ஆசிய கோப்பை 2012

ஆதவா

New member
நேற்றைய ஆசிய கோப்பை ஆட்டத்தைப் பார்த்தேன்.. இரண்டு அணிகளும் சிறப்பாகவே ஆடினார்கள், பாகிஸ்தானை அழகாகத் துரத்தி வந்தார்கள் பங்களாதேஷ் அணியினர். கடைசிகட்டத்தில் சொதப்பியதால் வெற்றிபெற முடியவில்லை என்றாலும் ஒரு நல்ல ஈடு கொடுத்தார்கள்.

நாளை வலிமை வாய்ந்த இலங்கையை வலிமை வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தியா எதிர்கொள்கிறது!!!
 
பங்களாதேஷ் அணிக்கு இதுவே ஒரு மிகப்பெரிய பிரச்சனை. அவர்களைப் பற்றி அவர்கள் அதிகமாக நினைப்பதே காரணம். எதிர்த்து பந்து வீசுபவர் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை என்ற நினைப்பிலேயே ஆடுகிறார்கள். இதை தவிர்த்து கொஞ்சம் கவனத்துடன் எதிர்த்து ஆடுபவர்களுக்கு மரியாதை கொடுத்து அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து விளையாடினால் நிச்சயம் குழுவை அடுத்த நிலமைக்கு எடுத்துச் செல்ல முடியும். இல்லையென்றால் இதே மாதிரி ஆரம்பம் நன்றாக இருக்கும் ஆனால் வெற்றி பெற முடியாது.
 
நாளை வலிமை வாய்ந்த இலங்கையை வலிமை வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தியா எதிர்கொள்கிறது!!!

விராட் கோலியின் உதவி அணித்தலைவர் பதவி, மூத்த வீரர்களான கம்பீர், ரெய்னாவை பாதித்து அணியின் ஒற்றுமை குலையாதிருந்தால் இந்திய அணியும் பலமான அணிதான். :)
 
நன்றாக ஆடுகிறார்கள், பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் எல்லாமே சுமாருக்கு கொஞ்சம் மேலே.. பேட்ஸ்மென்கள் பிற்பாதியில் இருந்திருந்தால் ஜெயித்திருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு நல்ல சப்போர்ட்டும் இருக்கிறது.
 
நன்றாக ஆடுகிறார்கள், பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் எல்லாமே சுமாருக்கு கொஞ்சம் மேலே.. பேட்ஸ்மென்கள் பிற்பாதியில் இருந்திருந்தால் ஜெயித்திருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு நல்ல சப்போர்ட்டும் இருக்கிறது.

முகமதப்துல்லா நின்று நிலைத்து ஷாகிப் அல் ஹசனுக்கு சப்போர்ட் பண்ணுவார் என நினைத்தேன், அவர் டக்காகி அப்சட் ஆக்கினார். :)
 
விராட் கோலியின் உதவி அணித்தலைவர் பதவி, மூத்த வீரர்களான கம்பீர், ரெய்னாவை பாதித்து அணியின் ஒற்றுமை குலையாதிருந்தால் இந்திய அணியும் பலமான அணிதான். :)

வர வர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாதிரி ஆயிடுச்சு நம்ம டீம். எல்லாருமே கேப்டன் பதவிக்கு ஆசைப்பட்டா எப்படி?
 
வர வர தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாதிரி ஆயிடுச்சு நம்ம டீம். எல்லாருமே கேப்டன் பதவிக்கு ஆசைப்பட்டா எப்படி?

ஹா, ஹ்ஹ்ஹா..!!!

என்னே ஒரு ஒரு வித்தியாசம்னா, இந்திய அணியின் தலைவர், உப தலைவர் யார் யார்னு க்ளியராக சொல்லிடுறாங்க...!!.
:lachen001::lachen001:
 
இன்றைய ஆட்டத்தில் காம்பிர் மற்றும் கோலியின் ஆட்டம் வெகு சிறப்பு. நிதானமாக இருநூறு ரன் பங்களிப்பைக் கொடுத்தார்கள் என்றாலும் கடைசி கட்டத்தில் அடித்து ஆடியிருக்கவேண்டும், (அடிக்காம ரன்னு எப்படி வரும்னு கேட்கப்படாது!!) தோனியும் ரைனாவும் சுழற்றி முன்னூறைக் கடக்க வைத்தார்கள்... ஸ்ரீலங்காவுக்கு சரியான இலக்கு இது. பார்ப்போம்...

”வழக்கம்போல சச்சின்” தவிர மற்றனைத்தும் ஓகே!!
கோலி - காம்பிர் பார்ட்னர்ஷிப் ஒரு டேஞ்சர் என்பதை பல போட்டிகளில் எதிரணியினர் பார்க்கிறார்கள்!!!
 
இந்த பிட்சில் இந்த ஓட்ட எண்ணிக்கை மிக வலுவான ஓட்ட எண்ணிக்கையே என்கிறார்கள்....

இலங்கையின் Big 3 ஐ வேகமாக ஆட்டமிழக்க வைத்தால், இந்திய அணியின் கையினுள்ளே வெற்றி வந்து விடும் என நம்புகிறேன்.
:)
 
இலங்கையின் Big 3 ஐ வேகமாக ஆட்டமிழக்க வைத்தால், இந்திய அணியின் கையினுள்ளே வெற்றி வந்து விடும் என நம்புகிறேன்.
:)

இன்னும் பிக் 2 மட்டும் பிக் செய்யவேண்டும்
 
ஜெயவர்த்தனாஆஆ.....!!!!

மனுஷர் என்னா அடி அடிக்கிறார்..........!!! :mini023:
 
எப்படியோ தமிழக் காங்கிரஸ் இங்கையாவது ஜெயிச்சுட்டாங்க போல....நான் பாக்கலக் கேட்டேன்.
 
எப்படியோ தமிழக் காங்கிரஸ் இங்கையாவது ஜெயிச்சுட்டாங்க போல....நான் பாக்கலக் கேட்டேன்.

விஷயம் அத்தனையும் தெரியுது ஆனால் பார்க்கமாட்டேன் என்கிறீர்கள்.
 
அதான் சொல்லிட்டமில்ல.....பாக்கமாட்டோமில்ல.....ஹா...ஹா....!!!
 
இது ஒரு அவஸ்தை ஆரென். மனசுபூரா...நம்மப் பசங்க எப்படி விளையாடுறாங்கன்னு தவிக்கும்.....ஆனா பாத்தா.....கோபம் வரும்....பாக்காம இருக்கவும் முடியாது.....செண்டிமெண்ட் இடியட்டுங்க நான்.
 
கடைசி வாக்கியம் முற்றிலும் சரியானது சிவாஜி.

எங்கள் வீட்டில் கிரிக்கெட் மாட்சிற்கு சந்தா கட்டுகிறேன் ஆனால் பார்ப்பதில்லை. ஏனோ இந்தியா விளையாடும்போதெல்லாம் வெளியே வேலையை வைத்துக்கொண்டு போய்விடுகிறேன்.
 
சென்டிமென்ட் இடியட் நிறைய உண்டு.அது தானெ தேவை நம்முடைய அணிக்கு
 
சென்டிமென்ட் இடியட் நிறைய உண்டு.அது தானெ தேவை நம்முடைய அணிக்கு

நான் சென்டிமென்ட் பார்ப்பதில்லை ஆனால் இந்திய அணி சரியாக ஆடவில்லையென்றால் என்னுடைய பிபீ ஏறி என்னுடைய உடம் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. அதனாலேயே பார்ப்பதில்லை.
 
நான் சென்டிமென்ட் பார்ப்பதில்லை ஆனால் இந்திய அணி சரியாக ஆடவில்லையென்றால் என்னுடைய பிபீ ஏறி என்னுடைய உடம் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. அதனாலேயே பார்ப்பதில்லை.

2003 உலகக் கோப்பையில் சச்சின் 4 ரன்னில் அவுட் ஆகும்போது நெஞ்சே அடைத்துவிட்டது.... அவ்வளவு தீவிரமாகவா பார்க்கிறேன்/???

இப்போது கொஞ்சமல்ல, நிறையவே மாறியிருக்கிறேன் என்றாலும் சிலசமயங்களில் திக் திக் ஐ தவிர்க்க முடியவில்லை, அதிலும் கிரிகெட் பார்த்து யாராவது நெஞ்சுவலியில் இறந்தார்களேயானால் அதற்கு தோனிதான் காரணமாக இருக்க முடியும், பயபுள்ள 49.6 ல்தான் ஜெயிக்கிறேன் என்கிறார்!!!
 
Back
Top