“சுமாராக 8 கிலோ மீற்றர் துாரத்திற்கு இதன் கர்ஜனை கேட்கும். தான் வேட்டையாடி உண்ணும் மிருகங்களின் தசைகளோடு கூடிய எலும்புப் பகுதியை இது அப்படியே விட்டுவிடுவதால், இதையே நம்பியிருக்கும் கழுதைப் புலி போன்ற மிருகங்கள் பட்டினி கிடக்க வேண்டியதில்லை. வயிறு நிரம்பி விட்டால் சில நாட்களுக்கு இது எந்த மிருகங்களையும் கொல்லாது.”
இவை சிங்கத்தின் சில சிறப்பியல்புகள்.
இன்னொன்றைக் கவனியுங்கள்.
சில சமயங்களில், ஒரு பெண்சிங்கம் தனது குட்டிகளையும், ஆணையும் இழந்த நிலையில், புதிதாக ஒரு கூட்டத்தில் வந்து இணைவதுண்டு. இப்படி நேர்ந்தால் , கூட்டத்தின் தலைவனாக இருக்கும் ஆண் சிங்கம் என்ன செய்யும் தெரியுமா? இதை அறிந்தால் “அட கொலைகாரப் பாவி ”என்றுதான் திட்டித் தீர்ப்பீர்கள். தன் கூட்டத்திலுள்ள குட்டிகளையெல்லாம் ஆண் சிங்கம் கொன்று விடும். ஏன் தெரியுமா? புதிதாக வந்துள்ள பெண்டாட்டி பெற்றுத் தரும் குட்டிகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக இந்தச் சிங்கம் செய்யும் கொடுமை இது! மிருகங்களின் உலகில் நடக்கும் அட்டகாசங்களைப் பார்த்தீர்களா?
பூனைக்குடும்பத்தின் அங்கத்தவர்
சிங்கமும் பூனைக்குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.வரிப் புலிகளுக்கு அடுத்ததாக இந்த பூனைக் குடும்பத்தில் இரண்டாவது பெரியவர் சுமாராக 250 கிலோ எடைகொண்ட சிங்கந்தான். ஆனால் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கின்றது. இந்தப் பூனைக் குடும்பத்து மிருகங்களெல்லாம் தனியானாகவே வாழுகின்ற சுபாவம் கொண்டவையாக இருக்க, சிங்கம் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றது. குடும்பத்தில் கூட்டமாக வாழுகின்ற தன்மையைக் கொண்ட ஒரே விலங்கு சிங்கந்தான். தமக்குரிய வேலைகளை அவரவர்க்குப் பிரித்துக் கொடுத்து, இணைந்து செயற்படுகின்ற தனித்துவமான தன்மை கொண்டவை சிங்கங்கள். சராசரியாக 15 வரையில் காணப்படுகின்ற ஒவ்வொரு சிங்கக் கூட்டத்தினதும் செய்ற்பாடுகள் தனித்துவமானவை.மூன்று ஆண்கள், சிறுசுகளும் பெண்களுமாக சாதராணமாக ஒரு சிங்கக் கூட்டத்தில் நாம் காணக்கூடிய தொகை 12. .. பெண் சிங்கக்குட்டிகள் வளர்ந்தாலும், கூட்டத்தை விட்டுப் பிரிவதில்லை. ஆனால் ஆண் சிங்கக் குட்டிகள் வளர்ந்ததும், தம் கூட்டத்தை விட்டுப் பிரிந்து , இன்னொரு கூட்டத்தோடு இணைந்து கொள்வதோடு, நாளடைவில் அந்தக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பையும் எடுத்து விடுவதுண்டு.
தினமும் தவறாமல் நீர் அருந்தும் பழக்கம் உடையவை சிங்கங்கள். என்றாலும் நான்கு நாட்களுக்கு நீரே அருந்தாமல் தாக்குப் பிடிக்கும் உடல் சக்தியும் சிங்கங்களுக்கு உண்டு. பிடித்துண்ணும் இரையின் உடலில் உள்ள ஈரத் தன்மை , இவற்றின் உடலை வரண்டுவிடாமல் பாதுகாக்க உதவுகின்றன என்கிறார்கள்.
எவர் குட்டியாயினும் பாலுாட்டும்
பொதுவாக ஒரு பெண் சிங்கம் 3 குட்டிகள் வரையில் ஈனுவதுண்டு. ஒரு குட்டியின் எடை சராசரி 3 இறாத்தலாக இருக்கும். சில தாய்ச் சிங்கங்கள் மிகக் கவனமாக குட்டிகளுக்கு உணவளித்து , பராமரிப்பதுண்டு. வேறு சில உணவுப் பற்றாக்குறையால், தம் குட்டிகளை அனாதரவாக விட்டுவிட்டுச் சென்றுவிடுவதுமுண்டு. பொதுவாக கூட்டத்தின் இரண்டு பெண் சிங்கங்கள், ஒரே நேரத்தில் குட்டிகளை ஈனும். எல்லாமே ஒன்றாக வளர்க்கப்படுவதுண்டு. தன் குட்டிகளை விட, மற்றைய குட்டிகளுக்கும் தாய்ச் சிங்கங்கள் பாலூட்டும் சுவாவம் உண்டு. அதே போல வேறு எங்காவது அனாதரவாக விடப்பட்ட குட்டிகளைக் கண்டாலும், அவற்றிற்குப் பாலூட்டுவது, ஒரு சிங்கத்தின்
சிறப்பான குணாம்சம்.
மனிதர்கள் சிங்கங்களிடமிருந்து நிறையப் படிக்கலாம் போலிருக்கின்றது. அனைத்துப் பிள்ளைகளுமே எங்கள் பிள்ளைகள் என்ற மனோபாவம் மனித சமுதாயத்தில், இருக்குமானால், முழு உலகமுமே ஒரு சொர்க்கமாகி விடும் என்பதில் எள்ளளவேனும் சந்தேகமில்லை.
காட்டிலே ஆணழகர்கள் அதிகம்
மனிதர்களிடையே ஆணழகனை விட, பெண்ணழகியைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். விளம்பரம் செய்பவர்களும், பெண்களைத்தான் எதற்கும் முன்நிறுத்துகிறார்கள். ஒரு கவர்ச்சிக் கனன்னியாக பெண் திகழ்கிறாள். ஆனால் காட்டிலோ கதை வேறு!
நாலு கால் விலங்கினமாகட்டும் அல்லது காட்டுப் பறவைகளாட்டும், ஆண்களுக்குத்தான் அழகு போய்ச் சேர்ந்திருக்கின்றது. மனிதர்களில் கிளியோபட்ராக்கள் என்று அழகுச் சிலைகளாக , எழில் ஓவியங்களாகப் பெண்கள் வலம் வந்தாலும், காட்டு இராஜ்ஜியத்தில், அழகர்கள் ஆண்கள்தான். தன் பிடரி மயிரை உலுப்பிக் கொண்டு வரும் சிங்கமாகட்டும், அல்லது வண்ணத் தோகையை விரித்தாடும் மயிலாகட்டும் அழகர்சாமிகள் ஆண்கள்தான்.!
காடுகளில் தேடப்படும் காணிநிலம்
காணிக்காக மனிதர்கள் அடிபடுவது போல காட்டு மிருகங்களும் அடிபட்டுக் கொள்கின்றன என்பது ஆச்சரியம்தான். மதிலை எழுப்பி, வேலிஅடைத்து எல்லைகளை வகுத்து காணிகளுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறான் மனிதன். ஆறடி மண்தான் அறுதியில் தனக்கு என்று தெரிந்திருந்தும், மண்ணாசை அவனை விடுவதாயில்லை. ஆண் சிங்கங்களும் காட்டில் ஓர் இடத்தைப் பிடித்து, தம் எல்லைகளை நிர்ணயித்துக் கொள்கின்றன.
ஏறத்தாழ 259 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணமான காட்டு நிலத்தை, ஒரு சிங்கம் தன் கூட்டத்திற்காக எடுத்துக் கொள்வதுண்டு. எந்த உறுதியும் எழுதப்படாமல், எந்தச் சட்டத்தரணியும் கையொப்பம் இடாமல், காட்டுச் சட்டத்தில் ஒரு மிருகம் உரிமை கொண்டாடும் காணியின் அளவு இது. தனது எல்லையில் சிறுநீர் கழிக்கும் சிங்கம், அச்சுறுத்தும் வகையில் ஒரு கர்ஜனையையும் எழுப்பி, இது என் காணி எல்லை . அத்து மீறிப் பிரவேசிப்பவர்களை அறுத்து விடுவேன். ஜாக்கிரதை என்ற எச்சரிப்பையும் அது காற்றில் மிதக்க விடுகின்றது
மிருக வாழ்வின் விசித்திரத்தைக் கவனித்தீர்களா? தானே ஒரு நிலப்பரப்பைப் பிடித்து, பின்பு அது என்னுடையது. உள்ளே வந்தால் தொலைந்தீர்கள் என்று உடன் அறிவிப்பையும் விடுக்கும் இந்தக் காட்டுமிராண்டித்தனமான முற்றுகைதான், அவைகளை காட்டு விலங்குகள் என்று பகுத்து வைக்கின்றன. மனிதனால் நாட்டில், இப்படி எதையும் செய்துவிட முடியாது. சட்டம், காவலர் என்று பலதை அவன் தாண்டியாக வேண்டும்.
ஒரு குழுவாகத்தான் வேட்டை
பிறந்து ஐந்தாவது, ஆறாவது வருடங்களில் முழு வளர்ச்சியைக் கண்டுவிடும் சிங்கங்கள், 13 வருடங்கள்தான் வாழ்கின்றன. அடைத்து வைத்தால் இவை 20 வருடங்கள் வரை வாழ்கின்றனவாம்.ஆனால் மனிதனோ 13 வயதில்தான் சிறுவன், சிறுமி என்ற பருவத்தைத் தாண்டி, பதின்வயதை எட்டிப் பிடித்து, உலகைப் படிக்க ஆரம்பிக்கின்றான். சிங்கங்கள் இரண்டு வயதை அடையும்போது, வேட்டையாட ஆரம்பித்து விடுகின்றன. தன் குடும்பத்திற்கு காணி தேடும் பொறுப்பை ஆண் சிங்கம் எடுக்க, வேட்டையாடும் பொறுப்பை, பெண் சிங்கமே சுமக்கின்றது என்பது புதுமையான ஒன்றுதான்.
ஆனால் வேட்டையாடும்போது, ஒரு குழுவாகச் செயற்பட்டே, இவை தமது வேட்டையை நடாத்துகின்றன. இதனால் மிகப் பெரிய காட்டெருமைகள், நீர் யானைகள், காண்டாமிருகங்கள், ஒட்டகச்சிவிங்கிகள் போன்றவற்றையும் பிடித்து உண்ண முடிகின்றது. மேலே குறிப்பிட்ட மிருகங்களில் நன்கு வளர்ந்தவை என்றால், இவற்றை வேட்டையாடுவதை இவை தவிர்த்துக் கொள்கின்றன. அனாவசியமாகக் காயப்படுவதைத் தவிர்க்கவே இந்த முன் எச்சரிக்கை! இவை பிடித்துண்ணும் வரிக்குதிரைகள், மான்கள் போன்றன சிங்கங்களை விட வேகமாக ஓடக்கூடியவை என்பதால், இந்தக் குழு வேட்டை முறை இவற்றிற்கு தமது இரையைப் பிடிக்க பெரிதும் கைகொடுக்கின்றன.
திருட்டு உணவு 50 வீதம்
ஒரு வயதை எட்டும்வரை, குட்டிகள் வேட்டைகளில் பங்குபற்றுவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால், சிங்கம் தனியனாக வேட்டையாடுவதும் உண்டு. சில சமயங்களில், காட்டு நாய்கள், வேறு மிருகங்கள் கொன்ற மிருகங்களை திருடி உண்ணவும் சிங்கங்கள் தயங்குவதில்லை. சிங்கங்களுக்குத் தேவையான உணவின் 50 வீதம், இப்படித் திருடப்படும் உணவுகளில் இருந்து கிடைத்து விடுகின்றதாம் என்பது ஆச்சரியமான தகவல்தான்.! ஏறத்தாழ வேட்டையின் முழுப் பணியையும் பெண் சிங்கங்களே முன்னெடுத்துச் சென்றாலும், இவைகளின் வேட்டை முறை தனித்துவமானது. மடக்கிப் பிடிக்க ஓர் இடத்தை ஏற்பாடு செய்துவிட்டு, இரையை அந்த இலக்கை நோக்கி, சிங்கங்கள் விரட்டுகின்றன. பின்பு குழுவாக இணைந்து இரையைத் தாக்கி வீழ்த்தி விடுகின்றன.சிங்கங்களுக்கு வெகு கூரான பற்கள் இருப்பதால், இரையை இவை,கழுத்தில் கவ்வி, மூச்சுத் திணற வைத்து கொன்றுவிடுகின்றன.
பலவீனமான இதயத்திற்கு சொந்தக்காரன்
சிங்கங்கள் சக்திவாய்ந்த மிருகங்கள் என்று சொல்லப்பட்டாலும், இவற்றின் வீரியம் பெரிதாகப் பேசப்படுவதில்லை. உதாரணத்திற்கு ஒரு பெண் சிங்கத்தின் இதயத்தின் எடை, அதன் உடல் எடையின் 0.57 வீதந்தானாம். இதனால் அதிக தூரம் வேகமாக ஓட முடி யாது. இரையைத் தாக்க முன்பு, அதனை அதிவேகமாக ஒடிச் சென்றடைய வேண்டிய நிலை.! எனவே இருட்டையே இவை துணைநாடி நிற்கின்றன.
”இருட்டடியில்” சிங்கங்கள் வீரர்கள்!
மெதுவாகப் பதுங்கிச் சென்று, இரைக்கு 30 மீற்றர் தூரத்தை அண்மித்ததும், படுவேகமாக ஓடத்தொடங்குகின்றன.வெவ்வேறு திக்குகளில்,ஒரே குழுவின் வெவ்வேறு சிங்கங்கள், இரையை வட்டமிடுகின்றன. எந்த இரை மிக நெருக்கமாக இருக்கின்றதோ அதைக் குறிவைத்து எல்லாமே ஓடிச் சென்று தாக்குகின்றன. நன்கு வளர்ந்த ஒரு பெண் சிங்கத்திற்கு தினமும் சராசரி 5கிலோ மாமிசம் உணவாகத் தேவைப்படுகின்றது. ஆணின் தேவையோ 7 கிலோ.
பிடித்த இரையைப் பகிர்ந்து உண்ணும்போது, வயதுக்கேற்றபடி, குட்டிகளுக்கு கடைசி இடந்தான். பிடித்த இரை சிங்கக் குடும்பத்திற்குள் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை என்பது மகா சோகமான விடயம். தன் குட்டிகள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை. தனக்கு முறையாக உணவு கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பது பெண் சிங்கம். தேவைப்பட்டால் உணவுக்காக தனது குட்டிகளையும் கொன்றுவிடத் தயங்காது பெண்சிங்கம் என்பது அதிர்ச்சியான தகவல். இந்த இடத்தில் எங்கள் அம்மாக்கள் அதி உயர்ந்தவர்கள்தான்.
சிங்கங்களை எங்கே காணலாம்?
ஆபிரிக்க யானை, ஆசிய யானை என்று வேறுபடுத்துவதுபோல, ஆசிய சிங்கம், ஆபிரிக்க சிங்கம் என்று சிங்கங்களையும் வேறுபடுத்துகின்றார்கள். ஆசிய காடுகளில், இன்றைய நிலையில் சுமாராக 200 சிங்கங்கள்தான் எஞ்சிக் கிடக்கின்றன என்பது கவலைதரும் விடயம். இந்தியாவின் ஜீர் என்றழைக்கப்படும் காடுதான் அனேகமான ஆசிய சிங்கங்களின் இருப்பிடம். ஒரு காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்பட்ட சிங்கங்கள்தான் இப்பொழுது இந்தியக் காட்டைத் தஞ்சம் அடைந்திருக்கின்றன. இந்தத் தேக்குக் காட்டை ஒரு வனவிலங்குப் பிராந்தியமாக்கி, இங்கே இந்தச் சிங்கங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஆபிரிக்க காடுகளிலும் சிங்கங்கள் உலாவருகின்றன. 10,000 வருடங்களுக்கு முன்பு, மனிதர்களுக்கு அடுத்ததாக, மிக அதிக அளவில் காணப்பட்ட முலையூட்டி சிங்கமாக இருந்திருக்கின்றது. அதிகமானவை ஆபிரிக்க கண்டத்திலும், பரவலாக மே.ஐரோப்பா, இந்தியா, அமெரிக்கா என்று காணப்பட்டிருக்கின்றன. ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்தச் சிங்கங்கள் பெருமளவு அழிவைக் கண்டுவிட்டன.
காட்டு அழகுகளை அழித்து விட்டு, தன் வீட்டு வாழ்வை மனிதனால் எப்படிச் சந்தோஷமாகக் கழிக்க முடியும்
07.10.18
ஏ.ஜே.ஞானேந்திரன்