இந்தப் பகுதியின் நோக்கமும் வரைமுறைகளும்

அமரன்

Moderator
Staff member
  • இந்தப் பகுதி முழுக்க முழுக்க சேவை நோக்கான பகுதி
  • இங்கே உண்மையாகவும் விசுவாசமாகவும் நடந்துகொள்ளுங்கள்.
  • இங்கே திரிகள் பதிக்கும் முன்னர் நிர்வாகி, பொறுப்பாளர்களுக்கு தனிமடலிட்டு அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே பதிய வேண்டும்.
  • நீங்கள் தரும் தகவல்களை/விபரங்களை உறுதிப்படுத்த முனையும் மன்ற நிர்வாகி அல்லது மன்ற நிர்வாகியால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கு ஒத்துழைப்பு வழங்குதல் அவசியம்.
  • பட்டறிவின் அடிப்படையில் கட்டமைப்பிலும் வரையறைகளிலும் மாற்றங்கள் செய்யும் உரிமை மன்ற நிர்வாகத்துக்கு உண்டு.
  • இங்கே கொடுக்கப்படும் பதிவுகளை எந்தவித முன்னறிவித்தலும் இல்லாமல் நீக்க அல்லது திருத்த நிர்வாகத்தினருக்கு முழு அதிகாரம் உண்டு.
  • உதவும் கரங்கள் பதிவுகள் சம்பந்தமாக விருப்பமில்லாமல் உறுப்பினர்களுக்கு தனிமடல் அனுப்பி தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • கூடிய வரைக்கும் உங்கள் சொந்த விபரங்களைப் பொதுவில் தருவதை தவிர்க்கவும்.
  • உங்கள் சிறு கைத்தொழில் உற்பத்திப் பொருட்களை (கைவினைப் உற்பத்திகளை, சிறு கைத்தொழில் உற்பத்திகளை) இங்கே அறிமுகப்படுத்தலாம்.
  • முன்னேறத் துடிக்கும் இளைஞரிகளின் சிறுதொழில், கைவினை பொருட்கள், மகளிர் சுய உதவி குழுக்களின் படைப்புகள், ஆதரவற்றோரின் படைப்புகள், பொருளாதாரத்தில் பின் தங்கியோரின் உற்பத்தி பொருட்களின் விளம்பரங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். பெரிய நிறுவனங்களின் அல்லது புகழ் பெற்ற நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்த அனுமதி இல்லை.
  • அறிமுகப்படுத்தும் போதும் சந்தைப்படுத்தும் போதும் படங்களை இணைக்க மறவாதீர்கள். படங்களை மன்றத்தில் பதிவேற்றிக் கொடுப்பது உகந்தது.
  • இந்த உதவிக்கரங்களின் மூலம் அறிமுகமாகும் உற்பத்தியாளர் , விற்பனையாளர் , கொள்வனவாளர்களுக்கிடையில் ஏற்படும் மன்றம் தாண்டிய பிரச்சினைகளுக்கு மன்றம் பொறுப்பேற்காது.
  • இரத்த தானம், கண் தானம், மருத்துவ முகாம், ஆதரவற்றோர் இல்லங்களுக்கான உதவிகள், ஏழை பெற்றோரின் குழந்தைகளுக்கான மருத்துவ உதவி போன்ற சமூக சேவை, தன்னார்வத் தொண்டுகள் சம்பந்தமான தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். அவ்வாறு உதவி செய்ய நினைப்பவர்கள் தாங்களாகவே முன்சென்று உதவ வேண்டும், இதற்கு மன்றம் பொறுப்பேற்காது.
 
அமரன் அவர்களே, இது ஒரு நல்ல முயற்சி. இதன்மூலம் பலர் பலனடைவார்கள் என்றே நம்புகிறேன்.

மன்றம் இந்த விஷயத்திலும் ஒரு முன்னோடியாக விளங்குகிறது என்பதற்கு இந்த உதவும் கரங்கள் இன்னுமொரு எடுத்துக்காட்டு.

பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்
 
விதிமுறைகளை தொகுத்துக் கொடுத்ததற்கு நன்றி அமரா......

அனைவரும் சரியான வழியில் இந்த பகுதியை பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம்.
 
அருமையான துவக்கம். சிறப்பாக நடைபெற்று, மன்றத்தின் பெயர் நிலைத்தோங்க வாழ்த்துகள்.
 
மிக அருமையான பகுதி. நிச்சயமாக பலருக்குப் பலனளிக்கும் திரி. மன்றம் இதிலும் முன்னோடியாகத் திகழ்வதில் சந்தோஷமும், பெருமையும் ஏற்படுகிறது.
 
விதிமுறைகள் நேர்த்தியுடன் வடிவமைத்திருக்கிறீர்கள் அமரன்.
பாராட்டுக்கள்
 
Back
Top