யாருக்கு வாக்களிக்கலாம்

சென்ற ஞாயிறு சன் தொலைக்காட்சியில் ஒரு செய்தி பார்த்தேன்..

தேர்தல் சூதாட்டம் இம்முறை அறிமுகமாகி உள்ளது..

கட்சிகள் மீதோ வேட்பாளர் மீதோ பணம் கட்டலாம்..

ரூ1-வில் இருந்து தாங்களால் இயன்ற தொகைவரை கட்டலாம்..

நாம் பணம் கட்டியவர்கள் ஜெய்தால் வேட்பாளர் கட்சிக்கு ஏற்ப, பரிசு கிடைக்கும்..

கொடுமை என்னனா ?

காங்கு மீது 1ரூபாய் கட்டினா.. அவங்க ஜெய்சா .85 பைசாதான் கிடைக்குமாம்..

பஜகவுக்கு 5ரூபாய்.. இதை ஏன் இங்க சொல்றேன்னா.. பஜக எப்படி எல்லாம் ஜெய்க முயற்சிக்கிறாங்க பாருங்க.. இதுவும் தேர்தலில் ஜெய்க ஒரு குறுக்கு வழிதானே..

இவ்வங்கல எல்லாம் நம்பி எப்படி ஓட்டு போடுறது..
 
மக்கா "__________________" எல்லாம் இனி பயன்படுத்தாதீங்க.. திட்டினா எல்லாரும் திருந்தீர்வாங்கலா.. எப்படி திருத்தலாம் யோசிங்க மக்கா..

இனி "____________" போடுற பதிவுக்கள் எல்லாம் நீக்கப்படும்..
 
நான் குறைகளை மட்டும் தான் சொன்னேன் ஆக்கப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிரேன். அறிவில் குறைந்தவர்களாக, செயலில் குறைந்தவர்களாக, இறக்க மனப்பாண்மையில் குறைந்தவர்களாக, அக்கறையில் குறைந்தவர்களாக இருப்பவர்களை ஆதரிக்காதீர்கள்.

அரசியல் செய்பவர்களை தூக்கிப்போட்டு மிதிக்க இதைவிட வேறு தருணம் வருமா?

தாமரையின் தொலை நோக்கு நல்லெண்ணங்களை வரவேற்கிரேன் ஆனால் அடிப்பட்டவனுக்கு முதலில் தேவை சிறிது தண்ணீர்.

நாம் அனைவரும் ஒற்றுமையுடன் போராடியதனால் தானே ஏதோ ஏமற்றுவதற்காகவாவது இவர்கள் செவிமடிப்பது போல நடிக்கிறார்கள்.

இந்த ஒரு முறை நாம் பழிவாங்கனால் நிச்சயம் வாக்குகளுக்காகவாவது ஏதாவது நல்லது செய்ய யோசிப்பார்கள்.

வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்களிக்காவிட்டால் வரிப்பணம் வீணாகிறது தான். பரவாயில்லை வாக்களிக்காதீர்கள். அவர்களை வழிக்கு கொண்டுவர செய்த செலவாக நினைப்போம்.

அப்படியும் நான் வாக்களிக்கத்தான் போகிறேன் இல்லையென்றால் திருட்டு வாக்கு போட்டு விடுவார்கள் என்று நினைத்தால் காங். கூட்டணி அல்லாதா கட்சிக்கு வாக்களியுங்கள். முள்ளை முள்ளால் தானே பிடுங்க வேண்டும்.

அவர்கள் கூட்டணியிலேயே இருந்து அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது போல நாடகமாடி ஏமாற்றுபவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.
 
நண்பர்களே..

பொறுப்பாளனாக அல்லாது பொதுமகனாகக் கேட்கிறேன். இந்த அலசல் எந்த திசையில் செல்கிறது. சொன்னால் கலந்துக்க வசதியாக இருக்கும்.
 
கலைஞருக்கு ஜெயலலிதா தேவலை.தனது கருத்தை தைரியமாக சொல்லிகிறார்.மற்றவர்கள் அப்படித்தான். தாமரை சொல்வது போல் யாரு உண்மையுடன் செயல் படுகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்

ஒவ்வொருமுறையும் அவரைவிட இவர் தேவலை, இவரைவிட அவர் தேவலை என்று இருவருக்கும் மாற்றி மாற்றி ஓட்டு பொட்டுக்கொண்டிருந்தால் தமிழ்நாட்டு மக்களின் நிலை என்ன?
அதுவும் கேள்விக்குறிதானா???

2. நல்ல தலைவர்களை அடையாளம் கண்டு ஆதரிப்பது.

இருக்கிற சில தலைவர்களில் யார் நல்லது செய்பவர் என்று நினைக்கிறோமோ அவரை ஆதரிப்பது

நல்ல தலைவர் இருந்து, ஆனால் அவர் இருக்கும் கூட்டனி சரியில்லை என்றால் என்ன செய்வது, யாரை ஆதரிப்பது?
 
Last edited:
மக்கா "__________________" எல்லாம் இனி பயன்படுத்தாதீங்க.. திட்டினா எல்லாரும் திருந்தீர்வாங்கலா.. எப்படி திருத்தலாம் யோசிங்க மக்கா..

இனி "____________" போடுற பதிவுக்கள் எல்லாம் நீக்கப்படும்..

நண்பர் ஆதி அவர்களே !

நாங்கள் பதிந்திருப்பது இங்குள்ள ஒவ்வொரு குடிமகனின் ஆதங்கம். அதை கொட்டித்தீர்க்க வழி தெரியாமல் வந்ததுதான் இந்த பதிவு.

இதை கொட்டித்தீர்ப்பதை தவிர ஒரு சாதாரண குடிமகனால் என்ன செய்துவிட முடியும்.

நம்பிக்கைதானே வாழ்க்கை. இவர்கள் திருந்துவார்கள் என்று நாமும் நம்புவோம்.
 
Last edited:
எல்லாம் அரசியல் தான் ஆனால் தங்களது தலைப்பில் எனக்கு உடன்பாடில்லை

ஏனெனில் மற்ற கட்சிகள் இலங்கை பிரச்சினைக்காக என்ன செய்து இருக்கிறார்கள் ?
 
ஏனெனில் மற்ற கட்சிகள் இலங்கை பிரச்சினைக்காக என்ன செய்து இருக்கிறார்கள் ?

யாரும் எதுவும் செய்யவில்லை என்பதை அனைவரும் அறிவர் அருண்,

பிரபாகரனை கொல்கிரேன் பேர்வழி என்று ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து இலங்கை அரசின் இனபடுகொலைக்கு துணைப்போகும், காங்கிரசுடன் கூட்டணி வைத்து இன்று செய்கிறேன் நாளை செய்கிறேன் என்று கப்சா விட்டு திரியும் கட்சிக்கு வாக்களிப்பது எப்படி இருக்கிறது யோசித்துப் பாருங்களேன்,

வடிவேலு வசனம் தான் நினைவுக்கு வருகிறது,

ரஜினி ஒரு படத்தில் சொல்வது போல விரோதியை நம்பிவிடலாம் அவன் அப்படித்தான் என்று ஒதுங்கிவிடலாம், ஆனால் கூட இருந்தே குழிபறிக்கும் நரிகளை ஆதரித்தால் முட்டாளாக்கப் படுவது நிச்சயம்.

அனைவரின் கேள்வியும் ஏன் இப்படி என்று தான் விளங்கவில்லை, அனைவரும் அப்படித்தான் என்ன செய்வது என்று ஒதிங்கிவிட முடியுமா?. பெயரளவில் கூட அக்கரையில்லாத திமுக மீதுள்ள மோகம் தான் புரியவில்லை.

இலங்கை சர்வதேச விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு இனப்படுகொலை செய்துவருகிறது, காங், அரசாங்கமோ போர் நிறுத்த சொல்கிறேன் என்று இலங்கை சென்று போர் நிலவரம் அறிந்துவருகிறது. இத்தனை நாடகம் ஆடுவது ஏன் கலைஞருக்கு மட்டும் தெரியவில்லை...

வெளிப்படையாக ஈரோடு வழியாக ராணுவ டாங்கிகள் அனுப்பட்டது, திருச்சி விமானநிலையம் மார்கமாக ஆயுதங்கள் எடுத்துச் சென்றது, பயிற்சி கொடுத்தது உளவுத்துறை மூலம் கலைஞருக்கு தெரியாமற் போய்விட்டதா...?

ஏன் தைரியமாக எதையுமே கேட்க மாட்டேன் என்கிறார்,

நான் குறைகளை சொல்லவில்லை குறைகள் இருக்கும் இடத்தை ஆதரித்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு நீங்களும் சம்மதம் தெரிவித்துவிடாதீர்கள்.
 
Last edited:
ஏனுங்க வரிப்புலி!

ஈழ விவகாரம் மட்டும் தீர்ப்புச் சொல்லப் போதாதே. இன்னாருக்கு வாக்களித்தால் இன்னது நடக்கும். இன்னாருக்கு வாக்குப் போட்டால் இன்னல் வரும் என்று ஆரோக்கியமான பாதையில் திரியை கொண்டு செல்லலாமே.
 
உங்கள் வாதங்கள் சரி வரிப்புலி. ஆனால் இன்ன குறைகள் இருக்கு என்று சொல்லி இன்னாருக்கு ஓட்டுப் போடாதீர் என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்வதால் அனைவரும் குழம்ப மாட்டார்களா? பாதியை மட்டும் சொன்ன நீங்கள் மீதியையும் சொல்லவேண்டாமா? இல்லையென்றால் ஜனநாயகக் கடமையை செய்யாதீர் என்று பிரச்சாரம் செய்வது போல் ஆகிவிடாதா....

என்றுமே இக்கரைக்கு அக்கரை பச்சை. இதே செயலை பி.ஜே.பியும், மூன்றாம் அணியும் செய்யவே மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இன்று ஆயிரம் பேசிவிட்டு நாளை நாட்டின் பாதுகாப்பு என்று காரணம் காட்டுவார்கள். மேற்கொண்டு அமரன் கூறியது போல் இன்னின்னார் நல்லவர் என்று உங்களுக்குத் தெரிந்தவரை கைகாட்டலாமே. நல்லவரை அரசவை ஏற்றிய புண்ணியம் கிடைக்கும்.
 
எனக்குத் தெரிந்தவரை இப்பொழுது இந்தியா இருக்கும் நிலையில் காங்கிரஸ் மட்டுமே நிலையான ஆட்சி கொடுக்கும் என்று தெரிகிறது. பாகிஸ்தானில் தாலிபானின் ஆட்டம் மீண்டும் தலை தூக்குகிறது, அப்படியென்றால் அவர்களின் பார்வை இந்தியாமேல் உடனடியாக திரும்பும். பாகிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு பிரச்சனைகளிலிருந்து பாகிஸ்தான் மக்களையும், உலகத்தலைவர்களையும் திசைதிருப்ப பாகிஸ்தான் இந்தியாவிற்கு தொடர்ந்து பிரச்சனைகளையே கொடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அப்படி பிரச்சனைகள் வரும் சமையத்தில் பாஜக ஆட்சியில் இருந்தால் அதவானி உடனடி நடவடிக்கையென்று எடுத்து பிரச்சனையை மேலும் பெரிதாக்கிவிடுவார். அத்வானி வாஜ்பாய் கிடையாது. அத்வானியால் வாஜ்பாய் மாதிரி சிந்தித்து முடிவு எடுக்கத்தெரியாது. இதுவே இவருடைய மிகப்பெரிய பலவீனம். இவரை பிரதம மந்திரியாக பாஜக அறிவித்திருப்பதால் பாஜக பதவிக்கு வரக்கூடாது.

மூன்றாவது அணி என்று ஒரு கலவையை கம்யூனிஸ்டுகள் மற்ற மாநில கட்சிகளுடன் சேர்ந்து ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது பல கட்சிகளைக் கொண்டதால் இதில் யார் பிரதமர் என்ற பிரச்சனையே முதலில் தலை தூக்கும். பிரதமர் மற்ற கட்சிகளை அனுசரித்து செல்வது என்பது முடியாத காரியம். கம்யூனிஸ்ட் இந்த கூட்டணியில் இருப்பதால் ஆக்கப்பூர்வமான பல முடிவுகளுக்கு இவர்கள் முட்டுக்கட்டை போடுவார்கள்.

மேலே கூறியவற்றைப் பார்க்கும்பொழுது இப்பொழுது இருக்கும் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து பதவியில் நீடிப்பது நல்லது என்பது என்னுடைய கருத்து.

திமுக இவர்களுடன் கூட்டு சேர்ந்த்தால் நம் தமிழகத்திற்கு பல புதிய தொழிற்சாலைகள் கிடைத்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.

பிஜேபி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நம் தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி. கூட பிஜேபியில் இல்லையென்றால் நம் தமிழகத்திற்கு ஒரு நன்மையும் கிடைக்காது. அவர்களுக்கு கர்நாடகத்திலிருந்து அதிக எம்.பி.க்கள் கிடைக்கும் ஆகையால் அவர்கள் கர்நாடகத்தை சப்போர்ட் செய்து காவிரி மற்றும் ஒக்கனேக்கல் பிரச்சனையில் அவர்களுடன் கை கோர்த்துக்கொள்வார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

உங்கள் விருப்பப்படி அதிமுக அணிக்கு ஓட்டுபோட்டு அவர்களை எம்.பி. ஆக்கினால் பிஜேபி பதவிக்கு வந்தால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்களா, அப்படியென்றால் இப்பொழுது ஏன் கம்யூனிஸ்டுடன் கூட்டு வைத்துள்ளார்கள். இதை இன்னும் சரியாக செல்வி. ஜெயலலிதா அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆகையால் இதையும் மக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதையெல்லாம் பார்க்கும்பொழுது நான் மீண்டும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வருவதையே விரும்புகிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்
 
தீர யோசித்து ஆராய்ந்ததில் யாருக்கு வாக்களித்தாலும் அதில் சாதக பாதங்கள் இருக்கத் தான் செய்கிறது.

ஆகவே வாக்களிப்பது அவரவர்கள் உரிமை, யார்யார் எப்படி என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும் ஆகவே உங்கள் கணிப்பில் எது சரியென்று படுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.

எது நடக்குமோ அதுவே நடக்கும்...
 
அன்பர்களே...........

ஒரு கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வாக்களிக்க வேண்டி வருகையில் சற்று நிதானமாக யோசித்து முடிவெடுங்கள். உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எல்லா முடிவுமெ சரியானதாக இருக்காது!!!!!

பாத்திரம் சுடுகின்றது என்பதற்காக அடுப்பில் விழ நினைக்காதீர்கள்...............
 
சில நேரங்களில் கட்சியை பார்க்கமால் வேட்பாளரை பார்த்து ஓட்டு போடலாம்
 
கடந்த தேர்தலில் என்ன என்ன கட்சியினர் பேசினர்.. 5 ஆண்டுகளில் எப்படி நடந்துள்ளனர்.. என்று சீர் தூக்கி பார்த்து வாக்கு அளிக்கவும்..
எனக்கு தெரிந்தவரை... திட்ட நிதிகளை கேட்டு பெற்று தமிழகத்திற்கு உதவியது .. அன்று பிஜேபியிருந்த போதும்.. இன்று காங்கிரசிடமிருந்தும்.. மத்தியிலிருந்து திட்டங்களை கொண்டு வருவது... தி.மு.க கூட்டணியே.. அவர்கள் ஆதரவில் வரும் கட்சியை 5 வருடங்கள் ஆள விடுகிறார்கள்...
செம்மொழி
சேது
ரயில்வே திட்டங்கள்..
வருமானவரி உச்சவரம்பு உயர்த்தல்
னெசவாளர்களுக்கு சென்வாட் வரி...
சாலை மற்றும் மேம்பாலங்கள்.. 50 காசில் இந்தியாவிற்கு பேசும் தொலைபேசி வசதி...
என அனைத்தும் திருப்தி கரம்
சிந்தித்து வாக்களியுங்கள்..
நமது நாட்டு உள்கட்டமைப்பையும் வளர்ச்சியும் பேசிய முன்னர் தேர்தல்.. இன்று அது போல குற்ற சாட்டுக்களை குறைத்துள்ள் பெருமை.. தி.மு.க வை சாரும்..

தி,மு.க விற்கு வாக்களித்தால்.. தமிழர்களின் எண்ணங்கள் நிறைவேறும்..

வாக்களியுங்கள்.. சீர் தூக்கி வாக்களியுங்கள்.. பரபரப்பாக.. உணர்ச்சி வச படாமல்.. யோசித்து 5 வருடம் நடந்த அனைத்தும் வர போகின்ற நிகழ்வுகள் எப்படி இருக்க வேண்டும் என நினைத்து வாக்களியுங்கள்..

தேர்தல் முடிவு தெரிவதற்க்குள்ளாகவே... அணி மாறியுள்ள இரு தலைவர்களை பாருங்கள்..
அடுத்த லிஸ்ட்டில் ஜெ உள்ளார்..
அதையும் பாருங்கள்.. உங்களின் வாக்கின் தன்மை விரயம் ஆகாத வாறு.. எதற்காக மாற்றி போட்டீற்களோ அதற்கு நேரதிராக முடிவு வந்தவுடனே நடப்பவரை கண்டு உங்கள் வாக்கு வீணாகாதவாறு வாக்களீயுங்கள்..

உதயசூரியனுக்காகவும்...
நட்சத்திரத்திரத்திற்கும்.. மற்றும்.. காங்கிரசுக்கும் முஸ்லீம் லீக்கிற்கும்.. வாக்குளை அளிக்குமாறு நான் உங்களிடன் கேட்டு கொள்கிறேன்..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
திமுக மட்டுமே தமிழகத்தில் நிலையான கட்சி, மக்கள் நலன் விரும்பும் கட்சி.. பேச்சு சுதந்திரம் உள்ள கட்சி... அதனால்...
 
திரு புலி அவர்களே.... உங்களுக்கு இன்று நேற்றல்ல.. முன்பிலிருந்தே தி.மு.கவின் எதிர்ப்பாளராக இருந்திருப்பீர்..என நினைக்கிறேன்..
அ.தி.மு.க ஆதரவாளர்கல் கூட என் தலைவி தமிழின தலைவி அவர் ச்சதனைகள் இது.. என்ரு சொல்ல முடியவில்லை...
பாருங்கள்.. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு பொய்யை சொல்லுவர்..ஜெ அணியினர்..
1991 ராஜிவை கொன்ரது.. கலைஞர்...
1994 ல் ராயபுரம் ஏழுமைலை நாயக்கரை கொன்றது ஸ்டாலின்...
எம்.ஜி ஆரை கொன்றதுஜானகி..
என் புடவையை உருவி விட்டார்கள்..
கவர்னர் சென்னாரெட்டி கயை பிடித்து இழுத்தார்..
2001 ஒரே நேரத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு கலைஞர் போட்டியிட வைக்க வில்லை என்று சொன்னார்..
இப்பொழுது 30 நாட்களுக்கு முன்னர் கூட... ஜெ ஈழம் என்று சொன்ன நிருபரை திட்டினார்.. தமிழர்கள் கொல்வது என்பது சாதரணமான விஷயம்..என்றும் சொன்னார்

இப்படி பொய்கலைமட்டும் சொல்லி.. தேர்தல் நேரத்தில் மட்டும் நடிக்கும் நடிகைக்கு தமிழ் நாட்டு தமிழர்கலையே கொன்று குவிக்கும் ராஜபக்ஷேவின் தங்கைக்கு ஓட்டு போட சொல்லுகிறீரே..
அப்படி நீங்கள் இலங்கை தமிழராக இருந்தால்.. உங்கள் போராட்டத்திற்க்கு ஆதரவு மட்டும் கேளுங்கள் அனைவரிடமும்..


காங்கிரசிடமிருந்து மட்டுமல்ல.. எந்த ஒரு வட இந்தியனிடமிருந்தும் நமக்கு சாதகமான முடிவு வராது..
சரி.. தி.மு.க மீது கூற்றம் சாட்டிய நீங்கள்.. அந்த பக்கத்தை புரட்டி பார்த்தால்.. இவர்கலை விட பயங்கர பச்சோந்திகள் தானே...
எடுத்துக்காட்டு..
ஒரெ ஒரு மீட்டிங்கில் பேசிய வைக்கோ பொடாவில் 19 மாதம் இருந்தது..
தரும புரி மானவிகளை கொன்றது..
இன்று அந்த வைக்கோ.. தமிழ் இன எதிர்ப்பாளரிடம்..
ராமதாசும் தான் காங்கிரசு அரசில் இருந்தார்..
எனது குடும்பத்தார் யாராவது பதவியில் வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று சொன்ன ராமதாசு தன் மகனை கொல்லை புறமாக கலைஞரிடம் மண்டியிட்டு 5 வருடம் பதவியில் இருந்தாரே.. இப்பொழுது மட்டும் தான் இந்த ஒரு மாதம் மட்டும் தான் இலங்கையில் சண்டை நடக்கிறதா..??
அவரிடம் பத்திரிகையாலர்கள் நீங்கள் ஏன் பதவி விலக கூடாது என்று கேட்டஃ போது..
னாங்கள் விலகினால் இலங்கை போர் நிற்குமேயானால் பதவி விலகுவோம் என்று இரண்டு மாதம் கூட பதவி விலக மனமில்லாத ராமதாசுக்கு எப்படி ஓட்டு போட முடியும்.. அதுமட்டுமைல்லை.. ரமதாசு மீது தமிழக மக்கல் மற்ரும் வன்னியர்களுக்கு கடும் அதிருப்தி..
தமிழ்கத்தின் வலர்ச்சி திட்டங்கலை பலவற்றை நிறுத்தியவர்...இவருக்கு எப்படி வாக்களிக்க முடியும்...
ஜெவை பற்றி சொல்லவே வேண்டாம்..
தமிழ் செல்வனுக்கு ஒரு கவிதையை கலைஞர் எழுதினார் என்ற ஒரு காரணத்திற்கு என்ன என்ன பேசினாள்...
ஆண்டன் பாலசிங்கத்தை மருத்துவம் பார்க்க கூட இந்தியாவிற்குள் நுழைய விடாத பாதகி..
ஈழம் என்ற சொல்லை விரும்பாதவர்.. இன்று 25 நாட்களுக்காக தேர்தலுக்காக சொன்னால் அதை ஏற்று ஓட்டு போட தமிழர்கள் என்ன கேனையன்களா..??

பொதுவாக ஆட்சியில் இருப்பவர்களின் குறைகலையும் ரோடு போடவில்லை.. தொழிற்சாலை.. வேலையில்லா திண்டாட்டம்.. என்று தான் சொல்லி ஓட்டு கேட்பார்கள்..
ஆனால் இம்முறை.. எதிர்கட்சிகள் அந்த பக்கம் போகாமலே.. இருப்பதில் இருந்தே ஒரளவிற்கு மக்களுக்கும் தெரிகிறது..
தி.மு.க அரசின் வேலைகளை...

எங்களுக்கு நல்லது செய்யும் அரசை விட்டு விட்டு..
னீங்கள் சொல்வது போல அ.தி.மு.கவிர்கு வாக்களிக்க என்ன காரணம்..
ஈழம்...??
ஈழம் காரணத்திற்க்காக அ.தி.மு.க விற்கு ஒரு தமிழன் ஓட்டு போட்டாயேனால்.. அவன் உண்மையான தமிழனாக இருக்க முடியாது..
அதை போல் முட்டள் தனமும் கிடையாது..
தேர்தல் முடிந்ததும்.. பி.ஜேபியுடன் உறவாடுவார்..
மீண்டும் அடுத்த எலெக்ஷனுக்கு வருவார்..
பி.ஜெ.பி.யும் கம்யூனிஸ்ட்டுக்களும் இன்று தெளிவாக சொல்லியுள்ளன.. என்ன வென்று.. தனி ஈழத்திற்கு ஆதரவில்லையாம்..
அப்பொழுது நாம் போட்ட வாக்கினால் என்ன பயன்..அப்படியே 3 அணி வெற்றி பெற்றால் ஆட்சியமைக்க முடியுமா..?/
அதனால் நமது வாக்குகள் வீண் தானே ஆகும்..

ஈழ ஆதரவாலர்கள் எதற்கு அ.தி.மு.க அணியில் சென்று அசிங்க பட வேண்டும்.. தனி அணியாக நிற்க சொன்ன திருமாவலவனை உதாசினபடுத்தியது எதற்கு..
மான்கெட்டு வைக்கோ அங்கு இருப்பது ஈழம் பெறதானா..??

இன்னும் எவ்வளவோ சொல்ல முடியும்..
சிந்தியுங்கள்.. செயல் படுங்கள்
ஈழம் எனப்து இலங்கை தமிழர்களின் சுதந்திர போராட்டம்.. அது வேறு.. இந்திய தேர்தல் வேறு..
ஈழ போராட்ட்ஃஅத்தில் சானக்கிய தந்திரமும் வேண்டும்.. அதை உலக அரங்கைனில் கொண்டு செல்ல வேண்டுமே தவிர.. இங்கிருக்கும் ஓட்டுக்கலை பெற்ற அடுத்த நிமிடம் ஈழம் மலருமா..

அப்படி மலரும் என்றாலும் அது.. தமிழர்கஃளின் கட்சியான தி.மு.க வின் பங்கும் இருக்குமே தவிர..
எந்த ஒரு அரசியல் விபசாரி கட்சிகளும் அதில் இடம் பெறாது...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

தவறுகலை பின்னர் கலைகிறேன்.. பிழைகலை பொறுத்தருள்க
 
உதயசூரியன் அவர்களுக்கு,

ஜெயாவுக்கு என்றுமே ஈழத்தமிழர் மேல் அக்கரை இல்லை என்பதை எவரும் அறிவர் நானும்.

எந்த ஒரு வட நாட்டவராலும், தமிழகத்துக்கும் தமிழருக்கும் சிறுது நல்லது கூட கிடைக்காது என்பதை எவரும் அறிவர் நானும்.

புலிகள் மீதும் ஈழத்தமிழர்கள் மீதும் காங்ரசுக்கு பெயரளவில் கூட அக்கரையோ அபிமானமோ இருக்க வாய்ப்பே இல்லை தானே?. என்ற என் ஒரு கேள்விக்கு மட்டும் ஆம் இல்லை என்ற பதில் கொடுங்கள்.

உங்கள் பதில் திருப்திகரமாக இருப்பின் என் வாழ் நாள் முழுவதும் திமுகவுக்கே வாக்களிக்கிறேன். நீங்கள் சொல்லும் கதைகளையும் உண்மை என்று ஏற்றுக் கொள்கிறேன்.
 
ஒரு காலக் கட்ட வரைக்கும் கருணாநிதிக்கு ஈழ ஆதரவு இருந்து இருக்கலாம். இன்று சுயநலத்தின் காரணமாக அல்லது மத்திய அரசின் விளக்கதுக்காக இன்று முனைப்புடன் செயல் படமால் இருக்கலாம்.ஆனால் இவரை விட வைகோ மற்றும் முக்கியமாக ராமதாசு ஈழ எதிர்ப்பு உணர்வு கொண்ட ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்து கொண்டது மன்னிக்க முடியாத செயல்..இந்த விசயத்தில் திருமாளவன் செயல் பாடு வரவெற்க தக்கது.தமிழக மக்கள் தான் விரியமான போரட்டங்கள் முலம் ஊடக வழியாக உலக கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்
 
உதயசூரியன் அவர்களுக்கு,

ஜெயாவுக்கு என்றுமே ஈழத்தமிழர் மேல் அக்கரை இல்லை என்பதை எவரும் அறிவர் நானும்.

எந்த ஒரு வட நாட்டவராலும், தமிழகத்துக்கும் தமிழருக்கும் சிறுது நல்லது கூட கிடைக்காது என்பதை எவரும் அறிவர் நானும்.

புலிகள் மீதும் ஈழத்தமிழர்கள் மீதும் காங்ரசுக்கு பெயரளவில் கூட அக்கரையோ அபிமானமோ இருக்க வாய்ப்பே இல்லை தானே?. என்ற என் ஒரு கேள்விக்கு மட்டும் ஆம் இல்லை என்ற பதில் கொடுங்கள்.

உங்கள் பதில் திருப்திகரமாக இருப்பின் என் வாழ் நாள் முழுவதும் திமுகவுக்கே வாக்களிக்கிறேன். நீங்கள் சொல்லும் கதைகளையும் உண்மை என்று ஏற்றுக் கொள்கிறேன்.]/QUOTE]


நச்
 
Back
Top