தேர்தல்(இலவச) அறிக்கைகள் 2011

இலவசமாக மாத சோம்பெறி ஊதயம்
இளவசமாக இரண்டடுக்கு வீடு
ஏசி, கார் (கருக்கு பெட்ரோல் )
இலவச சீட்டு கட்டு
தாயக்கட்டை

17. இலவச சரக்கு
18. இலவச சைட் டிஷ்!

எனக்கு தண்ணி போட்டா உடனே தம் அடிக்கனும், தம் அடிச்ச உடனே :D இதையும் சேர்த்து கொடுத்தா வசதியாக்கும்....
 
இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
வழக்கின் நோக்கம் நல்லதுதான். ஆனால் வலுவில்லாதது. நீதி மன்றத்தில் இது ஜெயிக்காது என்று தெரிகிறது. மக்கள் நலதிட்டம் என்ற பெயரில் தான் செய்கிறார்கள். இதை தடுக்க முடியாது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை தேர்தல் முடிவுகளையும் நிறுத்தி வைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.
தேர்தல் நடக்கும் போதும் (முடியும் வரையில்) அதற்க்கு குறிக்கீடு செய்யும் வகையில் நீதிமன்றங்கள் செயல்பட கூடாது என்று உச்சநீதிமன்றம் பல காலத்துக்கு முன்பே ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கிறது.

மொத்ததில் மக்களை கவரும் இலவசங்கள் மட்டுமே கொண்டது தி முக அறிக்கை,இலவசங்கள் மூலம் மக்களை கவர்ந்தாலும் எதிர்கால சமூகம் குறித்த திட்டமிடலும் இணைந்தே வழங்கப்பட்டது அதிமுக அறிக்கை!
சொன்னதை ஏற்று கொள்ளும் வகையில் தான் உள்ளது. ஆனாலும் இத்தனை இலவசங்களை வழங்கினால் நிச்சயம் நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியாதே.
கொடுமை என்னவென்றால் இதையெல்லாம் விளக்கமாக எடுத்து சொல்ல திறமையான ஆட்கள் அதிமுக வில் இல்லாதது தான்
உன்மை, ஆனால் மக்களுக்கு எதிர்கால நன்மை திட்டம் எல்லாம் எடுத்து சொன்னால் புரியாது. அதை புரிந்து கொன்டு ஓட்டும் போடும் மக்கள் இல்லை. அதனால் மக்களுக்கு தருவதை மட்டுமே சொல்லி கொன்டு இருப்பாங்க. அதிமுகாவில் ஆட்கள் இல்லை அதுக்கு திறமையான துதிபாடாத மீடியாவும் இல்லாதது பெரிய குறைதான்.


அடுத்தது பாஜ கட்சியின் தேர்தல் அறிக்கை எனக்கு ஓரளவுக்கு பிடித்தது. ஆனால் பாவம் அவர்களும் இலவசங்களை அறித்து நாங்களும் உங்களை முட்டாளாக்குகிறோம் மடையன்களா வேற வழி இல்லை என்று சொன்ன மாதிரி இருக்கு.

தமிழர்களின் உண்மையான புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்.
இந்த அறிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. திமுக ஆட்சியை நான் வெறுத்ததுக்கு சித்திரை 1 புத்தான்டு இல்லை என்று சொன்ன காரனமும் ஒன்று.

மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பது தடை செய்யப்படும்.
அரசே சூப்பர் மார்க் கெட் நடத்தும்.
மிகவும் வரவேற்க்க தரும் திட்டம். ஆனால் இது இ ந்தியா அளவில் திவிரமாக செயல்படுத்த வேன்டும். வெவ்வேறு பெயர்களில் மரபு மாற்றம் செய்த விதைகள் வருகிறது.
அரசே சூப்பர் மார்க் கெட் நடத்தும்.
நல்ல திட்டமா தான் தெரியுது. ஆனால் இதில் விளக்கமாக இல்லையே.

பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.
இது தேவை இல்லாத அறிக்கை. பூரன மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும் மதுபானம் அருந்துவது என்பது ஒருவரின் தனி பட்ட விசயம் அதில் தலையிடுவது நல்லதல்ல. விழிப்புனர்வு பிரச்சாரம் மூலம் மக்களை நல்வழி படுத்தலாம் அதை விட்டு விட்டு தினிப்பது மிரட்டுவது கூடாது.

அதுவரை விவசாயிகள் நலன்கருதி கள் இறக்க அனுமதிக்கப்படும்.
இந்த ஒரே காரனத்துகாக பஜாவுக்கு ஒரு ஓ போடக்லாம். விவசாயிகளின் பல நாள் கோரிக்கை இது. மேலும் இது விவசாயி நலன் மட்டுமல்ல. மக்கள் நலனும் இருக்கிறது. கள்ளு மதுபானம் அல்ல அது உடலுக்கு நல்லது செய்யும் ஒரு பொருள் தான் என்று தீவிரமாக நம்பும் இனத்தை சேர்ந்தவன் நான்.
கள்ளு மட்டுமல்ல என்னை கேட்டால் சாராயத்தையும் விற்க அனுமதிக்கலாம் (பீர் பிராந்தி விஸ்கி ரம் இவற்றை விற்க அனுமதிக்கும் போது லோக்கல் பிசினஸை மட்டும் தடை போடுவதில் எந்த நியாமும் இல்லை)

பஜா அறிவிப்பு என்னை கவர்ந்திருக்கிறது. நான் ஒரு பாஜக அபிமானியும் கூட ஆனால் இந்த முறை நானும் பாஜக கட்சிக்கு ஓட்டு போட தயங்குகிறேன். இப்போதைக்கு மக்கள் நலனுக்கு அதிக கேடு என்று நான் நினைக்கும் ஒரு திராவிட கட்சி ஆட்சியை பிடிக்காமல் தடுக்க வேன்டும் என்றால் இன்னொரு திராவிட கட்சிக்கு (அதுவும் எனக்கு பிடிக்காவிட்டாலும்) ஓட்டு போட வேன்டிய சூல்நிலை இருக்கு.
 
இப்படி இலவசங்கள் கொடுக்கிரத விட்டுவிட்டு காலையில நாலு இட்லி ஒரு கெட்டி சட்னி ,மதியம் முழு சாப்பாடு இரவு நாலு பரோட்டா சிக்கன் குருமா இப்படி வீடுக்கு வீடு நமது அரசு டோர் டெலிவரி செய்தால் காலை ஆட்டிகிட்டே டிவி ல படம் பார்க்கலாம் ..மக்கள் காலா காலத்துக்கும் நன்றியோடு இருப்பார்கள் ..இதன் மூலம் அரசு ஊழியர்களின் வேலை வாய்ப்பு பெருகும்...இப்படியெல்லாம் சிந்திக்கிறதா விட்டுட்டு ஏன் தான் இப்படி பண் ற்றான்களோ?
 
முரளி ராஜா,,,,,நான்கூடத்தான் மக்களுக்கு அனைவருக்கும் வீட்டுக்கு வீடு இலவசம்னு சொல்லலாம்.ஆனா கொடுக்கொனும்ல...இந்தம்மா இதுவரை என்னத்த கொடுத்துச்சு...இரண்டுமுறை ஆட்சியில் மக்களுக்கு கொடுத்துச்சு....கைதுகள்,வேலை நியமனதடைச்சட்டம்,குலதெய்வத்துக்கு கிடவெட்டுவதை தடுத்தல்,மந்திரிகளுக்கு செருப்படி சசிகலா செருப்பில்,அவங்க கார் டயரை தொட்டுக்கும்பிடும் பாண்டுரங்கன் மந்திரிக்கு சபாஷ்கள்,அரசு ஊழியர் குவார்ட்டஸை இரவோடு இரவாக காலி பண்ணவைத்தது,13,000 ஊழியரை நீக்கியது....இன்னும் சொல்லலாம்.....மூச்சு வாங்குதுங்க
 
ஏழைகளுக்கு உதவும் அரசை எப்போதுமே மத்திய வர்க்கமும் மேல் வர்க்கமும் கீழே இறக்குவதற்கு அனைத்து யந்திரங்களும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன...என்பதை தற்போது ஏழை ஜனங்களும் கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.
 
அ.தி.மு.க.வின் இலவசங்களைக் கண்டு அதிர்ந்துபோன தி.மு.க.தலைவர் சோகத்தில் ஆழ்ந்திருந்தார்.தளபதியார் மெல்ல அவரை நெருங்கி

"தந்தையே! தங்களுடைய முகவாட்டத்திற்கு என்ன காரணம்?"

"தம்பி! மாற்று முகாமில் வீட்டுக்கு வீடு ஆடுமாடுகளை இலவசமாய்த் தருவதாக அறிவித்துள்ளனர்.இது கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவிடுமோ என்று அஞ்சுகிறேன்."

"தந்தையே! இதற்கு மாற்றுத்திட்டம் ஒன்றை மனதிலே எண்ணியுள்ளேன்
தாங்கள் அனுமதித்தால் சொல்லுகிறேன்."

"அப்படியா!சீக்கிரம் சொல்லி என் சிந்தையைக் குளிர்விப்பாய்!"

"தி.மு.க. ஆட்சிக்கு வருமானால் வீட்டுக்கு ஒரு யானை இலவசம் என்று
அறிவிப்பு செய்திடலாம்!"

"மகனே! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?" என்று சொல்லித் தன்மகனை
மகிழ்ச்சியுடன் கட்டித்தழுவினார் தமிழ் இனத்தலைவர்.
 
வீட்டுக்கு ஒரு யானை இலவசம் என்று
அறிவிப்பு செய்திடலாம்!"

இந்த விஷயத்தை ஆர்ம்ஸ்ட்டிராங்கை விட்டு செல்வி.மாயாவதி அம்மாவிற்க்கு சொல்ல சொல்லலாம்.
நமது நண்பருக்கும் B.S.Pயில் ஓரு பதவி கொடுத்து எக்மோரில் ஓரு ஏரியா பிரித்து தருவார்கள்.

நல்லாதான் யோசிக்கிறாங்கப்பா.

கேரளத்திலும் நம்ம வாசனை அடிக்க ஆரம்பித்துவிட்டது.
நம் நண்பரின் இந்த யோசனையை கேட்டால் நம்ம நடிகர் 'ஜெயராம்' கூட இதை சொல்லி தேர்தலில் நிற்க நினைத்தாலும் நினைக்கலாம்
 
தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரான பிறகு தன் தொகுதிக்குச் சென்றார் எம்.எல்.ஏ. ஒருவர். மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு

ஏழைகளுக்குத் "தங்க வீடுகள்" இலவசமாகக் கட்டித் தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டுத் தற்போது "கான்கிரீட் வீடுகள்"கட்டித் தருவது நியாயமா? என்று கேட்டனர்.

அமைச்சர்: " ஐயோ! நான் ஏழைகளுக்குத் தங்க வீடுகள் அதாவது தங்குவதற்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்றல்லவா சொன்னேன்!"
 
Last edited:
தொண்டர்1: தேர்தல்ல ஜெயிச்சா மிக்ஸி,கிரைண்டர், வாஷிங்மெஷின் தரேனுட்டு இப்ப தலைவர் ஜோடிங்களுக்கு இலவச திருமணம் பண்ணி வைக்கிறாரு.

தொண்டர்2: மாப்பிள்ளையத்தான் அவரு சூசகமா சொன்னாராம்.

தொண்டர்1:?????????
 
முதியவர்1: நமக்கெல்லாம் இலவச பஸ்பாஸ் தராங்களாம். பஸ்ஸுல*
தமிழ்நாடு முழுவதும் இலவசமா சுத்தலாம்!

முதியவர்2:அப்படியே இலவச ஹோட்டல் பாஸ் கொடுத்தாங்கன்னா நல்லா இருக்கும்.ஹோட்டல்ல புகுந்து இஷ்டத்துக்கு நாம சாப்பிடலாம்!
 
முரளி ராஜா,,,,,நான்கூடத்தான் மக்களுக்கு அனைவருக்கும் வீட்டுக்கு வீடு இலவசம்னு சொல்லலாம்.ஆனா கொடுக்கொனும்ல...இந்தம்மா இதுவரை என்னத்த கொடுத்துச்சு..

எனக்கு ஒண்ணு மட்டும் புரியலை நண்பர்களே, இதுவரை ஆட்சியிலுள்ளவர்களும் சரி, ஆட்சிக்கு வருபவர்களும் சரி, எங்களை ஆட்சிக்கு வர வைத்தால் அது தருவோம் இது தருவோம் எங்கிறாங்களே...??, அப்படிக் கொடுப்பதை எங்கிருந்து எடுத்துக் கொடுப்பாங்கனு யாருக்காவது தெரியுமா...??

கொடுப்பதை மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தால், அதனை அம்மா தான் கொடுத்தா..?, ஐயாதான் கொடுத்தார்னு உரிமை கொண்டாடுவது எந்த வகையில் நியாயம்...??

தாம் சொந்தமாக(!) உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து யாராவது எடுத்துக் கொடுத்தால், சென்ற தடவை நான் தந்தேன் இந்த தடவையும் வாக்களியுங்கள் எனக் கேட்கலாம், அல்லாது போனால்......!!!!!!!!!!!!????????????????
 
என்னைப் பொறுத்தமட்டில் இலவசங்கள் தாறோம் என்று சொல்லி விட்டு தராமல் ஏமாற்றும் அரசியல்வாதிகளை போற்றலாம், அதே அளவில் ஊழல் செய்யாதவரை!
 
இலவசங்கள் தருவதாகச் சொல்லிவிட்டுத் தராமல் ஏமாற்றுவதும் ஒரு வகையான ஊழல்தானே!
 
இலவசமில்லாம தாத்தாவால சிந்திக்கவே முடியாதா......அடக் கூறுகெட்டவிங்களே...மக்கள ஒழைக்க விடுங்கய்யா......!!!!
சிவாஜீ
இப்ப ........
உங்க நடு நிலையை இனி தான் கானனும்..

உங்கள் நடுனிலையை இனி பார்ப்போம்...
 
சென்றவாரம் ரேஷனில் இலவச அரிசி வீட்டுக்கு வாங்கி வந்தோம். ரேஷனில் அரிசி வாங்குவது இது முதன்முறையல்ல. சென்ற திமுக ஆட்சியின் போதும் 1 ரூபாய் அரிசி வாங்கியிருக்கிறோம். ஆனால் அப்போதெல்லாம் அது கோழித்தீவனமாகத்தான் உபயோகப்பட்டிருக்கிறது. இம்முறை அரிசி மிக நன்றாக இருந்தது. பழைய திமுக ஆட்சிகால அரிசியையும் இம்முறை வாங்கின அரிசியையும் கவனித்தோம்.... ரேஷன் அரிசி என்றாலே வரும் ஒரு புளுத்த வாடை புதியதில் இல்லை. சாப்பாடு கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் கடையில் 36 ரூபாய்க்கு வாங்கும் அரிசியை விடவும் ருசியாக இருந்தது. இதேமாதிரி அரிசி தொடர்ந்தால் நிச்சயம் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் இந்த ஆட்சியின் மேல் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்போம்..

எனினும் மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மேலெல்லாம் உடன்பாடு கிடையாது...
 
இனி கோழி நிலை அதோகெதி தானா?..

கோழிகள்னு (அல்லது சேவல்கள்னு) சொல்லுங்க அன்பு... மொத்தம் பத்து இருக்கு. :)

கோழிங்க இப்பல்லாம் அரிசியை சாப்பிடறதேயில்ல, அதோட உணவு பழக்க வழக்கமே மாறிப்போச்சு, கருவாடு, தக்காளி, தேங்காய், கீரைவகைகள், வெங்காயம், மாமிசம், போன்ற ஐட்டங்களைத்தான் திங்கறேங்குதுக..
 
எத்தனை கோழிகள் எத்தனை சேவல்கள்??? மகளீருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கினீர்களா??? அப்புறமா அதுங்க கோர்ட்டு படி ஏறி இறங்க வைச்சிடும். :D :D :D
------------------------
நிலை மாறுபடுவது கண்டு மகிழ்ச்சி. ஆனால் தொடரவேண்டும். ஓரிடத்தில் தேங்கும் பணம் பகிரப்படவேண்டும். அது பணமாக என்றல்ல. சேவையாக அல்லது தகுந்த பொருளாதார பொருளாக. சில இலவசங்களை போட்டிக்கு சொல்லியிருப்பார்கள். காரணம் அந்த இலவசங்களுக்காகவே ஓட்டுப்போடும் மக்கள் இருக்கிறார்கள் ஆதவா. நீங்கள் ஒரு போட்டியில் நிற்கும் போது ஒருவர் செய்வதை சமப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதை சொல்லியே வாக்கு வாங்கிவிடுவார்களே...........
----------------

விலை வாசி அதிகரிப்பதில் தவறு அல்ல. அது விவசாயிகளில் கைகளில் இருக்க வேண்டும். மாறாக இடைத்தரகர்களின் கைகளில் அல்ல. இது தான் தெற்காசிய நாடுகளின் நிலை. எனக்கு மற்ற நாடுகளை பற்றி தெரியாது. அவுஸ்திரேலியாவில் விவசாயிகள் தான் மில்லியனர்ஸ். பெராரி வைத்து ஓடுமளவுக்கு பணக்காரர்கள் கூட உள்ளார்கள். அன்று அலுவலகம் வந்த ஒரு வாடிக்கையாளர் சேறு படிந்த பூட்ஸ் உடன் வந்தார். வந்தது லம்போகனி வாகனத்தில்.

இதே இலங்கை இந்தியாவில் ஹீரோகொண்டா கூட வாங்க முடியாத நிலை... இந்த அடிப்படை தான் மாறவேண்டும்.
 
Back
Top