ஜெயிக்கபோவது நாங்கதானுங்கோ-மும்பை இண்டியன்ஸ்

சென்னை ரசிகர்கள் திரி துவங்கி விட்டார்கள் , நாங்களென்ன சும்மாவா என்று மும்பை இண்டியன்ஸ் ரசிகர்கள் திரி இது .
எங்கே எது எப்படி நடந்தாலும் கடைசி ஜெயிக்க போவது என்னமோ நாங்கதான் .

சச்சின் , ஜெயசூரியா என்ற் இரண்டு மட்டைவீச்சு மலைகள் கூடவே தவான் ,டுமினி , அபிசேக் நாயர் என மிரட்டும் இளம் படை , கலர்முடி கலக்கல் மலிங்கா , ஹர்பஜன் , சாகிர்கான், ப்ராவோ / மில்ஸ் என பந்து வீச்சு படை - ஆனவே வெற்றி பெறுவது உறுதி
 
Last edited:
ஐபிஎல் அணிகளிலே வீரர்கள் அடிப்படையில் பார்த்தால் சென்னை அணி சற்று பலமான அணி, அந்த அணியை முதல் போட்டியில் வீழ்த்தி ஆரம்பித்துள்ளது மும்பை

Mumbai Indians won by 19 runs
Mumbai Indians 165/7 (20/20 ov); Chennai Super Kings 146/7 (20/20 ov)


ராஜஸ்தான் அணியை வீழ்த்த ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருந்தும் மழை வந்து ராஜஸ்தானை காப்பாற்றிவிட்டது (தப்பிச்சுட்டாங்கையா)
சச்சின் வார்னே மோதலை பார்க்க எண்ணிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே
 
இன்று ஏப்ரல் 23
சென்னை கிங்ஸ்ம் டெல்லியும் மோதுகிறது


டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் 189 /5
டீ வில்லியர்ச் - 105 (54 பந்து) நாட் அவுட்
தில்சன் 50 (27பந்து)
பாலாஜி - 4-0-19-3

சென்னை 90 / 2
பார்த்தீவ் - 16 (16)
ஹைடன் 57 (27பந்து)
 
சென்னை சூப்பர் கிங்க்ஸ் சொதப்பறதைப் பார்த்தா கமுக்கமா கட்சி மாறிடலாமான்னு தோணுது..
 
வாங்கோ வாங்கோ
வந்து உரிப்பினர் அட்டை வாங்கிக்கோங்கோ
(சென்னை ரசிகர் மன்ற தலைவரையே இழூத்தாச்சு)
 
இன்று ஏப்ரல் - 24
பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும்

டாஸ் வென்று பெங்களூரு முதலில் பேட் செய்தது

168 / 9 , 20 ஓவர்
ரைடர் 32 (21)
காலிஸ் 62 (46))
டைலர் 35 (22)
பதான் 4-0-35-3
அப்துல்லா 4-0-31-4


பஞ்சாப் ஆடிவருகிறது
80/1 , 10 ஓவர்
 
"இன்னமும் 16 வயது போல் தான் உணர்கின்றேன்": சச்சின்

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 36-வது பிறந்த நாள். இதனையொட்டி அவர் தந்து அணியான மும்பை இந்தியன்ச் அணியின் சக வீரர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார்.

தென் ஆப்பிரிக்காவில் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை தலையேற்று நடத்தி வரும் சச்சின் 36-வது பிறந்த நாளைப் பற்றி குறிப்பிடுகையில் "இன்னமும் 16 வயது போல்தான் உணர்கின்றேன்" என்றார்.

தனது இத்தனையாண்டுகால கிரிக்கெட் வாழ்வு பற்றி அவர் கூறுகையில் "சாதனைகளை முறியடிப்பது பெரிய விஷயம் அல்ல, கிரிக்கெட் போட்டிகளை வெல்வதே மகிழ்ச்சியான விஷயம், வெற்றி தரும் உணர்வே அலாதியானது" என்றார்.

புள்ளி விரங்களைப் பார்க்கும்போது ஒரு நாள் போட்டிகளில் 16,000 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் சுமார் 12,000 ரன்களையும் குவித்துள்ளார் சச்சின் ஆனால் அது பற்றி அவர் பெரிதாக கூறவில்லை மாறாக, "புள்ளிவிவரங்கள் என்பது ஒரு தனிப்பட்ட வீரர் தன் அணிக்கு செய்த பங்களிப்பையே குறிக்கிறது, தனி நபர் சாதனை ஒரு விஷயமாக இருப்பினும் வெற்றிபெறுவதே முக்கியம்" என்று கூறினார் சச்சின்.

பிறந்த நாள் கொண்டாட்டங்களில் டெண்டுல்கரின் மனைவியும் குழந்தைகளும் பங்கேற்கவுள்ளனர்.
 
பிளின்டாஃப் காயம் நாடு திரும்பினார்

இந்தியன் பிரீமியர் லீக் 2009-இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடிய இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக இங்கிலாந்து திரும்பினார்.

அவருக்கு இதனால் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. டர்பன் மருத்துவமனையில் பிளின்டாஃப் வலது முழங்காலில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அங்கு காயம் இருப்பதை உறுதி செய்தது.

இதனையடுத்து அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் பங்கு பெற இயலாது போனது. அறுவை சிகிச்சை இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்பதால் மேற்கிந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவியலாது.

ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கு அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
மும்பை அணிக்கு இன்று காத்திருப்பது நல்ல களம். டெக்கான் சார்ஜர்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கிற்குச் சென்று இருக்கிறார்கள்..

மும்பை அணியில் தவால் குல்கர்னி வந்துள்ளார். டெக்கான் சார்ஜர்ஸில் ஸ்காட் ஸ்டைரிஸிற்கு பதிலாக ட்வைன் ஸ்மித் வந்துள்ளார்..

மலிங்கா வின் முதல் ஓவர்.. கில்கிறிஸ்டை யோசிக்க வைக்கும் முதல் பந்து.. கில்கிறிஸ்ட் மலிங்காவை அதிகம் சந்தித்ததில்லையோ களத்தில்??

5 ஆவது பந்து லாங்க் ஆன் திசையில் சிக்ஸருக்கு..

கில்கிறிஸ்ட் தனது கணக்கை தொடங்கிய விதம் அருமை..

அந்த பந்தில் தவறு பெரியதாக ஒன்றுமில்லை... சற்று அளவு குறைவானதுதான் பிரச்சனை..
 
கில்கிறிஸ்ட் சற்றே தொலைவாக்ச் சென்ற பிராவோவின் பந்தை அடிக்க முயன்று அவுட்டானார்.. உள்ளே வந்த ஸ்மித் பிராவோவை பதம் பார்த்தலும் ஸ்பின்னர்களிடம் சற்று தடுமாறுகிறார்,

சிகார் தவானுக்கு என்ன ஆயிற்று. ஃபீல்டிங்கில் கவனமின்மை, சற்றே மெதுவாகி விடுவது போல காணப்படுகிறார். கில்கிறிஸ்டை ரன் அவுட்டாக்கும் வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறார். என்ன காரணமோ?
 
மும்பை இண்டியன்ஸ் அணி தோல்வி!

வேணுகோபால் ராவ் போட்டுக்கொடுத்த ஃபுல்டாஸ்கள் கூட அவ்வணியைக் காப்பாற்ற முடியவில்லை!

டெக்கான் அணி பெறும் தொடர்ச்சியான 3வது வெற்றி இது!
 
டெக்கான் - 168/9
கில்கிரிச்ட் -- 39 (20)
கிப்ஸ் - 58 (44)
ஸ்மித் - 35 (22)

கலிங்கா 4-1-19-3
ப்ராவோ 4-0-34-3

மும்பை இண்டியன்ஸ்
156 / 9
ஜெயசூரியா 1 (8)
சச்சின் 36 (27)
டும்னி 47 (40)
ப்ராவோ 21 (18)
ஹர்பஜன் 20(8)
 
10 ஓவர்களுக்கு 84 / 1 என்று இருந்த மும்பை அணிக்கு 10 ஓவர்களில் 85 ரன்கள் தேவை அன்ற் இலக்கு
11 வது ஓவரில் சச்சின் ஆட்டமிழந்ததும் அடுத்தவர்கள் தொடர்ந்து ஆட்டமிழக்க அணி தோல்வி அடைந்தது

சச்ச்சின் மேலும் சில ஓவர்ர்கள் விளையாடி இருக்கலாம்
அவருக்கு பதிலாக டும்மினி அடித்து ஆடியிருக்கலாம்

எப்படியோ அடுட்த்த போட்டியில் பார்க்கலாம்
 
Back
Top