சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகன்!!

அனிருத் இல்லை. அவருக்குப் பதிலாக ஜகாதி

ஆட்டம் கையை விட்டுப் போய்கொண்டு இருப்பதைப் போலத் தோன்றுகிறது 85/5.

சொன்ன மாதிரி

2. பத்ரிநாத் - அஸ்வின் - தோணி கடினமான விக்கெட்டுகளில் அணியின் சரிவைக் கட்டுப்படுத்துவார்கள்

ஒரு 140 ரன்களாவது எடுங்கப்பா

ஐயா பார்த்து என் பேரைக் காப்பாத்துங்க

அஸ்வின், ஜெடெஜா, ஜகாதி, ரெய்னா, பிளீஸிஸ் என ஐந்து ஸ்பின்னர்கள்..

முதல் ஆறு ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் வீழ்த்தாவிட்டால்...

ரொம்பவே கஷ்டம்
 
இந்த அடி சென்னை அணிக்குத் தேவைதான். இனிமேலாவது கொஞ்சம் ஜாக்கிரதையாக ஆடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
 
இன்னும் தூக்கத்தில் இருந்து விழிக்காத விழிக்க விரும்பாத குழந்தை போல இருந்தது சென்னையில் மட்டை வீச்சு. தோனி ரன் அவுட் ஆவது என்பது மிக அரிதானது என்கிறார்கள்.

லெவியின் அதிரடி ஆரம்பம் மும்பைக்கு ஒரு நல்ல நம்பிக்கையைத் தந்திருக்கும். சென்னை மைந்தன் அனிருத்தை விட்டு விட்டு ஜகாதியைச் சேர்த்தது சரியாகத் தோன்றவில்லை. ரவீந்தர ஜெடெஜா - மிகவுமே அதிகமாக அடிபட்டு விட்டார். பாவம்.

மூன்று ரன் அவுட்டுகள் என்பதும் மோசமான துவக்கம். மும்பை அணியின் ஃபீல்டிங்கில் இருந்த தீ சென்னை அணியில் இல்லை.

அணி துருப்பிடித்து இருக்கிறது ஆயில் சர்வீஸ் பண்ணுங்கப்பா!!!

நேற்று டாஸில் தலை விழவில்லை. ஆட்டத்தில் விழுந்து விட்டார்!!!:lachen001::lachen001::lachen001::lachen001:
 
ஆண்டுகள் செல்ல செல்ல ஐபில் தாக்கம் குறைந்து கொண்டே செல்கிறது என கருதுகிறேன் அது மட்டும் இல்லாமல் டிக்கெட் விலையையும் தாறுமாறாக உயர்த்தி விட்டார்கள் இதன் விளைவு கண்டிப்பாக தெரியும் என நினைக்கிறேன்
 
இன்னைக்கு நல்லாவே விளையாடினாங்க...ஜடேஜா...தான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நியாயம் க\ற்பித்துவிட்டார்.

ஆனால் எதிரணியினருக்கு சப்போர்ட்டாக சித்தார்த் எனும் தமிழனைக் காண்கையில்....இந்த இனத்துக்கே...மொழிப்பற்றும், பிறந்த மண் பற்றும் இல்லையென்பது வெட்ட வெளிச்சமாகியது...அதனால்தான்...பெரியார் அவர்க\ளை இந்த மண்ணைவிட்டே விரட்டினார். எந்த மண்ணில் இருந்தாலும்...அவர்கள் துரோகிகளே.....ஆரிய இழுக்குகள்....!!
 
ஆனால் எதிரணியினருக்கு சப்போர்ட்டாக சித்தார்த் எனும் தமிழனைக் காண்கையில்....இந்த இனத்துக்கே...மொழிப்பற்றும், பிறந்த மண் பற்றும் இல்லையென்பது வெட்ட வெளிச்சமாகியது....!!

அப்படி நினைக்கமுடியாது சிவாஜி, காரணம் இது ஒரு வியாபார விளையாட்டு. இது தமிழ்நாட்டிற்கும் ஐதராபாத்திற்கும் நடந்த விளையாட்டு அல்ல, இரு கம்பெனிகளின் டீமுக்குள் நடந்த விளையாட்டு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இப்போது மும்பை அணிக்கு ஆடவில்லையா? தோனி ரெய்னா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் நம்ம அணிக்க ஆடவில்லையா. அதுமாதிரிதான் இதுவும்.

நாம் இதைப் பெரிதாக நினைக்கமுடியாது காரணம் ஐபிஎல் ஒரு வியாபார விளையாட்டு.
 
ஆம் ஆரென் தாங்கள் சொல்வது சரியே ஐபில் ல் எப்படி பற்றை காண்பிக்க முடியும் ? சில உதாரணங்கள்

திராவிட் கர்நாடகா காரர் ஆனால் இப்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன்

கங்குலியின் சொந்த ஊர் கொல்கத்தா ஆனால் அவர் புனே அணியின் கேப்டன்

கவுதம் டெல்லி காரர் ஆனால் அவர் இப்பொது கொல்கத்தாவின் கேப்டன்

கேப்டன்களே இப்படி மாறி மாறி இருக்கும்போது வீரர்களை பற்றியும் ரசிகர்களின் மன நிலையை பற்றியும் சொல்லி தான் தெரிய வேண்டுமா என்ன ?
 
நான் விளையாடும் வீரர்களைப் பற்றி சொல்லவில்லை ஆரென்....தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த....அவருக்கு அடையாளம் கொடுத்த மண்னை மறந்து அக்கட பூமிக்கு சப்போர்ட் செய்யுறாரேங்கற ஆதங்கம். வெங்கடேஷ் செய்யலாம்...சித்தார்த் செய்யலாமா?

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எத்தனையோ தெலுகு நடிகர்கள்....யாராவது சென்னையை சப்போர்ட் செய்தார்களா?....இது இந்த இனத்தின் சாபக்கேடு....!!
 
யோசித்துப் பாருங்கள். ஒரு இந்திய அணி வீரர் தன் விருப்பத்திற்கேற்ப ஒரு அணியுடன் இணைய முடியாது. அவர்கள் ஆட்டு மந்தைகளென ஏலம் விடப்படுவார்கள். பணமுள்ள முதலாளிகள் ஏலம் எடுத்து அணியை அமைப்பர்.

ஏல அடிமை முறை இன்று இந்தியாவில் சட்ட பூர்வமாக்கப் பட்டுள்ளது. இது பணக்காரக் கொத்தடிமை முறை. ஏழைகளை இன்னும் கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்பார்கள்.

இதிலெல்லாம் நாம் இனம் மொழி என உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை. ஒரு காலத்தில் அரசர்கள் அடிமைகளை ஒரு அரங்கில் போராட விட்டு ரசித்தனர். இன்று நாம் அதைச் செய்கிறோம்.குடுக்கற காசுதான் கொஞ்சம் ஓவரா இருக்கு. நம் தொழிலையும், நம் பர்சையும் கடிக்காத அளவு தூரத்தில் நின்றுதான் வேடிக்கை கூட பார்க்கணும். அந்தக் கட்டுப்பாடுதான் வேணும்.
 
அதுதான் IPL தொடங்குவதற்கு முன்பே அது ஒரு பெரிய cricket circus என்று சொல்லிவிட்டார்களே. அவர்கள் கொத்தடிமைகள் மாத்திரம் அல்ல "கோமாளிகள்" கூட...!!!
 
இன்றைய மோதல் டெல்லி அணியுடன்.

டெல்லி அணியில் ஜெயவர்த்தனே இணைந்திருப்பது அவர்களது மட்டைவீச்சை பலப்படுத்தும். கூடவே கெவின் பீட்டர்சனும் அவர்களுக்கு இன்று இருக்கிறார். எனவே மோர்னே மோர்கல், டக் பிரேஸ்வெல் அல்லது வான் டர் மெர்வ் ஆகியோர் களமிறங்கலாம்.

வீரேந்திர சேவாக், ஜெயவர்த்தனே, பீட்டர்சன், நமன் ஓஜா, நகர், வேணுகோபால் ராவ் இர்ஃபான் பதான் என மட்டை வீச்சு இருக்க, மோர்கல், உமேஷ் யாதவ், இர்ஃபான் பதான், நதீம் மற்றும் டக் பிரேஸ்வெல் அல்லது வான் டர் மெர்வ் என பந்து வீச்சு இருக்கிறது. பீட்டர்சன் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் முயற்சி செய்யலாம்.

சென்னை அணியில் மாற்றம் இருக்காது என்றே தோன்றுகிறது.. பிராவோ, பிளேஸிஸ், பொல்லிஞ்ஜர் மற்றும் அல்பி மோர்கல் கூட்டணி மைக்கேல் ஹஸ்ஸி வரும் வரை தொடரும் என்றே தோன்றுகிறது. அதே போல் இந்திய வீரர்களிலும் நீக்கும் அளவிற்கு இதுவரை மோசமாக ஆடியிருப்பவர் விஜய் மாத்திரமே.

பெரோசா கோட்லா மைதானம் டெல்லி அணிக்கு சாதகமானது இல்லை. 180+ ரன்களை எதிர்பார்க்கலாம் என்பதால் சென்னை அணிக்கு வாய்ப்பு அதிகம். சேவாக், ஜெயவர்த்தனே ஆகியோர் அவுட்டாகும் வேகத்தைப் பொறுத்து ஆட்டத்தின் போக்கு மாறுபடும்.


(ஒவ்வொரு முறை இந்த திரியில் நான் எழுதறப்பவும் சென்னை அணியின் சொதப்பல் தாங்க முடியவில்லை. அதனால இந்த முறையும் சொதப்பினால் திரியின் பெயரை மாற்ற வேண்டியது இருக்கும்.)
 
டெல்லி மைதானம் ஆடுகளத்திற்கு சிறந்தது கிடையாது. ஆகையால் மட்டையடிப்பவர்கள் திறனாளியாக இருக்கவேண்டும். கொஞ்சம் நிறுத்தி நிதானமாக ஆடும் ஆட்டக்காரர்களை களத்தில் இறக்கவேண்டும் சென்னை அணி.
 
பன்னாட்டு விளையாட்டு மைதான அந்தஸ்தை இழந்து பின்னர் அதை 2011 ல் தக்க வைத்துக் கொண்டது இம்மைதானம். சென்ற ஆண்டு டெல்லி அணி 236 ஓட்டங்கள் ஒரு ஐ.பி.எல் போட்டியில் குவித்தது.

இந்த வருடம் இதுதான் முதல்போட்டி, சென்ற வருட முதல் போட்டியில் மலிங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்த 95 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது டெல்லி.

2010 ல் முதல் போட்டியில் மும்பை 218 ரன்கள் குவிக்க டெல்லி 125க்கு சுருண்டது. சென்னையுடனான போட்டியில் டெல்லி 185 ரன்களைக் குவிக்க சென்னை 190 எடுத்து வென்றது

2008 ல் டெல்லி 187 ரன்களைக் குவிக்க சென்னை கடைசிப் பந்தில் வென்றது.

எனவே அதிக ஓட்டங்களை எதிர்பார்க்கிறேன். மோர்னே மோர்கல் சவாலாக இருப்பார்.
 
(ஒவ்வொரு முறை இந்த திரியில் நான் எழுதறப்பவும் சென்னை அணியின் சொதப்பல் தாங்க முடியவில்லை. அதனால இந்த முறையும் சொதப்பினால் திரியின் பெயரை மாற்ற வேண்டியது இருக்கும்.)

சொன்னதைச் செஞ்ச சென்னை அணிக்கு வாழ்த்துக்கள்.. திரியின் பெயர் மாற்றம் கூடிய விரைவில்
 
நேத்து சென்னை அணிக்கு எதிராக பந்தயம் கட்டியிருந்தால் பணம் சம்பாதித்திருக்கலாம்.
 
எத்தனை அடிதான் வாங்கினாலும், அசராமல் அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே அணியினையே விளையாட வைக்கும் சென்னை அணியின் துணிச்சல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு...!! :D:D

ஏன்னா, முரளி விஜயும் போலிங்கரும் எவ்வளவு சொதப்பினாலும் அனிருத்தாவோ குலசேகராவோ உள்ளே வர மாட்டாங்கப்பா..!!
:icon_b::icon_b:
 
ஷேவக் எப்படி ஆடினாலும், ஜேவர்த்தனாவையும் பீட்டர்சனையும் மத்திய வரிசையில் ஆட வைக்கும் டெல்லி அணி இப்போது பலமான அணியாகத்தான் தெரிகிறது. :)
 
Back
Top