என் வானிலே இரண்டு வெண்ணிலா!!! - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க

தாமரை

Facebook User
சமீப காலத்தில் சில மன்ற உறுப்பினர்கள் வானவியலில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அத்தகைய வானவியல் தகவல்கள் பல திரிகளில் சிதறிக்கிடப்பதை விட ஒரே இடத்தில் இருந்தால் பயன் மிக அதிகமாக இருக்கும் என கருதுகிறேன்.

வானவியல் தகவல்களை, புதிரோ புதிர் போல ஒரே இடத்தில் பெற இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

முதலில் ஸ்டார் கேஸிங்.. மென்பொருள் ஒண்ணு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

http://download.cnet.com/3001-2054_4-10072276.html?spi=307fda8034341e6e6cabeb2cc115f5b6

இதை நிறுவிக் கொள்ளலாம். இதன் பிறகு வானத்தில் நட்சத்திர மண்டலங்களை 12 இராசி மண்டலங்கள் அப்புறம் 88 நட்சத்திர மண்டலங்கள், 8 கிரகங்கள் என பார்ப்போம்.

கிரகங்களைப் பற்றி இதைப் படிப்பவர்கள் பதிவிடுங்கள்.

வானம் மொத்தம் 360 பாகைகளாக இருக்கிறது அல்லவா? இந்த 360 பாகைகளை 12 ஆக 30 பாகைகள் ஒரு இராசி எனப் ப்ரித்து இருக்கிறார்கள். (30 மில்லி ஒரு பெக் என்பதை குடிமகன்களும், 30 மில்லி ஒரு அவுன்ஸ் என வெறும் மகன்களும் நினைவில் கொள்ளலாம்).

இந்தப் பகுதியில் உள்ள பெரிய நட்சத்திரங்களின் வடிவத்தைப் பொறுத்து அவற்றிற்கு பெயரிட்டு இருக்கின்றனர்.

மேச ராசி : http://en.wikipedia.org/wiki/Aries_(constellation)
Aries.GIF


ரிசப ராசி : http://en.wikipedia.org/wiki/Taurus_(constellation)
Taurus.GIF


மிதுன ராசி : http://en.wikipedia.org/wiki/Gemini_(constellation)
Gemini.GIF


கடகராசி : http://en.wikipedia.org/wiki/Cancer_(constellation)
Cancer2.GIF


சிம்மராசி : http://en.wikipedia.org/wiki/Leo_(constellation)
Leo2.GIF


கன்னிராசி : http://en.wikipedia.org/wiki/Virgo_(constellation)
Virgo.GIF


துலாராசி : http://en.wikipedia.org/wiki/Libra_(constellation)
Libra.GIF


விருச்சிகராசி : http://en.wikipedia.org/wiki/Scorpius
Scorpius.GIF


தனுசுராசி : http://en.wikipedia.org/wiki/Sagittarius_(constellation)
Sagittarius.GIF


மகரராசி : http://en.wikipedia.org/wiki/Capricorn_(constellation)
Capricorn.GIF


கும்பராசி : http://en.wikipedia.org/wiki/Aquarius_(constellation)
Aquarius.GIF


மீனராசி : http://en.wikipedia.org/wiki/Pisces_(constellation)
Pisces2.GIF


சரி இப்போ எப்படி இந்த ராசிகளை அடையாளம் காண்பது?

சந்திரனை வைத்துதான்

http://en.wikipedia.org/wiki/Nakshatra#Nakshatra_descriptions

இங்கே நட்சத்திர அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நமது தினசரி காலண்டரில் அன்று என்ன நட்சத்திரம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த நட்சத்திரத்தின் அருகே சந்திரன் இருக்கும்.

ஆக இதைக் கொண்டு இருபத்தேழு நட்சத்திரங்களையும்.. மற்றும் 12 இராசிகளையும் வானத்தில் அடையாளம் காணலாம்.

இதே போல ஸ்டார் கேஸிங் சாஃப்ட் வேர் மூலமாக இந்த ந்ட்சத்திர மண்டலங்களை அடையாளம் காணலாம்.

மொட்டை மாடியில் இனி தூங்கப் போறவங்க எல்லாம் கையைத் தூக்குங்க..

இந்த விவரங்களைக் கொண்டு 5 கிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்கள் 12 இராசிகளை அடையாளம் கண்டு பிடியுங்கள்..

இன்னும் வரும்...

பின் இணைப்பு :


இதுதான் வானவியலில் அடிப்படை ஆரம்பம்.
 
Last edited:
என்னவோ சொல்லவரீங்கன்னு புரியது, ஆனால் அதே சமயம் புரிய மாட்டேங்குது. இன்னொருதபா படிச்சுப்பார்த்தால் புரியும் என்றே நினைக்கிறேன். தொடருங்கள்.
 
வானத்தில் என்ன பாக்கிறது என்று தெரியாம மலங்க மலங்க விழிப்பவர்களுக்கு இந்த ஆரம்பப் பகுதி..

வானத்தில் 12 இராசி மண்டலங்களையும் இருபத்தேழு நட்சத்திரங்களையும் அடையாளம் காண முடிந்தால், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி போன்ற 5 கிரகங்களை வெறுங்கண்களால் அடையாளம் காணமுடியும்.

வானத்தைப் பார்க்க கற்றுக் கொண்டால் வானியல் சுவாரஸ்யமாக இருக்கும்.

கார்த்திகை நட்சத்திரங்கள் :

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=141516&postcount=62

சப்தரிஷி மண்டலமும், அருந்ததி நட்சத்திரமும்

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=141603&postcount=65

இப்படி வானம் நமக்குத் தெரிந்த ஊராகும் பொழுது அந்த வைரப்புள்ளிகள் நமக்குச் சினேகிதர்கள் ஆகும் போது வானம் பார்த்தல் மிக சுவாரஸ்யமாகும்.

அதன் பின் வானவியலின் அற்புதங்களை, புதிய கண்டு பிடிப்புகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன்.
 
அப்ப சக்தி வாய்ந்த டெலிஸ்கோப் ஒண்ணு வாங்கிக்கிட்டு மொட்டைமாடிக்குப் போயிட வேண்டியதுதான். ரொம்ப சுவாரசியமா இருக்கும் போலருக்கே...
 
இந்த மாதன் வானத்தில் என்ன ஸ்பெஷல்?



சனிக்கிரகம், வியாழன், செவ்வாய், சுக்கிரன் எல்லாம் பார்க்கலாம்.

2009 க்கு இன்னொரு விஷேசமும் இருக்கு,,

இது சர்வதேச வானியல் ஆண்டு.

நமது தமிழ் மாதம் ஆடியின் கணக்கின் படி சூரிய உதயம் கடக ராசியில் நடக்கிறது. ஆகவே இரவு ஆரம்பிக்கும்பொழுது மேற்கு வானத்தில் மிதுன ராசி தெரியும். ரிஷபம், மேஷம், மீனம்,கும்பம், மகரம் இவை ஆரம்பத்தில் மேற்கிலிருந்து கிழக்காகத் தெரியும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திலும் ஒரு ராசி மறைய அடுத்த ராசி உதயமாகும். மிதுனராசியை காண்பது கடினம்தான் ஏனென்றால் நட்சத்திரங்கள் தென்படும் பொழுது மிதுனராசி அஸ்தமனமாகி இருக்கும்,

விடிய விடிய கவனித்தால் ஜெமினி ராசியிலிருந்து சிம்மராசி ராசி வரை காணலாம்.

ஆனால் அவ்வளவு பொறுமை நமக்கில்லையே.. எனவெ இரவு 10 லிருந்து 11 வரையிலான நேரத்தை நமதாக்கி அப்பொழுது என்ன தெரியும் எனப் பார்க்கலாம்.

இந்த மாத வானம் :

சூரியன் மறையும் பொழுது மேற்கு வானில் சுக்கிரன் பளீரெனத் தெரியும். கூடவே அதற்கு சற்றே தென்கிழக்கில் செவ்வாய் கிரகமும் தெரியும். செவ்வாய் கிரகம் ரிஷப் ராசி பகுதியில் இருப்பதைக் கவ்னியுங்கள்.

வியற்காலையில் சூரியன் உதிக்கும் முன்பு, சந்திரனும் உதிக்கும் முன்பு சனிக்கிரகம் சிம்ம ராசிப்பகுதியில் தெரியும்.

சந்திர உதயத்திற்குப் பிறகு சூரிய உதயத்திற்கு சற்றே முன்னால் கிழக்கு அடிவானத்தில் புதன் கிரகம் கடகராசிப்பகுதியில் தெரியும்.

http://amazing-space.stsci.edu/tonights_sky/show.php?month=july&year=2009

ஸ்டெல்லேரியம் மென்பொருளை திறந்து வைத்துக் கொண்டு அதையும் வானத்தையும் ஒப்பிட்டால்.. எது எது என்ன என்ன எந்த எந்த தூரத்தில் உள்ளது எனப் புரியும்.
 
அண்ணா நீங்க கிளப்பி விட்டீங்க...

ஏதாவது தேடலாம்ன ஒரே மேக மூட்டம் பெங்களூர்ல...!!!
 
வானத்தைப் பார்ப்பது என்றால் நமக்கெல்லாம் தெரிந்த முதல் பொருள் சூரியன்

sun_tour.jpg


சூரியன் ஒரு நட்சத்திரம். அது பூமிக்கு அருகில் இருப்பதால் பகலில் சூரியன் இருக்கும் பொழுது சூரியன் மட்டுமே தெரிகிறது. சில சமயங்களில் மாத்திரமே பகலில் சந்திரனும் தெரியும்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் சராசரியாக 14.960 கோடி மைல்களாகும். சூரிய ஒளி பூமியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகின்றது,

சூரியனின் குறுக்களவு 13,90,000 கிலோமீட்டர்கள் ஆகும்.

சுரியன் மேற்பரப்பின் வெப்ப நிலை 5800 கெல்வின் ஆகும். அதாவது 5527 செல்சியஸ்.

சூரியனில் 70 சதவிகிதம் ஹைட்ரஜனும் 28சதவிகிதம் ஹீலியமும் உள்ளது.

சூரியன் சுற்றுவது நம் பூமி சுற்றுவதை விட வித்தியாசமானது. சுரியன் மையப்பகுதி 25.4 நாட்களுக்கு ஒரு முறை சுழல, துருவப் பகுதிகள் 36 நாட்களுக்கு ஒருமுறை சுழல்கின்றன. காரணம் சூரியன் முழுக்க முழுக்க வாயுப்பொருட்களால் ஆனதினால்தான்,

சுரியனின் கருப்பகுதியில் 1.56 கோடி கெல்வின்கள் (செல்சியஸ் என்றுகூட சொல்லலாம், 273 டிகிரி இதில் பெரிய வித்தியாசமில்லை). இங்கு உள்ள அழுத்தமானது பூமியின் கடல் மட்டத்தில் உள்ள காற்றழுத்தம் போன்று 250 பில்லியன் அளவு பெரிது.

ஒவ்வொரு வினாடியும் சூரியனி 70 கோடி டன் ஹைட்ரஜன் 69.5 கோடி டன் ஹீலியமாக மாறுகிறது. மிச்சம் 50 இலட்சம் டன் சக்தியாக காமாக் கதிர்களாக கதிரியக்கமாய் வெளிப்படுகிறது.

சூரியனின் மேற்பரப்பு ஃபோட்டோஸ்பியர் எனப்படுகிறது. சூரியப் புள்ளிகள் எனப்படும் சூரியனின் மேல் தற்காலிகமாகத் தோன்றும் புள்ளிகள் சூரியனின் தற்காலிகக் குளிர்ந்த பிரதேசங்கள் ஆகும். சில சூரியப் புள்ளிகள் 50000 கிலோமீட்டர் அளவு கூட பெரியதாக இருக்கும்.

சுரியனின் மையத்தில் தோன்றும் வெப்பம் வெப்பக்கடத்தல் மூலமாகவே சூரியனின் மேல்பகுதியை அடைகிறது. இதில் 80 சதவிகித வெப்பம் இழக்கப்படுகிறது.

ஃபோட்டோஸ்பியருக்கு மேற்பட்ட பகுதி குரோமோஸ்பியர் எனப்ப்டுகிறது. இதற்கும் மேற்பட்ட பகுதியே கரோனா எனப்படும் பகுதியாகும். இது சாதாரணமாக கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் சூரிய கிரகணத்தின் போது இது மிகத் தெளிவாகத் தெரியும்.

[media]http://www.solarviews.com/raw/sun/eclips94.mpg[/media]

இந்தக் கரோனா 1 இலட்சம் கெல்வின் வரை வெப்பமுள்ளதாகும்,

சூரியனின் காந்தப் புலம் மிக மிகச் சிக்கலான ஒன்றாகும். இது புளூட்டோவின் சுற்றுப் பாதையையும் தாண்டி விரவி இருப்பதாகும்.

ஒளி மற்றும் வெப்பம் மட்டுமன்றி சூரியனில் இருந்து சூரியக் காற்றும் வீசுகிறது. இது எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் துகள்களால் ஆனது, இதன் வேகம் வினாடிக்கு 450 கிலோமீட்டர்களே ஆகும். இதுவே சூரியத் தழல் வெளிப்பாட்டின் போது மிக அதிகமான துகள்கள் வெளிப்படுத்தப் படுகிறது. இவை பூமியின் மின், மற்றும் மின்னணு சாதனங்களையே பாதிக்கும் அளவிற்கு இருக்கும். (2012 -இல் இது போன்ற தழல் வெளிப்படும் என்பதும் ஒரு உயிருள்ள வதந்தியாகும்.)

பூமியின் வடதுருவப் பகுதியில் இந்தச் சூரியப் புயலினால் வானத்தில் வண்ண வண்ணக் காட்சிகள் தெரியும். இதை நார்தர்ன் லைட்ஸ் என்பார்கள்,

சூரியத் தழல் வெளிப்படும் பொழுது இந்த சூரியக் காற்றின் வேகம் வினாடிக்கு 750கி.மீ வரை கூட உயரலாம். இவை வால்நட்சத்திரங்களையும் செயற்கைக் கோள்களையும் பாதிக்கின்றன.

சூரியம் பால்வீதியைச் சேர்ந்தது. பால்வீதியை இது 250 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறைச் சுற்றி வருகிறது.

சூரியனின் தற்போதைய வயது 4.5 பில்லியன் வருடங்கள் எனக் கணிக்கப்படுகிறது. சூரியன் இன்னும் 5 பில்லியன் வருடங்கள் வரை வாழலாம் என்றும் ஆனால் அதன் ஒளி அப்பொழுது இப்பொழுது இருப்பதை விட இரட்டிப்பாக இருக்கும் எனவும் ஊகிக்க முடிகிறது. அதன் பிறகு ஹைட்ரஜன் குறையக் குறைய சூரியனின் இறுதிக்காலம் வர, சூரியன் மார்க்கெட் இழந்த நடிகை போல பெருத்து.. சிவந்து வெடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது
 
Last edited:
நன்றி தாமரை அண்ணா...!!!

இன்னும் பல தகவல்களை எதிர் நோக்கி :)
 
சூரியனுக்குள் குளிர்ந்த பகுதியா? ஆச்சர்யம் மிக மிக ஆச்சர்யம்.... அந்த சூரிய புயலை நினைச்சாலே பயமா இருக்குது :(
 
இப்போது இந்தியாவில் வானம் பார்ப்பவர்களுக்கு...

போன வார இறுதியில் யாரோ கல்லால் அடிக்க காயப்பட்ட வியாழக்கிரம் இப்போது கிழக்கு திசையில் அடிவானத்துக்கு சற்று மேலாக மகர ராசிக்கு அருகில் பளீரெனத் தெரிகிறது. பெங்களூரில் மகர ராசி தெரியவில்லை, வியாழக் கிரகம் மட்டும் தெரிகிறது.

பார்த்து ஒரிரண்டு நிமிடங்கள் ஆறுதல் சொல்லி வைங்க. :)

வியாழன் அடிபட்ட மேட்டர் இங்க வந்திருக்கு..



http://www.tamilmantram.com/vb/showthread.php?p=425321#post425321

இந்தத் திரிகள் இன்பா படிக்க மட்டுமே!!!:icon_rollout::icon_rollout::icon_rollout:

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6270
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6587
 
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா தாமரை அண்ணா...!!

சென்னையில் சுனாமி வந்தது இல்ல...? அதற்கு முந்தின நாள் நானும் எனது அண்ணாவும் மெரினா பீச்சில் ஒரு ஒரு மணிநேரம் பேசிக்கிட்டிருந்தோம்...

தற்செயலாக ஒரு கேள்விகேட்டேன் அண்ணாவிடம்.. அதாவது எப்போதாவது கடல் தண்ணீர் இங்க வரைக்கும் வந்திருக்கா என்று ப்ரசிடென்சி கல்லூரி எதிரி ஒரு சப்வே இருக்கே அதை காண்பித்தேன்... "எனக்கு நினைவு தெரிஞ்சி அந்த மாதிரியெல்லாம் வந்தது இல்லைன்னு சொன்னார்..."

மறுநாள் எனக்கு போன் செய்து ஏண்டா அப்படி சொன்னே என்றார்...? எனக்கு ஒன்றும் புரியாமல் எப்படி ? என்றேன்... போய் சன் டிவி பார் என்றார்...

போய் பார்த்தால் நான் சொன்ன அந்த இடம் வரைக்கும் கடல் தண்ணீர்... ஆடிப்போய்விட்டேன்...
 
சூரியனுக்கு அப்புறம் சந்திரன் என நினைத்தீர்கள்தானே.. சரிதான். ஆனால் மூணாவதா பூமியைப் பார்ப்போம்.

சந்திரனை பெண்ணாகத்தான் பலரும் பார்க்கிறார்கள்.

Luna2.jpg


சந்திரன் பூமியிலிருந்து 384,4903 கி.மீ தூரத்தில் உள்ளது. சந்திரன் பூமியை 27.3 நாட்களுக்கு ஒரு முறை வலம் வருகிறது. (ஹா ஹா.. புத்திசாலிங்க நீங்க,, நம்ம ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் எப்படி வந்தது என்று சரியா யூகிச்சிட்டீங்களே...)

ஆனால் அமாவாசைக்கு அமாவாசை இருக்கும் வித்தியாசம் 29.5 நாட்கள். இதற்குக் காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுது.. பூமி சூரியனைச் சுற்றுது. இதனால் இதனால் சூரியனுக்கும் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள கோணமாறுபாடுகளால் நமக்கு சந்திரனின் உருமாற்றம் 29.5 நாட்கள் கொண்டதாக இருக்கிறது.

இதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதை வச்சுதான் அந்தக் காலத்துல வானத்தைப் பார்த்து மாதம் நாள் மணி சொல்லுவாங்க.. இதைப் பின்னால் பார்க்கலாம்.

சந்திரனோட குறுக்களவு 3424 கிலோமீட்டர்கள்.

எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அதைப் பார்க்க நினைக்காதே. பார்த்தா பயந்திடுவ என்று சூப்பர் ஸ்டார் படையப்பாவில் சொன்ன மாதிரி நிலவிற்கு இரண்டு முகங்கள் என்ச் சொல்லலாம்.

பூமிக்குத் தெரியும் முகம் இது..

Moon_names.jpg



பூமிக்குத் தெரியாத முகம் இது

[media]http://upload.wikimedia.org/wikipedia/commons/2/2a//Moon_PIA00304.jpg[/media]

இதற்குக் காரணம் நிலா தன்னைத் தானே சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலமும் பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலமும் ஒரே அளவு.

ஒவ்வொரு அமாவாசைக்கும் சூரிய கிரகணம், ஒவ்வொரு பௌர்ணமிக்கும் சந்திர கிரகணம் வரலியே என்ன காரணம்?

Earth-Moon.PNG


இதுதான்... சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள அச்சிற்கும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் அச்சிற்கும் உள்ள வித்தியாசம்.

பூமியைப் பார்க்கும் நிலா முகம் மனிதனின் கண்ணடி பட்டதாலோ என்னவே நிறைய அடி வாங்கி இருக்கிறது... நிலாவின் பின்பகுதியோ அவ்வளவாக அடிவாங்கவில்லை. ஏன் என்று யோசிக்க வேண்டிய விஷயம்தானே...

நிலவில் உள்ள தட்ப வெப்ப நிலை காரணமாக வால்நட்சத்திரங்கள் மோதுவதல் கிடைக்கும் நீர் ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரிந்து நிலவின் ஈர்ப்பு விசைக் குறைபாட்டினால் நிலவில் தங்காமல் போயிருக்கலாம். ஆனால் தெ துருவப் பகுதியில் உள்ள சில பள்ளங்களில் சூரிய ஒளி எப்பொழுதுமே விழாத காரணத்தினால் அங்கு நீர் உறைந்திருக்கலாம் எனக் கருதப் படுகிறது. நாசாவும் அதை ஆய்வு செய்யப் போகிறது.

4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மிகப் பெரிய மோதலினால் பூமியிலிருந்து நிலா பிய்க்கப் பட்டதாக கருத்து நிலவுகிறது. நிலவின் மிகச் சிறிய உட்கருவும் மிக அதிகமான மேண்டில் பகுதியும் இதை உறுதி செய்வது போல இருக்கிறது.

http://en.wikipedia.org/wiki/File:Moon_Schematic_Cross_Section.svg

நிலவில் வளிமண்டலம் மிகச் சிறிய அளவே உண்டு, இல்லை என்பது கப்ஸா.

கதிரியக்கத்தினால் உண்டாகும் ரேடான், மிகச்சிறிய விண்கற்கள், சூரியத் தழல், சூரிய ஒளி இவற்றால் உண்டாகும் பொட்டாசியம் சோடியம் போன்ற வாயுக்கள், ஆர்கான், ஹீலியம், ஆக்சிஜன் மீத்தேன், நைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு / டை ஆக்ஸைடு போன்றவையும் மிகக் குறைந்த அளவே உண்டு,

பூமியில் கிடைக்காத சில தனிமங்களும் நிலவில் இருக்கலாம்.

நிலவினால் உண்டாகும் சில பல விஷூவல் எஃபெக்ட்கள்..

1. கடல் ஓதங்கள்..

2. கிரகணங்கள்

3. பூமியின் தள்ளாட்டம்.. மற்றும் சுழற்சி வேகக் குறைவு..

பூமியைத் தவிர மனிதனின் காலடி பட்ட இன்னொரு இடமாக நிலா உள்ளது..

இன்னும் வரும்...
 
Last edited:
சூரிய கிரகணம்

http://en.wikipedia.org/wiki/File:Geometry_of_a_Total_Solar_Eclipse.svg

சூரியன் - பூமி - நிலா ஆகியவற்றின் நிலைகளையும் கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பதையும் அழகாக விளக்கும் படம் இதுவாகும்.

அம்ப்ரா எனப்படு இடத்தில் முழுச் சூரிய கிரகணமும், பெணம்ப்ர எனும் இடத்தில் பார்சுவ சூர்ய கிரகணம் அல்லது பகுதி சூரிய கிரஹணமும் ஏற்படும்.

சூரிய கிரஹணப் படங்கள் மன்றத்தில் இந்தத் திரியில் உள்ளன,

முழுச் சூரிய கிரகணம் :

se2.jpg


பார்சுவ சூரிய கிரகணம் (பகுதிச் சூரிய கிரகணம்)

se3.jpg


கங்கணச் சூரிய கிரகணம். (சூரியன் தங்க வளையல் போலத் தெரியும். இதன் தோசம் விலக மனைவிக்கு தங்க வளையல் வாங்கித்தரணும். :D :D :D)

se4.jpg


முழுச் சூரிய கிரணம் விலகும் போது வைர மோதிரம் போல் காட்சி தரும். (இதன் தோசம் விலக மனைவிக்கு வைர மோதிரம் வாங்கித் தரணுமாம். :D :D :D)

SE1.jpg


பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையும், நிலா பூமியச் சுற்றி வரும் பாதையும் சாய்வாக இருத்தல், பூமி தன் அச்சில் சாய்ந்து இருத்தல், பூமியின் பாதையும் நிலவின் பாதையும் நீள் வட்டமாய் இருத்தல் போன்ற காரணங்களால், சூரிய கிரகணம், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் ஏற்படுகிறது. ஒரே இடத்தில் இரண்டு முழுச்சூரிய கிரகணங்கள் தெரிய 100 ஆண்டுகள் வரை ஆகலாம்.

சூரிய கிரகணங்கள் எப்பொழுது எங்கே தெரியும் போன்ற விவரங்களை நாசா பட்டியலிட்டு வைத்துள்ளது.

http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2001.html
http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2011.html
http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2021.html
http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2031.html
http://eclipse.gsfc.nasa.gov/SEcat/SEdecade2041.html


http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2001.html
http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2021.html
http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2041.html
http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2061.html
http://eclipse.gsfc.nasa.gov/SEgoogle/SEgoogle2081.html

அப்புறம் இது பேரேடு....3000 ஆவது வருஷம் வரை

http://eclipses.gsfc.nasa.gov/SEcat5/catalog.html
சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய தகுதி வாய்ந்த ஒரு இடத்தில் மன்ற மீட்டிங் போட்டு, பயணம், தங்குதல் மற்றும் உபகரண வசதி செஞ்சா நல்லா இருக்குமில்ல.. :D :D :D :D

சூரிய கிரகணத்தின் போது பலர் வீட்டுக்குள் அடைந்து கிடக்க, சூரியனின் கரோனாப் பகுதியை ஆராய இதுவே தகுந்த சமயமாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

அப்புறம் சூரிய கிரகணத்தின் போது ரேடியேஷன் அதிகமா இருக்கும் என்று சிலர் சொல்வார்கள். அது தவறு.. அப்பொழுது ரேடியேஷன் குறைவாகத்தான் இருக்கும்.

சூரிய கிரகணத்தின் போது முழுக்கிரகணம் விலகும் பொழுது வெளிச்ச வேற்பாடு மிக அதிகமாக இருப்பதால் கண்கள் பாழாகும் என்பதுதான் உண்மை.

நிலாவினால் மட்டுமல்ல, புதன் சுக்கிரன் போன்றவற்றாலும் சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் சூரியனில் சிறிய பொட்டாகத் தெரிவதை விஞ்ஞானிகள் தவிர வேறு யாரும் ஆர்வம் செலுத்திப் பார்ப்பது இல்லை.


2.Venus%20Transit.jpg


162676main_mercury_transit_516.jpg


2012 ஆம் வருசம் ஜூன் ஆறாம் தேதி அடுத்த வெள்ளிச் சூரிய கிரகணமும், 2016 ஆம் ஆண்டு மே 09 ஆம் தேதி அடுத்த புதன் சூரிய கிரகணமும் ஏற்படும்.


இதையும் கொஞ்சம் பாருங்க

http://www.nasaimages.org/luna/serv...86~106712:Mercury-s-Transit--An-Unusual-Spot-

சூரிய கிரகணத்தின் போது நட்சத்திரங்கள் கூட தெரியும்.

இன்பாவின் வேண்டுகோளுக்கினங்க பெங்களூர் மேகங்களை விரட்டி வைத்திருக்கிறேன். இன்று இரவு இன்பா வியாழக் கிரகத்தை 10:00 மணி அளவில் கிழக்கு வானில் கண்டு ரசித்து, முடிந்தால் ஜூம் செய்து படம் எடுத்து போடுவார் என எதிர்பார்க்கிறேன்..

நட்சத்திரங்களைக் கவனிக்க மின்சார விளக்குகள் அதிகம் இல்லாத அமைதியான மலைஉச்சிகள்தான் வசதி... கிருஷ்ணகிரி பகுதியில் ஒரு மலையை வாங்கி அங்க ஒரு ரிசார்ட் கட்டி வைங்க சிவாஜி... !!!!

(அங்கதானே கரண்ட் இருப்பதே இல்லை என புலம்பறார் சிவாஜி :D :D :D)
 
நேற்று இருக்குறதிலேயே பெரிய நட்சத்திரம் போல தெரிந்த ஒரு நட்சத்திரத்தை ஜூம் செய்தேன்... அது கிழக்குப் பக்கமாகத் தான் இருந்தது...

என்னுடைய லென்ஸ் 60 X ஆனால் டிஜிட்டல் ஜூம் 2000 X என்ன ஜூம் செய்தாலும் சரிவர தெரியவில்லை...

பேசாமல் டெலஸ்கோப் வாங்கிவிடுவோமா என்று பார்க்கிறேன். :D
 
சாதாரண காமிராவில் ஒளி தேவை.. எஸ்.எல்.ஆர் முறைப்படி அமைந்து ஃபோகஸை மாற்ற முடியும் எனில் முயன்று பார்க்கலாம்.

தொலநோக்கிகளின் மூலம் நேரடியாக கண்ணால் பார்த்தால் மட்டுமே எளிதாக காணமுடியும். படமெடுக்க அதை ஒரு திரையில் விழ வைத்து படமெடுக்க வேண்டும்.

நீங்கள் கிழக்குப் பக்கம் பார்த்திருந்தால் அது வியாழன் தான். அதைப் பார்த்துட்டு வந்துதான் அந்தப் பதிவையே போட்டேன்.

ஸ்டெல்லேரியம் மென்பொருள் சுட்டியைத் முதல் பதிவில் தந்திருக்கிறேன். அதில் பெங்களூரை உங்கள் இருப்பிடமாக தெரிவு செய்து பார்த்தால் அந்த நேரத்து வானத்தில் என்ன என்ன நட்சத்திரங்கள் கிரகங்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரியும். அதைக் கொண்டு மொட்டை மாடியில் மல்லாக்க படுத்துக் கொண்டு வானத்தை அளக்கலாம்.

அப்புறம் நான் டெல்லியில இருந்தப்ப வால் நட்சத்திரம் பார்த்தேன்..
 
கீழே உள்ள படம் காலை ஆறுமணிக்கு இன்றைய சூழ்நிலையில் பூமி, சூரியன், வியாழன் ஆகியவற்றின் நிலையை இராசி மண்டலத்தில் காட்டுவதாகும்.

இராசி மண்டலம் கிழக்கிலிருந்து மேற்கு செல்கிறது. பிறகு நம் கண்ணுக்கு தெரியாத பூமியின் மறுபக்கம் இருக்கிறது.

morning-1.jpg


பூமி சூரியனைச் சுற்றும் போது ஆவணி மாதம் சூரியன் சிம்ம ராசியில் தெரியும்.
வியாழன் இப்பொழுது மகரத்தில் உள்ளது. எனவேதான் இரவு வியாழன் கிழக்கு வானில் தெரிய ஆரம்பிக்கிறது.

இந்த அடிப்படையை உங்கள் மனக்கண்களால் பார்க்க முடிந்தால் மட்டுமே நான் எழுதும் வானத்தை பார் என்பது புரியும். புரியறவங்க கையைத் தூக்குங்க...
 
இன்று இரவு வானம்... காட்சி நேரம் இரவு பத்துமணி... இடம் பெங்களூர்..

(இந்தியாவின் மற்ற இடங்களிலும் ஏறத்தாழ இதையே காணலாம்..

tonigh-10pm.jpg


மேற்கில் நிலவு மறைந்து கொண்டிருக்கும். நிலவு அருகில் கன்னி ராசிக்கான நட்சத்திரங்கலைக் காணலாம்..

உட்சி வானில் பிரகாசமான வேகா நட்சத்திரத்தை கவனியுங்கள்.. காந்தப் புல மாறுபாடு ஏற்பட்டு துருவங்கள் இடம் மாறி வரும் காலத்தில் இந்த வேகாதான் நமது அடுத்த துருவநட்சத்திரம் எனக் கணிக்கிறார்கள்.


வியாழன் கிழக்கு வானத்திலே பிரகாசமாகத் தெரியும்.

வடக்குப் பகுதியில் எல்லா ரேகைகளும் கூடுமிடத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கிறதல்லவா அதுதான் துருவ நட்சத்திரம்.

ஆனால் நமது பெங்களூரு மின் ஒளிச்சிதறலின் கைங்கர்யத்தில் நாம் பார்க்கும் வானம் இப்படி இருக்கும்...



tonigh-10pmreal.jpg
 
இது வரை விண்வெளிக்குச் செல்ல இராக்கெட்டுகளை மட்டுமே நம்பி இருந்தோம் அல்லவா? இது மிகவும் செல்வாகும் ஒன்று.. அது மட்டுமல்லாமல் ஸ்டார்ட் பண்ணினா பாதியில் திரும்ப முடியாது இல்லையா?

ஆனால் விண்வெளிக்கு உல்லாசப் பயணம் போனால் இது போன்ற கண்டிஷன்கள் ஒத்து வராதே.. அதனால் புவி அருகு விண்வெளிக்கு உல்லாசப் பயணம் சென்று வர வேறு செலவு குறைந்த வழி வேண்டும் என பலர் ஆராய்ந்து வந்தார்கள்.

அதில் ஒரு முறை, விண்வெளி ஓடத்தை சூப்பர் சானிக் விமானத்தின் மூலம் சுமந்து கொண்டு காற்றுவெளியின் விளிம்பிற்குக் கொண்டு செல்வது.. பறந்து கொண்டிருக்கும் போதே விண்வெளி ஓடம் விடுபட்டு ஒரு அதிகப் பட்ச உந்து விசை (த்ரஸ்ட்) மூலம் விண்வெளியில் தப்புந்து விசை வேகத்தில் சீறிப்பாயும் வகை.

http://news.yahoo.com/s/ap/20090727/ap_on_re_us/us_space_plane

இரட்டை விமானமாகக் கட்டப்ப்பட்ட இந்த வாகனத்திற்கு வெண்குதிரை வீரன் என பெயரிட்டுள்ளனர்.

capt.19424e9de01e4107ac52ed880b078271.space_plane_wimr104.jpg


இப்பொழுதே 2 இலட்ச அமெரிக்க டாலர்கள் விலை நிர்ணயிக்கப் பட்ட 300 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

முந்திக் கொள்பவர் யாரோ?

மன்றம் ஸ்பான்சர் பண்ணினா போயிட்டு வந்து இன்னும் ஆயிரக்கணக்கில எழுதலாம்னு இருக்கேன்.. என்ன சொல்றீங்க?:icon_rollout::icon_rollout::icon_rollout:
 
Back
Top