த மீசை, பொக்கை வாய் சிரிப்பு என அச்சு அசலாக காந்தி போலவே இருக்கிறது அந்த இடம் என்று அவர் கூறியுள்ளார்.

தகவல் வெளியிடப்பட்ட இடங்கள்

http://www.cbsnews.com/stories/2011/06/14/scitech/main20071013.shtml

http://www.dinakaran.com/worlddetail.aspx?id=38618&id1=7
 
நானும் தினகரனில் இந்த செய்தியைப் படித்தேன். ஆச்சரியமாக இருக்கிறது.
 
இன்னிக்கு இன்றிரவு என்று சொன்னால் சரியாக இருக்கும். ஹி ஹி ஹி 15 ஆம் தேதி இரவு என்று சொன்னாலும் சரியா இருக்கும்.

இன்னொரு இரகசியம் சொல்றேன் கேளுங்க. நாளைக்கு அண்ணியைப் பொண்ணு பார்த்த நாளு.. :redface::redface::redface: ஒரு வேளை அந்த நிலாவில் வெட்கத்தில் சிவந்த முகம் தெரியுதான்னு பார்க்கோணும்.

அண்ணி வெட்கத்தில் முகம் சிவந்தது அதுதான் கடைசி தடவைன்னு கேள்வி பட்டேன் ............ உண்மையா அண்ணா ...... :fragend005:
 
அண்ணி வெட்கத்தில் முகம் சிவந்தது அதுதான் கடைசி தடவைன்னு கேள்வி பட்டேன் ............ உண்மையா அண்ணா ...... :fragend005:

உங்களுக்கு தாமரைகிட்டேயிருந்து கூடியவிரைவில் ஆப்பு இருக்குன்னு இதிலிருந்து தெரியுது.
 
இதுக்கு பேர்தான் சொந்த செலவில் சூன்யம் :lachen001::lachen001:
 
:icon_35:
உங்களுக்கு தாமரைகிட்டேயிருந்து கூடியவிரைவில் ஆப்பு இருக்குன்னு இதிலிருந்து தெரியுது.

அலை பேசியில் பரிமாறிக்கொண்ட தகவல்தான் அண்ணா ... எதுவானால் என்ன .... பூச்செண்டுடன் வரவேற்ப்போம்.​
 
ஆச்சர்யமான தகவல் ...
ரவி said:
அண்ணி வெட்கத்தில் முகம் சிவந்தது அதுதான் கடைசி தடவைன்னு கேள்வி பட்டேன் ............ உண்மையா அண்ணா ...... :fragend005:

:music-smiley-019::music-smiley-019::music-smiley-019:

ஆரேன் said:
உங்களுக்கு தாமரைகிட்டேயிருந்து கூடியவிரைவில் ஆப்பு இருக்குன்னு இதிலிருந்து தெரியுது.
 
காலை வரை கண்ணில் படவில்லை .....

அட இரவு பதினோரு மணிவரை வெட்கம் இல்லாமல் உலவி வந்தவளுக்கு அப்படி என்ன வெட்கமோ .... காலை வரை கண்ணில் படவில்லை ..... மேகராஜனுடன் அப்படி என்ன லீலையோ ..... இரவு முழுதும் அரை தூக்கத்தில் வானத்தை பார்த்து கிடந்ததுதான் மிச்சம் .... :sprachlos020:​

17.jpg
 
நிலவை விட ஒளிமயமான வால் நட்சத்திரம்..

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதக் கடைசி வாக்கில் வானில் ராட்சத வால் நட்சத்திரம் தெரியப் போவதாக வானவியல் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இருட்டிய பின்னர் மேற்கு வானில் இந்த வால் நட்சத்திரம் iமிகுந்த பிரகாசத்துடன் தெரியும் என்கிறார்கள். இதன் ஒளி பௌர்ணமி நிலவை விட 10 மடங்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது பகலிலும் மங்கலாகத் தெரியும் என்று கூறப்படுகிறது.

இந்த வால நட்சத்திரம் இப்போது மிகத் தொலைவில் வியாழன் கிரகத்துக்கு அப்பால் உள்ள்து. .ரஷியாவைச் சேர்ந்த விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக் ஆகிய இருவரும் செப்டம்பர் மாதம் இதை சக்திமிக்க தொலைனோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வால் நட்சத்திரத்துக்கு C/2012 S 1 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ISON என்ற பெயரும் உண்டு. மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே இது சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே சென்று விடும்.

இது மிகுந்த பிரகாசத்துடன் தெரியலாம் என்று சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. இது அடுத்த ஆண்டு நவம்பர் வாக்கில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் போது அதற்கும் சூரியனுக்கும் மிகக் குறைவான தூரமே -- 11 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமே இருக்கும். இதன் காரணமாக ஐஸ் துணுக்குகள், தூசு, வாயு துணுக்குகள் வடிவில் நிறையப் பொருட்களை அது இழக்கும். ஆகவே அது பெரிய நீண்ட வாலைப் பெற்றதாக இருக்கும். ஒப்பு நோக்குகையில் இது பூமிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் .

அடுத்த ஆண்டு தலைகாட்ட இருக்கும் வால் நட்சத்திரம் பற்றி வால நட்சத்திர நிபுணர் ஹான் போர்ட்டில் கூறுகையில் ஒரு வேளை இது 1680 ஆம் ஆண்டில் தலைகாட்டிய அதே வால் நட்சத்திரமாகவும் இருக்கலாம் என்றார்.

வேறு சில நிபுணர்கள் அடுத்த ஆண்டு வால் நட்சத்திரம் பற்றிக் குறிப்பிடுகையில் அது பற்றிய பெரிய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் போய் முடிவதற்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். வானில் பெரிதாக எடுப்பாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் மிகச் சிறியதாக ஒளி மங்கியதாகத் தலைகாட்டிச் சென்றுள்ளன

கண்டுபிடிக்கப்பட்ட நாள் : 21 September 2012
கண்டு பிடித்தவர் : விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக்
Orbit_comet_2012_S1_ISON.png

இது ஊர்ட் கிளௌட் எனப்படும் மேகக்கூட்டத்தில் இருந்து வரும் ஒன்றாக இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. (இதுக்குத்தான் நான் 2012 நிகழ்ச்சி செய்யலைன்னு சொன்னேன் ஆதி.)

இது 2013, செப்டெம்பர் 28 ஆம் தேதி சூரியனுக்கு மிக அருகில் ( 18 இலட்சம் கிலோமீட்டர் ) செல்லும். இது சூரியனின் மையத்திலிருந்து. சூரியனின் பரப்பிலிருந்து எனப்பார்த்தால் 11 இலட்சம் கிலோமீட்டர்தான். டிசம்பர் 26, 2013 அன்று பூமியிலிருந்து ஆற்கோடியே முப்பது இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் செல்லும் என்று கணித்திருக்கிறார்கள். அடுத்த வருடம் அக்டோபருக்கு மேல் இது வெறும் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.

சில விஷயங்கள் இன்னும் தெளிவாகவில்லை. 1, இதன் நிறை, அளவு 2. இதன் சுற்றுப்பாதை செப்டம்பரிலிருந்து இன்று வரை இதன் பாதையை கவனித்ததால் யூகித்தது. 3. இது சூரியனுக்கு மிக அருகில் சென்று பின்பு திரும்ப வரும் பாதையில்தான் பூமிக்கு அருகில் வரும். சூரியனின் ஈர்ப்பு விசை உண்டாக்கும் பாதிப்பு என்ன என்பது தெரியாது, இதுவும் ஷூ மேக்கர் போல உடைந்து போய் சூரியனில் விழுந்து விடலாம்.

இதைப் பற்றித் தெளிவாக அறிந்து பின்னர் பகிர்கிறேன்
 
Attachments

  • Orbit_comet_2012_S1_ISON.jpg
    Orbit_comet_2012_S1_ISON.jpg
    19.3 KB · Views: 66
Last edited:
அரிய செய்தியை அறிவித்துள்ளீர்கள் . பாராட்டு . அதைப் பார்க்க நான் வாழ்வேன் என நம்புகிறேன் . மேற்கொண்டு தகவல் தாருங்கள் .
 
அண்ணா, நிலவைவிட 10 மடங்கு பிரகாசம் என்றால் அது பூமிக்கு மிக அருகில் வருமா ? அத*ன் வால் பூமியை ஒரு தட்டு தட்ட எதவும் வாய்ப்பு இருக்கா ? எந்த தீங்கு விளைவிக்காத தண்ணி பாம்பு மாதிரியா ?
 
அரிய செய்தியை அறிவித்துள்ளீர்கள் . பாராட்டு . அதைப் பார்க்க நான் வாழ்வேன் என நம்புகிறேன் . மேற்கொண்டு தகவல் தாருங்கள் .

கண்டிப்பாக, நாம் இருவரும் சென்னையின் கடற்கரையில் இருந்து இதை ஒர் பெரிய தொலை நோக்கியின் மூலம் அங்குல அங்குலமாக ரசிக்கலாம்..
 
அண்ணா, நிலவைவிட 10 மடங்கு பிரகாசம் என்றால் அது பூமிக்கு மிக அருகில் வருமா ? அத*ன் வால் பூமியை ஒரு தட்டு தட்ட எதவும் வாய்ப்பு இருக்கா ? எந்த தீங்கு விளைவிக்காத தண்ணி பாம்பு மாதிரியா ?

நிலவை விட பிரஹாசம் என்பது கவனம் ஈர்க்கும் ஒரு விஷயம்தான் ஆதி. சந்திரன் பூமியிலிருந்து 3,84,4903 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த வால் பையனோ ஆறரை கோடி கிலோ மீட்டர் தூரத்தில் போகப் போகிறான். அதுவுமின்றி இவன் பூமியை விட சூரியனுக்கு மிக மிக அருகில் கடக்கப் போவதால் பூமிக்கு அருகில் வரும் வரை இருக்குமா என்பது முதல் கேள்வி. ஏனென்றால் சூரியனைச் சுற்றிக் கொண்டு வரும்பொழுதுதான் பூமிக்கு அருகில் வரும். சூரியனைக் கடக்கும் போதே இது உடைய வாய்ப்பு உண்டு. இதன் பிரகாசத்திற்கு காரனம் இதில் இருக்கப் போகும் பனிதான். அதில்லாமல் அதன் தூசிப் படலம்.

வால் நட்சத்திரம் பூமி சுற்றும் பாதையைக் கடக்கவில்லை. அதன் சுற்றுதளமே வேறு. அதனால் அது விட்டுச் செல்லும் தூசு பூமிக்கு வர வாய்ப்பில்லை. இதை நான் முன்பதிவில் காட்டியுள்ள வால் நட்சத்திரப் பாதையை பல கோணங்களில் பார்ப்பதன் மூலம் அறியலாம்.

வழக்கமாக டெம்பில் டட்டில் காட்டும் வாணவேடிக்கை இதில் இருக்காது. காரணம் டெம்பிள் டட்டில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கிறது. அதனால்தான் அது பூமியை உரச வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறோம்.

இது தண்ணி பாம்பு மாதிரி அல்ல கானல் நீர் மாதிரி. கண்ணுக்குத் தெரியும். அவ்வளவுதான் என்று இதை வரை கிடைத்த தகவல்களைக் கொண்டு யூகிக்கிறேன்.
 
அதுவுமின்றி இவன் பூமியை விட சூரியனுக்கு மிக மிக அருகில் கடக்கப் போவதால் பூமிக்கு அருகில் வரும் வரை இருக்குமா என்பது முதல் கேள்வி. ஏனென்றால் சூரியனைச் சுற்றிக் கொண்டு வரும்பொழுதுதான் பூமிக்கு அருகில் வரும். சூரியனைக் கடக்கும் போதே இது உடைய வாய்ப்பு உண்டு.
.

எதிர்பார்த்த மாதிரியே இந்த வால் நட்சத்திரம் சூரியனைக் கடக்க இயலாமல் சிதறிவிட்டது.. அடுத்த வால் பையன் வரும் போது பாக்கலாம்
 
Back
Top