தேர்தல்(இலவச) அறிக்கைகள் 2011

திமுக தேர்தல் அறிக்கை
images


ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி
முதியவர்களுக்கு டவுன்பஸ்களில் இலவச பயணம்
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்
பெண்களுக்கு இலவச கிரைண்டர்




தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின்படி `கிரைண்டர்' அல்லது `மிக்சி' இலவசமாக வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை, மார்ச்.20- தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.

கருணாநிதி வெளியிட்டார்

தி.மு.க. தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட அதனை பொதுச் செயலாளர் க.அன்பழகன் பெற்றுக் கொண்டார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதனை கருணாநிதி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

இலவச கிரைண்டர்

பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம். இதன் மூலம் 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.

தாய்மார்களின் சிரமங் களை பெரிதும் அறிந்துள்ள தி.மு.க. கடந்த முறை அவர்களுக்காக இலவச கலர் டி.வி. வழங்கியதுபோல- இந்த முறை அவர்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்சி என்ற இரண்டில் ஒன்றை அவர்களது விருப்பம்போல வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.

கர்ப்பிணிப் பெண்களுக் கான நிதி உதவியை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.

திருமண நிதி உதவி

திருமண நிதி உதவியை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி மானியம் ரூ.75 ஆயிரம் என்பது ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.

மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ரூ.2 லட்சம் மானியம்

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருமானத்திற்கு வழி வகுக்கக்கூடிய பொருளாதார திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளை ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்க நடவடிக்கை எடுப்போம்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் ரூ.21/2 லட்சம் கடனுதவி; ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டு அவற்றில் ரூ.2 லட்சத்தை மானியமாக வழங்குவோம்.

விசைப்படகுக்கு மாதந்தோறும் மானிய விலையில் வழங்கும் டீசல் 1500 லிட்டரில் இருந்து 2000 லிட்டராகவும், நாட்டுப் படகுக்கு 300 லிட்டரிலிருந்து 500 லிட்டராகவும் வழங்க வகை செய்வோம்.

இலவச லேப்டாப்

அரசு கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயில வரும்; பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர்க்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்குவோம்.

இலவச பஸ் பாஸ்

60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கு அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500லிருந்து ரூ.750 ஆக வழங்குவோம்.

நெசவாளர்கள்

கூட்டுறவு சங்கங்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த 60 வயதான அனைத்து நெசவாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவோம். கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 100 யூனிட் என்பது 200 யூனிட்டாக உயர்த்துவோம். புதிய விசைத்தறி நிறுவனம் அமைப்பவர்களுக்கு வங்கி கடனுக்கு வட்டி மானியம் வழங்குவோம். மூடிக் கிடக்கும் 13 கூட்டுறவு நூற்பாலைகளில் 5 ஆலைகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொள்வோம். பட்டு துணிகளுக்கு ஆண்டு முழுவதும் 10 சதவிகித சிறப்பு தள்ளுபடி மானியம் வழங்குவோம்.

திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற பகுதிகளில் சாயக் கழிவு நீரை ஆவியாக்கும் முறையை பயன்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வோம்.

தலித் கிறித்தவர்களும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சிறுபான்மை சமுதாயத்தினருக்கான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.

மகப்பேறு விடுப்பு 4 மாதங்கள்

சென்னை - பெங்களூர் - மதுரை - கன்னியாகுமரி போன்ற சிறப்பு வழித்தடங்களை ஏற்படுத்துவோம். கந்து வட்டி கொடுமை நீங்க வழிவகை காண்போம்.

திருக்கோயில்களின் இடங்களை பாதுகாப்பதற்கும், கோயில்களுக்கு வருவாய் ஈட்டக்கூடிய வகையில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக, ``நில வங்கி'' ஒன்றை நிறுவுவோம்.

ஆறாவது ஊதியக்குழு மற்றும் ஒரு நபர் குழுவினால் களையப்படாமல் எஞ்சியிருக்கும் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாகக் களைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். மார்ச், ஜுன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களின் இறுதியில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கும் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கிடுவோம். மகப்பேறு விடுப்பு 4 மாதங்களாக உயர்த்தப்படும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் உப்பு மானிய விலையில் வழங்குவோம். விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து இலவச கலர் டி.வி., எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கப்படும்.

மணல் கடத்தல், அரிசி கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிப்பதற்கு சட்டரீதியான வழிவகை காண்போம்.

இளநீர், பதநீர் போன்றவற்றின் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் கமிஷனுடைய பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.

இந்த தேர்தல் அறிக்கையினை பற்றி நமது மன்ற உறுப்பினர்கள்
விவாதிக்கலாமே
 
Last edited:
மக்களை முட்டாளாகவும் ஏழையாகவும் எப்பவும் இருக்கோணும் அப்பதானே இவர்கள் பொழப்பு நடக்கும் - இலவசம் நிறுத்தினால் தான் நாடு கொஞ்சமாவது முன்னேறும் - மீனை இலவசமாக சாப்பிட கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதே சிறந்தது -
படிப்பை இலவசமாக கொடுக்கலாம் அதை செய்ய மாட்டார்கள் என்நா அரசியல் வியாதிகள் தன் கையால் தனது கண்ணை குத்திகொல்வதர்க்கு சமம் அல்லவா.
 
தாய்மார்களின் சிரமங் களை பெரிதும் அறிந்துள்ள தி.மு.க. கடந்த முறை அவர்களுக்காக இலவச கலர் டி.வி. வழங்கியதுபோல- இந்த முறை அவர்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்சி என்ற இரண்டில் ஒன்றை அவர்களது விருப்பம்போல வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்..

அதை பயன் படுத்த மின்சாரம் கிடைக்குமா?

பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம். இதன் மூலம் 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்..


எங்களை சோம்பேறியாக வைப்பதில் உங்களை மிஞ்ச எவரும் இல்லைங்கோ

மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது...

கடந்த ஐந்து முறை ஆட்சியில் இருந்து முடியாதை இப்ப ஆறாவது முறை வந்து சாதிக்க போறங்களாம்

வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருமானத்திற்கு வழி வகுக்கக்கூடிய பொருளாதார திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளை ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்க நடவடிக்கை எடுப்போம்....


ஒரு பக்கம் இலவசம் இன்னொரு பக்கம் இப்படியா

விசைப்படகுக்கு மாதந்தோறும் மானிய விலையில் வழங்கும் டீசல் 1500 லிட்டரில் இருந்து 2000 லிட்டராகவும், நாட்டுப் படகுக்கு 300 லிட்டரிலிருந்து 500 லிட்டராகவும் வழங்க வகை செய்வோம்.....


எந்த புண்ணியவானோ? பயன் பெற போறார்

அரசு கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயில வரும்; பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர்க்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்குவோம்.

அப்படியே இனைய கனைக்க்சனும் கொடுத்தின்கினா புண்ணியமா போகும்
 
இலவசமில்லாம தாத்தாவால சிந்திக்கவே முடியாதா......அடக் கூறுகெட்டவிங்களே...மக்கள ஒழைக்க விடுங்கய்யா......!!!!
 
அந்த மஞ்சத்துண்டு அசிங்கத்த மொதல்ல இந்தப் பதிவுலருந்து தூக்குங்கய்யா....பாக்கப் பாக்க ரத்தம் கொதிக்குது.....என் லேப்டாப்பைக் கழுவனும் இப்ப....!!!
 
தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், பல இலவசங்களை வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் இடம் பெற உள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும்.
* ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலி இலவசம்.
* விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின் வழங்கப்படும்.
* அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போன் வழங்கப்படும்.
* ஆறாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்.
* கூலித் தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச சைக்கிள்.
* அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை.
* அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக அரசின் சார்பில் கேபிள், "டிவி' இணைப்பு வழங்கப்படும்.
* குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும், 30 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
* குடும்ப அடடைதாரர்கள் அனைவருக்கும் மாதம் ஒரு லிட்டர் இலவச மண்ணெண்ணெய்.
* அனைத்து சமுதாய மாணவ, மாணவியருக்கும் இலவச கல்வி உதவித்தொகை.
* மாணவ, மாணவியருக்கு தகுதி அடிப்படையில் இலவச, "லேப்-டாப்' வழங்கப்படும்.
* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* அரசு மருத்துவ காப்பீட்டுத் தொகை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க., வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில், அதிகாரப்பூர்வமாக இவையெல்லாம் இடம்பெற உள்ளன.

நன்றி: தினமலர்

இவைகளுக்கு பெயர் இலவசங்கள் இல்லையென்று சில நண்பர்கள் சொல்லக்கூடும்.

 
என்னங்க இது அநியாயம்...

எல்லாருக்கும் இலவச நெட்புக்....
அப்புறம் வீட்டுக்கு ஒரு செயற்கைக்கோள் தருவாங்கன்னு ல நினைச்சேன்..:eek:
கவுத்திட்டாங்களே!!!

:medium-smiley-100:
 
அந்த மஞ்சத்துண்டு அசிங்கத்த மொதல்ல இந்தப் பதிவுலருந்து தூக்குங்கய்யா....பாக்கப் பாக்க ரத்தம் கொதிக்குது.....என் லேப்டாப்பைக் கழுவனும் இப்ப....!!!

அய்யாவோட அறிக்கைக்கே இப்படி கொதிச்சா, கவுதமனின் அடுத்த பதிவை படித்தபின் என்னாயிருக்கும். லேப்டாப்பு!
 
அப்படியே இனைய கனைக்க்சனும் கொடுத்தின்கினா புண்ணியமா போகும்

அப்ப உங்களுக்கும் ஏதாவது ஒசி கொடுக்கனும். ரொம்ப யோக்கியம் தான் போங்க.

உங்களுக்கு தேவையானது ஓசியில கிடைக்கனும், மத்தவங்களுக்கு தேவையானது சும்மா கிடைக்க கூடாது. நல்ல கொள்கை.
 
யார் குடுத்தாலும் இலவசம் தப்புத்தான். எதைக் குடுத்தாலும் ஏன் என்று கேக்காமல் வாங்கி வைப்பதன் விளைவு நாட்டுக் கடன் நம்ம தலையிலோ நம்ம புள்ள குட்டிங்க தலையிலோ இடியாக விழும்போதுதான் முழிப்போம்.
 
நாட்டுக் கடன் நம்ம தலையிலோ நம்ம புள்ள குட்டிங்க தலையிலோ இடியாக விழும்போதுதான் முழிப்போம்.

இலவசம் கொடுக்காவிட்டாலும், அடிப்படை வசதிகள் செய்யாவிட்டாலும், கடன் தொகை ஏறிகொண்டேதானே இருக்கிறது. 10 எடுத்தாலும் 5 வது நமக்கு (மக்களுக்கு) செய்ய மாட்டானான்னு ஏங்குகிற நிலைக்கு வந்திட்டோம்.

தனி மனித ஓழுக்கம் ஏற்படாத வரை அரசியல் வாதிகள் மாற வாய்ப்பே இல்லை.
 
யாரை குற்றம் சொல்வது இலவசம் இலவசம் என்ற பெயரின் மக்களுக்கு எல்லா கட்சிகளும் அறிக்கை விடுகிறது.
இலவசங்கள் கொடுக்கிறேன் என்ற பெயரில் தரமற்ற பொருளை டம்ப் செய்யறாங்க என்று எல்லாருக்கும் தெரியும். சில நிறுவங்களும் சில அரசாங்க அதிகாரிகளும் இதன் மூலமா காசு கொளுத்தறாங்க. ஆனால் பயனில்லாத பொருட்கள் மக்கள் வீட்டில் தூசு தட்டி கிடக்கும். அதுவும் அரிசி பத்தி உன்மையை சொன்னா அனைவருக்குமே கசக்கும். அரிசி விலையை விட கோழி தீவன விலை அதிகம் அட மாட்டுக்கு கொடுகும் புன்னாக்கும் கூட அதிக விலை. இலவச அரிசி எத்தனை சதவீத வீட்டில் உலை பொங்க வருது என்று பாத்தால் 90 சதவீத இல்லை எல்லாம் தீவனமாக தான் போகிறது. இதுக்கு அரசாங்க காசு வீன் ஆகுது. அரசாங்க காசு என்றா அது மக்கள் வரிபனம். இதன் நெகட்டிவ் ரிசல்டை மக்கள் இப்ப நேரடியா உனர தொடங்கி விட்டார்கள்.
1. அளவுக்கு அதிகமான மின்வெட்டு
2. அடிபடை வசதி இல்லாமல் வளர்ந்த சாக்கடை நகரங்கள்
3. கூலிக்கு ஆட்கள் தட்டுபாடு (பீகார் உத்தரபிரதேசத்திலிருந்து இப்ப இங்க வரும் கூட்டம் மலையாளிகளையும் தான்டி விடும் போல இருக்கு அவுங்க மாசம் சொந்த ஊருக்கு 10000 அனுப்பறாங்க.
4. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்கள் பாலாகி போகுது
5. விலைவாசி ஏற்றம் (காய் கறி மற்றும் அசைவத்தின் விலை டாப் கீரில் போகுது. மருத்தவ செலவு கல்வி செலவு ஏறிகிட்டே போகுது)
இதெல்லாம் இலவசங்கள் என்ற பெயரில் மக்களை முட்டாளாக்கிவிட்டாங்க.
உலகில் எதையும் இலவசமா கொடுக்க முடியாது. இது எப்படீனா தோசை இலவசம் ஆனால் அதுக்கு சட்னி 10 ருபாய் குடிக்க தன்னி வச்சா அதுக்கும் 10 ரூபாய்.

இது குறிப்பிட்ட கட்சியை மட்டும் சொல்லல. அன்னாதுரை, கருனாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா அனைவருமே இலவசங்கள் அறிவித்தும் கொடுத்தும் தமிழ் நாட்டு வளங்கள் குறிப்பா விவசாயத்தையும் மனித வளத்தையும் பாழடித்தார்கள்.

அன்று அரசிக்காக ஒரு தேசிய கட்சியை மக்கள் தோற்கடிச்சு முடிச்சாங்க. டீவிக்காக ஒரு கட்சியை மக்கள் தோற்கடிச்சாங்க. வேற வழியே இல்ல இப்ப எந்த கட்சியும் இலவசங்களை அறிவித்து மக்களை மடையனாக்கியே தீரனும்.
நாமும் கூத்தை வேடிக்கை பார்த்து எரியர வீட்ல புடுங்கர வரைக்கும் லாபம் என்று நிலையில் இன்னும் காசு தேடி அலைவோம்.

அன்று ஈராக் மக்களை அமெரிக்காவிடமிருந்து காப்பாத்த முடியாமால் சதாம் தோற்று போனார். நாட்டை ஆக்கிரமித்தவர்களுக்கு சுந்ததிரம் பெற்று தந்தார்களா நாட்டை காப்பாற்ற பாடுபட்டவர்கள் சர்வாதிகாரியாம். இன்று லிபியா மக்களை அந்நிய நாட்டிடமிருந்து காப்பாற்ற கடாப்பி முயற்ச்சிக்கறாரு. ஆனால் எப்படியும் தோல்வி என்று நமக்கு தெரியும். நாளை ஈரானையும் அந்த நாட்டு அதிபரால காப்பாற்ற முடியாது. அதெல்லாம் நம்ம கன்னு முன்னாலயே மேற்கத்திய நாடுகளின் கைகளில் சிக்குவதை நாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அதே போல நம்ம நாட்டு மக்களின் வருங்காலமும் நம்ம அரசியல்கட்சி+மீடியா+கார்பரேட் கூட்டனியால் முடிந்து போவதையும் நாம் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
 
Last edited:
என்ன செய்யவேண்டுமென்று தெரியவில்லை. மென்பொருள் நிறுவனங்களின் அரவணைப்பில் வாழும் இளைஞர்கள் விலைவாசியை யோசிப்பதில்லை. வயற்காட்டில் உழவு செய்பவர்களுக்கு உரிய மரியாதை இல்லை, அவர்களுக்கான ஊக்குவிப்பும் இல்லை.

இனிவரும் காலங்களில் ரூபாய் நோட்டுகளை உண்டு வாழப்போகிறோமா தெரியவில்லை. நாட்டின் உயிர் நாடியான உழைப்பு ஒரு ரூபாய் அரிசியில் வீணடிக்கப்படுகிறது. உடம்பில் சேறுகொண்டு உழைப்பவனைவிட, குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து யோசிப்பவன் எந்தவகையில் சிறந்தவன் என்பது தெரியவில்லை.

வெள்ளைகாரனின் உடையணிந்து அவன் மொழி பேசுபவன் முதல் மரியாதை பெறுவது எப்படி என்றும் புரியவில்லை. எதிர்காலத்தில் உழைப்பவன் முட்டாள் என்றாகி விடுவானோ என்ற பயம் நம்மை தொற்றிக்கொள்கிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் நம்மை ஆட்சி புரிபவர்களின் தேர்தல் அறிக்கைகள்.

உழைத்து ஓய்ந்தவனுக்கு ஒய்வு கொடுங்கள். உழைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள். அதற்காக மக்களின் வரிப்பணம் முழுமையும் செலவிட்டாலும் அது பெரும் முதலீடே..

இலவசங்கள் தேவையில்லை கல்வியும் மருத்துவமும் தவிர. எங்கள் வரிப்பணத்தை எங்களுக்கே பிச்சை இடுகிறீர்களா?. உண்மையில் மனம் நொந்துதான் சொல்கிறேன்.
 
Last edited:
திமுக தேர்தல் அறிக்கை அருமை.. மீனவர்களுக்கு டீசல் மானியம் ஆயிரத்து ஐனூறு லிட்டராக உயர்த்தியதும் கலைஞர் தான் தற்போது மீனவர்களுக்கு காப்பீடு மற்றும் டீசல் மானியம் இரண்டாயிரம் லிட்டர் கொடுக்க போகிறார்..
எங்கள் பிள்ளைகளின் முதல் பட்டதாரி படிப்பு கொடுத்தவர் இன்று எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு லேப்டாப் தருகிறார்..

எல்லோரும் இதுவரை சொன்னார்கள்.. ஆனால்
கலைஞர் மட்டும் தான் சொன்னதை செய்கிறார்..

அவசரத்துக்கு அப்போல்லோ ஆம்புலன்சை அழைத்தவர்கள் அன்று அப்பல்லோ ஆம்புலன்ஸு தொகையை பார்த்து அதிர்ச்சியானவர் பலர்.. இன்று அவர்களும் நூற்றி எட்டை தான் நம்புகின்றனர்..
கலைஞர் மற்றும் ஓடி ஓடி உழைக்கும் ஸ்டாலின் போல நிர்வாக திறன் உள்ளவர்கள் தான் நமக்கு வேண்டும்..
தமிழன் தமிழன் தான்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
J-Jayalalitha.jpg

அதிமுக தேர்தல் அறிக்கை

திமுகவுக்குப் போட்டியாக அதிரடியான அறிவிப்புகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் இதிலும் உள்ளன. அதேசமயம், திமுக திட்டங்களின் விரிவாக்கமாக இவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில், இன்று காலை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கலை செய்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் அவர் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

- ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு ரூ. 1.80 லட்சம் மானியமாக அளிக்கப்படும்.

- ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசம்.

- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசம்.

- குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.

- நடமாடும் மருத்துவமனைகள் மூலம் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம்.

- வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.

- கிராம, நகர்ப்புறங்களில் 4 ஆண்டுகளில் மும்முனை மின் இணைப்பு வசதி தரப்படும்.

- நடுத்தர மக்களுக்கு ரூ. 1 லட்சம் மானியத்தில் 40 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

- +1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்கப்படும். அதேபோல அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.

- பத்து மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் அரசு, தனியார் மாணவர்களுக்கு ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.

- பள்ளி மாணவ, மாணவியருக்கு வருடத்திற்கு 4 செட் சீருடை மற்றும் காலணிகள் இலவசமாக வழங்கப்படும்.

- தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.

- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதமாக நீட்டிக்கப்படும்.

- ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு பேறு கால உதவித் தொகை ரூ. 12,000 வழங்கப்படும்.

- 58 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கப்படும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களுக்கும் அவர்கள் இலவசமாக பஸ் பயணம் மேற்கொள்ளலாம்.

- முதியோர்கள், ஆதரவற்றோர், குழந்தைகளுக்கு சிறப்பு விடுதிகள் கட்டப்படும்.

- முதியோர் இல்லங்களில் இலவச மருத்துவ வசதி, உணவு வழங்கப்படும்.

- ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு ரூ. 25,000 நிதியுதவியுடன், அரை பவுன் தங்கம் இலவசமாக அளிக்கப்படும்.

ஆடு, மாடுகள் இலவசம்

- வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.

- 6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.

- கரும்பு கொள்முதல் விலையை ரூ. 2500 ஆக அதிகரிக்க நடவடிக்கை

- வறுமைக் கோட்டுக்கு் கீழ் உள்ள மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் இலவசம்

- கிராமப்புற தெரு விளக்களுக்கு சூரிய மின்சாரம்

- மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.

- மீனவர்கள் நலனுக்காக கப்பல் பூங்கா அமைக்கப்படும்.

- மீனவர் குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.

- தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.

- சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். 25 சதவீதம் மானியமாக அளிக்கப்படும்.

- இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.

- இளநிலை அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ. 50,000 உதவித்தொகை

- தமிழக நதிகளை நீர்வழிச்சாலைகள் மூலம் இணைக்க நடவடிக்கை

- 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் இயங்கும் தொலை மருத்துவ மையங்கள்

- அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்

- மின் திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்ட படை அமைக்கப்படும்.

- விவசாயிகளைப் பங்குதாரர்களைக் கொண்ட விவசாய நிறுவனங்கள் தொடங்கப்படும்.

- அனைத்து விவசாயிகளுக்கும் இலவச சொட்டு நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும்.

- திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் ஆராய்ந்து சரி செய்யப்படும்.

- கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.

நன்றி தட்ஸ்தமிழ்
 
Last edited:
ஆகா தமிழ் நாட்டிலை இனிமேல் பாலும் தேனும் ஓடப்போகின்றது. பாரத நாட்டை முன்னேற வைக்கும் இலவசம் வாழ்க . எங்கும் இலவசம் எதுவும் இலவசம். இனிமேல் ஏன் உழைப்பு. வெட்டிப் பொழுது போக்குவோம். வளமான பாரதத்தை உருவாக்குவோம். வாழ்க தேர்தல்.
 
நண்பர் டெலாஸ் மற்றும் வாத்தியார் அவர்களின் கருத்தே என் கருத்தும் ..ஒழிக்கப்படவேண்டிய சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் இந்த செயல்பாடு வருங்காலத்தை படுகுழியில் தள்ளிவிடும்,,
 
இலவசம் எல்லாமே இலவசம்!!!!!!!!!!! மக்கள் என்ன கிள்ளுக்கீரைகளா?

தேர்தல் கமிஷன் கருத்துக் கணிப்புக்குத் தடை விதித்தது போல் தேர்தல் அறிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும்.ஓட்டுக்குமுன் பணம் தருவதற்கும் ஓட்டளித்தபின் இலவச பொருட்கள் தருவதற்கும் என்ன வேறுபாடு?

ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் வரி வசூலிக்க ஆட்சியாளர்க்கு அதில் பாதி கமிஷனா?

பேசாமல் தமிழர் வாழ்த்துப்பாடலாக

"பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தோம் அய்யனே என் அய்யனே"என்று மாற்றி விடுங்கள்

எது உனக்கு தரப்பட்டதோ அது உன்னிடமிருந்து எடுக்கப்பட்டது
 
சொல்பவர் யார் என்று பார்க்க வேண்டும்..
இதற்கு முன்னர் சொன்னதை செய்தார்களா.. என்று பார்க்கவேண்டும்..
அதுவும்..
ஓஒன முறை இரண்டு ரூபாய் அரிசி என்பதையே.. கிண்டல் செய்தவர் ஜெயலலிதா..
அது முடியாது என்றார்.. ஆனால் திமுக செய்து காட்டியது..
அதிமுக அதன் முந்தைய ஆட்சி காலத்தில் பதினைந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை என்றார்.. ஆனால் புதிய வேலை வாய்ப்புக்களை நிருத்தினார்.. புதிய ரேஷன் கார்டையும் நிறுத்தினார்..அரசு போக்குவரத்தை தனியாருக்கு விற்க முனைந்தார்..
வேலையில் இருந்தவரை வீட்டுக்கு அனுப்பினார்..
ரேஷன் கார்டுகளில் எச் முத்திரை குத்தினார்..

அவர் எப்போதும் சொல்வது ஒன்னு ஆனால் செய்வது இன்னொன்னு..

காப்பி அடிக்கலாம்.. ஆனால் அதுக்காக.. இப்படி தேர்தல் அறிக்கையை கூட காப்பி அடித்து.. என்ன செய்ய போகிறார்...

அவரின் பத்தாண்டு கால ஆட்சியின் சாதனைகள் என்ன ??

தமிழர்கள் ஒரு பக்கம்..
நடிக நடிகையர் தமிழர் அல்லாதோர் ஒரு பக்கம்..

இம்முறையும் தமிழர்களின் கூட்டணி தான் வெல்லும்..

தேர்தல் நெரத்தில் அந்தர் பல்டி அடித்து ஈழம் அமைத்தே தீருவேன் என்றார்.. இரண்டு வருடம் ஆகின்றது.. அடுத்த பேச்சையே காணோம்.. அது போல தான் இதுவும்..
போன முறை ஈழ ஆதரவு இருந்த போதே ஜெயலலிதா தோற்றார்.. இந்த முறை அவரின் குணத்தை இன்னும் நன்கு வெளிக்காட்டிவிட்டார்கள்..
அதிமுக அணி பரிதாபம் தான்

கம்யுனிஸ்டுகள் வாயை இப்ப மூடிகொள்வார்களே....

கூட இருந்த வைகோவையும் கூட்டணியையும் ஆட்டு ஆட்டு என்று ஆட்டியவர் .. தேர்தல் குட்டணி பங்கீட்டையே சொன்னதை செய்ய விரும்பாதவர்.. இவரிடம் தமிழகம் மாட்டினால்???

அவர் கொடனாட்டினிலும்.. கர்னாடகத்திலும் ஐதரபாத்திலும், சிருதாவூரிலும், பையனூரிலும் ஓய்வெடுக்கட்டும் இனி வரும் காலங்களில்..

வாழ்க தமிழ்
 
நண்பர் உதயசூரியன் ,நீங்கள் கூறுவது உண்மைதான் செய்வது அவர் தான் குறை சொல்லவில்லை ஆனால் நமது வரிபணத்தை கொள்ளை அடித்து நமக்கே இலவசம் என்று கூறி ஏமாற்றும் உத்தியை இன்றைய அரசியலில் அறிமுகபடுத்தியது யார் என்று பார்க்கவேண்டும் ..அம்மையார் செய்வது ஒருபடிமேல் ..நாம் இன்று இலவசம் எனும் பெயரில் வாங்கும் ஒவ்வொன்றுக்கும் அவர்கள் பெரும் தொகை மிக அதிகம் ..இன்றைய அத்யாவசிய தேவை மின்சாரம் ,சாலை பாதுகாப்பு ,,சிறந்த வியாபாரமற்ற கல்வி .,வேலைவாய்ப்பு ..இதனை விடுத்து இவாறு இலவசம் தந்து மக்களை உழைக்க வக்கற்ற சோம்பேறி களாக்குவதல்ல...நாம் வாங்கும் அரிசியை ஒரு ரூபாய்க்கு தந்த தலைவர் அந்த அரிசியை விளைவிக்கும் விவாசாயிக்கு செய்தது இலவச மின்வெட்டு..இன்றைய விவசாய நிலங்கள் வீடுகளாக ...இப்படியே சென்றதென்றால் நாம் உணவுக்காக அந்நிய நாடுகளை நோக்கி கையேந்து ஆட்டு மந்தை கூட்டங்களாகி விடுவோம்..பின்னர் சுதந்திரம் பெறுவதற்கு முன் நம் நிலைமை எவ்வாறிருந்ததோ அந்நிலை திரும்பும் ..இவ்வாறு அடிமைகளாக வாழவேண்டுமா...இன்றைய தலைமுறை இலவசங்களுக்காக நாளைய தலைமுறை அடிமையாக ...நாம் இன்று எதிபார்ப்பது ஒரு இலவசங்களற்ற நல்லாட்சியை .யார் சொன்னது செய்தார்கள் என்பது இதில் முக்கியமல்ல....
 
Back
Top