என் வானிலே இரண்டு வெண்ணிலா!!! - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க

பூமியின் பொசிஸன், சூரியன், அந்த நட்சத்திரம் கொண்டு கண்டு பிடிக்கலாம் இல்லையா?

பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ளே தொலைவு (ஆண்டின் எந்த நாளாக இருந்தாலும்) நமக்குத் தெரியும். ஆக, பூமிக்கும் அந்த நட்சத்திரத்துக்கும் உள்ள கோணம் வைத்து சூரியனுக்கும் அந்த நட்சத்திரத்துக்கும் உள்ள கோணம் கண்டு பிடிக்கலாம். இது ட்டான் கோணம். மற்றும் சூரிய - பூமி தூரம் இது அடுத்துள்ள பக்கம். வைத்து கணக்கிடலாம் இல்லையா?



முடியாது.. திரிகோணமிதி விதிகளின்படி,

இரண்டு பக்கங்கள் மற்றும் ஒரு கோணம்..

அல்லது

இரண்டு கோணங்கள் ஒரு பக்கம் இருந்தால்.. மற்றவற்றைக் கணக்கிடலாம்.

நீங்க சொன்னதில் ஒரு பக்கம் - சூரியன் பூமி தூரம் தெரியும்..
ஒரு கோணம் - பூமி - நட்சத்திரம் தெரியும்.

ஆனால் சூரியன் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கும் உள்ள கோணம் சரியாகத் தெரியாது. அதற்கு நட்சத்திரத்தின் தூரம் தெரியணும்..



இன்னொரு சந்தேகம்... ஜனவரி மாதம் நாம் ஒரு நட்சத்திரம் கிழக்கே (எதோ ஒரு திசையில்) பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 5, 6 , 7 மாதம் கழித்து பூமி சூரியனின் அந்த பக்கம் வந்து விடும் போது... நான் ஜனவரியில் பார்த்த அதே நட்சத்திரத்தை பார்க்க முடியுமா?



6 மாதங்களுக்கு மேல் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டுமானால் அது வடக்கு அல்லது தெற்கு திசையில் தெரிய வேண்டும். கிழக்கு - மேற்கு திசையில் அதிகபட்சம் 6 மாதம்தான்.

ஆனால் செயற்கைக் கோள்கள் மூலம் அதற்கு மேலும் பார்க்கலாம்.

அப்புறம்... பூமியின் துருவ மாற்றம் பற்றி கேள்வி பட்டீர்களா? அதாவது மின் காந்தக் கொடுகளின் திசை மாற்றம். வடக்கில் இருந்து தெற்கு பக்கம் மாறுவதற்கான காலம் வந்து விட்டது. எப்பொது வேண்டு மானாலும் மாறலாம். அப்படி மாறும் காலத்தில் (ஒரு வாரமோ.. ஒரு மாதமோ) சூரியனிடமிருந்து வரும் கதிர் வீச்சை தடுக்க பூமியின் காந்தப் புலம் இருக்காது. இதனால் பூமியில் வாழும் உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் மற்றும் கடல் அழிய வாய்ப்பு உண்டு. இது பற்றி உங்கள் கருத்து? இப்போது கூட அரோரா (துருவ ஒளிப் பிரகாசம்) வந்ததே...


இதனால் சில இடங்கள் அழியும் நேரத்தில் புதிய நிலப்பகுதிகள் தோன்றலாம். கண்டங்களின் பெயர்ச்சிகள் நடக்கலாம். ஆனால் ஸ்விட்ச் போட்டவுடன் பல்ப் எரிவதைப் போல ஒரு நாளில் வடதுருவம் தென்துருவம் ஆகி, பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றும் என்பது மிகைப்பட்ட கற்பனை.. அட்லாண்டிக் கடலின் அடியில் இருக்கும் கனிமப் படிவுகளின் அமைப்பைக் கொண்டு இந்த காந்தப் புலமாற்றம் நடப்பதை அளந்திருக்கிறார்கள்.

ஹோமோ எரக்டஸ் என்ற மனித இனங்களும் அதன் முன்னோர்களும் பல காந்தப் புல மாற்றங்களைத் தாண்டி வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் ஹோமோ சாபியன்ஸ் என்னும் அவர்களின் சகோதரர்களான நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. சொல்லப்போனால் காந்தப் புல மாற்றத்தினால் ஒரு பேரழிவு நிகழ்ந்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.
 
ஆனால் ஸ்விட்ச் போட்டவுடன் பல்ப் எரிவதைப் போல ஒரு நாளில் வடதுருவம் தென்துருவம் ஆகி, பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றும் என்பது மிகைப்பட்ட கற்பனை..சொல்லப்போனால் காந்தப் புல மாற்றத்தினால் ஒரு பேரழிவு நிகழ்ந்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.


அது தான் பிரச்சனையே... துருவ மாற்றம் உடனடியா நடக்காது. ஆக எவ்ளொ நாள் அது நடக்குமோ..அத்துனை நாள் பூமியை சுற்றி இருக்கும் காந்தப் புலமும் இருக்காது.

துருவ மாற்றத்தால், அத்தனை transformers-யும் செயல் இழக்கும். சுத்தமா மின் இணைப்பு இல்லாமல் மிகவும் கடினம். மின்சாரமே ஒரு மாதத்துக்கு இல்லை என்றால் என்னவாகும்? கணினி, குளிர் சாதனப் பெட்டி, பெட்ரோல் இல்லாமல் (சுத்தப் படுத்தும் தொழிற் சாலைக்கு மின்சாரம் வேண்டும்) உணவை சேமிக்க, சமைக்க முடியாதே!!! நகர் புறம் நாறி விடும் மீண்டும் அத்தனை transformers யும் சரி செய்வதற்குள்.

அடுத்து... துருவ மாற்றத்தால் உயிர் இணம் அழியும் என்பதை விட, அந்த இடைப்பட்ட சமயத்தில் சூரியப் புயல் அடிக்காமல் இருக்க வேண்டும். முன்னவர்கள் காலத்தில் அப்படி சூரியப் புயல் வந்திருக்காவிட்டால் அது அவர்களது அதிர்ஸ்டமாக இருக்கலாம். அதே அதிர்ஸ்டம் நமக்கும் இருக்குமா?

எனக்கு என்னமோ 2012 டிச 12 - ல் மாறப் போவுது... சூரியப் புயல் அடிக்கப் போவதென்றே தோன்றுகிறது.. இன்னையிலிருந்து நல்ல பிடிச்ச அயிட்டங்களா சாப்பிட வேண்டியது தான். தாமரை அண்ணா.. ஒரு பிளேட் குத்து பரோட்டா , முட்டை தோசை அப்படியே ஒரு மட்டன் பிரியானி நீங்க ஆர்டர் பண்ணும் போது எனக்கும் சேத்து ஆர்டர் பன்னிடுங்க.. உங்களுக்கு e-பணம் கொடுத்தர்ரேன்.
 
Last edited:
துருவ மாற்றத்தால், அத்தனை transformers-யும் செயல் இழக்கும். சுத்தமா மின் இணைப்பு இல்லாமல் மிகவும் கடினம். மின்சாரமே ஒரு மாதத்துக்கு இல்லை என்றால் என்னவாகும்? கணினி, குளிர் சாதனப் பெட்டி, பெட்ரோல் இல்லாமல் (சுத்தப் படுத்தும் தொழிற் சாலைக்கு மின்சாரம் வேண்டும்) உணவை சேமிக்க, சமைக்க முடியாதே!!! நகர் புறம் நாறி விடும் மீண்டும் அத்தனை transformers யும் சரி செய்வதற்குள்.

அடுத்து... துருவ மாற்றத்தால் உயிர் இணம் அழியும் என்பதை விட, அந்த இடைப்பட்ட சமயத்தில் சூரியப் புயல் அடிக்காமல் இருக்க வேண்டும். முன்னவர்கள் காலத்தில் அப்படி சூரியப் புயல் வந்திருக்காவிட்டால் அது அவர்களது அதிர்ஸ்டமாக இருக்கலாம். அதே அதிர்ஸ்டம் நமக்கும் இருக்குமா?

.

சூரியனின் காந்தப் புலத்திற்கும் பூமியின் காந்தப் புலத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் பூமியில் காந்தப்புலம் மாறணும்னா அது சூரியனால் தூண்டப்பட்டதாகத்தான் இருக்கும்.

அதனால் அந்தச் சமயத்தில் சூரியப் புயல்கள் உண்டாகாமலே இருக்கத்தான் அறிவியல் ரீதிப்படி வாய்ப்பிருக்கு..

அப்புறம் காந்தப் புலத்திற்குக் காரணமும் சொல்லி இருக்கேன். இரும்பு உட்கரு,. அதன் மேல் இருக்கு மேக்மா குழம்போ திரவ வடிவத்தில்.

இவற்றின் சுழற்சி வேகங்களில் சற்று வித்தியாசம் உண்டு. இதனால் ஏற்படும் உராய்வில் உண்டாகும் மின்சாரம் இரும்புக் கருவில் காந்தச் சக்தியை உண்டு செய்கிறது.

இதன் விளைவுகள் மேலோட்டில் உள்ள் இரும்புக் கனிமங்கள், காந்தத் தன்மை உள்ள பொருட்கள் இந்தக் காந்தப் புலத்திற்கேற்ப தம்மை அடுக்கிக் கொள்கின்றன. இதைத்தான் கடலின் அடியில் ஆராய்ந்து காந்தப் புல மாற்றங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே காந்தப் புல மாற்றம் ஏற்பட்டால் மிகப் பெரிய நில நடுக்கங்கள் ஏற்படும் என்பது பொய்.

அதனால் தின்னே தீர்த்திடாதீங்க!!!:icon_b::icon_b::icon_b:
 
Last edited:
வியாழனின் சந்திரனான ஐயொ-வில் இன்றும் எரிமலைகள் இருப்பதற்கு சுவாஸ்யமான காரணங்களாக இதைச் சொல்கிறார்கள். சந்திரன்கள் ஐயொ, ஐரோப்பா மற்றும் கனிமேட் இந்த மூன்றும் வியாழனைச் சுற்றி வரும் போது 4 வருடங்களுக்கு ஒரு முறை நேர் கோட்டில் வருகின்றன. இதனால் "சுற்றுப் பாதை ஒத்ததிர்வு" ஏற்படுகிறது (Orbital resonance). ஒத்ததிர்வுன்னா காதல் தொடங்கும் போது நமக்கு புடிச்ச பொண்ணை பாத்த உடனே நெஞ்சு தட தட ந்னு அதிரும் பாருங்க.. அதான் ஒத்ததிர்வு.

அதாவது அதிர்வெண்கள் ஒன்றாக இணையும் போது அலையின் வீச்சு (amplitude) அதிகரிக்கும்ன்னு நாம ஸ்கூல்லே படிச்சுருக்கோம்லே. இதனால்.. ஐயொவில் பொட்டு பொட்டு என்று ஒரு தட்டு அவ்வப்போது விழுந்து கொண்டே ஒருக்கும். இதனால் அதன் சுற்றுப் பாதை கூட வட்டத்திலிருந்து நீள் வட்ட வடிவமாகி விட்டது.அதே நேரத்தில் வியாழன் இந்த சந்தின்களை வட்ட வடிவில் சுற்ற முயற்சிக்கிறது. இதனால் ஒருவித "ஈர்ப்பு உராய்வு" (Gravitational Friction) ஏற்பட்டு, ஐயோவில் வெப்பம் அதிகரிகிறது.நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது இந்த சுற்றுப் பாதை ஒத்ததிர்வு. ஒருவர் பெங்களூரில். மற்றவர் சென்னையில். இந்த இருவரையும் இணைக்கும் நேர்கோட்டில் அவர்களது மற்ற நண்பர் எவரேனும் வந்தால்...மூவரும் ஒரு அதிர்வு அதிர்ந்தால் எப்படி இருக்கும்???

இரண்டாவது காரணம்... நீள் வட்டப் பாதைக் காரணமாக ஐயொ வியாழனை நெருங்கும் போது (பெரிஜி முனை) தன்னை நோக்கி வியாழனின் ஈர்க்கும் விசை அதிகரிக்கிறது. இதனால் ஐயொ இழுவடைகிறது.சுற்றுப்பாதையின் அடுத்த பக்கதிற்கு (அப்போஜி முனை)வரும் போது மீண்ரும் ஐயொ தன்னுடைய ஈர்ப்பு விசையால் கோள வடிவமாகிறது. இப்படி முட்டையாகி பந்தாகி முட்டையாகி பந்தாகி....உராய்வின் காரணமாய் வெப்பம் அதிகரிப்பதால் இன்னமும் அங்கே எரிமலைகள்.

கொசுறுத் தகவல்: இந்த சுற்றுப் பாதை ஒத்ததிர்வு தான் சனியைச் சுற்றி வரும் வளையங்களில் இடைவெளி ஏற்படக் கூடக் காரணம்.
 
தாமரை அண்ணா இந்த திரி தொடருமா? இன்னும் பல புதிய தகவல்களை தாருங்கள்
 
இப்போதையா சூடான தலைப்புச் செய்தி "சூப்பர் மூன்"

சூப்பர் மூன் என்றால் என்ன? அது எப்படின்னு ஏதோ தோராயமா எல்லோருக்கும் ஒரு குழப்பம் இருந்து கிட்டே இருக்கும். :lachen001::lachen001:

அதை மிக எளிதாகச் சொல்லணும் என்றால்..

ஒரு பௌர்ணமி அன்று பூமிக்கு மிக அருகில் நிலா வந்தால், நிலா 14% பெரியதாகவும், ஒளி இருப்பதாகவும் தெரியும். அதைத்தான் சூப்பர் மூன் என்கிறோம். அதிலும் நம்ம இந்த பௌர்ணமி சூப்பர் மூனுக்கு இன்னும் கொஞ்சம் விஷேசம் இருக்கு.

நம்ம நிலா இருக்கே அது பூமியைச் சுற்றிவர 27.3 நாட்கள் ஆகுது. எனவே 27.3 நாளைக்கு ஒரு முறை நிலா பூமிக்கு அருகில் வந்துபோகுது.

ஆனால் பூமி சூரியனைச் சுற்றி வருவதால் நமக்கு சந்திரன் பூமியைச் சுற்றி வர 29.5 நாட்கள் ஆவது போல தோற்றம் தெரிகிறது,

இதனால் எல்லா பௌர்ணமி அன்றும் நிலா பூமியின் அருகில் வருவதில்லை.

இதில் இன்னும் கொஞ்சம் ஆழமா போவோம்.

நிலா பூமியை நீள் வட்டப் பாதையில் சுத்தி வருது.

800px-Apogee_%28PSF%29.png


இதில் 1. நிலா பூமியில் இருந்து தொலைவில் உள்ளதைக் குறிக்கிறது, இதற்கு அபோஜி என்று பேர்.

2. நிலா பூமிக்கு அருகில் இருப்பதைக் குறிக்கிறது. இதற்குப் பெரிஜி என்று பெயர்.

சராசரி அபோஜியில் நிலவின் தூரம் 405,696 km. பெரிஜியில் நிலவின் தூரம் 384,399 கி.மீ

இங்க ஏன் சராசரின்னு சொல்றோம்? காரணம் சூரியன், புதன், வெள்ளி, செவ்வாய், குரு, சனி இப்படியாகப்பட்ட பெருங்கோள்களின் ஈர்ப்பு விசையைப் பொருத்து இந்த அபோஜி - பெரிஜி தூரங்கள் மாறும்.

வருஷத்திற்கு ஒன்றொ அல்லது இரண்டு மூன்று வருஷத்திற்கு ஒன்றோ சூப்பர் மூன்கள் வந்தாலும் அவை பெரிதாகப் பேசப்படுவதில்லை. இந்த முறை மார்ச் 19 ஆம் தேதி வந்த சூப்பர் மூனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 356,577 கி.மீ அதாவது சராசரியை விட 30,000 கிமீ தூரம் நெருக்கம்.

இந்த அபோஜி, பெரிஜியை இங்க கணக்கு செய்யலாம்


http://fourmilab.ch/earthview/pacalc.html

இதைப்பற்றி கொஞ்சம் கங்கணச் சூரிய கிரகணத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது சொல்லி இருக்கேன்.

பழைய மற்றும் எதிர்கால சூப்பர் மூன்கள்

* November 10, 1954
* November 20, 1972
* January 8, 1974
* February 26, 1975
* December 2, 1990
* January 19, 1992
* March 8, 1993
* January 10, 2005
* December 12, 2008
* January 30, 2010
* March 19, 2011[16]
* November 14, 2016
* January 2, 2018
* January 21, 2023
* November 25, 2034
* January 13, 2036

சூப்பர் மூனுக்கும் இயற்கை அழிவுகளுக்கும் தொடர்பு கொடுக்க விருபுபவர்கள் இந்தப் பட்டியலை ஆராய்ந்தால் கொஞ்சம் புண்ணியமுண்டு.

சரி 20 வருஷத்தில் இது மிகப் பெரிய சூப்பர் மூன் என்று சொல்கிறார்களே காரணம் என்ன? கீழே உள்ள கிரக நிலைகளைக் காணவும்.

Solar



சூரியன் மற்றும் புதன், வெள்ளி, செவ்வாய், குரு, யுரேனஸ், நெப்டியூன் போன்றவை நிலா இருக்கும் பக்கத்திற்கு எதிர்பக்கமாகவும், சனி மட்டுமே நிலா இருக்கும் பக்கத்திலும் இருப்பதைக் காண்பீர்கள். இதனால் நிலாவின் மீது ஒரு பக்கமான ஈர்ப்பு விசை அதிகரித்ததால் பூமிக்கு மிக அருகில் வந்தது நிலா...

அதுவே 2010 ஜனவர் 30 ஆம் தேதி கிரக நிலைகள்

Solar


அன்று செவ்வாய் நிலா இருக்கும் பக்கத்தில் இருந்தது.

இதனால் அன்று பெரிஜி யில் நிலா இருந்தாலும் இப்போது வந்த அளவிற்கு மிக அருகில் வரவில்லை.

இப்படியாக சூரியன் / பூமி / நிலா மட்டுமல்லாமல் மற்ற கிரகங்களும் இந்த சூப்பர் மூன் நிகழ்விற்கு உடந்தை.

சூப்பர் மூன் அன்று கடல் ஓதங்கள் உயரமாக இருக்கும். ஆனால் நில நடுக்கங்கள்?

நில நடுக்கங்களுக்கும் நிலாவிற்கும் தொடர்பு உண்டு. ஆனால் சூப்பர் மூன் மட்டுமே என்று பார்த்தால் இல்லை.

நில நடுக்கங்களுக்கு அடிப்படைக் காரணம்.. பூமியின் உள்ளமைப்பு..

திடக் கரு, திரவ மேக்மா அதில் மிதக்கும் திட டெக்டானிக் பிளேட்டுகள்

இப்படியாக அமைந்த பூமியின் மீது மாற்படும் ஈர்ப்புவிசைகள் செயலாற்றுவதால் டெக்டானிக் பிளேட்டுகள் நகர்கின்றன். இதை இன்கே சொல்லி இருக்கேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=425013#post425013

http://pubs.usgs.gov/gip/dynamic/dynamic.html#anchor19309449

இப்ப எல்லோரும் சூப்பர் மூனைப் பற்றி தெளிவாகி மத்த விஷயங்களில் குழம்பி இருப்பீங்க என்று தெளிவாக நம்புகிறேன்.
 
விளக்கத்துக்கு நன்றி தாமரை அவர்களே. கொஞ்சம் விளங்கியது போலவும் நிறைய விளங்காதது போலவும் இருக்கிறது. இன்னும் ஓரிரு முறைகள் படித்தால் தெளிவாகும் என்று நினைக்கிறேன். மிகவும் நன்றி.
 
என்ன விளங்கலை என்பதைக் கேள்விகளாய் கேட்டால் நன்றாக இருக்கும்
 
என்ன விளங்கலை என்பதைக் கேள்விகளாய் கேட்டால் நன்றாக இருக்கும்

கேள்வி கேக்கறதுக்கே இன்னொரு தடவை படிக்கணும். எழுதியிருப்பது புரியாமல் இல்லை. என் மூளைக்குள் ஏற்றுவதில்தான் சற்று சிரமம். (அறிவியல் ஆர்வம் இருக்கும் அளவுக்கு அதைப் புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது எனக்கு.):icon_p:
 
கேள்வி கேக்கறதுக்கே இன்னொரு தடவை படிக்கணும். எழுதியிருப்பது புரியாமல் இல்லை. என் மூளைக்குள் ஏற்றுவதில்தான் சற்று சிரமம். (அறிவியல் ஆர்வம் இருக்கும் அளவுக்கு அதைப் புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது எனக்கு.):icon_p:

உங்க அறிவியல் ஆர்வத்தை நீங்க நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கீங்க..

நான் தான் குழப்புவேன்.. அதாவது இங்கே நீங்க அதை என்று சொல்வது ஆர்வத்தையா? அறிவியலையா? என்பது மாதிரி.:icon_rollout::icon_rollout::icon_rollout:
 
புவியியல், வானவியல், உயிரியல் போன்றவற்றில் ஆர்வம் உண்டு.(பெளதிகம், வேதியியல் ஆகாது) சிலவற்றை எளிதாய் கிரகித்துக்கொள்ளும் மூளை, சிலவற்றைக் கிரகிப்பதில் சற்று நேரம் கூடுதலாய் எடுத்துக்கொள்கிறது. அதைத்தான் விளங்கவில்லை என்னும் வார்த்தையால் குறிப்பிடுகிறேன். (அதை என்பது எதை என்று ஆராயமுனைந்துவிடாதீர்கள், சொல்லவந்த விஷயத்தில் உண்மையிலேயே குழம்பிவிடுவேன்):)
 
Last edited:
மிகவும் அவசியமான அறிவியல் தகவல் அனைவரும் அறியும் வண்ணம் அவரவர் மனதில் பயத்தினை அகற்ற உதவும் வண்ணம் உள்ள பதிவு ...சரி தங்கள் பதிவு கூறும் தகவலுக்கு வருவோம் .. இந்த பதிவில் நீங்கள் தெளிவு படுத்தி உள்ளது என்ன ?
[COLOR=DarkRed][B]தாமரை[/B][/COLOR] said:
நில நடுக்கங்களுக்கும் நிலாவிற்கும் தொடர்பு உண்டு. ஆனால் சூப்பர் மூன் மட்டுமே என்று பார்த்தால் இல்லை.
இந்தவரிகளில் நீங்கள் கூறவந்தது என்ன?நிலவிற்கும் நிலநடுக்கத்திற்கும் தொடர்பு உண்டு என்று கூறிவிட்டு சூப்பர் மூன் மட்டுமே என்றுபார்த்தால் இல்லை என்று கூறியுள்ளீர்களே இதில் நிலவு என்பது வேறு மூன் என்பது வேறா ? எனது சந்தேகம் என்னவென்றால் ஒரு கோளானது தன்னைதானே சுற்றிவந்து மற்ற கோள்களையும் சுற்றி வருகிறது அவ்வாறு சுற்றிவரும் போது ஒருகோளானது மற்ற கோள்களின் அருகில் வரும் போது அந்த கோள்களின் ஈர்ப்பு விசையினால் அதன் அருகில் உள்ள கோள்களின் ஈர்ப்பு விசையானது பாதிக்கப்படும் அவ்வாறு பாதிக்கபடுமபோது ஏற்படும் விளைவுகள் எவ்வாறு இருக்கும் ?இது வெறும் கடல் கொந்தளிப்புடன் முடிந்துவிடுமா ?வேறு விளைவுகள் ஏதும் ஏற்படாதா? எதற்காக இந்த கேள்வியை வினவுகிறேன் என்றால் நமது பூமியின் மூலாதாரமே புவிஈர்ப்பு விசை மற்றும் காற்று புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் காற்று மாறுபாடுக்கும் புவிஈர்ப்பு விசையில் ஏற்படும் மற்றம் மூலம் ஏற்படும் காற்றின் மாறுபாடுக்கும் வேறுபாடு உண்டல்லவா ?இந்த மாறுப்படினால் ஏற்படும் விளக்கங்கள் நாம் தெளிவுற அறிந்தால் தான் இந்த பதிவின் சாராம்சம் மூலம் நமது சந்தேகங்கள் மீதான தெளிவும் நம்பிக்கையும் உண்டாகும் ....
 
மிகவும் அவசியமான அறிவியல் தகவல் அனைவரும் அறியும் வண்ணம் அவரவர் மனதில் பயத்தினை அகற்ற உதவும் வண்ணம் உள்ள பதிவு ...சரி தங்கள் பதிவு கூறும் தகவலுக்கு வருவோம் .. இந்த பதிவில் நீங்கள் தெளிவு படுத்தி உள்ளது என்ன ?இந்தவரிகளில் நீங்கள் கூறவந்தது என்ன?நிலவிற்கும் நிலநடுக்கத்திற்கும் தொடர்பு உண்டு என்று கூறிவிட்டு சூப்பர் மூன் மட்டுமே என்றுபார்த்தால் இல்லை என்று கூறியுள்ளீர்களே இதில் நிலவு என்பது வேறு மூன் என்பது வேறா ? எனது சந்தேகம் என்னவென்றால் ஒரு கோளானது தன்னைதானே சுற்றிவந்து மற்ற கோள்களையும் சுற்றி வருகிறது அவ்வாறு சுற்றிவரும் போது ஒருகோளானது மற்ற கோள்களின் அருகில் வரும் போது அந்த கோள்களின் ஈர்ப்பு விசையினால் அதன் அருகில் உள்ள கோள்களின் ஈர்ப்பு விசையானது பாதிக்கப்படும் அவ்வாறு பாதிக்கபடுமபோது ஏற்படும் விளைவுகள் எவ்வாறு இருக்கும் ?இது வெறும் கடல் கொந்தளிப்புடன் முடிந்துவிடுமா ?வேறு விளைவுகள் ஏதும் ஏற்படாதா? எதற்காக இந்த கேள்வியை வினவுகிறேன் என்றால் நமது பூமியின் மூலாதாரமே புவிஈர்ப்பு விசை மற்றும் காற்று புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் காற்று மாறுபாடுக்கும் புவிஈர்ப்பு விசையில் ஏற்படும் மற்றம் மூலம் ஏற்படும் காற்றின் மாறுபாடுக்கும் வேறுபாடு உண்டல்லவா ?இந்த மாறுப்படினால் ஏற்படும் விளக்கங்கள் நாம் தெளிவுற அறிந்தால் தான் இந்த பதிவின் சாராம்சம் மூலம் நமது சந்தேகங்கள் மீதான தெளிவும் நம்பிக்கையும் உண்டாகும் ....

இதற்கு முதலில் பூமியின் அமைப்பை முழுதாகப் புரிந்து கொள்ள வேண்டும்

Earth.layers.image.gif


500px-Earth-crust-cutaway-english.svg.png


இதில பார்த்தீங்கன்னா, அதிக அட்ர்த்திக் கொண்ட திட இரும்பு உட்கரு பூமியில் இருக்கிறது.

அதற்கு மேற்புறம் திரவ வடிவிலான மேக்மா எனப்படும் பாறைக் குழம்பு இருக்கிறது. அதற்கு மேர்புறம் இறுகிய மேலோடு எனப்படும் மேலோட்டுத் தகடுகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

இந்த மேலோடு ஒரே ஒரு உருவமாய் ஆரஞ்சு பழத்தோல் போல் பூமியை மூடிருந்தால் பிரச்சனை அதிகம் இல்லை. ஆனால் இது பல தட்டுகளாக உடைந்து இருக்கிறது.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒரு மிகப் பெரிய விண்கல் மோதலினால் பூமியிலிருந்து நிலா பிரிந்தபொழுது உண்டானதாக நம்பப்படுகிறது.

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணிநேரம் ஆகிறது என்கிறோம் அல்லவா. ஆனால் பூமியின் உட்கருவின் சுழற்சிவேகம் கொஞ்சமே கொஞ்சம் அதிகம்

Recent evidence has suggested that the inner core of Earth may rotate slightly faster than the rest of the planet. In August 2005 a team of geophysicists announced in the journal Science that, according to their estimates, Earth's inner core rotates approximately 0.3 to 0.5 degrees per year relative to the rotation of the surface.

எனவே பூமியின் உட்கருவுக்கும், மேலோட்டிற்கும் மத்தியில் உள்ள மேக்மா குழம்பு இந்த வேக வித்தியாசங்களினால் தொடர்ச்சியாக சுழல்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.

Fig32.gif


அதுவுமின்றி, உட்கருவின் வெப்பம் அழுத்தம் மற்றும் மேலோட்டின் கீழே உள்ள வெப்பநிலை இவற்றினால் மேக்மா குழம்பில் இந்தச் சுழற்சி இருந்துகொண்டே இருக்கிறது. உதாரணமாகத் தண்ணீர் கொதிக்கிற நிகழ்ச்சியைப் போல

Fig33.gif


இந்த மாதிரி ஒழுங்காச் சுத்திகிட்டிருக்கிற பூமியின் மேலொட்டின் மீது பலப் பல விசைகள் செயல்படுகின்றன. அவற்றில் சூரியன், நிலா மற்றும் கிரகங்களின் ஈர்ப்பு விசையும் உண்டு.

ஒவ்வொரு சுழற்சியும் ஒரு ஒழுங்கோடு இருக்கிறது. ஆனால் பல்வேறு சுழற்சிகளுக்கு மத்தியில் இருக்கும் வேறுபாடு காரணமாக பூமியின் சமநிலை இத்தனை வேறுபாடுகளின் காரணமாக சற்றே மாறுகிறது. அதாவது எந்தப் பக்கம் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கிறதோ அந்தப் பக்கத்தில் உண்டாகும் அழுத்தக் குறைவைச் சரி செய்ய மைய விலக்கு விசையின்படி பூமியின் மேக்மா அடர்த்தி அதிகரிக்கிறது.

மேலோடுகள் துண்டுகளாய் இருப்பதினால் இந்த மேக்மா மாற்றம் டெக்டானிக் பிளேட்டுகளை சற்றே நகர்த்துகின்றன. இதனால் டெக்டானிக் பிளேட்டௌகள் உண்டாகும் அழுத்தம் விடுவிக்கப்படும்பொழுது பூமி அதிர்ச்சி உண்டாகிறது.

நிலா மட்டுமே இருந்திருந்தால் இந்த அசைவு ஒரே மாதிரியாக இருந்திருக்கும் அதனால் அனைத்து பிளேட்டுகளும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு போயிருக்கும்.

ஆனால், சூரியன், புதன், வெள்ளி, செவ்வாய், குரு, சனி ஆகிய பல கோள்களின் ஒரு ஒழுங்கான ஒழுங்கற்ற ஈர்ப்பு விசைகளைத் தோற்றுவிப்பதால், மேல்தட்டுகளின் வேகமாறுபாடு உண்டாகி தட்டுகளுக்கிடையில் அழுத்தங்களை உண்டாக்கி விடுகிறது.

எனவே நில நடுக்கங்களுக்கும் நிலாவிற்கும் சம்பந்தம் உண்டு. ஆனால் நிலா மட்டுமே காரணமில்லை.

உடைந்த வேறு வேறு அளவிலான மொத்தமுள்ள மேலோட்டுத் தகடுகள்.
மேக்மாவின் உட்சுழற்சி, மற்ற ஈர்ப்புவிசைகள் ஆகியவை பெரும்பங்கு ஆற்றுகின்றன.

சூப்பர்மூன் என்பது பௌர்ணமி அன்று நிலா பூமிக்கு அருகில் வரும் நிகழ்வு என்று ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்,

நிலவின் நேரடி பாதிப்பு கடல் ஓதங்கள். இவை கப்பல் போக்குவரத்தில் மிகவும் உதவுகின்றன. ஆனால் சிறிதளவு நில நடுக்கங்கள் உண்டாக நிலா காரணம். உதாரணமாக நிலவு இல்லாவிட்டால் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இடத்தில் நிலநடுக்கம் உண்டாகும் எனக் கொண்டால் அது 250 ஆகவோ 180 ஆகவோ நிலவின் ஈர்ப்பு விசையினால் மாறுகிறது. அதாவது அது கூட்டவும் செய்யலாம் குறைக்கவும் செய்யலாம். காரணம் அது அழுத்த வேறுபாட்டை கூட்டுகிறதா குறைக்கிறதா என்பது மற்ற கிரகங்கள் சூரியன் போன்றவற்றின் நிலையைப் பொறுத்து அமைகிறது.

எனவே சூப்பர் மூன் / சாதாரண நிலா எல்லாமும் சரிசம பங்களிப்பையே அளிக்கின்றன. சூப்பர் மூன் வர்ரதால திடீர்னு எதுவும் நடந்திடாது.
 
Last edited:
அப்படியெனில் ஈர்ப்பு புறவிசையின் மூலம் ஏற்படும் தாக்கத்தினால் புவியின் மேற்பரப்பில் மட்டுமே மாற்றங்கள் நிகழும் ...அதாவது காற்று மாறுபாடு (வேகமான புயல் காற்று ) இதன் மூலம் கடல் கொந்தளிப்பு ,....புறவிசையின் காரண மாக நிகழும் தாக்கத்தினால் மேக்மா வில் எவ்வித தாக்கமும் நிகழாது அப்படிதானே ..
 
அப்படியெனில் ஈர்ப்பு புறவிசையின் மூலம் ஏற்படும் தாக்கத்தினால் புவியின் மேற்பரப்பில் மட்டுமே மாற்றங்கள் நிகழும் ...அதாவது காற்று மாறுபாடு (வேகமான புயல் காற்று ) இதன் மூலம் கடல் கொந்தளிப்பு ,....புறவிசையின் காரண மாக நிகழும் தாக்கத்தினால் மேக்மா வில் எவ்வித தாக்கமும் நிகழாது அப்படிதானே ..

வளிமண்டலம் பூமியின் ஒரு பகுதிதான். வளிமண்டலத்தில் வெப்ப மாறுபாடுகளால் உண்டாகும் அழுத்த மாறுபாடுகளால் உண்டாகும் புயல் போன்றவை நேரடியாக மேக்மாவில் தாக்கம் நிகழ்வதில்லை. ஏனென்றால் புயல் உண்டாவது அழுத்தங்களைச் சமன் செய்யத்தான்.


இது கடலில் பெரிய அலைகளைத் தோற்றுவித்தாலும் மேலோடு பகுதியைத் தாண்டி இதன் வீச்சு இருப்பதில்லை. ஏனென்றால் இது வாயுக்களின் இடமாற்றம். இதனால் மேலோடு தாண்டி ஒன்றும் ஏற்படுவதில்லை.

ஆனால்

மறைமுகமாக மணலரிப்பு போன்றவை மூலம் நிலச் சரிவுகள் பூமியின் மேலடுக்கில் உண்டாகிவிட்ட வெற்றிடங்களில் நீர் நிரப்பி திடீரென நிலம் உள்வாங்குதல் இப்படியாகப் பட்ட விளைவுகளையும்,

ஏற்கன்வே உள்ள டெக்டானிக் பிளவுகளில் நீரை நிரப்புவதால் நில நடுக்கம் சற்றே முன்னதாக உண்டாகவும் காரணமாகின்றன, அதாவது உண்டாகப் போகிற நில நடுக்கத்தை சற்று முன்னதாகவே வர வைக்கின்றன. இதனால்.. சில சமயம் நில நடுக்கத்தின் வலிமை குறையலாம். ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
 
கேள்விகளுக்கு சிரமேற்கொண்டு அனைவரும் உண்மை உணரவேண்டும் எனும் சிந்தையில் பதிலிட்ட நண்பருக்கு ...
இறுதியாக நீங்கள் கூறும் தகவல்களின் படி பார்த்தால் மற்றவர்கள் கூறுவது போல் பெரியஅளவில் இயற்கை சீற்றங்கள் ஏதும் உடனடியாக நிகழ போவதில்லை ஆனால் இதனால் ஏற்படும் சிறு விளைவுகள் பின்னாளில் நிகழும் சீற்றங்களுக்கு இதுவும் ஒரு முன்னோடியாக இருக்கும் அப்படிதானே ...(என் சிந்தையில் எட்டியவரை உணர்ந்து பதிலிட்டுள்ளேன்..)
 
கேள்விகளுக்கு சிரமேற்கொண்டு அனைவரும் உண்மை உணரவேண்டும் எனும் சிந்தையில் பதிலிட்ட நண்பருக்கு ...
இறுதியாக நீங்கள் கூறும் தகவல்களின் படி பார்த்தால் மற்றவர்கள் கூறுவது போல் பெரியஅளவில் இயற்கை சீற்றங்கள் ஏதும் உடனடியாக நிகழ போவதில்லை ஆனால் இதனால் ஏற்படும் சிறு விளைவுகள் பின்னாளில் நிகழும் சீற்றங்களுக்கு இதுவும் ஒரு முன்னோடியாக இருக்கும் அப்படிதானே ...(என் சிந்தையில் எட்டியவரை உணர்ந்து பதிலிட்டுள்ளேன்..)

அதுதான் உண்மை. சில சமயம் இது நன்மையாகலாம்.. அதாவது சிறு இயற்கைச் சீற்றம் உண்டாகி பெரிய சீற்றம் தவிர்க்கப் படலாம்.
 
அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்து ஒரு பெரிய இயற்கை சீற்றம் நிகழாதிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ...ஆனால் இன்று பலநிகழ்வுகள் வரவிருக்கும் பெரிய சீற்றத்தின் முன்னோடியாகத்தான் இருக்கின்றன..குறிப்பாக ஜப்பான் நிலநடுக்கம் ,சுனாமி நிகழ்வுகள் ...
 
Back
Top