ஆதவா
New member
எத்தனை கோழிகள் எத்தனை சேவல்கள்??? மகளீருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கினீர்களா??? அப்புறமா அதுங்க கோர்ட்டு படி ஏறி இறங்க வைச்சிடும்.
------------------------
நிலை மாறுபடுவது கண்டு மகிழ்ச்சி. ஆனால் தொடரவேண்டும். ஓரிடத்தில் தேங்கும் பணம் பகிரப்படவேண்டும். அது பணமாக என்றல்ல. சேவையாக அல்லது தகுந்த பொருளாதார பொருளாக. சில இலவசங்களை போட்டிக்கு சொல்லியிருப்பார்கள். காரணம் அந்த இலவசங்களுக்காகவே ஓட்டுப்போடும் மக்கள் இருக்கிறார்கள் ஆதவா. நீங்கள் ஒரு போட்டியில் நிற்கும் போது ஒருவர் செய்வதை சமப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதை சொல்லியே வாக்கு வாங்கிவிடுவார்களே...........
----------------
விலை வாசி அதிகரிப்பதில் தவறு அல்ல. அது விவசாயிகளில் கைகளில் இருக்க வேண்டும். மாறாக இடைத்தரகர்களின் கைகளில் அல்ல. இது தான் தெற்காசிய நாடுகளின் நிலை. எனக்கு மற்ற நாடுகளை பற்றி தெரியாது. அவுஸ்திரேலியாவில் விவசாயிகள் தான் மில்லியனர்ஸ். பெராரி வைத்து ஓடுமளவுக்கு பணக்காரர்கள் கூட உள்ளார்கள். அன்று அலுவலகம் வந்த ஒரு வாடிக்கையாளர் சேறு படிந்த பூட்ஸ் உடன் வந்தார். வந்தது லம்போகனி வாகனத்தில்.
இதே இலங்கை இந்தியாவில் ஹீரோகொண்டா கூட வாங்க முடியாத நிலை... இந்த அடிப்படை தான் மாறவேண்டும்.
அன்பு... இல்லாதவர்களுக்குக் கொடுப்பதில் எந்த தவறுமில்லை. இன்னும் சொல்லப் போனால் டிவி இல்லாத வீடே இல்லையென ஆகிவிட்டது.. ஆனால் அது அத்தியாவசியமல்ல. அதேசமயம் மிக்ஸி கிரைண்டர் தருவதில் எந்த பிரச்சனையுமில்லைதான்.. இருப்பினும் உள்ளவர்களுக்கே தருவதில் என்ன பிரயோசனமிருக்கிறது? ரேஷன் கார்ட் வைத்திருக்கும் பணக்காரர்கள் மிக்ஸியையும் கிரைண்டரையும் இலவசமாகப் பெறுவதால் பொதுமக்களுக்கு நட்டம் தானே? ஏனெனில் தொலைக்காட்சிப்பெட்டி அப்படித்தான் தரப்பட்டது. (அதன்பின்னே பல காரணங்கள் இருந்தன.)
இடைத்தரகர்கள் இல்லையென்றால் இந்தியாவே இல்லைங்க.. அப்படி வளர்த்து வெச்சிருக்காங்க.