தேர்தல் முடிவுகள் - பார்வைகள்.

தேர்தல் முடிவுகள் உடனடி நிலவரம் இங்கே..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20213


மெகா கூட்டணி.. என்று சொல்லி.. மக்களை குழப்பிய உயர் ஜாதி நிரம்பியுள்ள அணைத்து இணைய தள ஊடகங்களின் பிரச்சாரத்தையும்..
ஆதாரமில்லாமல் திசை திருப்பி சந்தித்த இத்தேர்தலில்...
பல பத்திரிகைகள்..
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில்.. 4 தொகுதி தான் தி.மு.க விற்கு என்று வைகோபாலசுவாமி சொல்லி...வெளியிட்ட சென்னை ஆன் லைன் போன்ற இணைய தளங்கள்.. வெபுலகம்.. தட்ஸ் தமிழ் தின மலர்.. மாலை மலர்.. இன்னும் ஏராளமான உயர் வகுப்பு பிரச்சாரத்தையும் மீறி..
மெகா கூட்டணியை.. தனி ஆளாக நின்று.. பிரச்சாரத்தை கூட.. தொண்டர்கள் மட்டுமே செய்த நிலையில்..

பா.ம.க. 7 தொகுதியிலும் தோல்வி முகம்..
ம.தி.மு.க.. புலி.. தோல்வி முகம்..
இரு கம்யூனிஸ்ட் களும் அனைத்திலும் தோல்வி முகம்

மக்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்..

அ.தி.மு.க வின் தொண்டர்களும்.. உயர் வகுப்பினரும் செய்த நாடகம் தான் இந்த ஈழ பிரச்சினையை ஓட்டாக்கி கொள்ளும் பிளான்..
அதில் கூட.. மிக கேவலமான தனி மனித இழிவு தாக்குதலை.. கட்சி தலைவர்களாக இருந்த தலைவர்கள்..
ஜெ
ராமதாசு
வைகோ
தா.பாண்டியன்
வரதராஜன்

இவர்களின் கேவலமான தரம் தாழ்ந்த விமர்சனம் கலைஞரை செய்த போதும்..
தமிழர்களுக்கு..
எங்கள் தமிழின கூட்டணிக்கே வெற்றி என்று..
கர்னாடக கூட்டணியை புறந்தள்ளி..
தெலுகு கூட்டணியை புறந்தள்ளியுள்ளனர்.. தமிழர்கள்..

தற்போதைய வெற்றி அறிவிப்பு..

கள்ளகுறிச்சி..... ஆதி சங்கர்..
மதுரை......... மு.க.அழகிரி
வடசென்னை....... டி.கே.எஸ். இளங்கோவன்

இரண்டாவது முறையாக.. தொடர்ந்து..
இந்த பத்திரிகை மற்றும்.. இணைய தள.. உயர்சாதி வெறியை காட்ட.. தமிழர் என்ற அரிதாரம் பூசி..
பொய் பிரச்சாரம் செய்தனர்..

இனி அதன் நம்பிக்கை தன்மையை நாம் தான் முடிவெடுத்து கொள்ள வேண்டும்.....

ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பி.ஜே.பி தான் என்று கருத்து கணிப்பும் பொய்யாகியது..
இனியாவது.. கருத்து கணிப்புகளை அலசாமல்..
கூட்டணீ எண்ணிக்கையை மட்டும்.. எண்ணாமல்..
மக்களை குழப்பும் செயல்கலை செய்யாமல்...
எந்த இடத்தில் எந்த பிரச்சினை எழுப்பவேண்டும் என்றும்.. தெரிய வேண்டும்...

ஒரு மரியாதைக்குறிய தலைவரை.. வாய்க்கு வந்த படி மேடையில் திட்டியும்.. இணைய தளங்களில் கொச்சை படுத்தியும் நடந்து கொண்டு.. தனது.. பரம்பரைக்கு விசுவாசம் காட்டும் வேலைகள்
மாறட்டும்...
மக்கள் அமைதி புரட்சி செய்துள்ளனர்..

வெற்றி கூட்டணியில் இருந்தே ஒரு தொகுதி கூட வெற்றி முகம் இல்லை.. பா.ம.க விற்கு..
தனியாக கழட்டி அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற தமிழர்களின் கனவை..
அ.தி.மு.க..
ம.தி.மு.க...
மா.கம்யூனிஸ்ட்
இ.கம்யூனிஸ்ட்
அதரவுடன் போட்டியிட்ட.. பா.ம.கவை.. தி.மு.க வீழ்த்தியது.....

ஈழ தமிழர்களுக்காக.. ஆதங்க ப்டுவோம்..
அதை அரசியலாக்கி ஓட்டாக்கினாலும்..
அமைதியான தமிழ் நாட்டையும் நல்ல தமிழ் தலைவரையும் ஒரு கர்னாடக காரிக்காக,, இழக்க முடியாது....

இனி திருந்துவார்களா.. ஊடகவாதிகள்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
Last edited by a moderator:
முன்பை விட அதிகம் வெற்ரி.. காங்கிரசு..
இங்கே 40 கொடுத்திருந்தால்.. இன்னும் நன்றாக இருந்திருக்கும்...

கம்யூனிஸ்ட்டுகள் எதற்காக காங்கிரசை ஆதரிக்க மருத்தனரோ.. அதை இத்தேர்தலில் மருந்துக்கு கூட விளக்க வில்லை...
அதனால் தான் இந்த அடி..
ஊடக செய்திகள் இரண்டாம் முறை பொய்யானது தொடர்ந்து...


10 தொகுதியில் அ.தி.மு.க வெற்ரி பெற்றாலும் அத்கொகுதி மக்களின் அந்த மாயையும்.. வாக்குகலை வீணாகி விட்டோமோ என்ற தெளிவு தற்போது ஓடி கொண்டு இருக்கிறது..
10 தொகுதியில் வைத்து இப்பொழுது ஈழத்துக்காக எத்தனை மணி நேரமாவது பேசுகிறார்கள் என்று பார்ப்போம்.. அப்புறம் அவர்கள் தனி ஈழத்தை பெறுவதிலும்.. ராணுவத்தை அனுப்புவதையும் பார்ப்போம்..

தி.மு.கவை பொறுத்த வரை.. 10 தொகுதிகள் கிடைத்தால் கூட.. அது.. மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தது இருந்தது..
கூட்டணி கனக்கை பார்த்து..

மக்களே.. கூட்டணி கணக்கு களை உடைத்து.. எங்களுக்கு தெரியும் யார் சொன்னால் செய்வார்கள்..
யார் மீது நம்பிக்கை நம்பகதன்மை உள்ளது என்று தெளிவாக இருக்கிறார்கள்..

சும்மா.. ஊடகங்கலில் என்னமோ.. தமிழ்னாடு.. மாறி மாறி போட்டு.. இருண்ட அறைக்கு சென்றதை போல சொல்வதையும் மக்கள் ஏற்கவில்லை...

அடிதட்டு மக்களுக்கும் திட்டங்கல் சேறுகின்றது..
தொலை நோக்கு திட்டஃங்கலையும் செயல் படுத்துவது மக்களுக்கு புரிகிறது..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
கலைஞரின் பிரச்சாரம் இல்லாமல் கிடைத்த வெற்றி..
பல பொய்களுக்கு மத்தியில்..
ஜெ முன்பு சொன்னது போல...
சேலை அவிழ்த்து கொண்டு அவன் அவிழ்த்து விட்டான் என்பது போல..
இந்திய தேர்தலில் இலங்கை தமிழ்ர்களின் உணர்வை தூண்டி.. ஓட்டாக்கிய நேரத்திலும்.. அதற்கு துணை போன இரு தமிழர்களும்..
இவ்வளவு சங்கடங்களுக்கு மத்தியிலும்..
கலைஞர் மருத்துவ சிகிச்சையிலும்..
ஒவ்வொரு உடன்பிறப்புக்களும்.. தலைவரை ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு.. தானாக பிரச்சாரம் செய்தனர்..
ஒவ்வொரு தொண்டனும் கலைஞராக மாறினான்..

கலைஞரின் இடத்தை நிரப்பி.. தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்து வெற்றி கனியை பறித்த.. தளபதி.. ஸ்டாலிக்கு வாழ்த்துக்கள்..
தி.மு.க.விற்கு தலைவர் பஞ்சம் என்றும் வராது..
வாழ்த்துக்கள்.. ஸ்டாலின் மற்றும் அழகிரி அவர்களுக்கு....

மக்களுக்கு தெரிகிறது.. ஏதோ ஒரு அத்தி பூத்தார் போல் ஒரு நல்லது நடந்திருக்குமேயானால்.. அது தி.மு.க என்ற தமிழர்களின் கட்சியால் தான்..

முன்பு சொன்னது போல.. கர்னாட கூட்டணியா..
தெலுகு கூட்டணியா..
தமிழர்கள் கூட்டணியா.. என்ற போது.. மக்கள் ஏமாறாமல்.. இவ்வளவு தலைவர்கள்.. கலைஞரை தரகுறைவாக விமர்சனம் செய்த போதும்.. அமைதியுடன் ஸ்திரமாக கோபபடாமல்.. பிரச்சாரம் செய்த தி.மு.கவினரின் சாதனை பிரச்சாரத்தையும்.. கலைஞர் பிரச்சாரத்திற்கு வராத போதும்.. அவருக்கு வெற்றியை மருந்தாக அளித்துள்ளார்கள்..மக்கள்

தமிழர்களின் வாழ்க்கை..வெறும் 2 மாத கணக்கு இல்லை என்று.. ராமதாசு.. வைகோபாலசுவாமிற்கும்.. ஜெ.. கம்யூனிஸ்ட்டுகளுக்கும்.. செவிலில் அறைந்தாற்போல் சொல்லியுள்ளனர்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
ப.சிதம்பரத்தின் தோற்றுள்ளார். ம்ம். நன்றி பிரவீன்.



வருத்தமான செய்தி..தான்

மணி சங்கர் அய்யர் தோற்றால் அது நியாயம்..
தா. பாண்டியன் தோற்றால் அது நியாயம்..
வைகோ தோற்றால் அது நியாயம்...
பாம.க அனைத்து இடங்களிலும்.. தோற்றால் அது நியாயம்...
கம்யூனிஸ்ட்டுக்கள் அனைத்து இடங்களையும் தோற்றால் அது நியாயம்..

ஆனால்.. ப. சிதம்பரம் ஜனனாயகத்துடன் தேர்தல் களம் ஆற்றுபவர்..
வருத்தம் தான்..

ஆனாலும்.. காங்கிரசே ஆட்சியமைக்கும் போது அவரும் ஒரு மந்திரி தான்..
அப்பொழுது அந்த தொகுதி மக்கள்.. பாவம்... எந்த முகத்தை வைத்து கொண்டு சிதம்பரத்திடம் செல்வர்..

அப்புறம்.. இந்த பா.ம.க.. 2011 ல் ஆட்சியமைப்போம் என்றனரே..??

இன்னும் ஒன்று..ஆட்சியமைப்பாளர்களிடம் இருக்கும் சில எதிர்ப்புகலை கூட இதில் பார்க்க முடிய வில்லையே.. இத்தனை கட்சிகல் சேர்ந்தும் .. தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.. அப்படியானால் வரும் சட்ட மன்ற தேர்தலில் இன்னும் வெற்றி கூடும்


தமிழர்கள் ஒன்றை சொல்லி அடி.. மரண அடி கொடுத்துள்ளார்கள்..
ஜெ மீது அவர்கலுக்கு நம்பிக்கையிள்ளை.. அவரை திருத்தவும் முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்..
ஆனால்.. ஈழ பிரச்சினையை ஓட்டாக்கிய துரோகி.. வைகோவை.. ஒரு காங்கிரஸுகாரரால் தோற்கடித்துள்ளனர்.. மக்கள்

இதன் மூலம்.. வைகோ நீ செய்தது தவறு என்றும்.. பா.ம.க
கம்யூனிஸ்ட்க்களுக்கும்.. அறைந்து சொல்லியுள்ளனர்..

அப்புறம்.. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல்.. எவன் கேட்க போறான் என்று மக்களை சந்திக்காமல்.. காசு வாங்கி கொண்டும்.. இணையதளங்களை வைத்து மட்டும்.. கணிக்காதீர் என்றும் மக்கள்..செவிலில் அறைந்தார் போல.. படித்தவர்களுக்கும் சொல்லியுள்ளனர்..
எக்சிட் போல் என்று சொல்லி இன்று காலைவரை இவர்கள் போட்ட ஆட்டம்..அப்பப்பா.. அய்யோடா...
அடுத்த ஒரு மீட்பு போராட்டம்.. சமூக நீதி உருவாகும்..
உயர்சாதியினரின் கையில் தான் பெரும் பங்கு.. ஊடகங்கள் உள்ளது.. கலைஞர் சமூக நீதிக்கு வித்திட்டவர் என்ற ஒரு காரனத்திற்கு தான் அவர்கள் ஊடகங்களை பயன்படுத்தினர்..

ஆனால் இப்பொழுது அவர்களின் நம்பக தன்மையை இழந்துள்ளனர்...
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
Last edited by a moderator:
பா.மா.க விற்கு ஒரு இடம் கூட கிடைக்காதது மிகவும் நல்லது. இவர்கள் செய்த அரசியல் விபச்சாரத்திற்கு நல்ல அடி.

ஒரு கூட்டனியில் 5 ஆண்டுகள் இருந்து அதன் பலன்கள் அனைத்தையும் கடைசி வரை அனுபவித்து தேர்தல் ஆரம்பிக்கும் போது அணி மாறி எங்கள் கட்சி இடம்பெற்றிருக்கும் கூட்டனி தான் எப்போதும் தமிழகத்தில் வென்றிருக்கிறது என்று சொல்லி, பந்தல்கால் நடும் போது கூடவே இருந்த வைகோ-விற்கு பந்தியில் உணவு பறிமாறும் போது தவிக்க விட்டு கூட்டனியில் விரும்பும் சீட் பெற்று சென்றவர்களுக்கு நல்ல ஆப்பு.

நேற்று வரை தமிழகத்தில் நல்ல டிவி என்று பேரேடுத்த மக்கள் டிவியை கடந்த சில நாட்களாக ஒரு குறிப்பிட்ட கூட்டனிக்கு ஆதரவாகவும் இன்னொரு கூட்டனியை வரம்பில்லாமல் திட்டி தீர்த்து அரசியல் செய்தமைக்கும் கைமேல் கிடைத்த பலன் இது என்று சொல்லலாம்.

வைகோ தான் பாவம் அழுதழுது ஓட்டுக்கேட்டவரை, கடைசியில் அழுது கொண்டே இருக்க வைத்து விட்டார்கள்.

திமுகவும் நேரடியாக வெற்றி பெறவில்லை, காந்தியும் கருப்பு எம்ஜிஆரும் தான் குறுக்கு வழியில் ஜெயிக்க வைத்திருக்கின்றனர். காங்கிரஸில் போட்டியிட்ட பெருந்தலைகள் எல்லாம் தோற்றிருப்பதால், இனி காங்கிரஸ் யோசித்து அடுத்து தமிழ்நாட்டை பொறுத்தவரை என்ன செய்யலாம் என்று யோசிக்கும், இனி கலைஞர் ஆலோசனைப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 
பிரவீனினி கருத்துப்படி..

மாம்பழம் புளித்திருந்தால் தமிழக அரசியல் ஆரோக்கியமான பாதைக்குத் திரும்பியுள்ளதாகக் கருதலாம்.+

வெற்றி வாய்ப்புக் குறைந்த தொகுதிகள் என்று வை.கோ ஆதங்கப்பட்டிருந்தார். அவரில் செல்வாக்கில் பாரிய வீழ்ச்சி இல்லைப் போல் தெரிகிறது. +

ஈராண்டுகளில் வரும் தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து காங்கிரஸ் கலைஞருக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பும் உண்டு. +
 
மக்கள் ஜெயலலிதா ஈழத்தழிர்கள் மேல் வைத்த திடீர் பாசம் வெறும் ஓட்டுக்காகத்தான் என்பதை மறக்காமல் இந்த தேர்தலில் காட்டிவிட்டார்கள். இனிமேலாவது அவர் மக்களை ஏமாற்றாமல் நல்ல விஷயங்களை சொல்லி ஓட்டு கேட்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்தத்தேர்தல் கலைஞர் அவர்களுக்கு கிடைத்த வெற்றி என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
 
நம் தமிழ் மக்கள் வெகு புத்திசாலிகளாக மாறிவிட்டார்கள் என்பதையே இந்த தேர்தல் வெற்றி காண்பித்திருக்கிறது.

தமிழ் ஈழம் மேல் திடீர் அக்கறை ஜெ காட்டியது வெறும் ஓட்டிற்காகத்தான் என்பதை உணர்ந்து மக்கள் புத்திசாலித்தனமாக ஓட்டளித்திருக்கிறார்கள்.

வெறும் பணம் மட்டும் விளையாடியிருந்தால் ஏன் இளங்கோவன், தங்கபாலு, மணிசங்கர் ஐயர் ஆகியோர் தோற்கவேண்டும். சிதம்பரம் அவர்கள்கூட கடைசி நிமிடத்திலேயே வென்றுள்ளார்.

எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம் பாமகா தோற்றது. இனிமேலாவது அவர் அரசியலை வியாபாரமாக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.
 
Last edited by a moderator:
பா.ம.க தோற்றதில் எனக்கும் மிகப்பெரிய சந்தோஷம்தான் ஆரென். இனியாவது சந்தர்ப்பவாத அரசியலை அவர்கள் விட்டு விட்டு மக்களுக்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும்.

மற்றபடி மக்கள் புத்திசாலித்தனமெல்லாம் எதுவுமில்லை. money and muscle power தான் வென்றிருக்கிறது.
 
இந்தத் திரி தேர்தல் முடிவுகளைப் பற்றி அவரவர் தன் பார்வைகளைத் தர ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் யாரையும் தாக்கியோ தரக்குறைவாகவோ மற்றவர் மனம் புண்படும்படியோ எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். விருப்பப்படி எழுதுங்கள். ஆயினும் சற்றே கவனமாக வார்த்தைகளைக் கையாளுங்கள்..
 
அரசியல் எனும் சாக்கடையில்
அவ்வப்போது சில அற்புதங்களும்
அரங்கேறி நம்மை ஆச்சரியப்படுத்தும்!

மகாமெகா கூட்டணி எல்லாம்
மண்ணைக் கவ்விடவே தானிங்கே
மகத்துவம் அதுவும் நடப்பதுன்டு!

நேற்று வரையில் இல்லாத
தமிழீழ ஆதரவு கோஷங்கள்
இன்று வெடித்தது எப்படி!

அய்ந்தாண்டு காலம் அமைச்சராய்
ஆலவட்டம் போட்டு விட்டு
ஆதியையும் அந்தத்தையும் மறந்ததெப்படி!

கூட்டணி கணக்கை கச்சிதமாய்
கூட்டி கழித்து பார்த்துவிட்டு
கூடாரம் மாற்றும் போதும்

தாம் சேரும் கூட்டணியே
வெற்றிக் கூட்டணி என்று
கூக்குரல் இடுவது எப்படி!

அம்மாவை மகிழ்விக்க மேடைதோரும்
அய்யாவை அற்பாயிசில் கவிழ்த்திடுவோமென
அகங்கார வார்த்தைகளை உதிர்த்ததெப்படி!

வாக்காளர் அனைவருமே என்றும்
மறதியில் மரித்துப் போகும்
முட்டாள்களென முடிவு செய்ததெப்படி!

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
 
வெற்றி பெற்றவரை ஆதரிப்போர் மக்கள் புத்திசாலிகள் என்பதும், விரும்பாதோர் பழிகளைச் சொல்வதும் மிகவும் வழக்கமான ஒன்று..

வெற்றிகளோ தோல்விகளோ பயணத்தைத் தொடர்வதுதான் புத்திசாலிகள் உண்மையில் செய்யக் கூடிய ஒன்றாக இருக்கும்.

தேர்தலை, மக்களை, அரசியல்வாதிகளை இப்படி பிறரை புகழ்வதையும் இகழ்வதையும் விட அடுத்து என்ன என்று நோக்குவதுதான் முக்கியம்.

மக்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான் முக்கியம்..

21 தொகுதிகளில் 18-ல் வெற்றியை தி,மு,க பெற்றிருக்கிறது.
16 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது 9.
2 ல் விடுதலைச் சிறுத்தைகள் பெற்றது 1
1 ல் போட்டியிட்ட முஸ்லீம் லீக் வென்றது.

தி,மு,க வென்ற அளவிற்கு காங்கிரஸ் வெல்லவில்லை. இது கூட்டணி வதந்திகளுக்கு தி.மு.க காங்கிரஸிற்கு கொடுத்த பரிசாகவும் இருக்கலாம்,

காங்கிரஸ் இந்தியா முழுதும் ஒட்டுமொத்தமாக சற்று பலம் பெற்றிருக்கிறது.

இனி நடக்க இருப்பது மந்திரிப் பதவிகளுக்கான பேரம். தி,மு.க ஏழு மந்திரிப் பதவிகளைக் கேட்டுள்ளதாக வதந்திகள் உலவுகின்றன.

அ.தி.மு.க தூற்றுதல்களை குறைத்துக் கொண்டு 2011 நோக்கி உழைக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

பா.ம.க சுயபரிசோதனை செய்து கொள்வது முக்கியம். மக்களின் மனதை நாடி பிடிப்பதில் இருக்கும் அகந்தையைக் குறைத்துக் கொண்டு காற்றடிக்கும் திசையில் பயணிக்காமல் தங்கல் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தே.மு.தி.க தனக்கு எத்தனை சதவிகிதம் கிடைத்துள்ளது என்று ஆராய வேண்டும். பாராளுமன்ற தேர்தல் அவர்களின் இலக்கு இல்லைதான். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலுக்காக இன்று உழைக்க ஆரம்பிக்க வேண்டும்.. வளரவேண்டியது நிறைய இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் முன்னேற்றம் காட்டினால், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு அவர்களுக்கு வசதியாக இருக்கும்.

அரசியல் நண்பர்கள் துரோகம் செய்தாலும் கைவிடாத மக்களை கலைஞர் எண்ணிப் பார்த்து நன்றியுடையவராக தான் பெறும் பதவி பலத்தைக் கொண்டு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பணியாற்ற தனது கட்சியினரை வற்புறுத்த வேண்டும்.

அழகிரி எம்.பி ஆனது முரசொலி மாறனின் டெல்லி இடத்தை நிரப்ப (தயாநிதி மாறன் உதவி செய்யலாம்) என எண்ணத் தோன்றுகிறது. இதன் மூலம் வாரிசுகளுக்கு பணிகளை, பதவிகளை பாகப்பிரிவினை செய்து..கட்சியில் ஒற்றுமையைக் காத்திருக்கிறார்

தமிழகத்தில் அடுத்த தேர்தலைச் சந்திக்க அடித்தளம் போடுவேண்டிய கட்டாயம் இருப்பதால் மந்திரிகள் சற்று துடிப்புடன் செயல்படுவார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. தயாநிதி மாறன், சிதம்பரம், டி.ஆர்,பாலு, அழகிரி என வலிமை மிகுந்த மனிதர்கள் மந்திரிகளாக இருப்பதும், காங்கிரஸ் தி.மு.க என இரண்டு கட்சிகளே தமிழ் நாட்டின் சார்பில் மந்திரிப் பதவிகளைப் பெறுவதும் நல்ல வாய்ப்பைத் தரும். திருமாவளவன் அவர்களின் பணிக்கு ஒரு இணையமைச்சர் பதவி தரப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.

ஐ.டி துறைக்கு மாறன் மறுபடியும் வருவார் என்று மென்பொருள் வல்லுனர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
 
மத்தியில் அரசாங்கம் அமைக்கவே தேர்தல் நடந்தது என்படை கருத்தில் கொள்ளவேண்டும்.
மத சார்புற்ற கட்சிகளை தமிழக மக்கள் என்றும் ஆதரிப்பதில்லை...
அதனால் பெரிதான முடிவுகள் திமுக-காங்கிரஸ் கூட்டணி கிடைத்தது.
காங்கிரஸ் தலைகள்... வெற்றி பெற்றவுடன்..
தொகுதிகளை திரும்பி பார்ப்பதே கிடையாது.
உட்கட்சி குத்துகள் வேறு அதிகம்...
அதற்கான சரியான பதிலை மக்கள் கொடுத்துள்ளனர்.

பாமகவின் அரசியல் சூதாட்டம்/விபசாரத்திற்கு ஒரு நல்ல முடிவு.
கட்சியை தமிழகத்தில் அடியோடு ஒழித்தால் பலர் மகிழ்ச்சியடைவர்..
வைகோ நிலை பரிதாபம்தான்.
 
ஜனநாயகம் தோற்று பண நாயகம் வென்றிருக்கிறது என்று வை.கோ கூறியுள்ளார். அவர் எப்போதெல்லாம் ஜெயித்தாரோ, அப்போதெல்லாம் பணம் கொடுத்து தான் ஜெயித்தாரா? என்றும் யோசிக்கத் தோன்றுகிறது..

சோனியானை கேவலமான பெண்ணாகவும், இத்தாலிக்காரியாகவும் சித்தரிக்க முற்பட்டாலும், மக்கள் என்னவோ சோனியாவை தலைவராகக் கொண்ட காங்கிரஸை செயிக்க வைத்திருக்கிறார்கள்... இது சோனியாவுக்கு கிடைத்த appreciation என்றும் சொல்லலாம். (அ) காங்கிரஸை மெஜாரிட்டியாக செயிக்க வைத்தால், ஏற்கனவே முன்னேற்றப் பாதையில் செல்லும் இந்தியா மேலும் முன்னேற வாய்ப்பு என்று நினைத்து பெருவாரியான மக்கள் ஓட்டுப் போட்டார்களா என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.

அகில இந்திய அளவில், காங்கிரஸ் கூட்டணி கள்ள ஓட்டுப் போட்டுத்தான் ஜெயித்தது என்று நினைத்தால், எப்போது யார் ஜெயித்தாலும், கள்ள ஓட்டு போட்டுத்தான் ஜெயித்திருப்பார்கள் என்ற கூற்றையும் அங்கீகரிக்க வேண்டும். பெருவாரியான மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்ட பி.ஜே.பி வரும் ஐந்தாண்டு காலத்தில் காங்கிரசுக்கு நல்ல நண்பனாக இருந்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பாடுபட வேண்டும்.


கடந்த ஐந்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களே, அந்தக் கட்சியினால் நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரும் தீமை. தீவிரவாதத்துக்கு எதிரான ஓட்டு தான் மதவாதத்துக்கு ஆதரவாக கிடைத்திருக்கிறது. முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் பல்லுக்குப் பல்லென்று நினைத்தால் எல்லாரும் பொக்கவாய்க்கிழவர்கள் தான் ஆவோம்.

காங்கிரஸ் வரும் காலத்தில் குண்டுவெடிப்புகள் நடைபெறாமல், இரும்புக்கரம் கொண்டு தீவிர வாதத்தை அடக்க வேண்டும்..

பீனிக்ஸ் பறவையை உதாரணம் காட்டி, நேற்றைய ஏடுகளுக்கு பேட்டியளித்த ராமதாஸைப் பார்த்து, பீனிக்ஸ் பறவைகள் தர்ம சங்கடம் பட்டிருக்குமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

கடந்த ஐந்தாண்டு காலம் வரை கருணாநிதியுடன் காலம் தள்ளிவிட்டு, கருணாநிதி கொடுத்த உள் இட ஒதுக்கீட்டையும் அனுபவித்துவிட்டு அதற்கு நன்றி கூறுவதற்கு பதிலாக, பா.ம.க வின் கடந்த கால அரசியலைப் பார்த்து அதேபோல் நாமும் வளரலாம் என்று தப்புக் கணக்கு போட்ட மனித நேய மக்கள் கட்சிக்கு இது ஒரு சவுக்கடி.. பெருவாரியான முஸ்லிம்களே மதசாயம் கொண்ட மனித நேய மக்கள் கட்சியை ஆதரிக்கவில்லை என்பதை பெரிய மதச்சாய பி.ஜே.பி ஆதரளவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ப.சிதம்பரம் பற்றி ஒரு வரி -> நான் சென்ற நாடுகள் மற்றும் மாநிலங்களெல்லாம் ப.சிதம்பரம் நன்றாக நிதித்துறையை கவனித்தார். கடைசியில் கிடைத்த உள்துறையைக் கூட நன்றாக கவனித்தார். தமிழ்நாட்டுக்காரர் அப்படி, இப்படி ஆஹா, ஓஹோனு பேசினாங்க... ஆனா தமிழ்நாட்டைச் சேர்ந்த நம்மாளுக தான் அவரை, தமிழினத் துரோகி என்று எள்ளி நகையாடினார்கள்.. அதையும் மனதில் கொண்டு, இனியாவது கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்..

மதம், சாதி, இனம், மொழி போன்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்து ஓட்டுப் போட்ட மக்களும் வெளி வர வேண்டும்..

Comparision between South indian States -> எதெற்கெடுத்தாலும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்... தமிழன் என்று சொல்லுடா, இன்னிக்கு தலை குனிந்து நில்லுடானு சொல்ற ஆட்களோட பேச்சைக் கேட்டு, தமிழன் தன்மானம் இழந்துவிட்டான் என்று பேசுகிற பேச்சை எல்லாம் கேட்டு டென்சன் ஆகாதீங்க....

இன்னிக்கும் தென்னிந்தியாவில் இருக்கிற மாநிலங்களில், தொழில் துறை, கல்வித் துறை போன்ற பல துறைகளில் நம்ம தமிழகம் தான் நெ. 1 என்பதை மறந்துவிடாதீர்கள். எதுக்கெடுத்தாலும் கொடி பிடிக்கும் கேரளாவை அனைத்துலக தொழில் துறை முதலாளிகளும் வெறுத்ததால் தான் அங்கே, தொழில் துறை தேங்கிப்போச்சு...

என்ன பண்ணினாலும் தமிழன் ஒழுங்கா வேலைக்கு வந்திடுவானு நமக்கு ஒரு நல்ல பேரு இருக்கு... அதனால் தான் இங்கே பல தொழில் துறைகள் முளைச்சது... Compared to other states -> நம்ம கிட்ட தேவையான அளவு தண்ணி கூட இல்லை... இதையும் மீறி நம்ம சாதிச்சோம்னா நம்மகிட்ட இருந்த, எதையும் தாங்கும் இதயம் தான்... தமிழனைப் பற்றி எவன், என்ன சொன்னாலும் நமக்குள்ள ஒரு கட்டுக் கோப்பு இருந்தது...

கோவையில் இராணுவத்துக்கு எதிரா கலகம் செய்தது ஒரு குரூப், இனிமேல் ஒருபோதும் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம்... அதுவே நமது கடமை. அன்பான தமிழகம், அழகான இந்தியா, அமைதியான உலகம் உருவாக வேண்டுமெனில், நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்...
 
பதிவான 2.9 கோடி வாக்குகளில் விஜய் காந்த் 30 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருப்பதாக தெரிகிறது. சட்டசபை தேர்தலில் 8 சதவிகித ஓட்டு பெற்ற அவர் பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவிகிதம் பெற்று உயர்ந்திருக்கிறார்.
 
கருத்துகணிப்புகளை தூள்தூளாக்கி விட்டது தமிழக தேர்தல் முடிவுகள். முதலில் மக்கள் முன்பு போல் இல்லை என்பதனை மிக தெளிவாக காட்டியுள்ளனர். ஆதாவது அரசியல்வாதிகள் எதையாவது பேசி ஓட்டு சேகரிக்கும் காலம் மலையேறி விட்டது எனபதனை இது காட்டுகிறது. இதற்கு முக்கிய காரணம் மக்களின் படிப்பறிவு என்பதனை மறுக்க இயலாது. இந்த வெற்றி எதிர்பாத்தது தான் என கலைஞர் சொல்லி இருப்பதில் கண்டிப்பாக எவ்வளவு எதர்த்தம். அதாவது விதை விதைத்து நாற்று நாட்டு, களை எடுத்து நீர்பாய்ச்சி விளைய வைக்கின்றோம். அப்புறம் என்ன விளையும் அரிசி விதைத்தால் கோதுமையா விளையும் அரிசிதான் விளையும். எவ்வளவு எதார்த்தம். தி.மு.க கூட்டணியில் அரசின் நலத்திட்டங்களும் கூட்டணி சேர்ந்து விட்டன. உதாரணமாக சென்னையில் தேர்தலுக்காக பேருந்து கட்டணத்தை குறைத்தது அரசு. இந்த செயல் மக்கள் மத்தியில் தேர்தலுக்காக குறைத்து விட்டனர் என பேச்சு முதலில் எழுந்தது. அடுத்து அரசுக்கு மக்களை கண்டால் பயம் இருக்கிறதே அது போதும் என பேச்சு எழுந்தது. பின்பு எதிர்கட்சிகள் இதை தேர்தல் ஆணையத்திடம் புகார் சொல்ல உடனடியாக இந்த குறைப்பை வாபஸ் பெற்றது அரசு. இந்த செயல் மக்கள் மத்தியில் எதிர்கட்சி மீது கோபமாக கிளம்பிவிட்டது. இதுவும் ஒரு காரணம் .

இன்னும் ஒன்று விஜயகாந்த் கிட்டத்தட்ட் 10 சதவீத வாக்குகளை பிரித்து விட்டார். அவர் பிரித்தது கிட்டத்தட்ட அதிமுக வாக்குகளேயாம். இதுவும் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்து விட்டது. விஜயகாந்த் தனியாக இருந்தால் தான் இந்தளவு வாக்குகளை பிரிக்க முடியும் என கலைஞர் கணக்கு போட்டர். அதுவும் சரியாக அமைந்தது. இதுவும் ஒரு காரணம் ஆகும்.

மற்றும் ஒன்று தமிழர்களின் கனவுத்திட்டமான சேது சமுத்திர திட்டம். இதை நான் ஆட்சி வந்தால் உடனே ரத்து செய்வேன் என ஜெயலலிதா பகிரங்கமாக அதுவே தேர்தல் வாக்குறுதியாக சொன்னது மிக தவறானது. சேது சமுத்திர திட்டத்தை எதற்கு தடை செய்ய வேண்டுமாம் அங்கே ராமர் பாலம் இருக்காம். ராமர் பகவான் அல்லவா? அவர் இப்போது இதை கேட்டால் அவரே எந்த காலத்திலோ என் மனைவியை கடத்திட்டு போனவனை பிடிக்க கட்டியது. இப்போது அது எனக்கு பயன்படாது. அது ஏன் மக்களுக்கு பயன்படக்கூடாது என கூறி தான் கட்டிய ராமர்பாலத்தை தன் ராமபாணத்தால் அழித்து இருப்பர் என்பது உண்மை. ஏன்னென்றால் பகவான் மக்களுக்கு நன்மை தானே செய்வார். ராமர்பாலம் காக்கப்படும் சேது சமுத்திர திட்டம் கைவிடப்படும் என ஜெயலலிதா அறிவித்தது யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டது போல் ஆகிவிட்டது. ராமர்பாலத்தை வைத்து அரசியல் பண்ண முடியாது ஏன்னென்றால ராமர் கோயில் நிலத்தில் உள்ளது ராமர்பாலம் கடலில் உள்ளது அதுவும் ஒரு மண்மேடு தான் அங்கே போய் கரசேவை எல்லாம் செய்ய முடியாது. அப்புறம் கடல் கரசேவகர்களுக்கு இறுதி சேவை செய்து விடும் எனபது பாஜக போன்ற கட்சிகளுக்கு தேரியும் அது ஏன் ஜெயலலிதாவுக்கு தெரியவில்லை. இதுவும் ஒரு காரணம்.

மேலும் ஜெயலலிதா மூன்றாவது அணியில் இருந்தார். இது மக்கள் மனதில் இப்படியும் தோன்றி இருக்கலாம். ஆதாவது கண்டிப்பாக மூன்றாவது அணி ஆட்சி அமைக்கப்போவதில்லை. அதில் நாம் வாக்கினை செலுத்தி ஏன் வீணடிக்க வேண்டும் எனவும் மக்கள் எண்ணி இருக்கலாம்.இதுவும் ஒரு காரணம் ஆகும்.

சரி நடந்தது தான் நடந்து விட்டது தேர்தல் முடிவுகள் வந்து விட்டது. ஏதோ போனதடவை சுத்தமாக வாஷஅவுட் ஆனதற்கு இந்த தடவை ஒரு பத்து சீட்டாவது கிடைத்தே என்று நினைத்து மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என சொல்லி இருக்கவேண்டும். அதை விடுத்து ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்ப்ட்டு விட்டது, பணபலம், படைபலம், அரசியல்பலம் என ஏதோ சொல்லி பிதற்றுகிறார். ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டால் என்ன நடக்கும் என ஜெயலலிதாவுக்கு தெரியாதா? அல்லது ஓட்டு போட்டவன் எல்லா மக்கள் எல்லாம் மடையர்களா? இதுவெல்லாம் அவரின் அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. இப்படி பேசிக்கொண்டே போனால் அம்மையாரை ஆண்டவன் நினைத்தால் கூட வரும் தேர்தல்களில் ஜெயிக்க வைக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.
 
அய்யோ பாவம் தமிழ்நாட்டு மக்கள். இனியும் இதையெல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறதே.

தமிழ் மக்கள் நலனுக்காக கூட்டணியா? இல்லை தன் மக்கள் நலனுக்காக கூட்டணியா என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

கருணாநிதி கணக்கு போடுவதில் வல்லவர். சரியான கணக்கைப் போட்டு வரவை அதிகரித்துக்கொண்டார்.

அழகிரிக்கு ஒன்று,
கனிமொழிக்கு ஒன்று,
தயாநிதிக்கு ஒன்று

என அமைச்சர் பதவிகளை வாங்கவே அன்னை சோனியா என்றார். கணக்கு பலித்துவிட்டது....ஆனால் ஜனநாயகம் பல்லிளிக்கிறது.

வாழ்க ஜனநாயகம்.
 
ஒரு சமூகத்தினர் ஒன்றாக இணைந்து... பத்திரிக்கைகளில் தங்கள் எண்ணத்திற்கேற்ப கருத்து கணிப்பு வெளியிட்டனர்.

ஆனால் முடிவோ வேறுவிதம்.

தங்கள் கையிலிருக்கும் செய்தித் துறையை சரியாக பயன்படுத்தவேண்டும்..
 
Back
Top